Friday, September 09, 2011

பாப்பா

போன மாதம் செக்கப் சென்ற போது செப்டம்பர் 10-ற்கு பிறகு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க c-section செய்து குழந்தையினை எடுத்து விடலாம் என்று சொல்லவும்.செப்டம்பர் பத்தே நல்ல நாள் தான் அன்றே செய்து விடலாமா என்று செப்டம்பர் 4-ல் டாக்டரிடம் சொல்ல சென்ற போது இல்லை இல்லை இரண்டு நாட்களில் செய்து விடலாம் இல்லைனா அனெஸ்தடிஸ்ட் கிடைப்பது கடினம் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர்.

10 வரை நல்ல நாள் இல்லையெனினும் டாக்டர் சொல்படி கேட்பது தான் நல்லது என்று 6 ஆம் தேதி ஹாஸ்பிட்டல்லில் சேர்ந்து 7 ஆம் தேதி காலையில் ஆபரேஷன் செய்து குழந்தையும் எடுத்தாச்சு. பெண் குழந்தை ஆஹா எவ்ளோ நாளாச்சு எங்கள் வீட்டில் என் தங்கைக்கு பிறகு வந்திருக்கும் பெண் குழந்தை என்று எல்லோரும் மிக சந்தோஷமாய் இருந்தோம்.மதியம் இடி போல் ஒரு செய்தி. குழந்தையினை ஆம்புலன்சில் இரண்டு நர்ஸ்கள் உதவியுடன் வடபழனி சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவல். குழந்தை மூச்சு விட சிரமப்படுவதால் அங்கு கொண்டு செல்லும்படி பிரசவம் பார்த்த டாக்டர் என் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

பிறந்த குழந்தை தனியே NICU-வில் இருக்கிறது.அம்மாவோ இங்கே ஒரு ஹாஸ்பிட்டலில்.அங்கோ கண்டிஷனாய் தந்தைக்கு மட்டுமே அனுமதி.இன்ஃப்க்‌ஷன் ஆகி விடும் என்பதால் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.நேற்று மூன்று கிலோவில் இருந்த குழந்தை இன்று 100 கிராம் குறைந்துள்ளது. எங்கேயெல்லாம் டியூப் சொருக முடியுமோ சொருகியாச்சு.

பிரிமெச்சூர் பேபிக்கு பிறந்தவுடன் மூச்சு பிரச்சனை வராமல் இருக்க டெலிவரிக்கு முன்பு தாய்க்கு போடப்படும் ஒரு வகையான ஹார்மோன் இன்ஜெக்‌ஷனை ஏன் அந்த தாய்க்கு போடவில்லை. இது குழந்தையினை அட்மிட் செய்த ஹாஸ்பிட்டலில் கேட்டார்கள்.

10 தேதிக்கு பிறகு சிசேரியன் செய்யலாம் என்ற டாக்டர் திடீரென்று இரண்டு நாளில் ஆபரேஷன் என்றால் அதற்கு தாயின் உடல்நிலை காரணம் என்றால் ஓகே.அனஸ்தெடிஸ்ட் கிடைக்கமாட்டார் என்பது ஒரு ஒத்துக் கொள்ள கூடிய காரணமா?வேறு ஆட்களே கிடைக்க மாட்டார்களா?

நார்மலா பிறந்தாலே 1000 பிரச்சனைகள் வரக்கூடிய இந்த காலத்தில் எதற்கு அவசரமாய் ஒரு மாதம் முன்பாகவே பிரிமெச்சூர் பேபியினை எடுக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாட்டினை ஏன் செய்யவில்லை.?

குழந்தையினை சேர்த்திருக்கும் ஹாஸ்பிட்டலில் வேறு ஒருத்தரும் போக கூடாது என்றால் படிப்பறிவு இல்லாத தகப்பன் என்றால் குழந்தை நிலைமை பற்றி எப்படி புரிந்துக் கொள்வார்.படித்தே இருந்தாலும் மெடிக்கல் டெர்ம்ஸ் எப்படி எல்லோருக்கும் புரியும். இல்லையெனில் அந்த ரிப்போர்ட்டை ஒரு ஜெராக்ஸ் எடுத்தாவது கொடுக்கலாம் இல்லையா? இன்னொரு தெரிந்த டாக்டரிடம் செகண்ட் ஒப்பினியன் கேட்போம் இல்லையா?

