ஏண்டா ஸ்கூலுக்கு போற போது திட்டு வாங்கிய மாதிரியே இப்ப ஆபிசிற்கு போகும் போதும் உன் அப்பாக்கிட்ட தினம் திட்டு வாங்குறீயே, ஏண்டா இப்படி என்று என்னருமை மகனை இன்று காலையில் வழக்கம் போல் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கும் போது கேட்டேன். அவன் கூலாக சொன்னது...இதெல்லாம் பழகிடுச்சும்மா!!
எதெல்லாம் நமக்கு பழகிடுச்சு என்று யோசித்த போது...
1. தினம் மகன்களை காலை வேளைகளில் திட்டுவது..
2. வெள்ளி கிழமைகளில் கட்டாயம் சைவம் மட்டும் சாப்பிடுவது...
3.. சனி, ஞாயிறுகளில் காலையில் லேட்டாக எழுந்திருப்பது...
4. வீட்டில் இருக்கும் போதெல்லாம் டிவி பார்க்கும் கணவரை அவ்வப்போது திட்டுவது...
5. எப்ப பார்த்தாலும் நான் தான் இந்த வீட்டில் எல்லா வேலையும் பார்க்கணுமா என்று அவ்வப்போது முக்கியமா துவைத்த துணிகளை மடிக்கும் போதும்,வீட்டினை க்ளீன் செய்யும் போதும் சலித்துக் கொள்வது.
6. வாரத்திற்கு நான்கு நாட்களாவது ஃப்ரெண்ட்ஸ்களுடன் நீ எங்க போன, நான் எங்க போனேன், நீ என்ன செய்த, நான் என்ன செய்தேன் என்று நிகழ்ச்சி நிரல் ஃபோனில் ஒப்பிப்பது.
7. கணவரின் செல் ஃபோனில் ஐ.எஸ்.டி, எஸ்.டி.டி என்று ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பேசி ஃபோன் பில்லை ஏத்துவது..ஹி..ஹி..ஹி
8. அதிக அக்கறை என்ற பெயரில் அத்திபழம்,பேரீட்சை, கேரட் என்று பசஙகளுக்கு காலை வேளையில் கொடுத்து என் கண் முன்னாடி சாப்பிடு என்று கட்டாயப்படுத்துவது, தலையில் முட்டை,வெந்தயம்,செம்பருத்தி இலை என்றும், முகத்தில் முல்தானி மட்டி என்றும் ஏதாவது தடவி அவர்களை வீட்டில் பேய் போல் நடமாடவிடுவது. ஜூஸ் என்று எதாவது செய்து அவர்களை குடிக்க செய்வது.
9. நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது எப்படி பெரியவர்கள் பேச்சு கேட்போம், எப்படி எல்லாம் படிப்போம் என்று டூப்பு டூப்பாய் விடுவது.
10. என்ன சினிமா என்றாலும் விமர்சனம் படித்தும் புத்தி வராமல் பிடிவாதமாய் சில தமிழ் படங்களை தியேட்டரில் பார்த்து தொலைப்பது.
11. நாம் எழுதுவதற்கு பின்னூட்டம் கிடைக்காட்டியும் நானும் எழுதுவேன் என்று இப்படி எதையாவது எழுதுவது.
இன்னும் இன்னும் நிறைய பழகிடுச்சு.....
4 comments:
\\நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது எப்படி பெரியவர்கள் பேச்சு கேட்போம், எப்படி எல்லாம் படிப்போம் \\
Once upon a time. long long ago கேஸா அக்கா நீங்க:))
//ஏதாவது தடவி அவர்களை வீட்டில் பேய் போல் நடமாடவிடுவது. ஜூஸ் என்று எதாவது செய்து அவர்களை குடிக்க செய்வது.
ஹா ஹா...
so long ago..vidhya...
என்ன செய்றது பொழுது போகணும்ல...பாலா..
எங்களுக்கும் இதெல்லாம் பழகிடுச்சு.. ஹி ஹி... ;-)
Post a Comment