Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, December 19, 2013

உயர்ந்த பயணம்

 ட்ரையினில் செல்ல  டாக்டர் சர்டிஃபிகேட் இருந்தால் தான் பயணம் செய்ய முடியும்.பயணம் செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப் படுகிறது. Xining,china -- Lhasha,Tibet 1956 km, இணைக்கும் Zang-2 ரயிலானது கடல் மட்டத்தில் இருந்து 5072 கி.மீ உயரத்தில் ஆளில்லா உலகிலேயே மிக உயரமான Tanqqula ரயில்வே ஸ்டேஷனை கடக்கிறது. ஆனால் இந்த ஸ்டேஷனில் ட்ரையின் நிற்கும் போது யாரும் இறங்கவோ ஏறவோ மாட்டார்கள்.எதிர் புறத்தில் வரும் ட்ரையின் க்ராஸ் ஆக மட்டுமே மற்ற ட்ரையின் இங்கு நிற்கும்.

 Fenghuoshan Tunnel உலகிலேயே உயரமானது. இதன் தூரம் 1338 மீட்டராம்.4010 மீட்டர் உலகிலேயே மிக நீநீநீளமானGuanjjiao tunnel இங்கு தான் இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் மிகவும் அபாயகரமானவை, வழியில்675 பாலங்கள்..45 ஸ்டேஷன்கள் அதில் 38 ஸ்டேஷன்களில் யாருமே கிடையாது.டாய்லெட்டில் தண்ணீர் சூடாக இருக்க வேண்டும்.இல்லையெனில் ஃப்ரீஸாகி விடும். ஒவ்வொரு ட்ரையினிலும் கட்டாயம் ஒரு டாக்டர் உண்டு.அந்த டாக்டர் ரொம்ப பாவம்பா.சைனாக்காரர்கள் மேஜிக் தான் செய்கிறார்கள் போல.இந்த ட்ரையினையும் பாதையையும் பற்றி படிக்கவே பயமாக இருக்கு. ஆனால், இந்த பாதையினை போட்ட சைனாக்காரர்களை என்னவென்று சொல்வது. மிக அருமையான அழகான ஏரிகள்,grass lands, இயற்கை எழில்கள் நிறைந்தது. ஆனா ரசிக்க தான் முடியாது ஏன்னா தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி,தூக்கமின்மை என்று எப்படா ட்ரையினை விட்டு இறங்குவோம் என்று ஆகிடும் அப்புறம் என்னத்த ரசிக்கிறது. அப்படியே பங்களாதேஷ்,இந்தியா வரை இந்த ரயில்வே லைன் எக்ஸ்டெண்ட் ஆக சான்ஸ் இருக்கிறது. அப்படி ஆச்சுன்னா ஒரு எட்டு போயிட்டு வந்துட வேண்டியது தான்.

Tuesday, September 11, 2012

பெண்களும் அரசியலும்

இன்றைய அரசியல் தானே நாளைய வரலாறு. பெண் என ஒதுங்காமல் தைரியமாய் அரசியிலில் ஈடுபடுகிறார்களே என்று அரசியலில் இருக்கும் ஜெயலலிதா,சுஸ்மா,ஜெயந்தி நடராஜன்,மம்தா பேனர்ஜி போன்றவர்கள் மீது மரியாதை உண்டு.நாமும் அரசியிலில் ஏதாவது பங்கெடுக்கலாமா என்ற எண்ணம் கூட உண்டு.

 வட்டம்,கட்டம்,சதுரம்,கவுன்சிலர்,மேயர் அப்படி இப்படி என்று எதாவது ஆகலாமா? என்ற ஆசை கூட உண்டு. விமர்சனங்கள்,அடாவடிகள்,பணப்பற்றாக்குறை,குடும்ப முன்னேற்றம் என ஆயிரத்தெட்டு காரணங்களுக்கு பயந்து கொண்டு அரசியல் எண்ணத்தினை செயல் படுத்த முயலவில்லை.நான் கொஞ்சம் அழுமூஞ்சி வேறு எனவே இந்த பழம் புளிக்கும் என்றும் பாவம் அரசியல் பிழைத்து கொள்ளட்டும் என்றும், சரியாக கத்தியோ, அரிவாளோ பிடிக்க தெரியாது என்றும்,ஒழுங்கா ஒரு லட்சத்தை லட்சணமா எண்ண கூட தெரியாது என்றும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஓட்டு மட்டும் கட்டாயம் போட்டு விடுவேன். 

