கொஞ்சம் கஷ்டப்பட்டு எங்க வீ ட்டிற்கு வந்தீங்க என்றால் இவ்வளவு அழகான ஹாலுக்குள் அமர்ந்து டீ குடிக்கலாம்.
அந்த கொஞ்சம் கஷ்டம் என்னனா அதாங்க எங்க வீட்டிற்கு வரும் வழி.
சரி ரூட் சொல்லாட்டா எப்படி.. உங்க வீட்டில் இருந்து ஒரு மேடு கொஞ்சம் சகதி தாண்டி அப்படியே லெப்ட்ல திரும்பினா ஒரு சின்ன குளம் வரும், வந்துச்சா கரெக்ட். அதை எப்படி தாண்டுவது என்பதெல்லம் உங்க பாடு. ஏன்னா அது எங்க வீட்டிற்கு பக்கத்தில் இல்லை. தாண்டியாச்சா ஓகே இப்ப மெயின் ரோட்டில ஐயங்கார் பேக்கரி ரைட்ல வருதா.அதன் பக்கத்தில் ஒரு பள்ளம் வரும். அதை கிராஸ் செய்து காலில் சகதி ஆக்காமல் கரெக்டா ஒரு ஜம்ப் செய்து வந்தீங்கன்னா. பேக்கரி வாசலுக்கு வந்தாச்சா?பேக்கரியினை பார்த்ததும் இது வரை வந்த களைப்பு நீங்க, நீங்களாவே ஒரு பப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாச்சா? சரி சாப்டாச்சா?
அப்படியே ஒரு ரைட் திரும்பினா இப்படி இன்னொரு குட்டி குளம் வரும். மழை காலத்தில் மட்டும் குளம் இருக்கும். எனவே வெயில் காலத்தில் வந்து அந்த குளத்தை காணோம் என்று வடிவேலு மாதிரி கம்ளெய்ண்ட் செய்ய கூடாது. அங்க ஒரு லேடி நிற்கி்றார்களா, அது நான் இல்லை அது என் வீடும் இல்லை. ஓரமாய் கற்களின் மேல் ஏறி வந்தீங்கன்ன சுலபம்.
ஏன் சொல்றேனா இந்த பக்கம் சுவர் கட்ட பெரிய பெரிய குழி நான்குஇருக்கு. நீங்க பாட்டுக்கு உள்ளே போயிட போறீங்க. ஜாக்கிரதையா கற்கள் மீது ஏறி வந்துடுங்க.
ஏன் சொல்றேனா இந்த பக்கம் சுவர் கட்ட பெரிய பெரிய குழி நான்குஇருக்கு. நீங்க பாட்டுக்கு உள்ளே போயிட போறீங்க. ஜாக்கிரதையா கற்கள் மீது ஏறி வந்துடுங்க.
கற்களை தாண்டி ஒரு ஜம்ப் அப்படியே இரண்டு பாதை பிரியும்.
லெப்ட்ல நல்ல காலம் மேலே உள்ள தெருவில் இல்லை என் வீடு. கற்களை தாண்டியதும் அப்படியே ரைட்ல திரும்பினா இந்த தெரு மட்டும் எப்பூடி?
திரும்ப ஒரு ரைட் இதோ எங்க தெரு வந்தாச்சு..
அதோ அந்த பெரிய கேட் போட்ட வீடு தான். அப்படியே ஓரமா வந்தீங்கன்ன ரீனா (எங்க dog) கத்திக் கொண்டு வரவேற்கும். சூ சொல்லிட்டு. நீங்க ஹாலுக்கு வந்தீங்கன்னா நாங்க இருப்போம். ஓ நீங்க டீயும், பப்ஸும் பேக்கரியிலேயே சாப்டாச்சா? சரி அடுத்த தடவை வெயில் காலமா பார்த்து வாங்க. என்ன குடிக்க தண்ணீர் இருக்குமா தெரியலை. வரும் போது ஒரு பாட்டில்
36 comments:
//ஓ நீங்க டீயும், பப்ஸும் பேக்கரியிலேயே சாப்டாச்சா?//
ggrrrrr
நீங்க வீட்டுக்கு வரச்சொல்ற மாதிரி தெரியலயே.
:))
வந்தாச்சு வந்தாச்சு....
இப்பவாவது காப்பி கிடைக்குமா? :)
எப்படி வர்றது ?
