Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, March 07, 2010

பாவம் இந்த தமிழர்கள்...!!!

20 நாட்களுக்கு $6,120, இந்திய மதிப்பில் ரூபாய் மூன்று லட்சம். மூன்று வேளை நல்ல கல்யாண சாப்பாடு,தங்க நல்ல அறை,தினம் இரண்டு வேளை பால், காலை மாலை என இரண்டு மணிநேரம் சொற்பொழிவு, ஒரு மணி நேரம் யோகா க்ளாஸ் என இரண்டு மாதத்திற்கு ஒரு 20 நாட்கள் இந்த ப்ரொக்ராம் அந்த ஆசிரமத்தில் நடத்தப்படும். ஒரு குழுவில் 100 பேர்கள்.இதில் கலந்துக் கொள்பவர்கள் அதிகம் பேர் கனடா,இங்கிலாந்து,அமெரிக்காவில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள்.
அவருக்கு பாத பூஜை செய்ய 25 ஆயிரம் ரூபாய் தனியே கட்டவேண்டும். அந்த இருபது நாட்களும் தினம் ஒரு 50 பேராவது 5 பேர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி தாம்பாளத்தில் பாத பூஜை செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

அகதிகளாய் வாழ போன மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கொடுக்கும் மாத முதியோர் பென்ஷனை இப்படி வேஸ்டாக இந்த ஆசிரமத்திற்கு கொடுத்து ஏமாறுகிறார்கள். எங்கு தான் பிரச்சனை இல்லை. யார் தான் இப்பொழுது நாடு விட்டு நாடு போய் தங்கள் வேர்களை தொலைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையை தீர்க்க இவரை விட்டால் ஆள் இல்லை என்பதனை போல நன்கு மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அந்த நாடுகளுக்கு சொற்பொழிவிற்கு போகும் போது எல்லாம் ஒரு வீட்டிற்கு அந்த ஆசிரம சாமியார் விசிட் செய்ய 4 லட்சம் ரூபாய் ஃபீஸாம். தினம் 5 வீடுகளாவது இவர் விசிட்டுவது உண்டாம்.
அவர் பாதம் நம் வீட்டில் பட்டால் நம் பாவங்கள் போய்விடுமாம். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் உண்டு.இதில் பாதி பேர் இலங்கையிலும் அரசாங்க வேலை பார்த்து அந்த அரசாங்கத்திலும் பென்ஷ்ன் வாங்குபவர்கள். அனாமத்தாய் பணம் வந்தால் அதனை இப்படி தான் நாசம் செய்வார்கள் போலும். இந்த வருடம் இலங்கைய்யின் புது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு இலங்கையில் பென்ஷன் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்த மற்ற நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது.அதாவது பென்ஷனை நிறுத்துவது இல்லையென்றால் அந்த நாட்டு பென்ஷ்ன் தொகையை குறைப்பது.

தமிழில் பேச்சு வல்லமை உடைய இவரின் குறி வெளி நாட்டில் வாழும் பணக்கார இலங்கை தமிழ் மக்களே. இவர் ஆசிரமத்திற்கு இப்படி 20 நாட்கள் வந்து தங்குபவர்கள் இவர்கள் தான் அதிகம். ஏற்கனவே, மன அமைதி இழந்து தவிக்கும் இந்த மக்கள் சன் சேனல் வீடியோ காட்சியினை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, 2009 டிசம்பர், ஜானவரி மாத ப்ரோகாமில் இவர்களில் ஒருவராய் இருந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நடிகையை தினம் பார்த்து பேசிய அந்த குழு உறுபினர்கள் இதனை எப்படி ஜீரணித்து கொள்வார்களோ. இனியாவது பணத்தினை வீணாக்காமல் நல்ல காரியங்களுக்கு செலவிடலாம் இல்லை அவர்கள் வம்சத்திற்காவது சேர்த்து வைக்கலாமே.


பிரச்சனைகள் இவர்களை இப்படி பணம் செலுத்த தூண்டுகிறதா. இல்லை.ஒரு பெரிய ப்ரெஸ்டீஜ் இந்த மக்களை இப்படி பணம் கட்ட தூண்டுகிறது.நீ போனீயா இரு இந்த வருடம் நானும் போய் வருகிறேன் என்ற ஒரு போட்டி மனப்பான்மையால் ஆசிரமத்திற்கு அமோக வாழ்வு. போய் வந்தவர்களை பார்த்து நிறைய பேர் இந்த ஆசிரமத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து மூன்று மாதங்கள் எல்லாம் தங்கி செல்கிறார்கள். 20 நாட்களுக்கு 3 லட்சம் என்றால் கணக்கு பார்க்கவும்.

