Tuesday, November 16, 2010

சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோங்க...

இப்பொழுதெல்லாம் எல்லா மதத்திலும், இனத்திலும் மாப்பிள்ளை, பெண் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சரி காதல் திருமணம் செய்யட்டும் என்று பார்த்தால் அதுவும் நிறைய குடும்பங்களில் ஒத்துக் கொள்வதில்லை. 32 வயதில் ஆணுக்கிற்கும், 28 வயது பெண்ணிற்கும் திருமணமாகிறது.திருமணம் முடிந்த உடன் குழந்தை பெற்றுக் கொள்வதும் இப்பொழுது நடைமுறையில் இல்லை. 30 வயதிற்குள் திருமணம் முடிந்தால் ஒரு இரண்டு வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

10 ஜோடிகளுக்கு திருமணம் முடிந்தால் அதில் 5 ஜோடிகளுக்கு தான் குழந்தை எந்த பிரச்சனையும் இன்றி பிறக்கிறது. மற்றவர்களுக்கு குழந்தை உண்டாகாமல் போகிறது அல்லது குறை பிரசவம் ஆகிறது அல்லது அபார்ஷன் ஆகிறது. டிஸ்சார்ஜ் ரிப்போர்டில் காரணம் தெரியவில்லை என்றே எழுதுகிறார்கள். unknown reason - பெண்ணிற்கு அதிக வயது ஆகி இருக்கலாம், சுற்றுபுறம் ஒரு காரணமாக இருக்கலாம், வேலை டென்ஷனாக இருக்கலாம். இது தான் பிரச்சனை என தெரிந்தால் அதனை சரி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தெரியாத, அறிய முடியாத காரணங்களுக்கு என்ன செய்வது. மருத்தவமனையில் 10 பேருக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு முயன்றால் அதில் 2 அல்லது 3 தான் வெற்றி அடைகிறது. மற்றவர்கள் திரும்ப திரும்ப அந்த வலி மிகுந்த சிகிச்சைக்கு முயல்கிறார்கள்.

இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் செய்வதால் எல்லா சான்ஸும் குறைந்து விடுகிறது.

எனவே, பணம் சம்பாதித்து தான், வீடு வாங்கி தான், கார் வாங்கி தான் திருமணம் அப்படி இப்படி என்று காரணம் சொல்லி திருமணத்தினை தள்ளி போடும் அனைவரும் யோசிக்க வேண்டும். வீடு, கார், பணம் எல்லாம் திருமணத்திற்கு பிறகு இருக்கும். ஆனால் குழந்தை இருக்காது. அதுவும் ஃபாரின் போய் செட்டில் ஆகும் நண்பர்களுக்கு தெரியும் அங்கெல்லாம் ஹாஸ்பிட்டல் செலவு என்பது எவ்வளவு அதிகம் என்று.

நம் பெற்றவர்களும் விட மாட்டார்கள். விரதம் இரு, அந்த கோயில் போ, இந்த கோயில் போ என்று படுத்தி எடுப்பார்கள். கோயில் கோயிலாக அலைவது ஒரு புறம், உறவினர்களின் ஏளன பேச்சு ஒரு புறம், குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஒரு புறமாக அலைக்கழிக்கும். மருத்துவர்களோ டிப்ரஷன் இருக்க கூடாது என்று சொல்வர்.ஆனால், அது மட்டும் தான் அதிகம் இருக்கும். மேலும் இப்பொழுது எல்லாம் 30 வயதிலேயே, ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று அடுக்கடுக்காய் நோய் வேறு வருகிறது. அது இல்லாமல் ஆண்களின் சிகரெட், குடி பழக்கம் வேறு. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் தப்பி சாப்பாடு, ஒழுங்கான தூக்கம் கிடையாது என்று அனைத்தும் மாறிவிட்டது.

