Wednesday, July 27, 2011

ஏன் இப்படி?

இந்த பதிவை படிக்க நேர்ந்த போது மனது ரணமாய் வலித்தது. இப்படி செய்யவும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ன பிரச்சனை இவர்களுக்கு? ஏன் இப்படி? என்ன செய்தால் இப்படி பட்ட மனிதர்கள் இல்லாத சமுதாயத்தினை ஏற்படுத்த முடியும்?

நம் வீட்டு ஆண் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க வேண்டும்.பெண்களின் கஷ்டங்களை அவர்களுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.அதுவே இந்த சமுதாயத்திற்கு செய்யும் முதல் பணி என்று தோன்றியது.எல்லோரும் அப்படி செய்தால் ஏன் இப்படி என்றே கேள்வியே இல்லாமல் போகாதா என்ற நப்பாசை+ வேறு என்ன செய்வது என்ற கேள்வியுடன்..

ஐடியா ப்ளீஸ்ஸ்..

 வீடு ஒன்று கட்டிக் கொண்டு இருக்கிறோம்.

டைல்ஸ்,மார்பிள்,ஸ்விட்ச்கள்,(எந்த கம்பெனி) கதவுகள்,ஜன்னல்கள்,அதற்கு வைக்கப்படும் கம்பிகள்,ரூம்களுக்கான பெயிண்ட்கள், அதன் கலர்கள்,வீட்டை சுற்றிலும் உள்ள இடத்தில் வைக்கப் படவேண்டிய மரங்கள், செடிகள்.. இவைகளை பற்றி அனுபவம் உள்ள நண்பர்கள் ஐடியாக்கள் கொடுத்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்.

கிச்சன் மேடை எந்த கலர் கிரானைட் நல்லது? ஸிங்க் பற்றி,கிரைண்டர்,மிக்ஸி வைக்கும் மேடை பற்றி,அதன் உயரம் பற்றி,மாடிப்படிகளில் எந்த கல் போட்டால் நல்லது? ஹால்,டைனிங் எந்த கலரில் தரை போடுவது?பாத்ரூமில் எந்த கலர் டைல்ஸ் போட்டால் ரொம்ப நாட்கள் உழைக்கும்?ஏனெனில் இந்த துறையில் உள்ளவர்கள் கூறுவதை விட அனுபவித்தவர்கள் கூறினால் அது உபயோகமாக இருக்கும்.கிச்சன் செல்ஃபிற்கு ஃப்ளை வுட்? ரப்பர் வுட்? மொட்டை மாடியில் என்ன தரை?

சென்னையில் நீங்கள் சாமான்கள் வாங்கிய கடைகள் பற்றிய விபரங்கள்.

நண்பர்கள் தங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

Thursday, July 07, 2011

நலமுடன் திரும்பியாச்சு..

ஹிமாலாயாவில் ரூப்கண்ட்  ட்ரெக்கிங் போன என் மகன் நகுல் பத்திரமாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஃபோட்டோக்கள் பார்க்க பார்க்க ச்ச நாமும் போயிருக்கலாமோ என்று நினைத்தேன்.
அருமையான படங்கள் உங்கள் பார்வைக்கு







Monday, July 04, 2011

வெரைட்டி-ஆனி 2011

ஒல்லியாவே இருக்கிறேன் கொஞ்சமா குண்டாக என்ன செய்றது என்ற ரிஷியிடம் என் அம்மா தினம் காலையில் பழைய சாதம் அல்லது தயிர் சாதம் சாப்பிடு உடம்பு போடும் என்று சொல்லவும் ரிஷி 10 நாட்களாக காலையில் சாதம் சாப்பிடுகிறான்.என் தம்பி மகன் விஷால் ரிஷியிடம் அச்சச்சோ ஏன் நாய் புவ்வா(சாதம்) சாப்பிடுறீங்க? என்று கேட்கவும் ரிஷி முகத்தினை பார்க்கணுமே.விஷாலுக்கு தயிர் அலர்ஜி.

புதியதாய் ஹைதையில் இருந்து என் வீட்டின் பக்கத்தில் குடிவந்திருக்கும் ஃப்ரெண்ட் ஒருவரின் சகோதரிக்கு ஒரு வாரமாய் தமிழ் ட்யூஷன் நான் தான். அப்படியே என் சுந்தர தெலுங்கையும் டிங்கரிங் செய்து கொண்டு இருக்கிறேன்.

முன்பெல்லாம் தியேட்டர்,ட்ரையினில் மூட்டை பூச்சிகள் அதிகம் இருக்கும். இப்ப இல்லையே எங்கே போச்சு என்று நினைப்பேன். அமெரிக்கவில் மூட்டை பூச்சி அதிகமாம். எல்லா மூட்டை பூச்சிக்கும் யாருப்பா விசா கொடுத்தது?இறப்பதற்கு முன் ஒசாமா செய்த சதியா இருக்குமோ.


2009-ல் நான் மலேஷியா போன போது 13-ஆம் வாய்பாடு தெரியாமல் ஷாப்பிங் செய்ய மிக கஷ்டப்பட்டேன்.இனி தெரிந்து நோ யூஸ்.இப்போ போனா 14-ஆம் வாய்ப்பாடு தான் தெரியணுமாம்.ஏன்னா,ஒரு ரிங்கிட் இப்ப 14 ரூபாயாம்.



இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்..

திருவள்ளுவர் சொல்லி சென்றது. இதன் படி நடக்கலாம் என்று பார்த்தால் இப்பெல்லாம் இன்னா செய்பவர்களுக்கு நாணமே வராது போல.பிறகு அவருக்கு நன்னயம் செய்து என்ன பயன்? விடல் என்றால் பயன் இருக்காது,ஆனாலும் நல்லது செய் என்கிறார் போல.



படித்த ஜோக்:

சில வருடங்கள் முன்பு ஒரு வடை 50 காசு.ஒரு ஃபோன் கால் ஐந்து ரூபாய்.

இப்போது ஒரு வடை ஐந்து ரூபாய்.ஒரு ஃபோன் கால் 50 காசு.

டெக்னாலஜி ரொம்ப வளர்ந்து என்ன? வடை போச்சே???