ஒரு ஓல்ட் மேனை பற்றி பேசும் போது அந்த பழையவர் என்றார் என் மகனின் நண்பி. சிரித்ததற்கு ஓல்ட் என்றால் பழையது தானே அர்த்தம் என்கிறார்.. பக்கத்து வீட்டில் அவரைக்காய் அவுத்தாங்க (பறித்தாங்க) அதான் எங்க வீட்டில் இன்று அவரைக்காய் செய்தோம் இதுவும் அந்த நண்பியின் பொன்மொழிதான்.தமிழ் பேச நாம் தயங்கும் போது வட இந்திய நண்பர்கள் தான் தமிழை இது போல் வளர்க்கிறார்கள்.
இனி கொஞ்சம் சீரியஸ்:
ஆங்சான் சூகி மியான்மரில் 15 வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்த இந்த இரும்பு பெண்மணி சனியன்று (13 நவம்பர்) விடுதலை ஆனார். இவரது விடுதலையினை உலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.. ஆங்சான் சூகி பற்றி.
நம்ம ஊரு அரசியல்வாதிகளும் இருக்காங்களே.
இந்தியாவில் குழந்தைகள் தினம் இந்த மாதம் 14 கொண்டாடப்படுவது போல உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ல் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கியநாட்டு சபை அறிவித்த தினம் ஆகும்.1959-ல் குழந்தைகளின் உரிமைகளை அறிவித்த தினமே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மிர்சி ரேடியோவில் குழந்தைகள் தினம் கொண்டாட குழந்தைகளை அழைத்து ”எந்திரன்” தினம் கொண்டாடினார்கள். அனைத்துக் குழந்தைகளும் எந்திரன் பாட்டு, எந்திரன் வசனம் மனப்பாடமாய் சொன்னார்கள்.
ஹாம் ரேடியோ பயன்பாட்டாளர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார்கள். ஒர் ஹாம்ஸ் FM ரேடியோவில் இண்டர்வியூ கொடுத்தார். ஜில் புயல் ஞாயிறு காலையிலேயே நம் சென்னையினை கடந்து விட்டதாகவும் எதற்கு மீட்டரலாஜிக்கல் டிபார்ண்மெண்ட் திங்கள் அன்று ஜில் கரையினை கடக்கும் என்று சொல்லியது என்பது தெரியவில்லை. அதனை நம்பி திங்கள் அன்று அரசு விடுமுறை விட்டது வேஸ்ட் என்றும் தெரிவித்தார். ஒரு சின்ன கருவியினை ( நாலயிரம் ரூபாய் தான் ஆகுமாம்) வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி நிச்சயமாக இயற்கையினை கணிக்கிறார்கள். மிஸ்டர் ரமணன் வேலை பார்க்கும் துறையில் எவ்வளவு பெரிய கருவிகள் இருக்கும். ஏன் இப்படி கணிப்பு தப்புகிறது. ரமணனுக்கு ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க இருப்பாங்கம்மா, அந்த பசங்களுக்கு லீவு வேணும்னா ரமணன் சார் இப்படி செய்வார் போல இது என் மகன் நகுலின் கணிப்பு.
புதுக்கோட்டையில் இறந்து போனவரை வைத்திருக்கும் ஐஸ்பெட்டியினை தொட்டு அழுத இரண்டு பேருக்கு ஷாக் அடித்து இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அட ராமா....
6 comments:
:)..ம் வெரைட்டியா தான் இருக்கு,,
நகுல் ரமணன் பற்றி சொன்னதை கேட்டு பயங்கர சிரிப்பு!
வெரைட்டி நல்ல தகவல் திரட்டி!
வருகை தந்தவர்களுக்கு நன்றி..
நல்ல வெரைட்டி. ஒவ்வொன்னுக்கும் நடுவுல ஏதாச்சும் லைன் மாதிரி குடுக்கலாமே. தொடர்ச்சியா இருக்கற மாதிரி இருக்காது.
ஐடியாக்கு தாங்ஸ் விக்னேஷ்வரி..
Post a Comment