Wednesday, November 17, 2010

கல்யாணம் அப்பாலிக்கா குடித்தனம்!!!

ஒரு ஜோடி சில வருடங்கள் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வது பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்வது.இல்லையெனில் பிரிந்து விடுவது. வெளிநாட்டு கலாச்சாரம் இப்பொழுது இந்தியாவில் பரவ ஆரம்பித்து உள்ளது.

வெளிநாட்டில்:

1. வெளிநாட்டில் அப்படி வாழ்ந்து பின் பிரிந்து விடுபவர்கள் அதற்கு பிறகு வேறு நபர்களை திருமணம் செய்து கொள்ளும் போது திருமணத்திற்கு முன் வாழ்க்கையினை பற்றி ரொம்ப பெரிசாய் அலட்டிக் கொள்வதில்லை.

2. முக்கியமாய் ஆண்கள் டேக் இட் ஈஸியாய் எடுத்துக் கொள்ளும் சமுதாய அமைப்பு அங்கு உள்ளது.

3. ஒரு ஜோடி உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை என்று வாழ பழகி உள்ளார்கள்.

4. ஒரு பெண்ணோ, ஆணோ தன் முந்தைய காதலனை தைரியமாய் இந்நாள் பார்ட்னருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்.

5. பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி பழைய நினைவுகளை, புகைப்படங்களை, வீடியோக்களை அழித்து விட்டு பிரிந்து விடுவார்கள். எங்கேனும் பார்த்தால் கூட ஒரு ஹாய் சொல்லி போவார்கள்.

6. அங்கு பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் பெரிசாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

7. முக்கியமாய் அங்கு யாரும் யாரையும் தங்கள் வாழ்க்கை முறை மூலம் ஏமாற்றுவதில்லை.

8. சிறுவயதிலேயே செக்ஸ் கல்வி பெறுவதால் கர்ப்பம் தரிப்பதை அங்கு மேக்ஸிமம் தவிர்க்கிறார்கள்.

இந்தியாவில்:

1. திருமணம் நிச்சயம் ஆன நாளிலிருந்து ஃபோனில் பேச ஆரம்பிக்கும் போதே ஒரு வித சந்தேகத்துடனே ஒரு ஜோடி பேச ஆரம்பிக்கிறது. ஒரு வேளை எதாவது இருக்குமோ என்றே விஷயத்தினை நோண்டுவார்கள். அப்படி இருந்திருந்தால் என்ன? அது பிடிக்காமல் தானே நம்மை தேர்ந்து எடுத்து உள்ளார் என்ற மனோபாவம் இங்கு கிடையவே கிடையாது.

2.பெண்கள் ஆண்கள் எத்தனை கீப் வைத்துக் கொண்டாலும் அந்த கணவனை தன்னுடன் தக்க வைப்பதில் தான் பெண்ணிற்கு இங்கு பெருமை. போடா என்று தூக்கி எறியும் பக்குவத்தினை பொருளாதாரமும், சமூக அமைப்பும் தருவதில்லை.சில ஆண்கள் திருமணத்திற்கு முன்பிருந்த தன் காதலை பற்றி பெருமை வேறு பீற்றி கொள்வார்கள் தன் மனைவியிடம்.திருமணத்திற்கு பின்னால் தன் கணவன் சின்னவீடு வைத்துக் கொண்டாலே பெண்கள் அதனை பொறுத்து போகும் போது திருமணத்திற்கு முன் நீ எப்படி இருந்தால் என்ன இப்ப என் கூட மட்டும் வாழ் என்பது தான் பெரும்பான்மையான பெண்களின் நிலை.

ஆனால், மனைவிக்கு அப்படி ஒரு வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு இருந்தது தற்போதைய கணவனுக்கு தெரிய வரும் போது உடனே அந்த பெண்ணை டைவர்ஸ் செய்ய தான் முன்வருவான். அவனால் தாங்கி கொள்ளவே முடியாது. அதன் பின் அந்த பெண்ணை டைவர்ஸ் வரை ஒரு புழுவை போல் தான் நடத்துவான். பெண்ணின் படிப்பு, அழகு, குடும்பம் எல்லாம் மறந்து விடும். வெளிநாட்டிலே வாழும் ஆணாக இருந்தாலும் இப்படி தான் நம் இந்திய ஆண்கள் நடந்துக் கொள்வார்கள்.

3. ஒரு பெண் அக்கா, தங்கை குழந்தைகளை கொஞ்ச கூட புகுந்த வீட்டு ஒப்புதல் வேண்டும் இங்கே.
இதில் எங்கே உன் குழந்தை, என் குழந்தை, நம் குழந்தை.வெளங்கிடும்..

4. என் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்று ஒரு ஆணை பெண்ணால் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்துவது இங்கு கஷ்டம்.

