Monday, December 28, 2009

நடந்தது என்ன???

ஒரு வருடத்தில் நடந்தவைகள் அனைத்தையும் திரும்பி பார்ப்பதும் ஒரு அனுபவம் தான். எல்லா வருடமும் போல் மகிழ்ச்சியும், கவலையும் இரண்டும் கலந்து இருந்தது போன வருடம். சில விஷயங்கள் நமக்கு நல்லதாய் இருப்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கெட்டதாய் இருக்கும்.

1. நான் முதன் முறையாக வெளிநாடு போனது எனக்கு மகிழ்ச்சி.(மலேஷியா,சிங்கப்பூர்). என் பையன்கள் என்னை விட்டு முதன் முறையாக ஒரு மாதம் இங்கே இருந்ததும்,என் கணவருக்கு நான் செலவு வைத்ததும் அவர்களுக்கு கெட்டது தானே.

2. மாதம் ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதியது எனக்கு மகிழ்ச்சி. பொறுமையாய் படித்தவர்கள் பாடு திண்டாட்டம் தானே.

3. ரொம்ப நாளாக ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முயன்ற என் மாமா பையன் ஜூனில் திநகரில் திண்டுக்கல் பங்காரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தது மகிழ்ச்சி தந்தது. ஆனால், மற்ற ஹோட்டல்களுக்கு இது ஒரு போட்டி என்பதால் அவர்களுக்கு கவலை தானே.

4. முதல் முதலாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு சென்றது எனக்கு மகிழ்ச்சி. ஆனால், ஒரு பெண் பதிவர்கள் கூட வராதது கவலை தந்தது.

5.34 வருடங்களாக என்னுடனே இருந்து பேசி, சிரித்த என்னுடைய இளைய சகோதரன் பிரபு என்னுடன் பேச்சை நிறுத்தி கொண்டதுடன் என்னை தப்பாக புரிந்துக் கொண்டு என்னை அழ அழ வைத்ததும் இந்த வருடத்தில் தான். கூட பிறந்தவன் கூட எதிரியும் ஆவான் என்று புரிந்தது. என்னுடன் பேசாதது அவனுக்கு மகிழ்ச்சியோ. நானும் மகிழ கற்றுக் கொள்ளணும் இந்த விஷயத்தில்.

5. நண்பர் முத்துராமன் முதலில் கிழக்கு பதிப்பகத்தில் இருந்தார்.பின் தமிழக அரசியல் பத்திரிக்கையில் இருந்தார். கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிஸிஸ் செய்து கொண்டு ஆபரேஷனுக்கு காத்து இருப்பது மிக கவலை தரும் ஒரு நிகழ்வு.

6. இந்த டிசம்பரில் ஏ.சி.எஸ் இண்டர் பரீட்சை எழுதி உள்ளான் என் பெரிய பையன்.மிக கஷ்டமான ஒரு தேர்வு. வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.

7. என் தோழி ஜெயாவின் கணவர் ஆர்மியில் உள்ளார். என் தோழி ஜெயா தனது பெண்களின் படிப்பிற்காக சென்னை வந்து செட்டில் ஆனது எனக்கு மகிழ்ச்சி. ஆனால்,பாவம் அவள் கணவர் தனியே நாசிக்கில் கவலையுடன் இருக்கிறார்.

8. இன்னொரு தோழி நிர்மலா ஃபேமிலியுடன் மேயில் பெங்களூரு போய் திடீரென்று செட்டில் ஆனது எனக்கு மிக வருத்தம். ஆனால், அவள் கணவர் ராபினுக்கு மிக சந்தோஷம்.

9. 5 வருடங்களுக்கு முன் சாட்டில் அறிமுகமான பானக்காலு என்ற ஆந்திர தம்பியின் திருமணத்திற்கு என் பையனுடன் நவம்பரில் திருப்பதி போனது எனக்கு திருப்தி. பாவம் அவரின் மனைவி இன்னும் அமெரிக்கா போக முடியாமல் பாஸ்போர்ட் கிடைக்காமல் கவலையாய் இருக்கிறார்.அவர் இப்போது இருப்பது ஹைதராபாத் ஆச்சே...

10. நர்சிம்,கார்க்கி,ஆதி,கேபிள் சங்கர்,அரவிந்த், வால்பையன், சந்தனமுல்லை,ச்சின்னபையன், பட்டர்ஃப்ளை சூர்யா, இன்னும் நிறைய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது சென்ற பொன்னான வருடத்தில் தான். இதில் எனக்கு மகிழ்ச்சி.இவர்களுக்கு நான் வாசகியானது இவர்களுக்கும் மகிழ்ச்சியாய் தானே இருக்கும்.

Monday, December 21, 2009

சேட்டன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ்..



இன்று 21.12.09 மாலை 6.30க்கு லாயோலா காலேஜ் ஆடிட்டோரியத்தில் தன் மனைவி,குழந்தைகள்,மாமனார்,மாமியாருடனும் சேட்டன் பகத் ஸ்ருதி ஹாசன் தலைமையில் 2 ஸ்டேட்ஸின் வெற்றியை தமிழர்கள் முன்னால்( புத்தகத்தின் பெருபான்மையாக வருவது தமிழும் தமிழ் நாடும் தான்) கொண்டாட இருக்கிறார்கள்.

சேட்டன் பகத்தின் புது நாவல் 2 ஸ்டேட்ஸ்..ஆசிரியரின் உண்மை கதை போலவே உள்ளது. 267 பக்கங்கள்-6 மணிநேரம் ஆனது படித்து முடிக்க..சேட்டன் தன் மாமனார்,மாமியாருக்கு இந்த புத்தகத்தினை டெடிகேட் செய்து உள்ளார். ஏக் துஜே கேலியே தான். ஆனால், இதில் பெண் தென்னிந்தியா, பையன் பஞ்சாபி. 2009 மசாலா தடவி கொடுத்துள்ளார். சென்னைவாசிகளை கிண்டல் செய்து இருக்கிறார். கல்யாணத்திற்கு முன்னால் இரண்டு வருடம் ஒன்றாக ஒரு ரூமில் இருக்கும் ஜோடி,கல்யாணத்திற்கு எதற்கு பெற்றோர் சம்மதத்திற்கு காத்து இருக்கணும் தெரியவில்லை. அனன்யா பீர்குடிக்கும்,நான் - வெஜ் சாப்பிடும் இன்றைய மாடர்ன் பெண். கல்யாணத்திற்கு மட்டும் பெற்றோர் சம்மதம் நாடும் கலாச்சாரம் வந்து விடுகிறது. ஆனால், இப்பொழுது இப்படி தான் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அளவிற்கு மிஞ்சி சம்பாத்தியம்.

இன்றைய இளைய தலைமுறையினறை மனதில் வைத்து எழுதப் பட்டுள்ளது. திரும்ப திரும்ப பட்டுபுடவை,இலையில் சாப்பிடுவது, நகைப் போடுவது, தலையில் பூ வைப்பது என்று கிண்டல்.ஆனால், சென்னை பெண்களை எல்லாம் ஹேமாமாலினி,ஸ்ரீதேவியுடன் கதாநாயகன் கிருஷின் அம்மா ஒப்பிடுவது நகைச்சுவை. அனன்யா தென்னிந்திய பெண் என்பதால் இவர்களை போல் வட இந்திய பையனை மயக்கிட்டாள் என்பது கிருஷின் அம்மாவின் வாதம். அனன்யா உடுத்தும் உடைகளை ஒவ்வொரு முறை விளக்கும் போதும் சேட்டன் சரியான சாரி பைத்தியம் என்று தோன்றுகிறது. அப்புறம் பஞ்சாபிகள் சாப்பாடு பிரியர்கள் என்பது தெரிகிறது.

படிக்கும் போது கீழே வைக்காமல் படிக்க தோன்றுகிறது. ஆனால், படித்து முடித்தவுடன் ஒன்றுமே இல்லாத்து போல் உள்ளது. நகைச்சுவை சேட்டனுக்கு நல்லா வருகிறது. தமிழ் வார்த்தைகள் சரி, சரி, இல்ல, இல்ல என்று நிறைய இடங்களில் seri, seri, illa, illa,, கிருஷிற்கு புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு something,something என்று சொல்லிவிடுவது படிக்கும் போது ரொம்ப நல்லாயிருக்கிறது.

படிக்கலாம்...மிக எளிய ஆங்கிலத்தில் இவரால் எழுதப்பட்டுள்ள இவரின் நான்காவது நாவலாகும்.

Thursday, December 17, 2009

வெரைட்டி

இதுவும் தமிழ் தான்: டேய், எங்கேடா போன? பக பக-னு வானம் வெறிச்சிடுச்சு, நீ டக் டக்-னு வந்தால், மட மட-னு வேலையை ஆரம்பித்து சட்டு,புட்டுனு அடுத்த வேலையை பார்க்கலாம். ஒருவர் செல்ஃபோனில் இப்படி டெல்லிட்டு இருந்தார் .

என்ன நடக்கும்: அழகி படம் கேடிவியில் சமீபத்தில் அழுதுக் கொண்டே பார்த்தேன். பழைய காதலி கஷ்டப்பட்டால் ஆண்கள் மனது மிக கஷ்டப் படுகிறது பார்த்திபன் போல. பழைய காதலி நல்ல பணக்காரியாக இருந்தால் பொறாமைப் படுவார்களா??? .

பஸ்ஸா நரகமா: மாயவரம் போனேன் ...சிதம்பரம்,சீர்காழி,மாயவரம் என்று பாவம்பா இந்த பஸ் கண்டக்டர்களும்,டிரைவர்களும்,என்ன ரோடு, என்ன பஸ், ஐயோ பாவம் பஸ்ஸில் பயணிப்பவர்களும் இந்த மழைக் காலத்தில் படும் பாடு. மழை பெய்யும் போது ஜன்னல் கதவுகள் மூடி இருப்பதால் காற்று இல்லை, மேலே இருந்து ஓட்டைகள் வழியே தண்ணீர் கொட்டுவதாலும் பஸ்ஸெல்லாம் தண்ணீர்...கவர்கள்,பழத் தோல்கள், பாட்டில்கள், மண் என்று கடவுளே, இந்தியர்கள் மட்டும் குப்பையை பொது இடத்தில் போடுவதை விடமாட்டார்களா??? பஸ்ஸில் வந்த 7மணி நேரமும் நரகம் மாதிரி இருந்தது.

என்ன காரணம்:பதிவர் சந்தனமுல்லையின் ப்ளாக்கை திறந்தாலே என் சிஸ்டம் நின்று விடுகிறது..என்ன காரணம்?

நல்லவரா கெட்டவரா: என் மாமா பெண்ணின் மாமியார் போன வாரம் இறந்துவிட்டார். எங்கள் யாருக்கும் கவலையாகவே இல்லை. இம்சை போனது அவளுக்கு இனிமேலாவது நிம்மதி என நினைத்தோம். நாம் மருமகளுக்கு இம்சை கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று சபதமே எடுக்க தோன்றியது. ஒருத்தர் சாகும் போது தான் தெரிகிறது அவர் நல்லவரா கெட்டவரா என்று.

ஆசிரியருக்கு கல்யாணம்: தூத்துக்குடி ஸ்பிக்கில் இருக்கும் என்.டி.டி.ஃப்-ல் டிரைனிங் ஆபிசராக பணிபுரியும் என் அத்தை பையன் மதன் கல்யாணத்திற்கு போனேன்.மண்டபம் முழுவதும் ஸ்டூண்ட்ஸ்தான். பேட்ச் பேட்சாக வந்து கலக்கிவிட்டார்கள். காலேஜும் ஹாஸ்டலும், கல்யாண மண்டபமும் ஒரே கேம்பஸில் எனவே அனைத்து மாணவர்களும் வந்து கலக்கினார்கள். மிக சந்தோஷம் அனைத்து முகத்திலும். மதன் போலியோவால் இடது கால் சிறிது பாதிக்கப்பட்டவர். மிக அன்பான ஒரு ஆசிரியர்.

ஃப்ளாட்பார்மில் ஏமாந்தோம்: தூத்துக்குடி திருமணம் முடித்து அப்படியே திருச்செந்தூர் சென்றேன். இரவு 740க்கு ட்ரைன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு. திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் தேர்தல் பிரச்சாரம் என்பதால் சுற்றி சுற்றி பஸ் வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ எடுத்து பறந்து வந்தோம். 738க்கு ட்ரைனில் ஏறினோம். ஃப்ளாட்பாமில் சாப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை. ஸ்டேஷன் வரும் வழி எல்லாம் நிறைய பேக்கரி. ஏக்கமாய் பார்த்துக் கொண்டே வந்தேன் மெக்க்ரோனை. என் தம்பி நேரம் ஆகிவிடும் என்று என்னை ஒன்றும் வாங்க விடவில்லை.

Monday, December 07, 2009

4அரவிந்த்சாமியும்,4 மனிஷா கொய்ராலாவும்...

காஸர்கோட் அருகில் (16கிமீ)இருக்கும் பெக்கால் கோட்டைக்கு போன போது, பம்பாய் படத்தில் பார்த்து ரசித்த அந்த கோட்டை ரொம்ப சுத்தமாய் சுவர்களில் செடிகள் இல்லாமல் பச்சை குறைந்து காணப்பட்டது. 40ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய சாவி துவார வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையினை சிவப்ப நாயக்கர் என்பவர் கட்டியதாம். ஹைதர் அலி கைப்பற்றி பின்னர் திப்பு சுல்தான் வசம் வந்து பிரிட்டிஷாரிடம் இருந்து இன்று ஆர்கியலாஜிக்கல் துறையிடம் உள்ளது. இராணுவ தளவாடங்கள் பாதுகாக்கும் கிடங்காய் இருந்து இருக்கிறது. பெரிய படிகள் கீழே செல்கின்றன. ஆனால் வழிகள் பெரிய பூட்டினால் பூட்டப் பட்டிருக்கிறது. கடலுக்கு அருகில் 130அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் நடுவில் ஒரு பெரிய டவர் போன்ற அமைப்பு 30அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. அதில் ஏறி பார்க்கும் போது மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கத்தில் புல்வெளி என்று இயற்கை அழகு. கோட்டையின் வெளியில் ஒரு ஹனுமான் கோயில் உள்ளது.


கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு பாறையில் நின்று தான் அரவிந்த் சாமி உயிரே உயிரே என்று பாட மனிஷா அங்கிருந்து ஓடி ஓடி வருவார் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே புதியதாய் மணமான 4 ஜோடிகள் 4கேமிராமேன்களுடன் ஓடி,நடந்து,அமர்ந்து,நின்று என்று ஒரு சினிமா ஷீட்டிங் போல் காட்சிகளை சுட்டுக் கொண்டு இருந்தனர். பார்க்க தமாஷாய் இருந்தது. கூட்டம் வேறு இல்லை. எப்ப பார்த்தாலும் அந்த ஜோடிகள் தான் கண்ணில் பட்டனர். சரி என்று அந்த ஜோடிகளை அரவிந்த்,மனிஷாவாக பார்த்தோம்.

கோட்டையின் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கரா பீச் மிக அமைதியாய் குளிக்க ஏற்றதாய் இருக்கிறது. கோட்டை மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. போன மாதம் சென்னையில் ஊருக்கு நடுவில் இருக்கும் வள்ளுவர் கோட்டம் போன போது அய்யோ..நான் சொல்ல மாட்டேன். போய் பார்த்து கொள்ளுங்கள்.

காஸர்கோட் சென்னை மங்களூர் ட்ரைனில் போக வேண்டும். காஸர்கோடில் நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன.

Wednesday, December 02, 2009

திற்பரப்பு நீர்வீழ்ச்சி



இந்த முறை திற்பரப்பு போன போது குடும்பத்துடன் தனியே குளித்தோம். நவம்பர் 26நாங்கள் போனபோது அருவியில் குளிக்க யாருமே இல்லை.தண்ணீர் மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தது. வருடம் முழுவதும் தண்ணீர் கூடவோ, குறையவோ செய்யுமாம். ஆனால், தண்ணீர் வரத்து எப்பவும் உண்டாம். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் குழித்துறை என்னும் ஊரில் இடது பக்கமாக திரும்பி ஒரு 24கி.மீ போனால் திற்பரப்பு. அருவி அருகிலேயே பெண்கள் குளித்து உடை மாற்ற அறைகள் சுத்தமாக இருந்தன. நாங்கள் 6பேர் மட்டும் குளித்துக் கொண்டு இருந்தோம். ஒருவருக்கு 2ரூபாய் குளிக்கக் கட்டணம். கொஞ்ச நேரம் கழித்து சிலர் வந்தனர். சென்னையிலிருந்து நாகர்கோயில்,கன்னியாகுமரி ட்ரைனில் போனால் போன அன்றே ட்ரையின் பிடித்து சென்னை திரும்பி விடலாம். சென்னையில் தண்டமாய் மாயாஜால், எம்.ஜி.எம் என்று போவதற்கு இங்கே போகலாம். அருமையான இடம். விடுமுறை தினம் என்றால் கூட்டம் இருக்கும். சாப்பிட ஹோட்டல்கள் இருக்கின்றன.

Monday, November 09, 2009

வெரைட்டி

பணம் என்னடா பணம், பணம்: கிங்ஃபிஷரின் பைலட்டான 28 வயதான மனிதர் அவரின் திருவான்மியூர் ஃப்ளாட்டில் இறந்து கிடந்தாராம். காரணம் சொந்த பந்தங்கள் யாரும் இல்லாமல் தனிமைதானாம். அம்மா கிடையாதாம். அப்பாவும் பெரிய பிசினஸ் மேன். போன மாதம் 22ஆம் தேதி இறந்து கிடந்த்வரை 4ஆம் தேதி இந்த மாதம் வாடை வந்ததால் வீட்டை உடைத்து பார்த்து உள்ளார்கள். என்ன கொடுமை இது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது.

பாவம் இந்த குழந்தைகள்: பெங்களூருவில் ஐ.டியில் பணி செய்யும் ஒரு தம்பதி தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்மணியை நியமித்து உள்ளார்கள். ஒரு நாள் குழந்தையின் தாய் காலை 11மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். வேலை செய்யும் பெண்மணி டிவி பார்த்துக் கொண்டு இருக்க குழந்தையை காணோம். எங்கே என்று விசாரித்ததில் குழந்தையை அந்த வேலைபார்க்கும் பெண் தினமும் 100ரூபாய்க்கு பிச்சைக்காரருக்கு வாடகை விட்டு சம்பாதித்து இருக்கிறாள் ஆறு மாதங்களாக.......போலீசில் சொல்லாமல் குழந்தையினை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

செகந்தராபாத் ஆர்மி காலனியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் தான் பார்த்து கொண்ட குழந்தையிடம் இருந்து மாதம் இரண்டு முறை ரத்தம் எடுத்து விற்று இருக்கிறாள்.

கோவில்பட்டியில் சண்முகா என்ற தியேட்டரில் எந்த படமானாலும் பெண்களுக்கு 10 ரூபாய் டிக்கெட். ஆண்களுக்கு 50 ரூபாய். பையனுக்கு 30 ரூபாய். கார்க்கி உங்களுக்கு ஸ்பெஷல் நியூஸ் விஜய் படம் என்றால் அந்த தியேட்டரில் பெண்களுக்கு நோ பைசா..ஃப்ரீயாம்பா......

Tuesday, November 03, 2009

Aunty அவ்வா!!!!

நான் சென்னைக்கு கல்யாணத்திற்கு பிறகு வந்த போது ரயில்வே காலனியில் பக்கத்து வீட்டில் இருந்த ஜான்சன்(ட்ரைன் கார்ட்) என்பவரும், அவரின் மனைவி எமிலி(தனியார் பள்ளி தலைமை ஆசிரியை) அவர் மகன் ப்ரேமும் வசித்து வந்தார்கள். எமிலி aunty உதவும் குணம் கொண்ட ஓரு நல்ல மனிஷி. என் பையன்கள் இரண்டு பேரும் பிறந்த போதும் அதற்கு பிறகும் அவர்கள் செய்த உதவிகளுக்கு எதுவும் ஈடாகாது. என் பையன்களை அந்த ஜான்சன் அங்கிள் அடிக்கடி தாம்பரம் மீனம்பாக்கம் வரை மாலை வேளைகளில் ட்ரையினில் அழைத்து சென்று வருவார். ஏரோப்ளேன் பார்த்த மாதிரியும் ஆச்சு, ட்ரைனில் போய் வந்த மாதிரியும் ஆச்சு. ராத்திரியில் நிம்மதியாக பசங்கள் தூங்குவார்கள்.


என் பையன்கள் இருவரும் அவர்களை aunty அவ்வா என்றே இன்றும் அழைப்பார்கள். யோசித்து பார்த்தால் யார் அப்படி சொல்ல சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், நான் சொல்லும் Aunty -யை ஒரு பெயர் போல பாவித்து அவ்வா(பாட்டி) என்று சேர்த்து அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வரும் அவர்கள் சொந்தக்காரர்கள் வித்தியாசமாய் பார்ப்பார்கள் முதலில் பிறகு அவர்களுக்கு பழகிவிட்டது. அவர்கள் அனைவரும் என் பையன்கள் இருவரையும் அடிக்கடி விசார்ப்பார்கள்.

என் அம்மாவை விஜி அவ்வா என்றும் அவர்களை aunty அவ்வா என்றும் எங்களுக்கு இரண்டு அவ்வா என்று தான் என் பையன்கள் சொல்வார்கள். இப்படி சிலர் சொந்தமாக இல்லாவிட்டாலும் நமக்கு சொந்தமாகி விடுவார்கள். நிறைய பேருக்கு இப்படி வித்தியாச பெயரில் உறவுகள் இருக்கலாம். பகிர்ந்துக் கொள்ளலாமே.

Friday, October 30, 2009

ஒரு பெண்ணிற்கு 3 கணவர்கள்...

ட்ரூ லவ் அண்ட் ட்ரூ செக்ஸ்
நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் இது. இந்தியாவில் ஹிமாசல பிரதேசத்தில், நேபாளத்தில் சில கிராமங்களில் வாழும் மூஸ்டாங்க் என்னும் மக்களை பற்றிய டாகுமெண்டரி இது. இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான ரம்மியமான ஒரு கிராமம். மக்கள் அனைவரும் ஒரு வகையான குல்லா அணிந்து உள்ளனர். பெண் ஒருத்தி அண்ணன், தம்பி என்று வரிசையாக 3 அல்லது 4 பேர் வரை மணந்து உள்ளார்களாம். நமக்கு அறிமுகப்படுத்த பட்ட பெண்ணிற்கு இரண்டு கணவர்கள். 5 குழந்தைகள். எந்த கணவரின் குழந்தைகள் எது என்று தனக்கு தெரியும் என்றும் ஆனால் குழந்தைகள் 2 பேரையும் அப்பா என்று அழைக்கும் என்று மிக வெட்கப்பட்டுக் கொண்டு சொன்னார். மேலும்,அந்த பெண்கள் வீட்டு வேலை பார்ப்பது தான் கஷ்டமாக உள்ளது என்று சொன்னார்கள். கூட்டு குடும்பமாய் இருப்பதால் எப்போதும் வேலை வேலை என்று சலித்து கொண்டார்கள். அந்த ட்ரைபல் கூட்டத்தில் முதுநிலை வரை படித்துவிட்ட ஒரு பெண் இந்த சமூகம் மாற வேண்டும் என்று கூறினார். அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

இன்னொரு கிராமத்தில் ஒரு ஆணிற்கு 2 அல்லது 3 மனைவிகள் உள்ள்து.ஆனால், அந்த கணவர்கள் தங்கள் மனைவிகளை தனி தனியே வீடு பார்த்து வைத்து இருப்பதாக கூறினார்கள். மூத்த மனைவிகள் பேட்டி கொடுக்கும் போது அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள். இரண்டாவது மனைவி வந்ததிற்கு கோபம் வரவில்லையா என்று கேட்டதிற்கு எதற்க்கு கோபம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.

Wednesday, October 21, 2009

ஆட்டோகிராஃப்-2

நான் +2 படிக்கும் போது ஏதோ காரணமாய் திண்டுக்கல் போன என் அப்பாவிற்கு அங்கு வைத்து ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. 3மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க டாக்டர் சொல்லிவிட்டார். என் தம்பிகள் சின்ன கிளாஸில் படித்ததால் உடனே அவர்களுக்கு ஸ்கூலில் இடம் கிடைத்து திண்டுக்கல்லில் சேர்ந்து விட்டார்கள். நான் +2என்பதால் ஸ்கூலில் 2மாதங்கள் இடம் கிடைக்காமல் ஸ்கூல் ஸ்கூலாக அழைந்து கொண்டு இருந்தேன். என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்பதை விட என் படிப்பு போச்சே என்று தான் நான் ஒரே அழுகை.படிப்பில் ஒன்றும் புலி இல்லை.ஜாலிக்காக ஸ்கூல் போற கேஸ் நான். 2மாதங்கள் கழித்து எனக்கு திண்டுக்கல் அவுட்டரில் ஒரு ஸ்கூலில் +2இடம் கிடைத்தது. நான் +1ல் படித்தது,மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,காமர்ஸ்(என்ன் அருமையான காம்பினேஷன் - திருநெல்வேலியில்) +2முதல் 2மாதங்களும் இந்த குரூப் தான். இப்ப திண்டுக்கல்லில் காமர்ஸ்க்கு பதில் பயாலஜி.

ஸ்கூல் எனக்கு பிடிக்கவேயில்லை. முதலில் ஸ்கூலில் இடம் கிடைக்கவில்லை என்று அழுத நான் இப்ப ஸ்கூல் போக அழுதேன். வேண்டும் என்றே பஸ்ஸை மிஸ் செய்தேன் நிறைய நாட்கள்.எனவே, அடிக்கடி மாமா யாராவது பைக்கில் விட்டு வருவார்கள். எனவே, தப்பிக்க முடியாது. 3மாதங்களுக்கு பின் அம்மா,அப்பா திருநெல்வேலிக்கு போய் விட்டார்கள்.

நான் படிச்ச லட்சணம்:

பயாலஜி: படம் வரைய வேண்டும் என்றால் பென்சிலை எப்படி பிடிக்கவேண்டும் என்றே தெரியாத ஒரு அப்பாவி நான். என் தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார் அதில் வேலை பார்த்த +2வரை படித்த ஒரு கிராமத்து பையன் எனக்கு ரிகார்ட்ஸ் எல்லாம் மிக அழகாக வரைந்துக் கொடுத்தான். எனக்கு படம் வரைய வேண்டும் என்றால் அந்த பையன் சாயங்காலங்களில் வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கு படம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு. வேலையிலிருந்து எஸ்கேப் எனவே நிறைய நேரம் எடுத்து அழகாய் வரைவான்.தவளையின் குறுக்கு வெட்டு தோற்றம் தெரிந்து என்ன ஆகப் போகுது, மூளை எப்படி இருந்தால் என்ன குரோம்சோம், மகரந்தம் அது இது என்று ஒன்றும் புரியாமல் தேமே என்று இருப்பேன் கிளாசில். ஆனால் செடிகள், பூக்கள் பற்றி படிக்க பிடித்தது.

கெமிஸ்ட்ரி: நான் புதியதாய் சேர்ந்த ஸ்கூலில் கெமிஸ்ட்ரி டீச்சர் நான் சேரும் முன்பே அனைத்து ரிகார்ட்ஸ், லேப் எல்லாம் முடித்து விட்டு லீவில் போய்விட்டார்கள். எனவே, ஒரு பி.எஸ்ஸி முடித்த டெம்பரரி டீச்சர் தான் கிளாஸ் எடுத்தார்கள். பியூரட்,பிப்பெட் எது என்று தெரியாமலே +2பைனல் லேப் எக்ஸாம் போன ஒரு ஆள் நானாக தான் இருப்பேன். எனக்கு கொடுக்க போகும் சால்ட்டை பற்றி முன்னமே சொல்லி விட்டார்கள். இன்னொரு பெண் எடுக்கும் ரீடிங்கை எனக்கு வாங்கி கொடுத்து விட்டார்கள். வெற்றிகரமாய் ரிக்கார்ட்ஸுக்கு 49மார்க்கும் போட்டாச்சு.ஒரு ஈக்வேஷனும் புரியல்லை. சும்மா சோப் தயாரிப்பது எப்படி, சலவை சோடா உபயோகங்கள் என்ன என்ற மாதிரி சின்னப்புள்ளை தனமான கேள்விகளுக்கு ஆனால் வாழ்க்கைக்கு உபயோகமான பதில்களை படித்து வைத்து ஒப்பேத்தினேன்.

