Wednesday, December 02, 2009

திற்பரப்பு நீர்வீழ்ச்சி



இந்த முறை திற்பரப்பு போன போது குடும்பத்துடன் தனியே குளித்தோம். நவம்பர் 26நாங்கள் போனபோது அருவியில் குளிக்க யாருமே இல்லை.தண்ணீர் மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தது. வருடம் முழுவதும் தண்ணீர் கூடவோ, குறையவோ செய்யுமாம். ஆனால், தண்ணீர் வரத்து எப்பவும் உண்டாம். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் குழித்துறை என்னும் ஊரில் இடது பக்கமாக திரும்பி ஒரு 24கி.மீ போனால் திற்பரப்பு. அருவி அருகிலேயே பெண்கள் குளித்து உடை மாற்ற அறைகள் சுத்தமாக இருந்தன. நாங்கள் 6பேர் மட்டும் குளித்துக் கொண்டு இருந்தோம். ஒருவருக்கு 2ரூபாய் குளிக்கக் கட்டணம். கொஞ்ச நேரம் கழித்து சிலர் வந்தனர். சென்னையிலிருந்து நாகர்கோயில்,கன்னியாகுமரி ட்ரைனில் போனால் போன அன்றே ட்ரையின் பிடித்து சென்னை திரும்பி விடலாம். சென்னையில் தண்டமாய் மாயாஜால், எம்.ஜி.எம் என்று போவதற்கு இங்கே போகலாம். அருமையான இடம். விடுமுறை தினம் என்றால் கூட்டம் இருக்கும். சாப்பிட ஹோட்டல்கள் இருக்கின்றன.

5 comments:

Cinema Virumbi said...

திற்பரப்பு நீர்வீழ்ச்சியைப் பற்றிய உங்கள் பதிவைப் படித்தால் உடனே ட்ரெயின் பிடித்துப் போய்ப் பார்க்கத் தூண்டுகிறது!

நன்றி!

சினிமா விரும்பி

அமுதா கிருஷ்ணா said...

thanks cinema virumbi

angel said...

also anga irunthu konjam thoram pona thiruvithangor palace undu athaiyum pathirukalam miga nandraga irukum

வால்பையன் said...

அடுத்த வருடம் ஒரு டூர் போட்றலாம்!

சீசன் சரியா விசாரிச்சிங்களா?

Suresh S R said...

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள் தான்.