ஒரு வருடத்தில் நடந்தவைகள் அனைத்தையும் திரும்பி பார்ப்பதும் ஒரு அனுபவம் தான். எல்லா வருடமும் போல் மகிழ்ச்சியும், கவலையும் இரண்டும் கலந்து இருந்தது போன வருடம். சில விஷயங்கள் நமக்கு நல்லதாய் இருப்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கெட்டதாய் இருக்கும்.
1. நான் முதன் முறையாக வெளிநாடு போனது எனக்கு மகிழ்ச்சி.(மலேஷியா,சிங்கப்பூர்). என் பையன்கள் என்னை விட்டு முதன் முறையாக ஒரு மாதம் இங்கே இருந்ததும்,என் கணவருக்கு நான் செலவு வைத்ததும் அவர்களுக்கு கெட்டது தானே.
2. மாதம் ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதியது எனக்கு மகிழ்ச்சி. பொறுமையாய் படித்தவர்கள் பாடு திண்டாட்டம் தானே.
3. ரொம்ப நாளாக ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முயன்ற என் மாமா பையன் ஜூனில் திநகரில் திண்டுக்கல் பங்காரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தது மகிழ்ச்சி தந்தது. ஆனால், மற்ற ஹோட்டல்களுக்கு இது ஒரு போட்டி என்பதால் அவர்களுக்கு கவலை தானே.
4. முதல் முதலாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு சென்றது எனக்கு மகிழ்ச்சி. ஆனால், ஒரு பெண் பதிவர்கள் கூட வராதது கவலை தந்தது.
5.34 வருடங்களாக என்னுடனே இருந்து பேசி, சிரித்த என்னுடைய இளைய சகோதரன் பிரபு என்னுடன் பேச்சை நிறுத்தி கொண்டதுடன் என்னை தப்பாக புரிந்துக் கொண்டு என்னை அழ அழ வைத்ததும் இந்த வருடத்தில் தான். கூட பிறந்தவன் கூட எதிரியும் ஆவான் என்று புரிந்தது. என்னுடன் பேசாதது அவனுக்கு மகிழ்ச்சியோ. நானும் மகிழ கற்றுக் கொள்ளணும் இந்த விஷயத்தில்.
5. நண்பர் முத்துராமன் முதலில் கிழக்கு பதிப்பகத்தில் இருந்தார்.பின் தமிழக அரசியல் பத்திரிக்கையில் இருந்தார். கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிஸிஸ் செய்து கொண்டு ஆபரேஷனுக்கு காத்து இருப்பது மிக கவலை தரும் ஒரு நிகழ்வு.
6. இந்த டிசம்பரில் ஏ.சி.எஸ் இண்டர் பரீட்சை எழுதி உள்ளான் என் பெரிய பையன்.மிக கஷ்டமான ஒரு தேர்வு. வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
7. என் தோழி ஜெயாவின் கணவர் ஆர்மியில் உள்ளார். என் தோழி ஜெயா தனது பெண்களின் படிப்பிற்காக சென்னை வந்து செட்டில் ஆனது எனக்கு மகிழ்ச்சி. ஆனால்,பாவம் அவள் கணவர் தனியே நாசிக்கில் கவலையுடன் இருக்கிறார்.
8. இன்னொரு தோழி நிர்மலா ஃபேமிலியுடன் மேயில் பெங்களூரு போய் திடீரென்று செட்டில் ஆனது எனக்கு மிக வருத்தம். ஆனால், அவள் கணவர் ராபினுக்கு மிக சந்தோஷம்.
9. 5 வருடங்களுக்கு முன் சாட்டில் அறிமுகமான பானக்காலு என்ற ஆந்திர தம்பியின் திருமணத்திற்கு என் பையனுடன் நவம்பரில் திருப்பதி போனது எனக்கு திருப்தி. பாவம் அவரின் மனைவி இன்னும் அமெரிக்கா போக முடியாமல் பாஸ்போர்ட் கிடைக்காமல் கவலையாய் இருக்கிறார்.அவர் இப்போது இருப்பது ஹைதராபாத் ஆச்சே...
10. நர்சிம்,கார்க்கி,ஆதி,கேபிள் சங்கர்,அரவிந்த், வால்பையன், சந்தனமுல்லை,ச்சின்னபையன், பட்டர்ஃப்ளை சூர்யா, இன்னும் நிறைய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது சென்ற பொன்னான வருடத்தில் தான். இதில் எனக்கு மகிழ்ச்சி.இவர்களுக்கு நான் வாசகியானது இவர்களுக்கும் மகிழ்ச்சியாய் தானே இருக்கும்.
10 comments:
:)))))
எனக்கும் சந்தோஷமே
வித்தியாசமான தொகுப்பு!!
எல்லா வருடமும் போல் மகிழ்ச்சியும், கவலையும் இரண்டும் கலந்து இருந்தது போன வருடம். சில விஷயங்கள் நமக்கு நல்லதாய் இருப்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கெட்டதாய் இருக்கும்.//
கண்டிப்பாக!! இரண்டு பக்கமும் பார்த்து எழுதியதை ரசித்தேன்!
அழகான தொகுப்பு....
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிஸ்டர்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்றைக்கு தான் உங்க கேரளா டூர் படித்தேன். நல்லா இருக்கு.
pls read my blog and send you comments-thanking you !
உங்கள் பையன் ACS பாசாகி இருப்பார் என நம்புகிறேன். நல்ல தொகுப்பு.
ஆமாம் ஆதிமனிதன் என் பையன் ACS clear செய்து விட்டான் நன்றி...
Post a Comment