பிசிக்ஸ்: பிசிக்ஸாவது படிக்கலாம் என்றால் ஒரு சின்ன வயது மாஸ்டர் இருந்தார். அவருக்கு ஏனோ பெண்களுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்ப எரிச்சலாய் இருந்தது.இதுகளுக்கு சொல்லி கொடுத்து என்ன கிழிக்க போறாங்க என்ற எண்ணத்திலேயே எப்பவும் வெடு வெடு என்று இருப்பார்.என்ன எழுதினாலும் ஒழுங்காய் மார்க் போடமாட்டார். ஒரு பெரிய ஸ்கேல் பிஸிக்ஸ் லேபில் இருக்குமே அதை வைத்துக் கொண்டு பெண் பிள்ளைகளை தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அடிப்பார். ஒரு நாள் என் தலையில் அந்த ஸ்கேல் வைத்து லேசாக அடித்து விட நான் அப்பாவிடம் சொல்லிவிட அப்பா போன் செய்து ஹெட்மிஸ்டரிடம் திட்டிவிட்டார். அப்பா அப்பொழுது டீச்சர் அஸோஷியனில் மாநில செகரட்டரி. அதிலிருந்து நீ படி இல்லை என்னவோ செய் என்று அந்த மாஸ்டர் என்னை ஒரு குடம் தண்ணீர் என் தலையில் கவிழ்த்து விட்டு விட்டார்.ஆனால், அதன் பிறகு அவர் யாரையும் அடிக்கவில்லை. எனவே, ஸ்டூண்டஸ் மத்தியில் ஒரு கெளரவம் எனக்கு கிடைத்தது. அதானே அவசியம்.

மேத்ஸ்: மேத்ஸ் டீச்சரோ செம ஓல்டு. அப்படியே நோட்ஸ் வைத்துக் கொண்டு போர்டில் எழுதிவிட்டு போய் விடுவார். ஒரு மண்ணும் புரியாது. மேத்ஸ் டீச்சர் பெண் நான். நானாவது டியூஷன் போறாதாவது.வரது வரட்டும் என்று புரிந்ததை வைத்து மேத்ஸ் கிளாசை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

லாங்க்வேஜ்: இங்கிலீஷ் டீச்சர் மட்டும் தான் பிடிக்கும். ரொம்ப அழகா இருப்பாங்க.ரொம்பனா ரொம்பவே. அப்பதான் படித்து முடித்து விட்டு ஸ்கூலில் சேர்ந்து இருந்தாங்க. சினிமா பற்றி எல்லாம் பேசுவாங்க. என் கஷ்டத்தினை உணர்ந்தாங்க. தமிழ் டீச்சரோ ரொம்ப அலட்டல் பேர்வழி . ஒரு முறை அடுத்த நாள் தமிழ் பரீட்சை இருக்க நான் முதல் நாள் ஈவினிங் ஷோ மண்வாசனை படம் பார்க்க தியேட்டர் போனால் எனக்கு பின்னாடி சீட்டில் தமிழ் டீச்சர் அவர்கள் கணவருடன். அதில் இருந்து என்னை அவர்க்ளுக்கு பிடிக்காமல் போயிடுச்சு. ரேவதியை எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு.

இப்படி ஒரு ஸ்கூல் எனக்கு தேவைதான். அப்பா சொன்னார். அடுத்த வருடம் சேர்ந்துக் கொள். இந்த வருடம் வீட்டிலேயே இரும்மா என்று அடங்கினால் தானே. நான் அந்த வருடமே +2முடிக்கவேண்டும் இல்லைனா என்னோட செட்டில் எல்லோரும் காலேஜ் போக நான் மட்டும் +2வா என்று ஒரே ரகளை செய்து இப்படி ஒரு அருதபழசு ஸ்கூலில் அப்பவே லஞ்சம் கொடுத்து சேர்ந்தேன்.

இதற்கு முன் எப்பவும் தாத்தா வீடு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் லீவில் தான் வருவேன். படிக்க ஒன்றும் இருக்காது. எப்பவும் ஒரே ஆட்டம். வீட்டில் எப்பவும் ஒரே கூட்டம் இருக்கும். மதிய வேளைகளில் ௨0-25பேருக்கு சமையல் செய்வார்கள் பாட்டி. கூட்டு குடும்பம். சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்து போவார்கள். இந்த சூழ்நிலையில் ஸ்கூலுக்கு போவேன் வருவேன் ஒன்றும் பிடிக்காமலே. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது. என் தாத்தா வீட்டிற்கு முன்னால் ஒரு பல்டாக்டர் கிளினிக் இருந்தது. அந்த டாக்டரின் தம்பி ரவி காலெஜில் படிச்சுட்டு இருந்தான்.தினம் மாலை வேலைகளில், சனி,ஞாயிறுகளில் அங்கு ஒரு சேரில் அமர்ந்து பேப்பர் வாசித்துக் கொண்டும் ஒரு சின்ன டீவியில் ஏதேனும் பார்த்துக் கொண்டும் என் வீட்டினை நோட்டம் விட்டுக் கொண்டும் இருப்பான். அவனை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டது இல்லை. ஆனால்,தினம் பார்ப்போம். எனக்கு ஓரு நாள் பார்க்காவிட்டால் கூட கவலையாக இருக்கும். சில சமயங்களில் என் ஸ்கூல் விடும் நேரங்களில் என் ஸ்கூல் வாசலில் நான் பஸ்ஸிற்கு நிற்க்கும் போது அவனும் அங்கு சைக்கிளில் நிற்பான். அப்புறம் நான் பஸ்ஸில் வந்து வீட்டிற்கு பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து வரும் போது பின்னாடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு வருவான். ஒரு வார்த்தை பேசியது இல்லை. என் கடைசி மாமாவுடன் நிறைய நாட்கள் திண்ணையில் இரவு நேரங்களில் அரைட்டை அடித்துக் கொண்டு இருப்பான். என் தாத்தா வீடு நிறைய கூட்டம் இருக்கும் . ஆனால் ஒருவருக்கும் நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்க நேரம் இல்லை. அதனால் என்னை தினமும் பார்த்துக் கொண்டே இருந்த ரவியை பார்த்தால் எனக்கு ரொம்ப பிடித்தது.

வெற்றிகரமாய் +2எக்ஸாம் எழுதி 60சதவீதம் மார்க் வாங்கி(இந்த மார்க்கே அதிகம்) திருநெல்வேலிக்கு போனேன். சந்தோஷமாய் காலேஜில் சேர்ந்தேன். அப்புறம் அப்படியே ரவியை மறந்தும் போச்சு. எப்பவாச்சும் திண்டுக்கல் போகும் போது பார்ப்பேன். ஆனால், +2படிக்கும் போது பார்க்க பிடித்த மாதிரி பிடிக்கவில்லை.

Monday, October 12, 2009

ஐடியா ப்ளீஸ்...

அடுத்த மாதம் கேரளா போகலாம் என்று இருக்கிறேன் 12லிருந்து 15 நாள்கள். இரண்டு ஃப்ரண்ட்ஸ் குடும்பம் வெளிநாட்டிலிருந்து வராங்க என்னை நம்பி.அழைத்துப் போகும் முழு பொறுப்பும் என்னுடையது. தமிழர்கள் தான்.வழக்கம் போல் என் மகன்களை என் அம்மாவிடம் விட்டுட்டு போவதாய் இருக்கிறேன். நான் போகவில்லை என்று சொன்னாலும் என்னவர் போய்ட்டு வா என்கிறார். (நிம்மதியாய் ஒரு 15 நாட்கள் இருப்பார் போல) முழு கேரளாவும் பார்க்கிற மாதிரி ப்ளான். நம்ம பதிவர்கள் கொஞ்சம் ஐடியா கொடுங்களேன்.

சென்னையிலிருந்து கோவை ட்ரையின் பின் கார்...
காரில் கோவையிலிருந்து ஊட்டி வழியாக வயநாடு போய் பின் அப்படியே உயிரே உயிரே என்று அரவிந்த் சாமி பாட மனிஷா ஓடி ஓடி இறுதியில் அரவிந்திடம் வரும் இடம்(மும்பாய் ஃபிலிம்) Bekal fort(near mangalore).
அங்கிருந்து கோழிக்கோடு,திருச்சூர்,குருவாயூர் வந்து காரை கோவை அனுப்பிவிட்டு..அங்கிருந்து நைட் ட்ரைனில் திருவனந்தபுரம் போய் அருகில் உள்ள இடங்களை காரில் சுற்றிவிட்டு ஆலப்புழா வந்து அங்கிருந்து போட் ஹவுஸில் கொச்சின் வந்து, கொச்சினை, அருகில் உள்ள இடங்களை சுற்றிவிட்டு பின் கொச்சினிலிருந்து ட்ரைனில் சென்னை வரலாம் என்று யோசனை உள்ளது. முழு கேரளாவும் கார் என்றால் கஷ்டமாக இருக்கும் என்று இப்படி ஒரு யோசனை உள்ளது.
இதில் முக்கியமான நீங்கள் பார்த்து ரசித்த இடங்களை பற்றி விவரங்கள் வேண்டும். வேறு ஏதேனும் ஐடியா இருப்பினும் சொல்லுங்கள். இன்னும் நான் ட்ரையின் டிக்கெட் புக் செய்யவில்லை.கோயில்கள்,முக்கியமான இடங்கள் ஹோட்டல் விவரம் தெரிந்தாலும் கூறவும்.சாப்பாடு எங்கு என்ன ஸ்பெஷல் என்பது போல் விவரம் வேண்டும். நல்ல ஐடியா கொடுக்கப்போகும் அனைவருக்கும் கேரளாவிலிருந்து ஒரு பரிசு உண்டு!

Friday, October 09, 2009

புக்கர் பரிசும் இந்தியாவும்...

1969 லிருந்து வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் இந்த புக்கர் பரிசானது இந்த முறை ஹில்லாரி மேண்டல் என்ற பெண்ணிற்கு “WOLF HALL" என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த பரிசானது காமன்வெல்த் நாடுகள்,அயர்லேண்ட்,ஜிம்பாவே முதலிய நாடுகளில் எழுதப்படுகின்ற முழு நீள ஒரிஜினல் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.
1969-லிருந்து புக்கர் மேக்கனால் என்ற ஃப்வுண்டேஷனால் வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகை 50 ஆயிரம் பவுண்டுகளாகும். புக்கர் ஃப்வுண்டேஷன் அமைக்கும் ஒரு குழு சிறந்த புத்தகத்தினை செலக்ட் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் லண்டனில் உள்ள கில்ட் ஹால் என்னும் இடத்தில் இருந்து இந்த புக்கர் அறிவிப்பு வெளிவரும்.


1981-ல் சல்மான் ருஷ்டி மும்பாயில் பிறந்தவர். அவரின் ”மிட்நைட்’ஸ் சில்ட்ரன்” என்ற புத்தகத்திற்கு புக்கர் பரிசினை வாங்கினார்.(பத்ம லெஷ்மி என்ற கேர்ள் ஃப்ரண்டுடன் நிறைய photos வந்தன.)இவரின் ”சட்டானிக் வெர்ஸஸ்” என்ற புத்தகம் பெறும் சர்ச்சையினை முஸ்லீம்களிடையே ஏற்படுத்தின.இரானின் அப்போதைய அதிபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.


1997-ல் அருந்ததிராய் என்ற இந்திய பெண் அவரின் ”தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்”(கேரளா பற்றியது) என்ற புத்தகத்திற்கு இந்த பரிசினை வாங்கினார்.அருந்ததி ராய் NDTV-பிரணாய் ராயினின் கஸினாம்.இவருக்கும் இது தான் முதல் நாவலாம்.எழுத எடுத்துக்கொண்ட வருடங்கள் நான்கு. இவர் பிறந்தது ஷில்லாங்கில்.


2006-ல் கிரண்தேசாய் ”த இன்ஹெரிட்டன்ஸ் ஆப் லாஸ்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார்.இவர் பிறந்தது டில்லியில்.தற்சமயம் வசிப்பது அமெரிக்காவில்.இவருடைய அம்மா அனிதா தேசாயும் ஒரு எழுத்தாளர்.388 பக்கங்கள் கொண்டது இவரது நாவல்.ஹிமாலாயா பகுதியில் நடப்பது போல் உள்ளதாம் இவரது கதை.

2008-ல் அரவிந்த் அடிகா ”தி வைட் டைகர்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார். அரவிந்த் அடிகா நம்ம சென்னையில் பிறந்தவர்.அப்புறம் ஆஸ்த்ரேலியா போய்விட்டார். இவருக்கு இந்த புத்தகம் முதல் முழு நீள நாவலாம்.

முதல் நாவலிலேயே புக்கர் வாங்கறாங்க. இதில் கிரண் தேசாய், அரவிந்த் அடிகா இருவருக்கும் மிக நல்ல பல்கலைகழங்களில் ஆங்கில இலக்கியம் படித்த அனுபவம் உள்ளது.பிறந்தது இந்தியாதான், வளர்ந்தது எல்லாம் அயல் நாட்டிலே. ஆனால், கதையின் தளம் இந்தியாதான் இவர்களின் நூல்களில். வாழ்க இந்தியா..பரவட்டும் இந்தியாவின் புகழ்.


இது வரை இங்கிலாந்து 25 முறையும், ஆஸ்த்ரேலியா 6 முறையும், அயர்லேண்ட், இந்தியா 4 முறையும் இந்த புக்கரை தட்டி சென்று உள்ளன.

