Monday, April 21, 2008

பெற்றோர்களே உஷார்...

இப்போது எல்லாம் பள்ளிகளில் ப்ராஜக்ட் அது இது என்று எதாவது சொல்லி எப்பவும் மாணவர்கள் தங்கள் பையில் பேனா, பென்சில் மட்டும் இல்லாமல்.. ஃபெவிகால், வைட்னர், என்று வைத்து உள்ளனர். அதன் மணம் பிடித்துப் போய் அதை முகர்ந்துப் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமை ஆகின்றனர். தினம் கொஞ்ச நேரம் என்று ஆரம்பிக்கும் பழக்கம் கேட்டில் முடிகிறது. கொஞ்ச கொஞ்சமாய் மூளையை மழுங்கச் செய்யுமாம் இந்தப் பழக்கம். பெற்றவர்கள் தினம் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காத போது தான் இந்த பழக்கம் ஆரம்பிக்குமாம். எனவே, பிள்ளைகள் அடிக்கடி இந்த பொருட்களை கேட்டால் உஷாராகி விடுங்கள். இந்த பொருட்கள் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனையாகின்றன. எனவே, மிக சுலபமாய் வாங்கி விடுகிறார்கள். இளம் மாணவர்களுக்கு எதுவாகிலும் ஒட்ட வேண்டுமானால் நாமே உதவி விட்டு பின் வாங்கி வைத்து பழக்க வேண்டும்.

Monday, April 07, 2008

இளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....

ஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.
முப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.
இவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.
பதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது அரசு. இல்லையெனில் மூன்று லட்சம் பணம் கட்டச் சொல்கிறது. பாதி பேர் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

பள்ளி இறுதி முடித்தவர்கள் இன்று கால் சென்டரில் வாங்கும் சம்பளம் இது. அதன் பின்னால் எட்டில் இருந்து பத்து வருடங்கள் படிக்கும் இவர்களுக்கும் இந்த தொகையா??

ஐ.ஐ.டி யில் முடிக்கும் மாணவர்களுக்கு இப்படி கண்டிஷன் உண்டா? யாரும் இனிமேல் மருத்துவம் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப் போகிறார்கள்.

Sunday, April 06, 2008

யோகா கத்துக்கப் போகிறீர்களா ஜாக்கிரதை....

ரொம்ப stress, ஒவர் வேலைப் பளு என்று இப்பொழுது முக்கியமாய் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் அதிகம் யோகா கத்துக்கப் போகிறார்கள்.

அவர்களை யோகா சொல்லி தருபவர்கள் ஏனோ ப்ரைன்வாஷ் செய்து விடுகிறார்கள். அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்றும், திருமணம் செய்யவேண்டாம் என்றும் கற்பிக்கப் படுகிறது. குடும்பத்தை விட்டு வேலைக்காக அடுத்த ஊரில் இருப்பவர்கள் தான் அதிகம் இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.

முதலில் பெற்றவர்களும் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் இருந்தால் போதும் என்று நினைத்து இவர்கள ஒன்றும் சொல்வதில்லை. சொத்தில் ஒரு பகுதி அல்லது மாதம் மாதம் ஒரு பெரியத் தொகை வசூல் நடக்கிறது. சிலர் வேலையை விட்டு விட்டு அந்த கூட்டத்தில் முழு நேரமாய் சேர்ந்து விடுவதும் உண்டு.

பிள்ளைகள் இப்படி செல்வதைத் தடுக்க முடியாமல் ஜோசியம் என்று அலையும் பெற்றவர்கள் இப்போது அதிகம். திடீரென்று வருமானமும் நின்று சொந்தப் பந்தங்களிடம் சொல்லவும் முடியாமல் வருந்துகிறார்கள்.

அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும். திருமணம் செய்ய காலம் கடத்துவது, மிக இள வயதில் நிறைய பணத்தைப் பார்த்து விடுவது போன்றவற்றால் தற்போது இப்படி யார் கையில் ஆவது மாட்டிக் கொள்கிறார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.

Saturday, April 05, 2008

காசி...வாரணாசி..

இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது போக விரும்பும் ஸ்தலம்.


முதலில் நம்மைப் பெற்றவர்களை ஒரு முறையேனும் அழைத்துப் போகலாம் அல்லது அனுப்பி வைக்கலாம்.

கோயிலில், கடைகளில், தங்கும் இடத்தில் என எங்கேயும் தமிழ் பேசுபவர்கள் காசியில் இருக்கிறார்கள்.

எவ்வளவோ செலவு செய்கிறோம் நாம்.

காசி மட்டும் என்றால் 4 ஆயிரம் மட்டும் போதும்.

காசி, அலகாபாத்,கயா,அயோத்தியா,மதுரா,ஆக்ரா,ரிஷிகேஷ், ஹரித்வார் எனில் ஒருவருக்கு 9 ஆயிரம் ஆகும்.
14 நாள்கள் சாப்பாடு, தங்கும் இடம், ட்ரெய்ன் என அனைத்தும் சேர்ந்து இந்தத் தொகை வரும்.

நமக்கும் ஒரு திருப்தி. அவர்களுக்கும் திருப்தி.
அவர்கள் கேட்க மாட்டார்கள், நாம் தான் அனுப்பி வைக்க வேண்டும். அம்மா, அப்பா நிஜமாய் சந்தோஷம் அடைவார்கள்.

கேட்டு பாருங்கள், அனுப்பி பாருங்கள்...
உணர்வீர்கள் சந்தோஷம் என்பது என்ன என்று?

எத்தனையோ தனியார் ட்ராவல்ஸ் மாதம் மாதம் அழைத்துப் போகிறார்கள்.