நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு லக்கி மேஸ்காட் (Mascot)தேர்ந்து எடுக்கப்படுகிறது.அதுவே அந்த விளையாட்டிற்கு விளம்பரத்திற்கும் பயன்படுகிறது.அது விளையாடும் நாடுகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாய் நம்பப் படுகிறது.
முதல் முறையாக 1982-ல் 9ஆவது ஏசியாட் டில்லியில் நடந்த போது அப்பு என்ற குட்டி யானை அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முதலில் கலர் டெலிவிஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த விளையாட்டுக்கள் கலரில் ஒளிபரப்பபட்டது. குருவாயூரிலிருந்து ஸ்பெஷல் ட்ரையினில் 36 யானைகள் இந்த விளையாட்டு தொடக்க விழாவிற்கு டில்லி கொண்டு செல்லப்பட்டன.அப்பு என்ற அந்த யானையின் பெயர் குட்டி நாராயணன். இந்தியர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது இந்த 5 வயது அப்பு.
7 வயதில் செப்டிக் டேங்கில் விழுந்து அடிப்பட்டு அந்த புண்ணின் காரணமாகவே சிகிச்சை பெற்று 2005-ல் குருவாயூரில் இறந்தது.
1986-ல் கொரியாவில் நடந்த போட்டிக்கு கொரிய புலி தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த போட்டியின் போது தான் பி.டி.உஷா 4 தங்கப்பதக்கங்களை வென்றார்.1 வெள்ளி பதக்கமும் வென்றார். தங்க மங்கை, பயோலி எக்ஸ்பிரஸ் எனப்பெயர் பெற்றார்.
11 ஆவது போட்டி சைனாவில் நடந்தது.PAN PAN எனப்பட்ட பாண்டா கரடி அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது.
12ஆவது போட்டி 1994-ல் ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் நடந்தது. அப்போது இரண்டு வெள்ளை வாத்துக்கள் Poppo and Cuccu அமைதியினையும்,ஒற்றுமையையும் அறிவுறுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.
13 ஆவது போட்டி 1998-ல் தாய்லாந்தில் நடைபெற்ற போது Chai-Yo என்ற யானை தேர்ந்து எடுக்கப்பட்டது. சந்தோஷத்தையும், வெற்றியினையும் திருப்தியினையும் குறிக்கிறது.
14 ஆவது போட்டி தெற்கு கொரியாவில் நடைப்பெற்றது. கடல் பறவை அதிர்ஷ்டமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. துரியா என்று அழைக்கப்பட்டது.ஆசிய நாடுகளிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த தேர்ந்து எடுக்கப்பட்டது.
15 ஆவது போட்டிகள் கத்தாரில் தோஹாவில் நடத்தப்பட்டது. அப்போது orry எனப்படும் ஒரு வகை ஆடு தேர்ந்து எடுக்கப்பட்டது.
இந்த முறை 2010 -ல் 16 ஆவது ஏசியாட்டிற்கு படத்தில் உள்ள ஐந்து ஆடுகள் தான் அதிர்ஷ்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆட்டின் பெயர் லீயாங் யாங் என்பதாகும்.அது தான் மற்ற ஆடுகளுக்கு தலைவராக விளங்குகிறது. ஐந்து ஆடுகள் உள்ள இந்த சின்னம் ஆசியாவில் நல்ல சுபிட்சத்தையும், ஏற்றத்தையும், அமைதியினையும், வெற்றியினையும், ஆசிய மக்களுக்கு சந்தோஷத்தினையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைனாவில் ஆடு ஒரு லக்கியான மிருகமாக பார்க்கப்படுகிறது. ஏசியாட் எனப்படும் ஆசியன் கேம்ஸ் சைனாவில் க்வாங்ஷோ நகரில் 12 நவம்பர் தொடங்கியது.அந்த நகரமே சிட்டி ஆஃப் கோட்ஸ் எனப்படுகிறது. அங்கு பெரும் பஞ்சம் வந்த போது வானத்தில் இருந்து ஆடுகளில் வந்த தேவதைகள் அந்த பஞ்சத்தினை போக்கி மக்களுக்கு அரிசியை கொடுத்துச் சென்றதாக கதை உள்ளது.
இது வரை தாய்லாந்தில் 4 முறை இந்த விளையாட்டு நடத்தப்படுள்ளது. இந்தியாவில், ஜப்பானில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன.இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 46 நாடுகள் கலந்துக் கொள்கின்றன. ஆனால், 9 நாடுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.இஸ்ரேல் 1974 லிற்கு பின் இந்த அமைப்பில் இருந்து வெளியேறி விட்டது.
சில விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள்:
கபடி போட்டி - 1990.
கராத்தே போட்டி -1994.
டேக் வாண்டோ -1994.
கிரிக்கெட் போட்டி-2010.
17 ஆவது போட்டி 2014-ல் தெற்கு கொரியாவில் நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது. மூன்று seal இதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. காற்றையும், ஆட்டத்தினையும், வெளிச்சத்தையும் குறிக்கும் வகையில் இவை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

9 comments:
விளையாட்டு சின்னங்களை பற்றிய நல்ல பகிர்வு. நன்றி அமுதா
நல்ல பகிர்வு அமுதா.
//ஆசியாவில் நல்ல சுபிட்சத்தையும், ஏற்றத்தையும், அமைதியினையும், வெற்றியினையும், ஆசிய மக்களுக்கு சந்தோஷத்தினையும் ஏற்படுத்த வேண்டும்//
கண்டிப்பா வேணும் :))
நிறைய தகவல் ..நன்றி..
பகிர்வுக்கு நன்றி
nice. பகிர்வுக்கு நன்றி
நல்ல பகிர்வு அமுதா!!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
தகவல்கள் அருமை.! குழந்தை தலைப்புப்படம் மிக..மிக... அருமை..! பார்த்ததும் ஹி...ஹி.. தானாகவே சிரிப்பு வருது. சூப்பர்
நன்றி.பிரவின்குமார்.என் தம்பி மகன் விஷால் தான் தலைப்பு படத்தில்.
Post a Comment