பிறந்த (செப்டம்பர் 7) அன்றே சூர்யா ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கப்பட்ட என் தம்பி மகள் அக்டோபர் ஒன்றில் நலமுடன் வீடு திரும்பினாள். ஐம்பது ஆயிரம் சம்பாதிக்க வேண்டும் என்றே அவசரமாக குழந்தையினை பிரீமெச்சூராக தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிசேரியன் செய்துள்ளார்கள்.செப்டம்பர் 10-ல் குழந்தையின் அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து வடபழனி சூர்யாவிற்கு அனுப்பிய தாம்பரம் லேடி டாக்டர் தன் சொந்த ஊருக்கு அன்று இரவே ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ட்ரையினில்(நர்ஸ் கொடுத்த தகவல்) நலமுடன் போய் சேர்ந்தார். ஊரிலிருந்து திரும்பி வர 6 நாட்கள் ஆகும் அதற்குள் என் தம்பி வேறு டாக்டரிம் போய் விட்டால் என்ன செய்வது என்ற நல்லெண்ணத்தில் சீக்கிரமாக சிசேரியன் செய்துவிட்ட அந்த லேடி டாக்டருக்கு குழந்தை கிடையாதாம்.யாருக்கு சொத்து சேர்க்கிறாரோ தெரியவில்லை. சூரியா ஆஸ்பத்திரிக்கு ஒரு லட்சம் மொய் எழுதிவிட்டு தப்பித்தோம்,பிழைத்தோம் என்று தன் அருமை மகளுடன் வீடு திரும்பினான் என் தம்பி.
தாம்பரம் ஹாஸ்பிட்டல் லட்சணம் இப்ப தான் தெரியுது.
சூரியா ஹாஸ்பிட்டல் லட்சணம். ஒரு லட்சணம் தன் குணமுள்ள இன்னொரு லட்சணத்திடம் தானே நம்மை அனுப்பும். டாக்டர் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்து கொண்டு யோசிக்க முடியாமல் இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தார்கள்.இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?