இலங்கை வெளியிட்டு இருக்கும் அந்த கார்ட்டூனை பார்த்து விட்டு அந்த பத்திரிக்கையில் பணிபுரிபவர்களில் பெண்களே கிடையாதா? என்றே தோன்றியது.

முதல்வரின் தைரியம் எப்பவுமே பாராட்டுக்குரியது.இங்கே,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை,அவர்களின் குணநலன்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. அந்த கார்ட்டூனை வெளியிட்டு இருக்கும் நம் பதிவுலக சகோதரர்கள் அனைவரும் அதை எடுத்து விடுங்கள். கார்ட்டூன் என்றால் சிந்தனையுடன் சிரிப்பும் வர வேண்டும். இது ஒரு வக்கிரம் பிடித்தவனின் வக்கிரமான வெளிப்பாடு. அதை வெளியிட்டு நம் பதிவின் தரத்தினை குறைத்து கொள்ள வேண்டாம். இதனை அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் எதிர்த்து குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பதிவுலகில் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

Wednesday, July 27, 2011

ஏன் இப்படி?

இந்த பதிவை படிக்க நேர்ந்த போது மனது ரணமாய் வலித்தது. இப்படி செய்யவும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ன பிரச்சனை இவர்களுக்கு? ஏன் இப்படி? என்ன செய்தால் இப்படி பட்ட மனிதர்கள் இல்லாத சமுதாயத்தினை ஏற்படுத்த முடியும்?

நம் வீட்டு ஆண் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க வேண்டும்.பெண்களின் கஷ்டங்களை அவர்களுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.அதுவே இந்த சமுதாயத்திற்கு செய்யும் முதல் பணி என்று தோன்றியது.எல்லோரும் அப்படி செய்தால் ஏன் இப்படி என்றே கேள்வியே இல்லாமல் போகாதா என்ற நப்பாசை+ வேறு என்ன செய்வது என்ற கேள்வியுடன்..

Friday, May 20, 2011

திஹார் ஆசிரமம்

1958-ல் டில்லியில் இருந்த சின்ன ஜெயில் திஹாருக்கு மாற்றப்பட்டது. திஹார் என்ற கிராமம் டில்லியின் மேற்கு பகுதியில் சாணக்கியபுரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் இருக்கிறது.அப்பொதைய ஜெயிலில் 1273 பேர் இருக்கலாம். இப்பொழுது 12 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் 6500 கைதிகள் தங்க வைக்கவே போதுமான இடம் உள்ளது.திஹார் ஜெயில் ஆசியாவிலேயே மிக பெரிய ஜெயிலாகும்.மொத்தம் 10 ஜெயில்களை உள்ளடக்கியதே திஹார் ஜெயிலாகும். மிகவும் மாடர்னான ஜெயிலாகும். ஆர்.ஓ சிஸ்டத்தில் குடிக்க சுத்தமான தண்ணீர்,கேபிள் டீவி,உள்,வெளி விளையாட்டு அரங்குகள், மருத்துவ வசதி,கேண்டீன் வசதி,சந்திக்க வருபவர்களை சந்திக்க சுத்தமான ஹால்கள்,மிக நவீன சமையலறை ஆகியவற்றை கொண்டது.
பெண்களுக்கான் ஜெயிலின் நம்பர் 6 ஆகும்.

யோகா,மெடிடேஷன்,கம்ப்யூட்டர்,கைவினை பொருட்கள் பயிற்சி மட்டுமில்லாமல் இந்திராகாந்தி யுனிவர்சிட்டி நடத்தும் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்களும் உள்ளது.

வாரம் ஒரு நாள் 5 நிமிடங்கள் ஃபோன் பேசி கொள்வதற்கு அனுமதி உண்டு. ஒரு கைதிக்கு இரு நம்பர் மட்டுமே பேச அனுமதி. பேசுவதும் முழுவதும் ரிக்கார்ட் ஆகும்.

தச்சு பட்டறை,நெசவு பட்டறை,தையலகம்,அச்சு பட்டறை,உணவு பதனிடும் தொழில்,பேக்கரி,காலனி தாயரித்தல்,விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல் ஓவியம் வரைதல் என்று இந்த ஜெயிலில் நிறைய தொழில்கள் இயங்கி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் கைதிகளுக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ப சம்பளம் தின கூலி அடிப்படையில் வழங்க படுகிறது.

தாயாராகும் பொருட்கள் வெளியில் விற்கப்படுகிறது.

