Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts

Thursday, August 02, 2012

அவள் விகடனில் அமுதா அடடா !!!

14/ஆகஸ்டு/2012 அவள் விகடன் இதழில் நெட் டாக்ஸ் என்ற பிரிவில் இந்த இதழின் வலைப்பூவரசியாக தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.நானும் ரவுடி தான்..ரவுடி தான்..ரவுடி தான்..

ஜூலை 31-ல் இந்த நியூசை முதலில் தெரிவித்த ஹூஸைனம்மாவிற்கு நன்றிகள்.அன்று என் மகனின் பிறந்த நாள்.எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.இது சம்பந்தமாக என் மெயிலிற்கு வந்து குவிந்திருக்கும் வாசக கடிதங்களுக்கு (நிஜம்மாஆ) பதில் எழுதும் வேலை இருப்பதால் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Monday, April 04, 2011

அசத்தும் அஞ்சறைப் பெட்டி-9

அஞ்சறைப் பெட்டி பொதுவா நம் வீட்டு சமையலறையில் ஒன்றே ஒன்று இருக்கும்.

படம் பதிவர் சங்கவியிடம் சுட்டது!!

மஸ்கட்டில் இருக்கும் சுஜாதா சங்கர் (யாரோ) என்பவர் வீட்டில் இருப்பதோ ஒன்பது அஞ்சறைப்பெட்டிகளாம்.

1. ரூம் ஷெல்ஃபில்: மாத்திரைகள் போட்டு வைக்க.

2. ட்ரஸ்ஸிங் டேபிளில்: சேஃப்டி பின்,பொட்டு,சின்ன சின்ன தோடு, ரப்பர் பேண்ட்,ஹேர் பின் வைக்க.

3. ஷெல்ஃபில்: கலர் கோலப்பொடி வைக்க.

4. டைனிங் டேபிளில்: பாதாம்,முந்திரி, திராட்சை,அக்ரூட் வைக்க

5. சாமி ரூமில்: விபூதி, குங்குமம்,சந்தணம்,மஞ்சள் பொடி,சாம்பிராணி, சூடம் வைக்க.

6. ஃப்ரிட்ஜில்: சுத்தப்படுத்தி பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி,புதினா இஞ்சி,பூடு,ப.மிளகாய்.

7. ஸ்டடி டேபிளில்: ஷார்ப்னர்,ரப்பர்,குண்டூசி,சிறிய கம் பாட்டில்,க்ரேயான் பென்சில்.

8. ஹால் ஷெல்ஃபில்: சில்லறை காசுகளுக்கு.

9. சமையலறையில்: இது வழக்கமாய் வைக்கும் பொருட்கள்.

என் வீட்டில் மூன்று உள்ளது. கலர் கோலப்பொடிக்கு பிளாஸ்டிக்கில் ஒன்று,சமையலறை,சாமி ரூமில் எவர்சில்வரில் இரண்டு.

மங்கையர் மலரில் படித்தது. நல்லாயிருக்குல்ல இந்த ஐடியா. ஃபாரினில் இருக்கும் சகோதரிகள் தேவைன்னா சொல்லுங்கோ அஞ்சறைப்பெட்டி எக்ஸ்போர்ட் செய்திடலாம்.(பிசினஸ் மைண்ட்!)


Saturday, April 17, 2010

தேவதையும் நானும்..

தேவதை என்ற பெண்களுக்கான மாதம் இருமுறை வரும் பத்திரிக்கையில் என் ஃப்ளாக் பற்றி வந்து உள்ளது. இந்த எப்ரல் மாதம் 16-30, தேதியிட்ட இதழில் 56,57 ஆம் பக்கங்களில் என்னுடைய ஃப்ளாக் பற்றி வந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.