செகண்ட் ஒப்பினியன் கேட்காமல் டெலிவரி செய்து இப்போ கஷ்டப்படுகிறோம்.

குழந்தை வெயிட் நல்லாயிருப்பதால் நம்பிக்கையுடன் கடவுள் இந்த முறையும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் இருக்கிறது. என் மகன்கள் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.ஒன்றும் ஆகாதும்மா பாப்பா வீட்டிற்கு வந்திடும் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.என் தம்பி அந்த ஹாஸ்பிட்டலில் தனியே இரண்டு நாளாய் குழந்தையினை தினம் மூன்று முறை மட்டும் பார்த்து விட்டு ரிஷப்ஷனில் காத்து இருக்கிறான்.

என் தம்பிக்கு இரு முறை 8 மாதத்தில், 6 மாதத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. இது மூன்றாவது குழந்தை. எங்கே முட்டி கொள்வது,யாரை குறை சொல்வது,என்ன பாவம் செய்தோம் என்று புலம்பி கொண்டு இருக்கிறோம். சொந்தத்திலும் திருமணம் செய்யவில்லை.9 மாதமும் பெட் ரெஸ்ட்டில் இருந்தார் என் தம்பியின் மனைவி.

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.

24 comments:

குறையொன்றுமில்லை. said...

கண்டிப்பா அந்தபாப்பா நல்ல குணமாகி ஆரோக்கியமா வீடு திரும்பி உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்துவா. கவலை வேண்டாம்

john said...

Don't worry god will help that kid.soon she will come to home.
"Mirunazhini" this name is good?

john said...

Don't worry, God will help that kid.
soon it will come to Home.
May I sujjest a name "Mirunazhini"
It means Prakasamanval ,is it good?

சாந்தி மாரியப்பன் said...

பாப்பா நல்லபடியா வீட்டுக்கு வந்து உங்களை மகிழ்விப்பா. கவலைப்படாதீங்க.

செங்கோவி said...

பிரசவ விஷயத்தில் மருத்துவர்கள் கவனமாய் இருக்க வேண்டாமா? இரண்டு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லவா..

நல்லதே நடக்கும், சகோ. கவலை வேண்டாம்.

ILA (a) இளா said...

ஆண்டவன் கட்டாயம் நல்லதே செய்வான். நம்பிக்கை வைங்க. என் பிரார்த்தனைகளும்

A and A said...

I ahve been reading your blogs and couldn't resist on commenting this one. Don't worry, since the baby is in good weight, she will come home in no time. I have known many people delivered at 6-7 months and their babies are doing well now. Keep us updated!

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை வையுங்கள்.... நிச்சயம் உங்கள் வீடு வருவாள் உங்கள் தம்பியின் மகள்....

CS. Mohan Kumar said...

Let us pray that the child will be allright soon.

Operations for delivery are done many times to suit doctors convenience (their trip, availability, etc):((((

rajamelaiyur said...

//
இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.
//

உங்கள் நம்பிக்கையை கடவுள் நிறைவேற்றுவர்

rajamelaiyur said...

கடவுள் உள்ளார் .. பயப்பட வேண்டாம்

சத்ரியன் said...

பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்லாம் வல்ல ஆற்றல் உங்களை ஆசிர்வதிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

பாப்பா குணமாகி வர பிரார்த்திப்போம், கவலைபடாதீர்கள்....

ஆமினா said...

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்

நானும்

கதம்ப உணர்வுகள் said...

படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது...

மாதா மாதம் செக்கப் செய்யும்போதே குழந்தையின் நிலை தாயின் நிலை அப்டு டேட் வைத்திருக்கவேண்டாமா?