மூன்றே லட்சத்தினை மூன்று மாணவர்கள் படிக்கக் கொடுக்கலாம். இல்லையென்றால் மூன்று ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு உதவலாம். இல்லையென்றால் யாருக்கேனும் ஆபரெஷனுக்கு உதவலாம். இல்லையென்றால் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கலாம்.

இல்லை என்றால் நன்கு ஊர் சுற்றி இந்தியாவின் வளமையான கோயில்களையும், இயற்கையையும் ரசித்துப் போகலாம். இப்படி எத்தனையோ இல்லையென்றால் இருக்கும் போது எப்படி தான் இப்படி பணத்தினை வீணாக்குவார்களோ தெரியவில்லை. எங்கேயும் கிடைக்காத நிம்மதி மூன்று லட்சம் செலவு செய்து 20 நாட்களில் ரெடிமேடாக வாங்கி செல்ல முடியுமா?

அந்த சாமியாராவது வாங்கிய பணத்திற்கு ஒழுங்கு முறையாக இருந்து இருக்கலாம். இல்லை ஜாக்கிரதையாக ரூமில் கேமிரா இருக்கிறதா என்று செக் செய்து இருக்கலாம்.

ஏற்கனவே மனக்கவலையில் அல்லது மன நோயில் இருக்கும் அந்த மக்களுக்கு பெரிய துரோகத்தினை செய்து விட்டார்.

Saturday, January 30, 2010

பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!!

மும்பை ரயில் : உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. 1.4 மில்லிய்னுக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 7000க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்கள் இந்தியாவில் உள்ளன.
மும்பை ரயில்வே 6.9 மில்லியன் பயணிகள் தினமும் பயணிக்க உதவுகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1983-ல் மும்பையிலிருந்து 34 கி.மீ தூரம் உள்ள தானே என்ற இடத்திற்க்கு தான் ரயில் விடப்பட்டது. நம் சென்னையை விட மிக அதிகமான நபர்கள் ரயில்வே லைனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்.30 வருடங்களாக டிரைவராக பணியாற்றும் ஒருவர் இதுவரை 75 பேர் தான் பணியிலிருக்கும் போது டிரைனில் அடிப்பட்டு இறந்தாக கூறினார். ட்ராக்கின் நடுவே இறந்தவர் உடல் இருக்ககூடாது எனவே கீழே இறங்கி கார்டுடன் சேர்ந்து உடலை தூக்கி லைன் பக்கதில் வைத்து விட்டு பின் வண்டியை எடுப்போம் என்று கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 5,000-க்கும் அதிகமான பேர் இங்கு ரயில் விபத்தால் இறக்கிறார்கள். போரினால் கூட இவ்வளவு நபர்கள் இறப்பதில்லை. உலகிலேயே ரயில்வே லைன் அருகில் வசித்து வரும் மக்கள் தொகையும் இங்கு தான் அதிகம். விக்டோரியா டெர்மினஸ் தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று அழைக்கப் படுகிறது.

இவை அனைத்தும் டிஸ்கவரி சேனலில் மும்பை ரயில் என்ற நிகழ்ச்சியில் காண்பிக்கப் பட்டது. ரயில்வேயில் துணி வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணி தனக்கு இந்த ரயில் தான் பெற்றவர்கள் போல என்று கூறினார். ரயில்வே போலீஸிடம் அடிக்கடி மாட்டி ஃபைன் கட்டினாலும் இந்த தொழிலை தன்னால் விட முடியாது என்றும் கூறினார்.