5. இங்கு பழகிய நினைவுகளை அழித்து விடுறேன் என்பார்கள். ஆனாலும் அழிக்க மாட்டார்கள். பழி வாங்கும் நோக்கத்தில் அதனை பின்னாளில் பயன் படுமே என்று அப்படியே வைத்து இருப்பார்கள்.ஒரு வேளை லிவிங் டூ கெதரில் இருவரும் பரஸ்பரம் பேசி பிரியாமல், ஒருவருக்கு பிடிக்காமல் பிரிந்து இருந்தால் பிரிந்து போன அந்த பெண்ணையோ அல்லது ஆணையோ வாழவிட மாட்டார்கள். அதான் உன்னை பிடிக்கலை என்று சொல்லிட்டு போயச்சே ஏன் இன்னும் பின்னாடியே அலையணும்.குரூர புத்தி என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போனீல இரு உன்னை என்ன செய்கிறேன் என்று சிலர் அலைவார்கள்.

6. அப்படி வாழ்வது தெரிந்தால் இங்கு கூட பிறந்தவர், பெற்றவர்கள் கொன்று போட்டுவிடுவார்கள் அந்த பெண்ணை.

7. எனவே, பெண்ணோ ஆணோ தாங்கள் அப்படி ஒன்றாக வாழ்வதை இங்கு எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்துவதில்லை. திருட்டுதனம் ஜாஸ்தி இருக்கும்.

8.இங்கு செக்ஸ் அறிவு எவ்வளவு படித்தவர்களுக்கும் கம்மி தான். எனவே, அப்படி வாழும் போது அபார்ஷன் செய்துக் கொண்டு திண்டாடுவார்கள்.

18 பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு என்னனா இந்தியாவில் முறைப்படி கல்யாணம் செய்துட்டு, மொய் பணம் எல்லாம் ஒழுங்கா வந்ததா என்று எண்ணி பார்த்துட்டு அப்பாலிக்கா ஒன்றாக வாழலாமே..

16 comments:

ILA (a) இளா said...

100/100, +1

குடுகுடுப்பை said...

நல்ல ஆலோசனை, இந்தியர்களான நாம் மனதில் இவ்வளவு வக்கிரத்தோடு இருக்கிறோம், மேலை நாட்டவர்களின் ஏற்றுக்கொள்ளும் மனப்பாண்மை நமக்கு கிடையாது அதனால் லிவிங் டுகெதர் வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது சரி.

அதையும் தாண்டி யாரோ இருவர் லிவிங் டுகெதரில் வாழ்ந்தால், அப்போது சமூகம் என்ன செய்யவேண்டும்,மற்றவரின் வாழும் உரிமையில் நாம் எப்படி தலையிட முடியும் என்று ஒதுங்கிக்கொள்ளவேண்டும், என்பதே என் கருத்து.ஆனால் விபச்சாரி பட்டம் சூட்ட வேண்டும் என்று சொல்லும் கலாச்சார காவலர்களை நினைத்தால் அயர்சியாக உள்ளது.

நசரேயன் said...

//Labels: ஆலோசனை
//

எனக்கு இல்ல

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி இளா,நசரேயன்..

அப்படி தான் வாழ்வோம் என்று சொல்லிட்டு வாழ்வதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே திருட்டுத்தனமாய் தான் அப்படி வாழ்கிறார்கள்.அப்படி வாழ்ந்துட்டு பிரியும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பமே பாதிக்கக்கூடிய அபாயம் இங்கு அதிகம் குடுகுடுப்பை சார்.விவாகரத்து என்பது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தெரிந்து நடக்கிறது. யாரும் ரகசியமாய் விவாகரத்து செய்வதில்லை.நாம் செய்யும் செயல் அடுத்தவர்களுக்கு எந்த தீமையும் செய்யலைனா ஓகே.இதில் தீமைதானே அதிகம் இருக்கும்..

Prasanna said...

கலாசாரம் என்கிற கோணத்தில் இல்லாம, நடைமுறை சிக்கலை சொல்லி இருப்பது நன்றாக உள்ளது..

GEETHA ACHAL said...

Correcta சொன்னீங்க...

Vidhya Chandrasekaran said...

அருமையா சொல்லிருக்கீங்க..

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி பிரசன்னா, கீதா, வித்யா...

Ahamed irshad said...

ந‌ல்லா சொல்லியிருக்கிறீங்க‌..

ஆமினா said...

ஒவ்வொன்னையும் அழகா சொன்னீங்க!

எல்லாமே உண்மையான கூற்று!

வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா,அஹமது இர்ஷாத்..

ஜெயந்தி said...

நம்ம நாட்டு நிலையை அழகா சொல்லியிருக்கீங்க.

எல் கே said...

நல்ல தீர்ப்பு நாட்டாமை

எல் கே said...

@குடுகுடுப்பை
ஆடையில்லா ஊரில் கோவணம் அணிந்தவன் முட்டாள்

சௌந்தர் said...

18 வது நல்லா இருக்கு எங்களுக்கு அதுவே போதும் :)

அமுதா கிருஷ்ணா said...

நன்றி LK,செளந்தர், ஜெயந்தி...