ஓவ்வொரு ஜெயிலிலும் பெரிய நூலகம் இயங்கி வருகிறது.மது,போதை அடிமை பட்டவர்களை மீட்க ஒரு செண்டரும் உள்ளது. 150 படிக்கைகளுடன் கூடிய ஒரு பெரிய மருத்துவமனை உள்ளது. பெண் கைதிகளின் குழந்தைகளை பராமரிக்க ஒரு சென்டரும் உள்ளது. இலவச சட்ட ஆலோசனையும் கைதிகளுக்கு உண்டு.

ஜெயில் நம்பர் 1: M - Z இந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர் உள்ள கைதிகளுக்கானது.இதில் V&W எழுத்தில் ஆரம்பிக்கும் கைதிகள் மட்டும் துவாரகா ஜெயிலில். இது திஸ் ஹாசாரி கோர்ட்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.இதில் R என்று தொடங்கும் கைதிகளும் அடக்கம்.

ஜெயில் நம்பர் 2: A to Z ஆயுட் கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 3: A to L பேருடைய கைதிகள்.

ஜெயில் நம்பர் 4: பாட்டியாலா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும்.

ஜெயில் நம்பர் 5: 10 வருட தண்டனை பெற்றவர்கள் மட்டும்.

ஜெயில் நம்பர் 6: எல்லா பெண் கைதிகளும்

ஜெயில் நம்பர் 7: 18-30 வயதிற்குட்பட்ட கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 8 & 9: கார்கர்டோமா,சஹாதாரா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.

கைதிகள் தங்கள் சொந்தக்காரர்கள்,ஃப்ரெண்ட்சை வாரம் ஒரு முறை சந்திக்க முடியும். எடுத்துக்காட்டா, இப்போ 6 ஆம் நம்பர் ஜெயிலில் உள்ள K என்று ஆரம்பிக்கும் எழுத்துடைய ஒரு கைதியினை சந்திக்க வேண்டுமானால் திங்கள் அல்லது வியாழன் ஜெயில் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று சந்திக்கலாம்.

ஜெயில் பற்றி முழுதும் படித்து பார்த்தால் ஜெயில் மாதிரி தெரியலை.ஏதோ ஒரு ஆசிரமம் மாதிரி தெரிகிறது. அங்கு போய் வருபவர்கள் நன்கு திருந்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

கிரண்பேடி இங்கு அதிகாரியாக பணியிலிருந்த போது தான் அதிக மாற்றங்களை கொண்டு வந்தார். திஹார் ஜெயில் என்பது திஹார் ஆசிரமமானதும் அப்போது தான்.

Thursday, July 09, 2009

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட்....

DINDUKKAL பங்காரு ரெஸ்ட்டாரண்ட் இன்று முதல் சென்னை தி.நகரில் வடக்கு
உஸ்மான் ரோடில் முருகன் இட்லி கடைக்கு அடுத்து ஜாய் ஆலுக்காஸுக்கு பக்கத்தில் தொடக்கம். சென்னையில் தக்காளி சாதத்தில் ஒன்றிரண்டு கறி அல்லது கோழி பீஸை வைத்து இது தான் பிரியாணி என்று சாப்பிட்ட மக்களுக்கு இந்த மாதிரி தென் தமிழ்நாட்டு பிரியாணி பிடிக்காமல் போகாது. அதிலும் சென்னையில் அதிகம் வசிப்பது தெற்கத்தி மக்களே. அவர்களை நம்பி தான் இத்தகைய ஹோட்டல்கள் அதிகம் வருகின்றன. இன்று மாலை மதிப்புமிகு தமிழக உணவு அமைச்சர் எ.வ்.வேலு அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

Wednesday, May 06, 2009

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சென்னையில்


 திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல் மே மாதம் 8 ஆம் தேதியிலிருந்து கிழக்கு அண்ணாநகரில் ஆரம்பம். 

திண்டுக்கல்லில்  இந்த ஹோட்டலை ஆரம்பித்த திரு.நாகசாமி என்பவர் தலையில் இருக்கும் வழுக்கையை மறைக்க முழு நேரமும் தலப்பாகைக்  கட்டிக் கொண்டு இருப்பாராம். அதனால் இப்பெயர் வழக்கத்தில் வந்ததாம். திண்டுக்கல், வத்தலகுண்டு, கோயம்பத்தூரில் இவர்களுக்கு கிளைகள் உண்டு. முதல் முறையாக சென்னையில் ஆரம்பம்.