தானம்:
கண் தானம் பற்றி டாக்டர் அகர்வால் சன் சேனலில் கூறியது..
இறந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். நெருங்கிய உறவினர்கள் கண் மருத்தவமனைக்கு தகவல் சொல்லியதும் உடனே வந்து ஒரு மணி நேரத்திற்குள் இறந்தவரிடம் இருந்து கண்களை எடுத்து விடுவார்கள். எடுத்த பின் மிக சிலருக்கு கொஞ்சம் வீக்கம் தெரியும். மேக்ஸிமம் ஒரு வித்தியாசமும் தெரியாது. இரு கண்கள் நான்கு பேருக்கு உதவுமாம். கார்னியா(கண்ணின் முன் பகுதி) தான் கார்னியா ட்ரான்ஸ்ப்ளாட்டேஷனுக்கு உதவுகிறது. கண்ணின் வெள்ளை பகுதி சில சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப் படும்.மீதி பகுதிகள் ரிசர்ச்சிற்கு பயன்படும். கார்னியாவில் பாதிப்பு உள்ள கண்பார்வை அற்றவர்கள் மட்டுமே இதில் பயன் பெறுவார்கள். கண்ணில் கேன்சர், இரத்த புற்று நோய், எய்ட்ஸ்,ஹெப்பாடைடிஸ், பாம்பு கடித்து இறந்தவர்கள் தானம் செய்ய முடியாது. கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணில் ஆபரேஷன் செய்தவர்கள், ப்ளட் பிரஷர் இருப்பவர்கள், டயாபடிஸ் உள்ளவர்கள் கூட தானம் செய்யலாம்.வயது வரம்பெல்லாம் கிடையாது.நாமும் கண் தானத்திற்கு பதிவு செய்யலாமே. எரிய அல்லது புதைய போகும் கண்கள் நமக்கு பின்னும் உலகை பார்க்கும் என்பதே நல்லது தானே. சங்கர நேத்ராலயா போன்ற பெரிய கிளினிக்கில் இதற்கு என்றே தனி பிரிவு உள்ளது. பதிவு செய்ததை நம் நெருங்கிய உறவினருக்கு சொல்லி வைக்க வேண்டும்.
மாயாண்டி குடும்பத்தார் தீபா
தீபாவின் பேட்டி ராஜ் சேனலில் வந்தது. எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும். வடிவேலு, கோவை சரளா மாதிரி ஊரின் நேட்டிவிடியுடன் பேசும். வடிவேலு மதுரை என்றால், கோவை சரளா கோவை என்றால் இந்த பெண் நெல்லை. சொந்த ஊர் தூத்துகுடியாம். கணவர் மளிகைக் கடை வைத்து இருக்கிறாராம். ஒரு குழந்தை இருக்கிறதாம். வெடிகுண்டு முருகேசன் என்ற படத்திலும் மன நலம் குன்றிய பெண்ணாக வரும். மேகலா என்ற சீரியல் இந்த பெண்ணிற்காகவே பார்ப்பேன். மிக பெரிய ரவுண்ட் வருவார். கமலுடன் ஒரு படத்தில் ஜோடியாக வர வேண்டும். பார்க்கலாம்.
5 comments:
வெரைட்டி நல்லாயிருந்தது..
அடுத்த தடவை.. மேட்டர் இன்னம் கொஞ்சம் ஏத்துங்க!
கண் தானம் பற்றிய தகவலுக்கு நன்றி!
நல்ல பதிவு.. மாயாண்டி குடும்பத்தாரில் தீபா எந்த கதாபாத்திரத்தில் வந்தார்?
நல்ல தகவல்.!
மாயாண்டி, முருகேசன் ரெண்டையும் மிஸ் பண்ணிட்டனே.. இவ்ளோ ரசிச்சிருக்கீங்க.. எங்கூருன்னு வேற சொல்லிட்டீங்க.. பாக்கணுமே.!
முதல் வருகை உங்கள் தளத்திற்குள்.....
வந்ததுமே வசமா மாட்டிக் கிட்டேன். அதனால இனி அடிக்கடி வருவதாக உத்தேசம்....
Post a Comment