நேற்று வைகை ட்ரெயினில் திண்டுக்கல்லில் இருந்து குடும்பத்துடன் வந்துக் கொண்டு இருந்த போது அரியலூரில் ஒரு இருபது வயது பெண் ட்ரெயினில் ஏறியது.வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கையில் வைத்து இருந்துச்சு. அதனுடைய கெட்ட நேரம் கரெக்டாக ஸ்குவாட் டீம் அதே கோச்சில் ஏறினார்கள்.இந்த பெண்ணிடம் ஃபைன் 350 ரூபாய் கேட்டார்கள். பெண் வைத்து இருந்ததோ ஈ டிக்கெட், பணத்தை எடுத்து வைமா நாங்கள் அடுத்த கோச் போய் வருகிறோம் என்று சென்று விட்டார்கள். பணம் இல்லையென்றால் சென்னை போனதும் கோர்ட்டிற்கு போக வேண்டும் இன்னும் அதிக பணம் கட்ட வேண்டும் என்று சொல்லிப் போனார்கள். தீடீரென்று பார்த்தால் அந்த பெண் அழுதுக்கொண்டு இருந்தது. என்ன என்று கேட்டால் கையில் பணம் இல்லை.டெபிட் கார்டுதான் இருப்பதாய் கூறியது. எங்கு வேலை பார்க்கிறாய் என்று கேட்டால் cts என்று கூறியது. நான் உடனே என் தம்பியை கொடுக்கும் படி கூறினேன். அவனும் அந்த கம்பெனியே .
என் மகனிடம் இன்று சனி பெயர்ச்சி அதான் இந்த பெண் கஷ்ட படுது என்று கமெண்ட் அடித்து கொண்டு இருந்தான். நான் பணத்தை அவனை கொடுக்க சொன்னதும் பார்த்தியா சனி என்னையும் சோதிக்கிறது என்று சொல்லிக் கொண்டே பணத்தினை கொடுத்து விட்டான். (ஏதோ நம்மால் ஆன உதவி!!!) திருப்பி கொடுக்க அந்த பெண்ணிற்கு ஈசியாக இருக்கும் என்று அவனை கொடுக்க சொன்னேன்.
பணம் கொடுத்த பின் அந்த பெண்ணிற்கு அழுதது ரொம்ப வெட்கமாய் போய் விட்டது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு வைத்து கொண்டு கஷ்டபட வேண்டியாகி விட்டது. அவ்வளவு பணம் செலுத்திய பின்னும் சீட் கிடையாது.எங்களுடன் உட்கார வைத்துக் கொண்டோம். அரியலூர் சென்னை 87 ரூபாய் தான் ஓபன் டிக்கெட் பாவம்...ஈ-டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலைனா ட்ரெயினில் ஏற கூடாது என்ற விபரம் தெரியாமல் ஏறிவிட்டது அந்த பெண்.

7 comments:
avvvvvvvv!!
மேலே உள்ள குழந்தையின் படமும் அதன் சிரிப்பும் கொள்ளை அழகு.
அன்போடு செய்த நல்ல காரியத்திற்கு வாழ்த்துக்கள்
\\பாவம்...ஈ-டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலைனா ட்ரெயினில் ஏற கூடாது என்ற விபரம் தெரியாமல் ஏறிவிட்டது அந்த பெண்.\\
எனக்கே தெரியாத தகவல்தான் :))
நன்றி
சரியானா எல்லோருக்கும் பயன் படும் தகவலை கொடுத்து இருக்கீங்க அமுதா.
ஈ டிக்கெட் கன்பாஃர்ம் ஆகலைனா ஆட்டோமெடிக்கா பணம் திரும்ப கிரிடிட் ஆகிடும்!
பின்ன எப்படி ஒத்துக்குவாங்க!?
பகிர்வுக்கு நன்றிகள்
;((
Post a Comment