இரண்டு மணிநேரம் காண்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சியை பள்ளிகளில் மாணவ்ர்களுக்கு காண்பித்தால் நன்றாக இருக்கும். ஒரு அறையும் அதில் ஒரு டி.வியும் வைத்து இருக்கும் ஒவ்வொரு பள்ளியும் வாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் டி.வி காண்பிக்க வேண்டும் என்றாலும் அந்த நேரத்திலும் படிப்பு, படிப்பு என்று தான் நேரத்தினை செலவு செய்கிறார்கள். மாணவர்கள் மிக விரும்பும் நல்ல நிகழ்ச்சிகள் டிஸ்கவரி சேனலில் அதிகம் காண்பிக்கிறார்கள். பள்ளிகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காண்பிக்க ஏற்பாடு செய்யுமா?? நிறைய பள்ளிகள் பின்பற்றுவதில்லை. குழுவாக அமர்ந்து இது மாதிரி நிகழ்ச்சிகளை காணும் போது குழந்தைகளும் தங்கள் வீடுகளில் இது மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பிப்பார்கள். வீணா போன சீரியல்களில் இருந்து தப்பிப்பார்கள்.

Tuesday, January 12, 2010

சென்னை சங்கமமும் பிரியாணியும்

நான்காம் வருடமும் சென்னை சங்கமம் சென்னையில் நேற்றிலிருந்து களை கட்டுகிறது. சாப்பாடு ராமன்கள் நிறைந்த நாடு இது. சாப்பாட்டு ராம்ன்களும், ராமிகளும்(இல்லைனா சீதைகளும் வைச்சுக்கலாமா) இருக்கும் போது எங்களை மாதிரி ஹோட்டல்கள் வைத்து இருப்பவர்களுக்கு ஒரு மேடையாகிறது இந்த சங்கமம். போன வருடத்தினை விட இந்த வருடம் ஸ்டால்களுக்கு இரண்டு மடங்கு அதிக வாடகை.

லாபம் இருக்கிறதோ இல்லையோ ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று இந்த முறை சென்னை மெரைன் டிரைவில் லேடி வெலிங்கடன் பள்ளி, அண்ணாநகரில் போகன்வில்லா பூங்கா, தி.நகர் வெங்கட நாராயணா ரோட், பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் எங்களின் திண்டுக்கல் பங்காரு பிரியாணி ஸ்டால்கள் 11-16 வரை நடக்க இருக்கிறது. சென்னை பதிவர்கள் வருகை புரிந்து உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தாருங்கள். நான் லேடி வெலிங்க்டன் பள்ளி வளாகத்தில் (மெரீனா பீச்சில் விவேகானந்தர் இல்லம் அருகில்) ஸ்டாலில் தினமும் இருப்பேன். புத்தக திருவிழாவில் அனைத்து பதிவர்களும் சந்தித்துக் கொண்ட மாதிரி சங்கமத்தில் திண்டுக்கல் பங்காருக்கு அனைவரும் வருகை தாருங்கள்.
தொடர்பு எண்: 9884068918

Friday, October 30, 2009

ஒரு பெண்ணிற்கு 3 கணவர்கள்...

ட்ரூ லவ் அண்ட் ட்ரூ செக்ஸ்
நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் இது. இந்தியாவில் ஹிமாசல பிரதேசத்தில், நேபாளத்தில் சில கிராமங்களில் வாழும் மூஸ்டாங்க் என்னும் மக்களை பற்றிய டாகுமெண்டரி இது. இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான ரம்மியமான ஒரு கிராமம். மக்கள் அனைவரும் ஒரு வகையான குல்லா அணிந்து உள்ளனர். பெண் ஒருத்தி அண்ணன், தம்பி என்று வரிசையாக 3 அல்லது 4 பேர் வரை மணந்து உள்ளார்களாம். நமக்கு அறிமுகப்படுத்த பட்ட பெண்ணிற்கு இரண்டு கணவர்கள். 5 குழந்தைகள். எந்த கணவரின் குழந்தைகள் எது என்று தனக்கு தெரியும் என்றும் ஆனால் குழந்தைகள் 2 பேரையும் அப்பா என்று அழைக்கும் என்று மிக வெட்கப்பட்டுக் கொண்டு சொன்னார். மேலும்,அந்த பெண்கள் வீட்டு வேலை பார்ப்பது தான் கஷ்டமாக உள்ளது என்று சொன்னார்கள். கூட்டு குடும்பமாய் இருப்பதால் எப்போதும் வேலை வேலை என்று சலித்து கொண்டார்கள். அந்த ட்ரைபல் கூட்டத்தில் முதுநிலை வரை படித்துவிட்ட ஒரு பெண் இந்த சமூகம் மாற வேண்டும் என்று கூறினார். அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

இன்னொரு கிராமத்தில் ஒரு ஆணிற்கு 2 அல்லது 3 மனைவிகள் உள்ள்து.ஆனால், அந்த கணவர்கள் தங்கள் மனைவிகளை தனி தனியே வீடு பார்த்து வைத்து இருப்பதாக கூறினார்கள். மூத்த மனைவிகள் பேட்டி கொடுக்கும் போது அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள். இரண்டாவது மனைவி வந்ததிற்கு கோபம் வரவில்லையா என்று கேட்டதிற்கு எதற்க்கு கோபம் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.