Thursday, October 08, 2009

வெரைட்டி

நோபல் பரிசு : எழுத்தாளர் சுஜாதா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவர் மட்டும் இருந்தால் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எதற்கு நோபல் பரிசு வாங்கினார் என்று மிக எளிமையாக விளக்கி இருப்பார். நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை.கொஞ்சம் மெனக்கெட்டதில் எனக்கு புரிஞ்சது இன்னானா...

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரிபோசோம்கள் இருக்கிறது.அவை புரோட்டினை உற்பத்தி செய்யும் ஃபாக்டரி ஆகும்.இந்த ரிபோசோமில் இருக்கும் ஆயிரக்கணக்கான அணுக்களின் ஸ்டரக்சரையும்,அதன் அமைப்பையும் ஆராய்ச்சி செய்ததில் திரு.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் நோய் தாக்கினால் எடுத்துக் கொள்ளும் ஆண்டிபயாடிக், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருக்கும் ரிபோசோமை கொல்லும். எனவே பாக்டீரியா அழிகிறது. பென்சிலின், அமாக்சலின் போன்றவை ஆண்டிபயாடிக் ஆகும்.
இன்னும் நிறைய ஆண்டிபயாடிக்கினை கண்டுபிடிக்க உதவுமாம் திரு.ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி. அப்பாடா.....


தீபாவளி: தி.நகர் கடைகளில் தீபாவளிக்கு கூட்டம் அள்ளுகிறது. போத்தீஸில் நல்ல கூட்டம்.
புடவை எடுக்க ஏன் ஆண்களும் வருகிறார்கள் என்று புரியவில்லை. அந்த கூட்டத்தில்
மனைவிகளுடன் சேர்ந்து நின்று கொண்டு ஏங்க இந்த கலர் எடுக்கவா, அதை எடுக்கவா என்று பெரிய டிஸ்கஸன் வேறு...மற்ற பெண்களுக்கும் கஷ்டம் கொடுத்துக் கொண்டு.
சில பெண்கள் கட்டாயம் ஆண்கள் தங்களுடன் கடைகளுக்கு வர வேண்டும் என்று இருக்கிறார்கள். எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

பெரிய காலேஜ்: போன வாரம் என் மகனுடன் அவன் பெரியப்பா வீட்டிற்கு (வளசரவாக்கம்) போய் இருந்தேன். கிளம்பும் போது அவனுடைய பெரியப்பா மகன் நாளைக்கு லீவு போடுடா,
இப்ப வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னான். இவனோ போங்கண்ணா காலேஜுக்கு
போகணும் என்றான்.என்னடா ரொம்ப அலட்டிகிறே,,பெரிய இந்த காலேஜ் என்று கூறினான்.
உடனே என் பையன் ஆமாண்ணா எங்கள் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உண்மையிலேயே பெரிய காலேஜ் தான் 365 ஏக்கர், ஏசியாவிலேயே இரண்டாவது பெரிய scrub forest என்று சொல்லவும் சரிடா தம்பி ஒத்துக்கிறேன் பெரிய காலேஜ் தான் என்று கூறிவிட்டான்.

Thursday, October 01, 2009

3-அயன்

ENGLISH TITLE:3-IRON
KOREAN FILM
KOREAN NAME BIN-JIP அப்படின்னா EMPTY HOUSES-ன்னு அர்த்தமாப்பா.
DIRECTOR: KI-DUK-KIM

பார்த்த சேனல்; UTV WORLD MOVIES


டா-சுக் + சன்-வா

சிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும்.

டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது.
ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட வீடுகளில் இன்னும் கிழிக்கபடாமல் இருக்கும் நோட்டீசை வைத்து அந்த வீட்டில் யாரும் இல்லை என்று புரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்து அவன் வீட்டினை போல் உபயோகிக்கித்து கொள்கிறான். வீட்டு ஓனர் திரும்பி வரும் வரை அங்கேயே வசித்து வருகிறான். வீட்டில் ரிப்பேராகி இருக்கும் கடிகாரம்,டேப் ரிக்கார்டர் முதலியவற்றை சரி செய்து வைக்கிறான்.துணிகளை துவைப்பது,செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றும் செய்கிறான் எதையும் திருடுவதில்லை.

ஒரு முறை ஒர் பெரிய பங்களாவினுள் நுழைகிறான் அங்கு வீட்டு சிறையில் இருக்கும் ஒரு பெண் இருப்பது தெரியாமல். சன் வா என்ற அந்த பெண் அவனுக்கு தெரியாமல் அவனை கவனிக்கிறாள். போனில் அவள் கணவனுடன் உரையாடுவதினை வைத்து அந்த பெண் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என்று உணருகிறான். ஒரு நாள் கணவனும் திரும்பி வருகிறான்.அந்த பெண்ணை பலவந்த படுத்துகிறான். மறுக்கும் பெண்ணை அடிக்கிறான். இதனை பார்த்த டா-சுக் 3-IRON எனப்படும் போலோ விளையாடும் பேட்டால் போலோ பந்துக்களை வைத்து அடித்து அவன் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறான்.பூட்டிய வீட்டினுள் நுழைந்து இருவரும் வாழ்கிறார்கள். ஒரு டிஜிட்டல் கேமிராவால் ஒவ்வொரு வீட்டிலும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்க்ள்.
ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அங்கு ஒரு பெரியவர் இறந்து கிடக்கிறார். இருவரும் அவரை நல்ல முறையில் வீட்டிற்கு பக்கத்தில் அடக்கம் செய்கிறார்க்ள். ஒரு நாள் அந்த பெரியவரின் மகனும், மருமகளூம் வீட்டிற்குள் வந்து பெரியவை இல்லாததை அறிந்து டா-சுக்,சன் - வா இருவர் மீதும் போலிஸில் புகார் கொடுக்கிறார்க்ள். போலிஸ் விசாரைணையில் பெரியவர் புதைக்கப்பட்டஇடத்தில் தோண்டி பார்க்கையில் அவர்கள் முறைபடி நல் அடக்கம் செய்ய பட்டிருப்பது அவர் மகனுக்கு வியப்பினை தருகிறது. அட்டாப்ஸி ரிப்போர்டில் பெரியவர் நுரையீரல் புற்று நோயில் இறந்தது தெரிகிறது. வீட்டிலும் ஒரு பொருளும் களவாடபடவில்லை என தெரிந்து பெரியவரின் மகன் டா- சுக்கினை விடுவிக்க சொல்லிட்டு போய் விடுகிறார்.

இதற்கிடையில் சன் - வாவின் கணவன் இன்ஸ்பெக்டரிடம் மனைவி காணவில்லை என்று முன்பு கொடுத்து இருந்த விண்ணப்ப்த்தினை வைத்து டா-சுன், சன் - வாவினை கடத்திக் கொண்டு போனதாக சொல்லி நம் ஹீரோவினை சிறையினில் தள்ளுகிறார். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் கணவனிடம் லஞசம் வாங்கி கொண்டு இதனை செய்கிறார்.

கணவனுடன் வீடு திரும்பிய சன் - வா கணவனை கண்டாலே பிடிக்காமல் டா- சுக்கினை நினைத்து கொண்டே வாழ்கிறாள் எப்ப்டியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு.

சிறையில் ஹீரோ அடிக்கடி மறைந்து கொண்டு உள்ளே நுழையும் போலீசை கடுப்படிக்கிறான். போலீஸ் அடித்தால் கூட கூலாக ஒரு சிரிப்பு. மெடிடேஷன் மாதிரி எப்பவும் மெதுவாக காலடி ஓசை இல்லாமல் நடக்க பயிற்சி எடுக்கிறான்.ரூமில் நுழையும் போலீசின் பின்னால் ”180 கோணத்தில்” நிற்கிறான். போலீசிற்கு தெரிவதில்லை அவன் பின்னால் நிற்பது அவர் திரும்பும் நேரத்தில் இவனும் அவனை தொடர்வதால் போலீசிற்கு எரிச்சல் வருகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் டா-சுக் நேரே சன் - வா வீட்டிற்கு சென்று அவள்
கணவனின் கண்களுக்கு தெரியாமலே சன் - வாவுடன் இஷ்டம் போல் இருக்கிறான்.

இந்த படத்தின் ஹீரோ படம் முழுவதும் பேசுவதேயில்லை. ஒரு மர்ம புன்னகை மட்டுமே. ஹீரோயினும் அவனுடன் பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பேசுவதில்லை என்று நாம் உணர்வதே இல்லை. அப்படி ஒரு நடிப்பு இருவரும். UTV WORLD MOVIES சேனலில் இந்த மாதம் அடிக்கடி இந்த படம் ஒலிப்பரப்பாகும். முடிந்தால் பாருங்கள். மெல்லிய இசை,ஹீரோவின் அழகு, ஹீரோயினின் பாவமான முகம், ஹீரோவின் சிரிப்பு என எல்லாமே அழகு இந்த கொரிய படத்தில்.

Tuesday, September 29, 2009

நான் சந்தித்த பதிவர்கள்!!!

லக்கிலுக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் போன் செய்து பதிவர் சந்திப்பிற்கு யாராவது பெண் பதிவர்கள் வருகிறார்களா என்று கேட்டேன். வரலாம்,நீங்க வாங்க மேடம் என்று கூறினார்.சரி நடக்கிறது நடக்கட்டும் என்று 3.30க்கு எல்லாம் தாம்பரத்திலிருந்து டி.வியே கதியென்று என்று இருந்த என்னருமை கணவர்+மகன்களுக்கு டாட்டா சொல்லிட்டு குடை ஒன்றினை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். காந்தி சிலை அருகே சிக்னலில் பஸ் நிற்கும் போது பஸ்ஸிலிருந்து குதித்து 5 மணிக்கெல்லாம் காந்தி சிலை பின்னாடி நின்று கொண்டு இருந்த சில பதிவர்களுக்கு பக்கமாய் போய் நின்று கொண்டேன். லக்கிலுக் வாங்க வாங்க என்று வரவேற்பு கொடுத்தார்.கேபிள் சங்கர், முரளிகண்ணன்,நர்சிம்,அதிஷாவும் ஒரு பெரும் புன்னகையுடன் வரவேற்றனர். யாராவது பெண்கள் அந்த பக்கமாய் வந்தால் பதிவராக இருக்குமோ என்று பார்த்து கொண்டு இருந்தேன். யாரும் பெண் பதிவர்கள் வரவேயில்லை. சரி என்று லக்கிலுக் கொடுத்த புதிய தலைமுறை காம்ப்ளிமெண்டரி புக்கை படித்துக் கொண்டு இருந்தேன்.

நான் எதிர்பார்த்த ஆதி,கார்க்கி இன்னும் வரவில்லை. அதியமான் சார் என்னிடம் பழைய பதிவர் சந்திப்பினை பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம் சகஜ நிலைமைக்கு வந்தேன். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்று நான் நினைத்த நர்சிம் தான் அப்படி இல்லை என்ற எண்ணத்தினை எனக்கு ஏற்படுதினார். ஏனோ அவரினை சந்திக்கும் வரை அப்படிதான் நினைத்து இருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யும் படலம் நடந்தது. மழையும் தன்னை அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் 200 பேராவது தஞ்சம் செய்தோம். நான் குடை வைத்து இருந்ததால் குடைக்குள் மழை இல்லை. குடை எடுத்து வந்து டீச்சர் என்று நிரூபித்து விட்டீர்கள் என்று நர்சிம் கலாய்த்தார்.

வளர்மதி என்னுடன் குடைக்குள் நின்று கொண்டார். வீட்டில் தூங்கி கொண்டு இருந்தேன். என்னை எழுப்பி குளிக்க வைத்து, வேறு உடை அணியவைத்து இங்கு கொண்டு வந்து என்னை திரும்ப குளிக்க வைக்கிறீங்களே என்று புலம்பி கொண்டு இருந்தார். பொன் வாசுதேவன் போங்கடா போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா, ஏண்டா இப்படி பதிவு, கூட்டம் என்று அலைறீங்கனு சொல்லிட்டு இருந்தார். மரத்தடியிலேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் நான் மிகவும் எதிர்பார்த்த ஆதி. மழையும் கொஞ்சம் விட்டது. நான் அவர் அருகில் சென்று பேசினேன். நிறைய பதிவர்களின் பதிவுகளை படிக்க நேரமில்லை என்றும் ஆனால், புதியதாய் ஒன்று படிக்க ஆரம்பித்து பிடித்தால் தொடர்ந்து படிப்பதாயும் சொன்னார். கார்க்கி வரவில்லையா என்று கேட்டேன். வந்து உள்ளார், ஆனால் வரவில்லை என்று என்று ஒரு சின்ன டிபன்பாக்ஸ்+சார்ஜர் கையில் வைத்துக் கொண்டு சொன்னார். மழை என்பதால் பக்கத்தில் ஒரு டீக்கடையில்(புட்டிக்கடையா) இருப்பதாய் கூறினார். அந்த டிபன்பாக்ஸில் ரமா கொடுத்து அனுப்பிய சுண்டலா ஆதி????. சரி நான் புறப்படுவதாய் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். நர்சிம், ஆதி எப்படி போவீர்கள் என்று என்னை கேட்டதிற்கு நானாக பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அது தவறு என்று அப்புறம் உணர்ந்தேன்.

