பெயர்: அப்பா அம்மா வைத்த பெயர் இல்லை. வீட்டில் ராமன் என்றால் பதிவுலகில் ராவணன்
வயது: இருபதிலிருந்து எழுபது வரை
தொழில்: பதிவிடுவது
உபதொழில்: ஆணி பிடுங்குவது
நண்பர்கள்: பதிவை படித்து பின்னூட்டம் இடுபவர்கள்
எதிரிகள்: பின்னூட்டம் இடாதவர்கள்
பிடித்த வேலை: பதிவிடுவது
பிடித்த இடம்: பதிவர்கள் சந்திக்கும் இடம்
பிடித்த பொருள்: கம்யூட்டர்,கீ போர்டு, தமிழ் ஃபாண்ட்,
பிடிக்காத பொருள்: நல்ல பதிவு போடுபவர்களின் கீ போர்டும், கம்யூட்டரும்,
விரும்புவது: எல்லோரும் பதிவை படிக்கிறதை.
விரும்பாதது: பதிவை படித்த பின் தலைத்தெறிக்க அனைவரும் ஓடுவதை.
பொழுதுபோக்கு:மற்ற பதிவுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும் ரங்கமணி,தங்கமணிகளை வம்பிற்கு இழுப்பதும்
சமீபத்திய எரிச்சல்: பின்னூட்டமே இல்லையே
நீண்டகால எரிச்சல்: இன்னும் நட்சத்திர பதிவர் ஆகலையே.
சமீபத்திய சாதனை: இன்றைக்கு வீட்டில் திட்டு வாங்காதது..
நீண்டகால சாதனை: ஃப்ளாக் வைத்திருப்பது
10 comments:
நான் பின்னூட்டம் போட்டுடேன்.
அப்ப நான் உங்க நண்பன்தானே?
யப்பா.. தப்பிசாச்சு!!
நல்லா கெளுப்புறிங்க பீதியை...
பட் நல்லா எழுதி இருக்கிங்க...
அன்புடன் ஜாக்கி
நடத்துங்க..
No.. I am only(always) 18
\\சமீபத்திய சாதனை: இன்றைக்கு வீட்டில் திட்டு வாங்காதது..
நீண்டகால சாதனை: ஃப்ளாக் வைத்திருப்பது//
உண்மையான பயோடேட்டாதான்.. :))
அப்பறம் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்ப்பா.. :)
இது பயோடேட்டா வாரமா!! நானும் பின்னூட்டம் போட்டாச்சு
:))
நல்லாருக்கு!
பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
Post a Comment