Friday, October 09, 2009

புக்கர் பரிசும் இந்தியாவும்...

1969 லிருந்து வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் இந்த புக்கர் பரிசானது இந்த முறை ஹில்லாரி மேண்டல் என்ற பெண்ணிற்கு “WOLF HALL" என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த பரிசானது காமன்வெல்த் நாடுகள்,அயர்லேண்ட்,ஜிம்பாவே முதலிய நாடுகளில் எழுதப்படுகின்ற முழு நீள ஒரிஜினல் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.
1969-லிருந்து புக்கர் மேக்கனால் என்ற ஃப்வுண்டேஷனால் வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகை 50 ஆயிரம் பவுண்டுகளாகும். புக்கர் ஃப்வுண்டேஷன் அமைக்கும் ஒரு குழு சிறந்த புத்தகத்தினை செலக்ட் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் லண்டனில் உள்ள கில்ட் ஹால் என்னும் இடத்தில் இருந்து இந்த புக்கர் அறிவிப்பு வெளிவரும்.


1981-ல் சல்மான் ருஷ்டி மும்பாயில் பிறந்தவர். அவரின் ”மிட்நைட்’ஸ் சில்ட்ரன்” என்ற புத்தகத்திற்கு புக்கர் பரிசினை வாங்கினார்.(பத்ம லெஷ்மி என்ற கேர்ள் ஃப்ரண்டுடன் நிறைய photos வந்தன.)இவரின் ”சட்டானிக் வெர்ஸஸ்” என்ற புத்தகம் பெறும் சர்ச்சையினை முஸ்லீம்களிடையே ஏற்படுத்தின.இரானின் அப்போதைய அதிபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.


1997-ல் அருந்ததிராய் என்ற இந்திய பெண் அவரின் ”தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்”(கேரளா பற்றியது) என்ற புத்தகத்திற்கு இந்த பரிசினை வாங்கினார்.அருந்ததி ராய் NDTV-பிரணாய் ராயினின் கஸினாம்.இவருக்கும் இது தான் முதல் நாவலாம்.எழுத எடுத்துக்கொண்ட வருடங்கள் நான்கு. இவர் பிறந்தது ஷில்லாங்கில்.


2006-ல் கிரண்தேசாய் ”த இன்ஹெரிட்டன்ஸ் ஆப் லாஸ்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார்.இவர் பிறந்தது டில்லியில்.தற்சமயம் வசிப்பது அமெரிக்காவில்.இவருடைய அம்மா அனிதா தேசாயும் ஒரு எழுத்தாளர்.388 பக்கங்கள் கொண்டது இவரது நாவல்.ஹிமாலாயா பகுதியில் நடப்பது போல் உள்ளதாம் இவரது கதை.

2008-ல் அரவிந்த் அடிகா ”தி வைட் டைகர்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார். அரவிந்த் அடிகா நம்ம சென்னையில் பிறந்தவர்.அப்புறம் ஆஸ்த்ரேலியா போய்விட்டார். இவருக்கு இந்த புத்தகம் முதல் முழு நீள நாவலாம்.

முதல் நாவலிலேயே புக்கர் வாங்கறாங்க. இதில் கிரண் தேசாய், அரவிந்த் அடிகா இருவருக்கும் மிக நல்ல பல்கலைகழங்களில் ஆங்கில இலக்கியம் படித்த அனுபவம் உள்ளது.பிறந்தது இந்தியாதான், வளர்ந்தது எல்லாம் அயல் நாட்டிலே. ஆனால், கதையின் தளம் இந்தியாதான் இவர்களின் நூல்களில். வாழ்க இந்தியா..பரவட்டும் இந்தியாவின் புகழ்.


இது வரை இங்கிலாந்து 25 முறையும், ஆஸ்த்ரேலியா 6 முறையும், அயர்லேண்ட், இந்தியா 4 முறையும் இந்த புக்கரை தட்டி சென்று உள்ளன.