நடக்கிறேன் நடக்கிறேன் நடந்து கொண்டே இருந்தேன். கண்ணகி சிலை வரை என்னுடைய பஸ்ஸிற்கு நடக்க வேண்டி இருந்தது. மழை சுத்தமாய் நின்று விட்டிருந்தது. ஒரு பையன் 20 to 25 வயது இருக்கும் என்னுடன் ஏதோ பேச முயன்று கூடவே நடந்தான்.அவன் போனான் ஒரு 45 வயதுள்ள ஒருவர் என்னுடன் நடக்க ஆரம்பித்தான். வாங்களேன் உள் ரோடில் நடக்கலாம் என்று கேட்டான். கொஞ்சம் நின்று நீ முன்னாடி போறீயா, நான் மட்டும் நடந்துக் கொள்கிறேன் என்று கொஞ்சம் சத்தமாய் சொல்லவும் என் முன்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான். ட்ராபிக் இருந்தது. ஆனால், பிளாட்பார்மில் நிறைய ஆட்கள் இல்லை. நான் நடையை வேகப் படுத்தினேன். என் பையன்களுடன் வந்திருந்தால் ஏகாந்தமாய் நடந்து இருக்கலாம். அருமையான மாலை மழையுடன், சாரலுடன். ஆனால்,ஒரு திகிலுடன் பஸ் நிறுத்தம் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன். மழை என்பதால் பீச்சில் கூட்டம் இல்லை. எனவே, அடுத்த சந்திப்பினை ஒரு நல்ல இடமாய் வைக்கலாமே. பதிவர்களுக்கு இந்த வேண்டுகோள். பதிவர்கள் சிலர் புகைப்பிடிப்பதினை பார்த்தேன். வேண்டாமே. இத்தனை நாள் புகைத்தது போதுமே. நீங்க எல்லோரும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஒரு சகோதரியாய், நண்பியாய் எனக்கு ஒரு ஆசை. 50 வயதிலேயே வைகுண்டத்திற்கு டிக்கெட் வாங்க ஏன் ஆசை படுகிறீர்கள்?? கட்டாயம் விட்டு விடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாய் விட முடியாது. மனசு வைத்தால் உடனே விட முடியும். 50 வயதிலேயே இந்த நாசமா போன சிகெரெட்டால் குடும்பத்தினை தவிக்க விட்டுட்டு போன நிறைய பேரை எனக்கு தெரியும். பதிவர்கள் வாழ்க வளமுடன்....

Thursday, September 24, 2009

ஆட்டோகிராஃப்....

என் டீன் ஏஜ் தொடக்கத்தில் பக்கத்து வீட்டிற்கு பக்கத்து வீட்டில்(ஒரு வீடு தள்ளி) என்னோடு ஸ்கூல் மேட் சங்கரி வீடு. அவர்கள் வீட்டில் பெரிய மழழை பட்டாளமே இருக்கும். மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே குடும்பமாக இருந்தார்கள்.கமிஷன் மண்டி வைத்து இருந்தார்கள்.

எல்லா சாயங்காலமும், விடுமுறை நாள்களிலும் நான் அங்கே தான் பழியாய் கிடப்பேன். கல்லா - மண்ணா, சீட்டுக்கட்டு, தாயம், ஒளிந்து விளையாடுதல், கண்ணாமூச்சி, டான்ஸ் ப்ராக்டிஸ், ஊஞ்சல், கேரம், இன்னும் பெயர் மறந்து போன அனைத்து விளையாட்டும் அங்கே தான். சங்கரியின் கோமதிஅத்தை தான் பார்த்த எல்லா படங்களின் கதைகளையும் சொல்லி விடுவார், நேரில் பார்த்த மாதிரி இருக்கும். பேய் கதை எல்லாம் கேட்டால் தனியே வீட்டிற்கு போக பயமாய் இருக்கும். பெரிய முற்றம் வைத்த வீடு அது.

சாயங்காலம் 6 மணிக்கு மேலே வீட்டிற்கு வந்தால் அம்மா கதவை பூட்டி விடுவார்கள். ஏன் தான் 6 மணி ஆகுதுன்னு இருக்கும். போ உன் அப்பா வந்ததும் வா என்று அம்மா பிடிவாதமாய் சொல்லி விடுவார்கள். வாரம் இரண்டு நாள் ஆவது வாசலிலே நின்று கொண்டு இருப்பேன்.திரும்ப சங்கரி வீடு போக இருட்டு பயம். அப்பா வந்ததும் எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்லம் என்று அம்மா அப்பாவை திட்டிக் கொண்டே கதவு திறந்து விடுவார்.ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, ஆச்சு பத்தாவது க்ளாஸும் வந்தாச்சு. சங்கரியின் தம்பி, அண்ண்ன் எல்லாம் எனக்கும் அப்படியே.

அம்மா போகாதே போகாதே என்று திட்டி கொண்டே இருப்பார்கள். ஆனாலும், கொஞ்சம் போவதை குறைத்தேனே தவிர சுத்தமாய் கட் செய்யவில்லை. அப்பா சின்ன பெண் தானே என்று பெர்மிஷன் கொடுத்து விடுவார். பத்தாவது படிக்கும் போது தமிழ் கோனார் உரை அப்பா வாங்கி வர மறந்து மறந்து போனார். எனவே, வருட ஆரம்பத்தில் தமிழ் கோனார் உரை சங்கரியின் அண்ணனிடம் வாங்கி வாங்கி படித்து கொள்வேன்.

சேகர் என்ற அந்த அண்ணன் எனக்கு ஒரு வருடம் சீனியர்.ஆனால்,வயது அதிகம் இருக்கும். தமிழ், இங்கிலிஷில் பத்தாவது பெயில் ஆகி அக்டோபரில் மறுபடியும் தேர்வு எழுத படிக்கிற மாதிரி பாவனை செய்துக் கொண்டு இருந்தான். அதனால், அக்டோபருக்கு பிறகு அந்த கோனார் உரையை எனக்கே தந்து விடுவதாய் அந்த வீட்டில் சொல்லப்பட்டது. ஓசியில் ஒரு நோட்ஸ் கிடைக்கப் போவதாய் நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

ஆகஸ்டில் ஒரு மாத பரீட்சை வந்தது. சங்கரி வீட்டிற்கு ஓடினேன் நோட்ஸிற்காக. அவசரமாய் வெளியில் வந்த சேகர் என் கையில் வாசலிலேயே நோட்ஸை கொடுத்து விட்டு ஒரு வித்தியாசமான் லுக் விட்டுட்டு போனான். வீட்டிற்கு வந்து நோட்ஸை திறந்தால் 10 பக்கத்திற்கு ஒரு பக்கம் மேலே “I LOVE YOU AMUDHA" என்று பென்சிலால் எழுதப் பட்டிருக்கு. ஆயிரம் தாமரை மொட்டுகளே ---ன்னு எனக்கு பாட்டெல்லாம் வரலை. அழுகையாய் வந்தது. என்னோட பெயரை Amutha- னு “T" போட்டு தான் எழுதுவேன். இந்த “D" எனக்கு பிடிக்கவே இல்லை.. முதலில் இதுதான் தோன்றியது.

அப்புறம் தான் அடடா, இப்படியா மேட்டர்னு புரிந்தது. படிக்கவே இல்லை. என்னடா செய்யலாம் என்று மனசுக்குள் ஒரே கேள்வி. மறு நாள் பஸ்ஸிற்கு நிற்கும் போது சைக்கிளில் அங்கும் இங்கும் போய் கொண்டே இருந்தான் சேகர். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த உடன் சங்கரியிடம் விஷயத்தை போட்டு கொடுத்து விட்டு, அழி லப்பர் எடுத்து அனைத்தையும் அழித்து விட்டு கோனாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பத்திரமாய் அவளிடம் கொடுத்து விட்டேன். பாவம், அவனுக்கு வீட்டில் என்ன அர்ச்சனை விழுந்ததோ.அவனோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். அடிக்கடி நான் +2 படிக்கும் வரை பார்த்து கொண்டோம். ஒரு முறைப்போடு சரி. அவன் கூட்டமாய் பசங்களோடு வந்தால் பயமாய் இருக்கும். அப்புறம் வீடு மாற்றி விட்டோம்.

ஆனால், அதன் பிறகு அம்மாவே விஷேஷத்திற்கு பலகாரம் கொடுக்க போக சொன்னால் கூட அந்த வீட்டிற்கு போகவே மாட்டேன். கொஞ்ச நாளில் அடுத்த தெரு செல்வியிடம் அவளும் என்னோட கிளாஸே அந்த கோனார் நோட்ஸை பார்த்தேன். ஆனால், அவளிடம் இசகு பிசகாய் கேள்வி எதுவும் கேட்கவில்லை..என்னை முதலில் லவ்விய அந்த சேகரை அந்த பெயரில் யாராவது, எங்காவது பார்க்கும் போது, கேட்கும் போது நினைத்து கொள்வேன்.

Wednesday, September 23, 2009

சவாரிகள்

குதிரை சவாரி : மெரினா பீச்சுல்ல,கொடைக்கானல்ல போயிருப்போம். கேதார்நாத் போன போது ஆசைக்கு கொஞ்ச நேரம் போய் வந்தேன்.


யானை சவாரி:

சின்ன வயதில் கோயில் யானை மேலே நாம் அழ அழ உட்கார வைக்க பட்டிருப்போம். ஆனால், முதுமலையில் யானை சவாரி மறக்கவே முடியாது. ஒரு யானையில் நான்கு பேர் அமர முடியும். ஏறியதும் அது காட்டு பகுதியில் போகுது. யானை பாகன் நம்முடன் அமர்ந்து இருக்க. இன்னொரு பாகனும் உடன் நடந்து வருகிறார். ஒத்தையடி பாதையில் யானை சகதியிலும் சேரிலும் படாமல் நடந்து வர கீழே நடப்பவர் உதவுகிறார். எதிரில்
யானை ஒன்றை ஒன்று பார்த்து கொண்டால் சண்டை போட்டுக் கொள்ளும் என்று சொல்லி பீதியினை கிளப்புகிறார். (விநாயகா நேரிலே வராதப்பா) வேறு ரூட் மாற்றிக் கொள்கிறார்கள் எதிரில் யானை வருவது தெரிந்தால். கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து பின் பயணம் தொடர்கிறது. முதுமலையில் தமிழக அரசுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்.

ரூம் ஒன்று ஒரு நாள் வாடகை 300 ரூபாய். அங்கு வேலை பார்ப்பவர்கள் தங்கும் காலனி சிறிதாக இருந்தது. ரூமிற்கு முன்னால் சிற்றோடை. மாலையில் யானைகள் நீர் குடிக்க, குளிக்க வருகின்றன. ரூமிற்கு பின்னால் மான்களும், மயில்களும் ஆடி கொண்டு இருந்தன. சாப்பாடு என்ன சொல்கிறோமோ செய்து தருகிறார்கள். சப்பாத்தி,சிக்கன்,சாதம் என்று புகுந்து விளையாடினோம். நைட் படுக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. எதுவும் மிருகம் ரூம் பக்கம் வந்து விடுமோ என்று.

ஒட்டக சவாரி: ராஜஸ்தானில் ஜெய்சால்மர் என்னும் இடத்தில் உள்ள பாலைவனத்தில் செய்த ஒட்டக சவாரி சூப்பராக இருந்தது. கீழே உட்கார்ந்த பின் அதன் முதுகில் இரண்டு பக்கம் காலை போட்டு உட்கார வைக்கப் படுகிறோம். அது மெல்ல எழுந்திருக்கும் போது தான் அடடா தப்பு செய்து விட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.
பாகன் முன்னாடி கயிற்றினை பிடித்து கொண்டு மிக வேகமாக நடக்கிறார்.இல்லை ஓடுகிறார். ஒட்டகமும் ஓட ஓட நமக்கு அங்கிருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது. மெல்ல போகுமாறு சொன்னாலும் பாகன் கேட்பதில்லை.
நான் வேறு நல்ல உயரமான பெரிய ஒட்டகத்தினை செலக்ட் செய்து இருந்தேன். இப்படி ஓடும் என்று தெரிந்தால் சின்னதாய் ஒரு ஒட்டகம் பிடித்து இருப்பேன். ஒட்டக சவாரி முடிந்தவுடன் sand dunes-ல் அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்க்கவும், வரிசையாக செல்லும் மற்ற ஒட்டகங்களை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அனைவரும் மணற்பரப்பின் மேலிருந்து கீழே உருண்டு உருண்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக குளிர ஆரம்பித்தது.

Tuesday, September 22, 2009

அமுதா இது உனக்கு தேவையா???


மலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய் தான் இருக்கும்.

அத்தோடு விட்டிருக்கலாம்.விதி யாரை விட்டது. கடலில் போட்டிங் போனீர்களா என்று நான் கேட்க அவர்கள் water bike,parasailing, என்று அனைத்தும் போனோம். நல்லா இருந்தது நீங்கள் போகலையா என்று கேட்டார்கள். ஸ்விம்மிங் தெரியாது அதனால் போகலை என்று சொல்ல ..ஓ, அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம். டோண்ட் மிஸ் திஸ் சான்ஸ் என்று சொல்லிவிட்டு மிக கட்டாய படுத்தி விட்டு சென்றார்கள். ஆசை யாரை விட்டது.

இதுவே வயசாகி விட்டது. இன்னொரு பிறவி உண்டா இல்லையா தெரியவில்லை. இந்த சான்ஸை மிஸ் செய்ய கூடாது.எனவே parasailing போக வேண்டியது தான் என நான் மட்டும் முடிவு செய்து விட்டேன். என்னவர் மொட்டை மாடிக்கு போனாலே தலை சுத்தும் கேஸ். எனக்கோ லிப்ட்டில் ஏறினாலே எப்பவாவது தலை சுத்தும்.

சரி சுத்துறது சுத்தட்டும் என்று ஏழுக் கொண்டலுவாடாவினை நினைத்துக் கொண்டு parasailor-டம் பேரம் பேசி (பேரம் பேசலைனா தமிழ்நாட்டுக்கு இழுக்கு) அவர் சொன்னதிற்கெல்லாம்(பாஷை தெரியாமல்) குத்து மதிப்பாய் புரிந்துக் கொண்டு லைஃப் ஜாக்கெட்டெல்லாம் போட்டுக் கொண்டு ரெடியானேன். என்னவர் அப்பாடி தொல்லை நம்மை விட்டு தொலைந்தது என்ற படி நிம்மதியாக மற்ற ஜோடிகளை வேடிக்கைப் பார்க்க தொடங்கினார். நானா விடுவேன்.. நான் பறப்பதை அழகாய் படமும் வீடியோவும் எடுக்கும் படி அவரிடம் ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் போதே என் இடுப்பை சுற்றி பெல்டும் ஒரு கயிறு சுற்ற பட்டது ஒரு புறம் பாராசூட்டிலும், மறு புறம் ஒரு போட்டிலும் நடுவில் நானும். ஃபுல்லா வீடியோ எடுங்கப்பா என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் இழுத்து செல்ல பட்டேன். கொஞ்ச தூரம் நான் பீச் மணலில் ஓடினேன், ஓடினேன், பீச்சின் ஓரத்திற்கே ஓடினேன். ஓடும் போது எதற்கோ தடுக்கி விழுந்து என் முழங்காலில் கொஞ்சம் வலியுடன் தான் ஓடினேன் ..காலில் தண்ணீர் தட்டுபடும் முன் மேலே இழுத்துச் செல்லப் பட்டேன். முன்னிருக்கும் கயிறு ஒரு போட்டுடன் கட்டப் பட்டிருக்கிறது அது ஸ்பீடு எடுத்தவுடன் நாம் மேலே செல்கிறோம்.