எனவே திருமணத்திற்கு காத்து இருக்கும் அனைவரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்வது நல்லது. ஆண்களே உஷார். இந்தியாவில் இப்பொழுது மக்கட்தொகையில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்களாம். அது வேறு பெரிய சமுதாய பிரச்சனையாகப் போகிறது. 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் தான் இருக்கிறார்கள்.கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்ததால் தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது.

பெண்ணை பெற்றவர்கள் சிலர் தங்கள் பெண்கள் சம்பாத்தியத்தினை விட முடியாமல் தங்கள் பெண்களின் திருமணத்தினை தாங்களே தாமாதமாக்கும் போக்கும் இப்பொழுது இருக்கிறது. ஆண்களை பெற்றவர்கள் தங்கள் மகனுக்கு எவ்வளவு வயதானாலும், மகள்களுக்கு திருமணம் முடித்து தான் மகனுக்கு என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.


9 comments:

Unknown said...

பயனுள்ள யோசனை. முப்பது வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் நிறைய சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது

தமிழ் உதயம் said...

அக்கறையான பதிவு. சரியான வயதில் திருமணம் முடிக்கவில்லையெனில், நம் பிள்ளைகளுக்கு கூட நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

ஹரிஸ் Harish said...

ஐயோ..பயங்காட்டுறீங்களே..

ஹரிஸ் Harish said...

நாங்க என்ன முடிக்க மாட்டோம்னா சொல்லுறோம்..செட்டிலானா தான் பொண்ணுதராங்க..

விஷாலி said...

இப்போ இருக்குற பெண்கள் நெறைய படிச்சிட்டு அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளைகளை தேடுகிறார்கள்.

நான் பார்த்தவரை 29 வயதுவரை பெண்கள் காலம் தாழ்த்திவிட்டு பின்பு கிடைக்கும் மணமகனை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இது அவர்களிடையே உளவியல் போர் மூல காரணமாகிறது. அதனாலே குழந்தைபேறு என்பது தள்ளிபோகிறது.

ஜோதிஜி said...

பெண்கள் சம்பாத்தியத்தினை விட முடியாமல் தங்கள் பெண்களின் திருமணத்தினை தாங்களே தாமாதமாக்கும் போக்கும் இப்பொழுது இருக்கிறது.

உண்மையும் கூட.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்ல பதிவு அமுதா. 24வயதில் பார்க்க ஆரம்பித்தாலே சம்பந்தம் அமைவதற்கு இரண்டு வருடம் பிடிக்கிறது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு பையன் வீட்டைப் பற்றி சந்தேகம். வைஸ் வெர்சா.
நன்கு யோசித்து நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் கலாநேசன். சில உளவியல், மற்றும் உடல் உபாதைகளுடன் பிள்ளை பெற்று கொள்வது அந்த குழந்தையினையும் பாதிக்கிறது.

தமிழ் உதயம் 50 வயதில் 10 வயது குழந்தையினை சமாளிப்பது என்பது மிக கஷ்டம்.

ஹரிஸ் தற்சமயம் நடக்கிறதை சொன்னேன்.பெண்ணை பெற்றவர்கள் மிக அதிக சம்பளம் எதிர்பார்க்கிறார்கள்.

கரெக்டா சொன்னீங்கா மனசாட்சி...

இப்படி ட்ரெண்ட் மாறிடிச்சு ஜோதிஜி...

கருத்துக்கு நன்றி வல்லிசிம்ஹன்..

era.thangapandian said...

நல்ல கருத்துதான் னோல் இந்த சமூக அமைப்பும் அதில் உள்ள சாதியக் கட்டமைப்பும் பெண்களை படுத்தும் பாட்டையும் சொல்ல வேண்டுமே....

24 வயசில் கல்யாணம் வேணாம்ணு யாரு சொல்லுறாங்க? சாதி... படிப்பு... வரதட்சனை... அடச்சே... போங்கடா நீங்களும் ஒங்க் கல்யாணமும் என்று பல பெண்கள் திருமணத்தை வெறுப்பதற்கு சமூக அமைப்பே காரணம். எனினும் தங்களின் ஆலோசனை நன்றே. வாழ்த்துகள்