உயிர் விஷயத்தில் இப்படி ஒரு கவனக்குறைவு தப்பாச்சே....

அதுவும் இருமுறை குழந்தை பிறந்து இறந்திருக்கிறது எனும்போது இவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருந்திருக்கவேண்டும்..

ப்ரைவேட் நர்சிங் ஹோம் ஏன் இத்தனை காசு செலவு செய்து போகிரோம்? கவர்ண்மெண்ட் ஆஸ்பத்திரியில் கவனிப்பாங்களோ இல்லையோ என்ற பயத்தில் தானே?

இவர்களும் பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர உயிர்களுக்கு தேவையான அவசியங்களை செய்வதில்லை....

பாப்பாவுக்கு நல்ல பெயர் தேடட்டும் பிள்ளைகள்.... இன்று முதல் என் பிரார்த்தனையும் சேரும் பாப்பாக்கு... நம் எல்லோரின் கூட்டு பிரார்த்தனையால் கண்டிப்பாக குழந்தை நலமுடன் வீட்டுக்கு மஹாலக்‌ஷ்மி போல் சிரிச்சுக்கிட்டே வருவாங்க பாருங்க....

நம்பிக்கையை தளரவிடாம முடிந்தவரை டாக்டர்களிடம் குழந்தை தாய் இருவரின் நலமும் கவனிச்சுட்டே இருங்க..

பாப்பா கண்டிப்பா நலமுடன் சௌக்கியமா வீட்டுக்கு திரும்பி வந்ததும் ஒரு வார்த்தை இங்க தெரிவிச்சால் எங்களுக்கும் மனம் நிம்மதி அடையும்பா....

அன்பு பிரார்த்தனைகள் தாய்க்கும் குழந்தைக்கும்....

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்./

குழந்தை நலமுடன் வர பிரார்த்தனைகள்.

Rathnavel Natarajan said...

குழந்தை நலனுக்காக பிரார்த்திக்கிறோம்.

ஹுஸைனம்மா said...

ஆறு மாதத்திலேயே பிறந்த குழந்தைகள்கூட நல்ல ஆரோக்கியமாய் வளர்கின்றனப்பா. இது 9 மாதங்கள் நிறைந்த குழந்தை என்பதால், நலமே வீடு வந்து சேருவாள் இறையருளால். கவலை வேண்டாம்.

//இன்று 100 கிராம் குறைந்துள்ளது//
பிறந்த குழந்தைக்கு, நீர் வற்றும் என்று சொல்வார்கள். அதனால் எடை முதலில் குறைந்து, பின் ஏறும். கவலை வேண்டாம்.

தக்குடு said...

உம்மாச்சி இருக்கார் கவலைபடாதீங்கோ!! அந்த பாப்பா நல்லபடியா வந்து உங்காத்துல எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்!!!

ADHI VENKAT said...

பாப்பா அழகாக, ஆரோக்கியமாக சீக்கிரமே உங்கள் வீடு வந்து சேர்வாள்.

கடவுளை பிரார்த்திக்கிறோம்.

ஆதி மனிதன் said...

என் பிராத்தனைகளும்... பாப்பாவுக்காக...

Avargal Unmaigal said...

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும். குழந்தை நலமுடன் வர எனது பிரார்த்தனைகள் தொடரும்.பிறருக்காக நாம் சுயநலம் கருதாமல் பண்ணும் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது எனது கருத்து.கண்டிப்பா அந்தபாப்பா நல்ல குணமாகி ஆரோக்கியமா வீடு திரும்பி உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்துவா. கவலை வேண்டாம்.வாழ்க வளமுடன்

ஆயிஷா said...

குழந்தை நலம் பெற என் பிரார்த்தனைகளும் ...
பாப்பா ஆரோக்கியமாக சீக்கிரமே உங்கள் வீடு வந்து சேர இறைவன் நாடுவான்.

சிங். செயகுமார். said...

பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்லாம் வல்ல ஆற்றல் உங்களை ஆசிர்வதிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்