ஓ, இது என்ன எனக்கு முதலில் வயிற்றில் வலி இல்லையே, இப்ப வலிக்கிறதே, கையை எப்படி வைத்து கொள்ள என்று கேட்கவில்லையே, இப்படியே உயர்த்தி பிடித்து கொள்ளவா இல்லை நார்மலாகவா, கையை எடுத்தால் விழுந்து விடுவோமா, கீழே பார்த்தால் தண்ணீர், தண்ணீர், இங்கே இருந்து விழுந்தால் ரொம்ப ஆழத்திற்கு போய் விடுவோமோ, காற்று ஏன் இப்படி சத்தம் போடுகின்றது, பீச்சில் யாரெல்லாம் இருக்கிறார்கள், நம்மை பார்த்து யாராவது சிரிக்கிறார்களா, சிரிக்கட்டும் கீழே வந்து கவனித்துக் கொள்ளலாம், நான் ஒரு பெல்டில் உட்கார்ந்து இருக்கிறேனா இல்லை தொங்கி கொண்டு இருக்கிறேனா?? என்னவர் பீச்சில் இருக்கிறாரா..இல்லை இது தான் சாக்கு என்று சரக்கு வாங்க எஸ்கேப்பா, (அங்கே சரக்கு எல்லாம் மலிவோ மலிவு, வாங்கணும் என்று சொல்லிட்டு இருந்தார்) ஃப்ளைட் பிடிக்க எஸ்கேப்பா.. இத்தைனையும் மீறி அமுதா இது உனக்கு தேவையா??? எஸ்கலேட்டரில் ஏறவே ஆயிரம் முறை யோசிக்கும் உனக்கு இது தேவையா என்று இருந்தது.

ஆனால், மறக்கவே முடியாத இன்னொரு முறை போகவே ஆசை வராத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்..கொஞ்ச நேரம் சென்ற பின் பீச்சில் இருப்பவர்கள் சிலர் பச்சை துணியை ஆட்டி ஆட்டி கத்தி கத்தி சைகை காண்பிக்க நான் என் வலது கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை பலம் கொண்ட மட்டும் காற்றை எதிர்த்து இழுக்க, இழுக்க ஹையா பீச்சிற்கு பக்கமாய் இறங்க ஆரம்பித்தேன்,..ஓடி வந்து கொஞசமாய் கொஞ்சமாய் ஓடி ஸ்டடியாய் நிற்க என் parasailing பயணம் இனிதே முடிந்தது. parasailing owner--என்னை good, good என்று மிக பாராட்டினார். ஏனெனில், நிறைய பேர் அவர் கூறும் இன்ஸ்ட்ரெக்‌ஷனை கவனிக்காமல் நேராய் கடலில் போய் விழுந்து வாரி சுருட்டி மண்ணும் தண்ணீருமாய் முகமெல்லாம் பேஸ்தடித்து வந்தார்கள். பாராசூட் தண்ணீரில் நனைந்தால், அந்த துணி காய்ந்து அடுத்து போவதற்கு நேரமாகும். என்னவர் முகம் கொஞ்சம் வருத்ததில் இருந்த மாதிரி தெரிந்தது( நான் திரும்பி வந்ததாலா!)

Tuesday, September 15, 2009

பச்சை நிறமே பச்சை நிறமே கடவுள் நிறமும் பச்சை நிறமே..

கேதார்நாத் போன போது இப்படி தான் தோன்றியது.எங்கு பார்த்தாலும் பச்சை நிறமே. இயற்கை தான் கடவுள் என உணர முடிந்தது. அவசியம் பார்க்க வேண்டிய இடம். ஆனால்,பார்க்க வருபவர்களோ 55+ மக்களே.பாவம் அவர்களுக்கு ஆயிரம் உடல் உபாதைகள். எல்லோரும் நான் இப்பவே வந்ததிற்கு பாராட்டினார்கள்.என் பசங்களை என் அம்மா வீட்டில் பார்த்துக் கொண்டதால் தான் நான் போக முடிந்தது.அம்மாவிற்கு நன்றி.
ஏனென்றால், நான் மட்டும் தான் (யூத்!) நன்கு அனுபவித்தேன்.மழை,குளிர்,பனி என்று எங்கும் அமைதி. கேதார்நாத் ரிசிகேஷிலிருந்து 15 மணி நேரம் மினி பஸ்ஸில் பயணம்.ஏப்ரல் முதல் நவம்பர் முதல் வாரம் மட்டுமே இங்கு போக முடியும். அதன் பின்னால் முழு ஊரையும் பனி மூடிவிடும்.


போகும் வழியெல்லாம் இப்படி ஒரு பக்கம் அதாள பாதாளத்தில் மந்தாகினி (நதி) மிக கோவமாக ஓடிக் கொண்டு இருந்தாள். ஒரு பக்கம் மலை, ஆங்காங்கே அருவி என இயற்கை விருந்து.


கெளரிகுண்ட் என்ற இடத்தில் இருக்கும் வெண்ணீர் ஊற்றில் குளிருக்கு இதமாக ஒரு குளியல். எங்காவது குழாய் வழியே தண்ணீர் வருகிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். அதிசயமாய் இருந்தது. எப்படி இப்படி ஒரு வெந்நீர் இங்கு என்று.அங்கிருந்து காலை 6 மணிக்கு கேதார்நாத் பயணம்.(14 km)


டோலி,குதிரை அல்லது
நடைபயணம். நான் டோலியில் போனேன். நம்மை எடை போட்டு அதற்கு ஏற்றார் போல பணம் வாங்குகிறார்கள்.எனக்கு 2500 ரூபாய் வாங்கினார்கள். என்னை தூக்க நான் நீ என்று ஒரே போட்டி( 50 kg tajmahal!! நிஜமா)

நேபாளி பசங்க நாலு பேர் நம்மை தூக்கி சுமக்கிறார்கள். 19,20 வயது பசங்க. செம குளிர். மழை வேறு பெய்து கொண்டு இருந்தது.குடையை வைத்துக் கொண்டு டோலியில் உட்கார்ந்து கொண்டேன் அவர்கள் ஸ்கின் ஸ்ட்ராங் போல தங்களை பாதுகாத்து கொள்ள எதுவும் வைத்து கொள்ளவில்லை நல்ல ஷீக்களை தவிர .நம்மை அருமையாக கவனித்து கொள்கிறார்கள்.

6 மாதம் இந்த வேலைக்கு வந்து விடுவார்களாம். நேபாளில் ஒரு தொழிலும் கிடையாதாமே. ஷாருக்கான் தான் பிடித்த ஹீரோ என்றார்காள் ஹிந்தி பாட்டுக்களை பாடி கொண்டே வந்தார்கள்.. ரெஸ்ட் ரூம் பக்கத்தில் இறக்கி விடுவதிலிருந்து, டீக்கடையில் குளிருக்கு இதமாய் நாம் ரெஸ்ட் எடுக்க வைப்பது வரை நம்மை நன்கு கவனிக்கிறார்கள்.அவர்கள் அந்த கேப்பில் கடலை வித் நேபாளி பெண்கள்(டீக்கடை ஓனர்ஸ் இந்த பெண்கள் தான் அவ்வளவு அழகு).அடுப்பில் கைவைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.டீதான் ஃபுல் டே உணவு. நூடுல்ஸ்,பிஸ்கெட்ஸ் கிடைத்தது. கோயிலை அடைந்து பின் கீழே மாலை 6 மணிக்குதான் வரமுடியும். நான் நடுவில கொஞ்ச நேரம் நடந்து வந்தேன். முடியவில்லை. மூச்சு விட (யூத்திற்கே) மிக சிரமமாக இருந்தது.(3584m above sea level) இறங்கிய பின் 500 ரூபாய் ஒவ்வொரு பையனுக்கும் கொடுத்து வந்தேன்.எவ்வளவு கொடுத்தாலும் தகும்


கோயிலுக்கு போகும் வழியெல்லாம் இருக்கும் மலை எல்லாம் பச்சை,,பச்சைனு இருக்க..
கோயிலுக்கு பின்னால் இருக்கும் மூன்று மலை மட்டும் பனி போர்த்தி இருந்தது.சொர்க்கம் அதுதானா.12 ஜோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்று. எருதின் முதுகு பகுதி போல லிங்கம் வடிவம் இருந்தது.


குதிரை சவாரி செய்தவர்கள் முதுகில் வழி ஏற்பட்டதாக சொன்னார்கள்.1000 ரூபாய் அதற்கு சார்ஜ்.குதிரை திடீரென்று புல் (க்ராஸ்) தண்ணீர் சாப்பிட ஓரமாக போகுது.பார்க்கும் நமக்கு உயிரே போகுது. போகும் வழியெல்லாம் அழகான நாய்கள் அமைதியாக இருந்தன. மகாபாரத்தில் தருமருக்கு சொர்க்கம் வரை துணனக்கு போனதாம் இந்த நாய்கள். கட்டாயம் அவசியம் முடிந்தவர்கள் இங்கு போய் வரலாம். ரிசிகேசிலிருந்து போக வர கார் வாடகைக்கு கிடைக்கும். தங்கும் விடுதிகள் குறைந்த வாடகை தான். அப்புறம் அப்படியே பத்ரிநாத் போனோம். அது இன்னொரு சொர்க்கம்.

Friday, September 11, 2009

சினிமாக்களில் பார்த்து பார்க்க ஆசைப் பட்ட இடங்களும் பார்த்த இடங்களும்....


அத்திரபள்ளி அருவி : புன்னகை மன்னனில் என்ன சத்தம் இந்த நேரம்...இந்த பாட்டை பார்த்த நாள் முதல் சாலக்குடி அருவியை பார்க்கவேண்டும் என்று ஆசை. பார்த்தாச்சு. கொச்சினிலிருந்து 2 மணி நேரம் திருச்சூர் நோக்கி பயணம். சாலக்குடி என்ற ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து அத்திரபள்ளி அருவி போக வர டவுண் பஸ் உள்ளது. காரில் போக வர 700 ரூபாய் ஆகும்.
போகும் போது தூரத்திலேயே அருவி தெரிகிறது. ஏப்ரல், மே தவிர மற்ற மாதங்களில் நல்ல தண்ணீர் உள்ளது. கீழே போவதற்கு நல்ல வழி கிடையாது. ஆனாலும் பாறைகளில் இறங்கி போய் வரலாம். சாரல் அடித்தே நனைந்து போய் விடுவோம். மேலே நதி போல் வரும் நீரில் குளிக்கலாம்.


பத்துமலை முருகனும் முருகன் பின்னால் இருக்கும் மலையும்:
மலேசியாவில் இருக்கும் இந்த மலை நிறைய படத்தில் பார்த்து இருப்போம். தமிழ் நாட்டில் கூட இது மாதிரி பெரிய சிலை முருகனுக்கு இல்லை. செங்குத்தாய்
இருக்கும் ஒரு 200 படிகளில் மேலே போனால் முருகன் சன்னதியில் சின்னதாய் இருக்கிறார். மழை பெய்தால் உள்ளே கோயிலில் தண்ணீர் விழும்.இயற்கையாகவே அமைந்து இருக்கும் மலையும்,சிகரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியும் மிக நன்றாக உள்ளது.ரீசண்டாக பில்லா(அஜித்) படத்திலும் வரும்.மிக அருமையான மலை.


லங்காவி ஸ்கை பிரிட்ஜ்: இதுவும் பில்லா படத்தில் வரும். நிலத்திலிருந்து 700 மீட்டர் உயரமுள்ள இந்த பிரிட்ஜிற்கு கேபிள் காரில் போய் பின்னர் படிகளில் இறங்கி போக வேண்டும். அதிலிருந்து பார்த்தால் பக்கத்தில் கடலும்,தீவுகளும் தெரிகிறது. இந்த பிரிட்ஜ் நேராக இல்லாமல் வளைந்து உள்ளது.மிகஅருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம்.


சிங்கப்பூர் சிங்கம்:
நினைத்தாலே இனிக்கும்(கமல்) படத்தினை பார்க்கும் போதெல்லாம் பார்க்க நினைத்தது.சிங்கப்பூர் சிங்கம் வாயில் தண்ணீர் வருவதை குழந்தை போல் ரசிச்சாச்சு.





தாஜ்மஹால்+இந்தியா கேட்: இது மெளன ராகம், மற்றும் ஆசை படம் பார்த்ததில் இருந்து பார்க்க ஆசை பட்டது. தாஜ் மகாலை இரண்டு தடவை பார்த்தும் ஒரு முறையாவது பெளர்ணமி அன்று பார்க்க ஆசை.ஆனால் நம் மக்கள் மும்தாஜின் சமாதியில் ஏன் சில்லறை காசை போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

ஈ - டிக்கெட்டால் அழுத பெண்.....

நேற்று வைகை ட்ரெயினில் திண்டுக்கல்லில் இருந்து குடும்பத்துடன் வந்துக் கொண்டு இருந்த போது அரியலூரில் ஒரு இருபது வயது பெண் ட்ரெயினில் ஏறியது.வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கையில் வைத்து இருந்துச்சு. அதனுடைய கெட்ட நேரம் கரெக்டாக ஸ்குவாட் டீம் அதே கோச்சில் ஏறினார்கள்.இந்த பெண்ணிடம் ஃபைன் 350 ரூபாய் கேட்டார்கள். பெண் வைத்து இருந்ததோ ஈ டிக்கெட், பணத்தை எடுத்து வைமா நாங்கள் அடுத்த கோச் போய் வருகிறோம் என்று சென்று விட்டார்கள். பணம் இல்லையென்றால் சென்னை போனதும் கோர்ட்டிற்கு போக வேண்டும் இன்னும் அதிக பணம் கட்ட வேண்டும் என்று சொல்லிப் போனார்கள். தீடீரென்று பார்த்தால் அந்த பெண் அழுதுக்கொண்டு இருந்தது. என்ன என்று கேட்டால் கையில் பணம் இல்லை.டெபிட் கார்டுதான் இருப்பதாய் கூறியது. எங்கு வேலை பார்க்கிறாய் என்று கேட்டால் cts என்று கூறியது. நான் உடனே என் தம்பியை கொடுக்கும் படி கூறினேன். அவனும் அந்த கம்பெனியே .

