Tuesday, June 21, 2011

போன ஜென்மத்தில் காட்டுவாசி

இவனை என்ன செய்றதுன்னே தெரியலை.ஆறு மாதங்களாக சென்னை ட்ரக்கிங் கிளப்பில் சேர்ந்துட்டு இவன் செய்ற அலம்பல்களை பொறுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

வாரவாரம் ட்ரக்கிங் போறேன்னு இவன் செய்ற அலம்பல்கள். வெள்ளி காலையிலேயே போவதற்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வேலைக்கு செல்கிறான். இல்லைன்னா வெள்ளி கிழமை மட்டும் வொர்க் ஃப்ரெம் ஹோம் என்கிறான்.காட்டில் படுத்துக் கொள்வதற்கு ஒரு ஸ்லீப்பிங் பேக்,சாப்பிடுவதற்கு ஒரு கிண்ணம்,ஒரு ஸ்பூன்,ஒரு செட் அழுக்கு ட்ரெஸ்.ரெடியாய் எந்நேரமும் தயாராக இருக்கிறது. ஆந்திராவில் நாகலாபுரம்,கர்நாடகாவில் ஷராவதி, ஊட்டி முதுமலை காட்டில் அனிமல் சென்சஸ்,கொடைக்கானல் டூ பழனி நடை,மூணாறு என்று வாரம் ஒரு இடம்.

கடந்த ஆறு மாதங்களில் இவன் போன இடங்கள் தான் மேலே சொன்னவை. எப்பவும் அதே பேச்சு. போகும் முன்னாடி எங்கே போகிறோம் என்று லொட லொட. போயிட்டு வந்த பிறகு என்ன பார்த்தோம் என்று லொட லொட. ஒவ்வொரு முறை போகும் போதும் அம்மா போகட்டுமா என்று ஒரு சம்பிரதாய கேள்வி.உன் அப்பாக்கிட்ட கேட்டுக்கோ என்பேன் வழக்கமாய். நான் நேற்றே டாடிக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன் என்று போகிற போக்கில் எனக்கு ஒரு பல்பு. சும்மா நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று ஒரு மைக் டெஸ்டிங் என்று சொல்லி விட்டு என் கையில் அகப்படாமல் ஒரே ஓட்டம்.

எதாவது சொன்னால், சீக்கிரம் படித்து சீக்கிரம் வேலைக்கு போயாச்சு ஏன் இப்படி திட்டிக்கிட்டே இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறது.பொண்டாட்டி வந்தா விடமாட்டா நீங்க என் செல்லம்ல என்று ஒரே ஐஸ்.நகுல் இந்த வாரம் ஹிமாலயாவில் ரூப்கண்ட் போயிருக்கான்.

9 comments:

Unknown said...

hehe!

வெங்கட் நாகராஜ் said...

நல்லது தானே.. இந்த வயதில் தான் இதெல்லாம் செல்ல முடியும்... செல்லட்டும் விடுங்கள்....

செங்கோவி said...

அவர் சொல்றதும் சரி தானே..வீட்டுக்காரம்மா வந்துட்டா இப்படில்லாம் சந்தோசமா சுத்த முடியுமா?

தினேஷ்குமார் said...

நல்ல பகிர்வு ... தலைப்பு சூப்பர்

சமுத்ரா said...

trekking is good..pls read this :
http://samudrasukhi.blogspot.com/2011/05/19.html

குறையொன்றுமில்லை. said...

இந்த வயசிலதானே இதெல்லாம் முடியும்
என்கரேஜ் பண்ணுங்க. நல்லவிஷயம்

ADHI VENKAT said...

நல்ல விஷயம் தான்.

சாந்தி மாரியப்பன் said...

இயற்கையான அந்த சூழலில் இப்படியான ஒரு த்ரில்லிங் பயணம் போயிட்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

முதன்முதலா உங்க வலைப்பூவிற்குள் வந்து ’லேண்ட்’ ஆன உடனே ’வசமா வந்து மாட்டிக்கிட்டீங்களா?’ன்னு கேட்ட கேள்வியில ‘ஜெர்க்’ஆகிட்டேன்.

போ.ஜே.கா.வாசி பதிவில் உங்கள் பையனைப் பற்றி குறை சொல்வதாக தெரியவில்லை...பெருமிதமே பொங்கிவழிந்தது...வாழ்க...வளர்க...