என் மகனிடம் இன்று சனி பெயர்ச்சி அதான் இந்த பெண் கஷ்ட படுது என்று கமெண்ட் அடித்து கொண்டு இருந்தான். நான் பணத்தை அவனை கொடுக்க சொன்னதும் பார்த்தியா சனி என்னையும் சோதிக்கிறது என்று சொல்லிக் கொண்டே பணத்தினை கொடுத்து விட்டான். (ஏதோ நம்மால் ஆன உதவி!!!) திருப்பி கொடுக்க அந்த பெண்ணிற்கு ஈசியாக இருக்கும் என்று அவனை கொடுக்க சொன்னேன்.

பணம் கொடுத்த பின் அந்த பெண்ணிற்கு அழுதது ரொம்ப வெட்கமாய் போய் விட்டது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு வைத்து கொண்டு கஷ்டபட வேண்டியாகி விட்டது. அவ்வளவு பணம் செலுத்திய பின்னும் சீட் கிடையாது.எங்களுடன் உட்கார வைத்துக் கொண்டோம். அரியலூர் சென்னை 87 ரூபாய் தான் ஓபன் டிக்கெட் பாவம்...ஈ-டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலைனா ட்ரெயினில் ஏற கூடாது என்ற விபரம் தெரியாமல் ஏறிவிட்டது அந்த பெண்.

Wednesday, August 26, 2009

வெரைட்டி..

தானம்:
கண் தானம் பற்றி டாக்டர் அகர்வால் சன் சேனலில் கூறியது..
இறந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். நெருங்கிய உறவினர்கள் கண் மருத்தவமனைக்கு தகவல் சொல்லியதும் உடனே வந்து ஒரு மணி நேரத்திற்குள் இறந்தவரிடம் இருந்து கண்களை எடுத்து விடுவார்கள். எடுத்த பின் மிக சிலருக்கு கொஞ்சம் வீக்கம் தெரியும். மேக்ஸிமம் ஒரு வித்தியாசமும் தெரியாது. இரு கண்கள் நான்கு பேருக்கு உதவுமாம். கார்னியா(கண்ணின் முன் பகுதி) தான் கார்னியா ட்ரான்ஸ்ப்ளாட்டேஷனுக்கு உதவுகிறது. கண்ணின் வெள்ளை பகுதி சில சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப் படும்.மீதி பகுதிகள் ரிசர்ச்சிற்கு பயன்படும். கார்னியாவில் பாதிப்பு உள்ள கண்பார்வை அற்றவர்கள் மட்டுமே இதில் பயன் பெறுவார்கள். கண்ணில் கேன்சர், இரத்த புற்று நோய், எய்ட்ஸ்,ஹெப்பாடைடிஸ், பாம்பு கடித்து இறந்தவர்கள் தானம் செய்ய முடியாது. கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணில் ஆபரேஷன் செய்தவர்கள், ப்ளட் பிரஷர் இருப்பவர்கள், டயாபடிஸ் உள்ளவர்கள் கூட தானம் செய்யலாம்.வயது வரம்பெல்லாம் கிடையாது.நாமும் கண் தானத்திற்கு பதிவு செய்யலாமே. எரிய அல்லது புதைய போகும் கண்கள் நமக்கு பின்னும் உலகை பார்க்கும் என்பதே நல்லது தானே. சங்கர நேத்ராலயா போன்ற பெரிய கிளினிக்கில் இதற்கு என்றே தனி பிரிவு உள்ளது. பதிவு செய்ததை நம் நெருங்கிய உறவினருக்கு சொல்லி வைக்க வேண்டும்.

மாயாண்டி குடும்பத்தார் தீபா

தீபாவின் பேட்டி ராஜ் சேனலில் வந்தது. எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும். வடிவேலு, கோவை சரளா மாதிரி ஊரின் நேட்டிவிடியுடன் பேசும். வடிவேலு மதுரை என்றால், கோவை சரளா கோவை என்றால் இந்த பெண் நெல்லை. சொந்த ஊர் தூத்துகுடியாம். கணவர் மளிகைக் கடை வைத்து இருக்கிறாராம். ஒரு குழந்தை இருக்கிறதாம். வெடிகுண்டு முருகேசன் என்ற படத்திலும் மன நலம் குன்றிய பெண்ணாக வரும். மேகலா என்ற சீரியல் இந்த பெண்ணிற்காகவே பார்ப்பேன். மிக பெரிய ரவுண்ட் வருவார். கமலுடன் ஒரு படத்தில் ஜோடியாக வர வேண்டும். பார்க்கலாம்.


Tuesday, August 25, 2009

நாளைக்கு ஸ்கூல் போகணும் திட்டு வாங்க!!!! என்ன சொல்லி ஒப்பேத்த ஐடியா கொடுங்களேன்!!!

நாளைக்கு என் பையன் (+2 மேத்ஸ்,பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்யூட்டர்) படிக்கும் ஸ்கூலில் பையனை பற்றி என்னிடம் குறை கூற என்னை வர சொல்லி இப்பொழுது ஃபோன் செய்தார்கள். அவன் இஞ்சினியரிங் சேர போவதில்லை.
அவர் அவர் capacity படிதான் படிக்க முடியும்.50% வாங்கினாலும் இப்பொழுது இஞ்சினியர் சீட் கூவி கூவி விற்கிறார்கள்.ஆனாலும், அவன் இஞ்சினியரிங் படிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டு வந்து விடட்டுமா?
ஏன் இந்த ஃப்ர்ஸ்ட் க்ரூப் மோகம் என்பவர்களுக்கு, ஹையர் ஸ்டடீஸ்க்கு இது நல்லது என்பதால் இதில் சேர்ந்தான். அப்புறம் ஏன் இந்த ஸ்கூல் சேர்த்தாய் என்பவர்களுக்கு, இந்த ஸ்கூல் ப்ரின்சிபல் டூயூஷன் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் கறார். அதனால் சேர்ந்தான். ஆனால், எப்ப இந்த வருடம் முடியும் என்று உள்ளது. ஒரு முறை மேத்ஸ் என்றால் இன்னொரு முறை பிஸிக்ஸ் என்று
ஃபெயில் ஆகி விடுகிறான். ஆனால் எப்பவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வில் 65 லிருந்து 70% வாங்கி விடுவான்.எனவே நான் அலட்டிக் கொள்வதில்லை. மாத பரிட்சையில் ஃபெயில்.தலை முடியில் ஃப்ங்க் விடுகிறானாம். கொஞ்சமாய் தாடி இருக்கிறதாம். நாளைக்கு ஸ்கூல் போகணும் என்றாலே எனக்குப் பிடிக்கவில்லை. என்ன சொல்லி வரட்டும். கஷ்டமடா இந்த +2. அவன் அப்பாவோ மார்ச்சில் மூன்று சப்ஜெக்டும், ஃப்யில் ஆகி ஜூனில் மூன்று பேப்பரும் எழுது என்று கூறும் நல்ல மனசுக்காரர்.இப்படி ஸ்கூலுக்கு அலைவது எல்லாம் நான் தான். உடனடி உதவி தேவை.

Friday, August 14, 2009

நீங்க ரெடியா, இந்தியாவின் பொருளாதாரத்தை காப்பாற்ற?


தனி மனிதனால் இந்திய பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த முடியுமா? முடியும்..ஆனால், அதற்கு நாம் சில பல விஷயங்களை செய்ய வேண்டும்.
5 மாதத்திற்கு முன்னால் 1 US $ = IND 39 rs.
இப்பொழுது 1 US $ = IND 50 rs.
US பொருளாதாரம் வளர்கிறதா.இல்லை இந்திய பொருளாதாரம் தேய்கிறது.
இந்தியாவில் நிறைய கம்பெனிகள் மூடும் அபாயம் இருக்கிறது.
வெறும் 80/90 காசுகளில் தயாராகும் குளிர்பானங்கள் விற்பனை ஆவதோ 9/10 ரூபாய்க்கு.
இந்திய கம்பெனிகளால் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று நாம் ஏன் இன்றிலிருந்து உறுதி எடுத்துக் கொள்ள கூடாது.
நம்ம வாழ்க்கை முறையை நாம் மாற்றி கொள்ள வேண்டாம். உபயோகிக்கும் பொருள்களை மாற்றி கொள்ளலாமே.
குளிர்பானங்கள்:
லெமன் ஜுஸ், ஆரஞ்ச் ஜூஸ், லஸ்ஸி, இளநீர்,மோர், மசாலா பால்.

இது வேணாமே:
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

குளிக்கும் சோப்:
CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

இது வேணாமே:
LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE.

டூத் பேஸ்ட்:
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK

இது வேணாமே:
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
டூத ப்ரஸ்:
PRUDENT, AJANTA , PROMISE

இது வேணாமே:
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

ஷேவிங் க்ரீம்:
GODREJ, EMANI

இது வேணாமே
PALMOLIVE, OLD SPICE, GILLETE

ப்ளேடு:
SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

இது வேணாமே:
SEVEN-O -CLOCK, 365, GILLETTE

பவுடர்:
SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

இது வேணாமே:
PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER

பால் பவுடர்:
INDIANA, AMUL, AMULYA

இது வேணாமே:
ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

ஷாம்பு:
LAKME, NIRMA, VELVET

இது வேணாமே:
HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

மொபைல் கார்டு:
BSNL, AIRTEL

இது வேணாமே:
VODOFONE

இவை அனைத்தையும் விட முடியாவிட்டாலும் சில பொருள்களையாவது விட முயற்சி செய்யலாமே.
இந்தியனாக வாழலாம். சிறு துளி பெரு வெள்ளம்...

Thursday, August 13, 2009

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா???

திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

Tuesday, August 11, 2009

பதிவர்களின் பயோடேட்டா

பெயர்: அப்பா அம்மா வைத்த பெயர் இல்லை. வீட்டில் ராமன் என்றால் பதிவுலகில் ராவணன்

வயது: இருபதிலிருந்து எழுபது வரை

தொழில்: பதிவிடுவது

உபதொழில்: ஆணி பிடுங்குவது

நண்பர்கள்: பதிவை படித்து பின்னூட்டம் இடுபவர்கள்

எதிரிகள்: பின்னூட்டம் இடாதவர்கள்

பிடித்த வேலை: பதிவிடுவது

பிடித்த இடம்: பதிவர்கள் சந்திக்கும் இடம்

பிடித்த பொருள்: கம்யூட்டர்,கீ போர்டு, தமிழ் ஃபாண்ட்,

பிடிக்காத பொருள்: நல்ல பதிவு போடுபவர்களின் கீ போர்டும், கம்யூட்டரும்,

விரும்புவது: எல்லோரும் பதிவை படிக்கிறதை.

விரும்பாதது: பதிவை படித்த பின் தலைத்தெறிக்க அனைவரும் ஓடுவதை.

பொழுதுபோக்கு:மற்ற பதிவுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும் ரங்கமணி,தங்கமணிகளை வம்பிற்கு இழுப்பதும்

சமீபத்திய எரிச்சல்: பின்னூட்டமே இல்லையே

நீண்டகால எரிச்சல்: இன்னும் நட்சத்திர பதிவர் ஆகலையே.

சமீபத்திய சாதனை: இன்றைக்கு வீட்டில் திட்டு வாங்காதது..

நீண்டகால சாதனை: ஃப்ளாக் வைத்திருப்பது

Thursday, July 30, 2009

இந்தியாவில் எனக்கு பிடித்த பத்து+ஒரு ஊர்கள்:

1. திருநெல்வேலி:
பிறந்த ஊர் யாருக்காவது பிடிக்காமல் போகுமா? காலையில் குறுக்குத்துறை தாமிரபரணியும், பதநீரும், மாலையில் சூடான அல்வாவும்,மிளகு போட்ட காராசேவும், பார்வதி,ரத்னா,ராயல், லெட்சுமி தியேட்டர்களும், பார்த்த ரஜினி, கமல் படங்களும்,படித்த சாராடக்கர் காலேஜும், டவுணில் உள்ள வலவு வீடுகளும், நெல்லையப்பர் கோயிலும்,ஆனி திருவிழா+தேரும்,மஞ்சள் வயக்காட்டு வாழைப்பழங்களும், சீசன் தவறாத குற்றாலமும், சந்திப்பிள்ளையாரும்,RMKV கடையும் ஆடி கழிவும்,தினம் காலை, மாலையில் குழாயில் வரும் நல்ல தண்ணீரும் ஒரு மணி நேர பயணத்தில் இருக்கும் திருச்செந்தூர்,கன்னியாகுமரியும்,பாபநாசமும், போல வாலே என்ற பேச்சும்..இன்னும் இன்னும்...மறக்க முடியுமா?

2. திண்டுக்கல்:
மலைக்கோட்டை,தாடிகொம்பு கோயில்,மலைவாழைப் பழம்,தலப்பாக்கட்டி,பங்காரு பிரியாணி,சம்மரில் தண்ணீர் கஷ்டமும், நடுராத்திரியில் எல்லோரும் தண்ணீர் பிடிப்பது இங்கு சர்வ சாதாரணம். மல்லி,ரோஜா,இருப்புசட்டி,பூட்டு,வெத்திலை,ஷேஷய்யர் வெள்ளை ஜிலேபி,நன்னாரி ஜுஸ் மிக பிரசித்தி.

3. சோழவந்தான்:
சின்ன வயதில் முதலில் அதிக நாட்கள் தங்கிய அழகிய கிராமம். சித்திரை திருவிழா, வைகை நதி, குட்டி கேரளம் போல் தென்னந்தோப்புகள், சொந்தகாரர் ஒருத்தங்க தோப்பில் ஓடி விளையாடியதும், கிணற்று பக்கத்தில் உள்ள மோட்டரில் குளித்ததும்,போதும் போதும் என்று இளநீர் குடித்ததும், டூரிங்க் தியேட்டரில் பார்த்த படங்களும்..மறக்க முடியாது.


4. விஜயவாடா:
கிருஷ்ணா நதி நிறைய தண்ணீரோடு ஓடிவருவதை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். தினம் அதிக ரயில்கள் கடக்கும் ரயில்வே ஸ்டேஷன்.மலை மேல் இருக்கும் கனக துர்க்கா கோயில்,12கிமீ தூரத்தில் இருக்கும் மங்களகிரி கோயிலில் பானக நரசிம்மர் வாயில் பானகம் ஊற்றுவார்கள், நிஜத்தில் குடிப்பது போல இருக்கும்.எந்த பாத்திரத்தில் இருக்குமோ அதில் பாதி பானகம் மட்டுமே குடிப்பதாக ஐதீகம்.

5. திருப்பதி:
யாருக்குதான் திருப்பதி பிடிக்காது.எவ்வளவு கூட்டம் இருப்பினும் அடுத்த சான்ஸ் கிடைத்தால் போகாமல் இருக்க மாட்டோம். இங்கு srivari சேவா என்ற அமைப்பு உள்ளது. நாம் அங்கு சென்று குறைந்தது 7 நாட்கள் சேவை செய்யலாம். சேவை என்றால் அன்னதான கூடத்தில் உணவு பரிமாறலாம்.சின்ன பிரசாத லட்டு பிடிக்கலாம்.கியூ ரெகுலேட் செய்யலாம்..ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செய்யவேண்டும்.அதற்கு வருடம் தவறாமல் சென்றுவிடுவோம்.மலைக்கு நடந்து ஏறுவதாய் இருந்தால் திருப்பதியில் மாலை 5 மணிக்கு ஸ்டார்ட் செய்தால் இரவு 10குள்ளாக மலைக்கு போய் விடலாம். காலையில் அங்கபிரதட்சணம் செய்தால் 4 மணிக்கெல்லாம் சாமியை நன்கு பார்க்கலாம். நிம்மதியாய் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வரலாம். அதனால் திருப்பதி ரொம்ப பிடிக்கும்.

6.ஆக்ரா:
யாருக்குதான் ஆக்ரா பார்க்க ஆசை இருக்காது.இரண்டு முறை போய் வந்தாச்சு. மனைவி மேல் எவ்ளோ பாசம் இந்த ஷாஜகானுக்கு. ஆனால்,,ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை எப்படி தான் கொண்டு வந்தார்களோ...மாலையில் பார்ப்பதே அழகு. ஆக்ரா பேடா நன்றாக இருக்கும்.

7.கோத்தகிரி:
ஊட்டி இப்பொழுதெல்லாம் ஒரே கூட்டம்+வெயில்.பக்கத்தில் இருக்கும் கோத்தகிரி இன்னும் மாசு படாமல் அழகாய் உள்ளது. கொடநாடு வியூ பாய்ண்ட் அழகோ அழகு, அம்மாவின்(ஜெயலலிதா) வேலி போடபட்டபெரிய்ய்ய்ய தேயிலைத்தோட்டம்,சின்ன சின்ன பார்க்குகள். 6 மணிக்கே தூங்கிவிடும் ஊர்.

8.கல்கத்தா:
இங்கே உள்ளவர்கள் டயாபடிஸ் பற்றி ஒரு கவலையும் இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன் .அவ்ளோ ரசகுல்லாவும்,கடுகு எண்ணையில் பொரிக்கப்பட்ட சமோசாவும் கடைகளில் அதிகம் விற்கிறது.நதி கொள்ளாமால் தண்ணீர் ஓடுகிறது. ஹீக்ளி நதி மேலே பழையது, புதியது என்று இரண்டு பிரிட்ஜ்கள்,பேரம் பேசாமல் டாக்ஸியில் ஏறலாம். இன்னும் ஓடும் ட்ராம் வண்டிகள்ஆற்றில் ஓடும் ferry புதிய அனுபவம். மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கு போகிறார்களோ தெரியவில்லை அப்படி ஒரு கூட்டம்.நவராத்திரி நேரத்தில் போனோம்.காளி கோயில்,ராமகிருஷ்ணர் மடம்,மாயாப்பூர் ஹரே ராம் இஸ்கான் கோயில் மறக்க முடியாது.பெண்கள் கையில் போட்டு இருக்கும் வளையல் தான் தாலிக்கு ஒப்பானது. இங்கு அனைவரும் மீன் சாப்பிடுகிறார்கள்.அன்னை தெரசா எதனால் இந்த ஊரை சேவைக்கு தேர்ந்து எடுத்தார்கள் என்று ரயில் ஊருக்கு நுழையும் போதே தெரிந்துவிடுகிறது.அவ்வளவு பிச்சைக்காரர்கள்.பக்கத்துப் பங்களாதேசத்தில் இருந்து வரும் அகதிகள்.

9.ஷில்லாங்:
ரயில் பயணத்திலேயே அதிக நேரம் பயணம் செய்தது இந்த ஊருக்கு தான் சனி காலை சென்னையில் ரயில் ஏறினால் திங்கள் காலையில் அஸ்ஸாம் தலைநகர் அங்கிருந்து 4 மணிநேரம் மலை ஏறினால் மேகாலயா தலைநகர் ஷில்லாங் அடையலாம். மிக அருமையான ஊர்.பக்கத்தில் அதிக மழை பெய்யும் சிரபுஞ்சி. சென்னையில் இருந்து 2929 கிமீ தூரம்.

10.காசி:
காசி போனதால் தான் பெரியார் நாத்திகர் ஆனதாய் சொல்வார்கள். ஆனால், இங்கு சாமியார்கள் நிறைய. இங்கு மாடு முட்டாது, பிணம் நாறாது,பருந்து வட்டமிடாது,பூ மணக்காது, ஒரு படித்துறையில் குளித்து கொண்டு இருக்கும் போது பக்கத்து அரிசந்திரன் வேலைபார்த்ததாய் கூறபடும் படித்துறையில் பிணம் எறிந்து கொண்டும், இன்னும் நிறையப் பிணங்கள் எரிவதற்கு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன. 63 படித்துறைகள் உள்ளன.இங்கு உள்ள நிறைய பசங்க நன்கு தமிழ் பேசுகிறார்கள்.மாலையில் நடக்கும் ஆரத்தி பார்க்க மிக அருமை. நதிக்கு ஆரத்தி 1 மணி நேரம் நடக்கிறது. காசி விஸ்வநாதருக்கு நாமே ஆற்றில் குளித்து விட்டு தண்ணீர் கொண்டு சென்று அபிஷேகம் லிங்கத்தைத் தொட்டு செய்யலாம்.தமிழர்கள் அதிகம் வரும் ஒரு ஊர்.

11.சென்னை:
வாழும் ஊர். பிடித்து தான் ஆக வேண்டும். எல்லா பிரிவு மக்களையும் தாங்கும் சென்னை அழகோ அழகு. இயற்கையும் (ECR-ம்,குன்றத்தூர்,திருநீர்மலை) இன்னும் நிறைய உள்ள ஊர். மாடர்னாகவும் தன்னை காட்டிக் கொள்ளும் ஊர்.யார் வந்தாலும் ஏற்று கொள்ளும் ஊர்.தி.நகரில் எதுதான் கிடைக்காது.குறைந்த விலையில் இந்தியாவில் அனைத்து நகரங்களின் பிரசித்தி பெற்ற சாமான்களை இங்கே வாங்கலாம்.





Thursday, July 09, 2009

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட்....

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட் இன்று முதல் சென்னை தி.நகரில் வடக்கு
உஸ்மான் ரோடில் முருகன் இட்லி கடைக்கு அடுத்து ஜாய் ஆலுக்காஸுக்கு பக்கத்தில் தொடக்கம். சென்னையில் தக்காளி சாதத்தில் ஒன்றிரண்டு கறி அல்லது கோழி பீஸை வைத்து இது தான் பிரியாணி என்று சாப்பிட்ட மக்களுக்கு இந்த மாதிரி தென் தமிழ்நாட்டு பிரியாணி பிடிக்காமல் போகாது. அதிலும் சென்னையில் அதிகம் வசிப்பது தெற்கத்தி மக்களே. அவர்களை நம்பி தான் இத்தகைய ஹோட்டல்கள் அதிகம் வருகின்றன. இன்று மாலை மதிப்புமிகு தமிழக உணவு அமைச்சர் எ.வ்.வேலு அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

Monday, July 06, 2009

தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை???

சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவை‌க கொ‌ண்டாமலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை இ‌னிமையாமுடித்து விட்டு தாயக‌ம திரு‌ம்புவத‌ற்காஅவ‌ர்க‌ள் மலே‌சியவிமான ‌நிலைய‌த்‌தி‌ற்க்கு வ‌ந்தன‌ர்
விமா ‌நிலைய‌த்‌தி‌ல் சோதனைகளை முடி‌த்து‌வி‌ட்டு விமான‌ம் ஏ‌றுவத‌ற்காகா‌த்‌திரு‌க்கு‌ம் போது பெ‌ண்‌ அவசரமாக‌ழிவறை‌க்கு‌ச் செ‌ன்று‌ள்ளா‌ர்..

வெகு நேர‌ம் ஆ‌கியு‌ம் மனை‌வி வர‌வி‌ல்லலை ஆனா‌ல் விமான‌ம் புற‌ப்படுவத‌ற்காநேர‌ம் வ‌ந்து வி‌ட்டது. இதனா‌ல்
கோபமடை‌ந்கணவ‌ன், தா‌ன் ற ‌வே‌ண்டிய ‌விமான‌த்‌தி‌ல் ஏ‌றி சவு‌தி அரே‌பியா செ‌ன்று‌வி‌ட்டா‌ர். இவ‌ர்களது வருகை‌க்காக ‌சவு‌திவிமான ‌நிலைய‌த்‌தி‌ல் கா‌த்‌திரு‌ந்உற‌வின‌ர்க‌ளிட‌ம் ,மனை‌வி மலே‌சியா‌விலே
இரு‌ப்பதாக‌க் கூ‌றி‌வி‌ட்டு வேறு ஒ‌ன்று‌ம் சொ‌ல்லாம‌ல் நடையை‌க் க‌ட்டியு‌ள்ளா‌ர்.
சாவகாசமாக‌‌ழிவறை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியயே வ‌ந்மண‌ப்பெ‌‌ண்ணோ, ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் தனது கணவனை‌த் தேடி அலை‌ந்தா‌ர். ‌பி‌‌ன்ன‌ர்விமான ‌நிலைஅ‌திகா‌ரிக‌ளிட‌ம் விசா‌ரி‌த்த‌தி‌ல் அவளது கணவ‌ன் விமானத‌்‌தி‌ல் ஏ‌றி சவு‌தி
செ‌ன்று‌வி‌ட்டது தெ‌ரிவ‌ந்தது.

பி‌ன்ன‌ர் எ‌ப்படியோ ம‌ற்றொர் விமான‌ம் மூல‌ம் சவு‌தி செ‌ன்றா‌ர். மண‌ப்பெ‌ண் தாயக‌ம்
செ‌ன்றது‌ம் முத‌லி‌ல் நேராக ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ன்று த‌ன் கணவ‌ரிட‌ம் இரு‌ந்து விவாகர‌த்து கே‌ட்டு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.


நீ‌ங்களா‌ச்சு‌ம் கொ‌ஞ்ச‌ம் சீ‌க்‌கிர‌ம் வ‌ந்‌திரு‌க்கலா‌ம்.அவரா‌ச்சு‌ம் கொ‌ஞ்ச‌ம் கா‌த்‌திரு‌ந்‌திரு‌க்கலா‌ம்.
எ‌ன்சொ‌ல்‌‌றீ‌ங்க???

Monday, May 11, 2009

காந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா?



காந்திஜியின் காரியதரிசியாக இருந்த திரு.வி.கல்யாணம்(87 வயது) என்பவரைப் பேட்டி கண்ட   நடந்தது என்ன என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்தேகம்.

காந்தி சுடப்பட்டப் போது அவருக்கு பின்னால் 6 அங்குலம் தூரத்தில் இருந்ததாக தெரிவித்த திரு. கல்யாணம் காந்திஜி ஹேராம் என்று கூறியதாக் தன் காதில் விழவில்லை என்று கூறினார். கேட்ஸே மிக அருகில் இருந்து சுட்டதால் உடனே அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.  

மேலும், காந்திஜியின் பிடிவாதத்தால் தான் படேல் இந்தியாவின் சார்பாக ரூபாய் 50 கோடி பாகிஸ்தானுக்கு சுதந்திரத்திற்கு பின் கொடுக்க ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த பணம் ஆயுதம் வாங்க தான் அவர்களுக்கு பயன்படும் என்று படேல் முதலில் மறுத்து உள்ளார்.
   
தமிழ், பெங்காலி, ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ் மொழிகளில் சரளமாக உரையாட தெரிந்த திரு. கல்யாணம் தற்போது தேசியப் பாதுகாப்பு கழகம் என்ற கட்சியின் பிரசிடெண்ட் ஆக உள்ளார். தெற்கு மற்றும் மத்திய சென்னையில் இரு வேட்பாளர்களை இந்த முறை தேர்தலில் இந்த கட்சி  நிறுத்தி உள்ளது.  

Wednesday, May 06, 2009

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சென்னையில்


 திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல் மே மாதம் 8 ஆம் தேதியிலிருந்து கிழக்கு அண்ணாநகரில் ஆரம்பம். 

திண்டுக்கல்லில்  இந்த ஹோட்டலை ஆரம்பித்த திரு.நாகசாமி என்பவர் தலையில் இருக்கும் வழுக்கையை மறைக்க முழு நேரமும் தலப்பாகைக்  கட்டிக் கொண்டு இருப்பாராம். அதனால் இப்பெயர் வழக்கத்தில் வந்ததாம். திண்டுக்கல், வத்தலகுண்டு, கோயம்பத்தூரில் இவர்களுக்கு கிளைகள் உண்டு. முதல் முறையாக சென்னையில் ஆரம்பம்.