பேக்கரில பப்ஸ் மட்டும்தான் சாப்ட்டேன். உங்கவீட்டுக்கு ஏழுகடல்தாண்டி, ஏழுமலைதாண்டி வந்ததுல அதுவும் செரிச்சுப்போச்சு.. மொதல்ல சூடா டீ கொண்டாங்க. அப்றம் பேசுவோம் :-))))
என்ன கொடுமைங்க இது? எப்படி சமாளிக்கிறீங்க? இந்த நிலைமையை யாரும் கண்டுக்கவே மாட்டாங்களா?
சென்னை சென்றிருந்த போது அங்கு கோயம்பேடு ஞாபகம்வருது
சென்னை சென்றிருந்த போது அங்கு கோயம்பேடு ஞாபகம்வருது
ஊரிலே நல்ல மழை
உஸ்ஸ்ஸ்ஸ்.. சாப்பாடே குடுங்க அமுதா.. என்ன இது இப்டி இருக்கு வழியெல்லாம்??
அது சும்மா சொல்ற வார்த்தை...
நிஜமா அது உண்மையான வழி தமிழ் உதயம்
காப்பி என்ன பிரி்யாணி ரெடி ஆமினா..
எங்களை மாதிரி தான் வெங்கட்..
நிச்சயம் அமைதிச்சாரல்..
ஆமாம் சித்ரா, பசங்க நல்லதா ஷூ போட்டு போக முடியாம கஷ்டப்படுறாங்க..ஒரு மாதமா இது தான் நிலைமை.ட்ரைனேஜ் கட்டுறேன்னு இப்படி ஆக்கினாங்க முனிசிபல் ஆளுங்க..முன்னாடி சூப்பர் ரோடு அது பார்த்து தான் இந்த வீட்டிற்கே குடி வந்தோம்..ஓனர் ரொம்ப நல்லவங்க.அதான் சமாளி்க்க முடியுது..
ஆமாம் ஜலீலா சென்னை முழுவதும் இந்த நிலைமை தான்..
சுசி சாப்பாடு நிச்சயம் உண்டுப்பா...
ஆமாம் மழைதான், ஆனால் மழைக்கு முன்னாடி கு்ழி தோண்டினாங்க முனிசிபல் ஆளுங்க ட்ரைனேஜ்ற்கு..
வருகைக்கு நன்றி நசரேயன்.
என்னங்க... சான்ஸே இல்ல.... கலக்கிட்டீங்க... இதைவிட அழகா இந்த அகோர நிலையை அடித்துரைக்க முடியாது...
சில மாதங்களில் ஓட்டுப்போடப் பணம் கொடுக்க சில ரெண்டு கால் நாய்ங்களும் நரிகளும் அந்தப்பக்கம் வரதுக்கு அட்ரஸ் கேட்கும் அப்பவும் இதே மாதிரி ரூட் சொல்லுங்க... ஆனா அந்த நாய்ங்களுக்குப் புரிஞ்சிருந்தாதான் இந்தப் பிரச்னையே இல்லையே!! ச்சே... வேதனையா இருக்குங்க... :(
ஆமாம் பிரபு..என்னத்த சொல்றது.வேதனைய மறக்க சிரிப்புதான் மருந்து..குடிசை வீடு கூட இல்லாமல் தெருவில் வசிப்பவர்களை பார்த்து நாமா எவ்ளவோ பரவாயில்லை என்ற நிலைமை தான்.
நான் கஷ்டப்பட்டு வந்துடுவேன்...ஆனா டீ மட்டும் போதாது..தலப்பா கட்டு பிரியாணி போடறீங்களா அமுதா?
சிங்காரச்சென்னையா இது?? :)
தலப்பா ”கட்டு” அது டூப்ளிகேட் சார்..வாங்க தலப்பாகட்டி பிரியாணி ரெடி..
ஆமாம் விஜி...
அமுதா! உங்கபதிவைப் பார்த்து சிரிப்பதா வேதனைப் படுவதா என்று தெரியவில்லை.சென்னையின் பலபகுதிகள் இப்படித்தான் இருக்கிறதாமே? குழந்தைகள் வெளியே விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
நிலைமை சீரானதும் சொல்லுங்க! நம்ம பாசக்கார பைய பிள்ளைகளை கூட்டிகிட்டு விருந்துக்கு வரோம்(நாங்க நாப்பதே பேர்தான்!)
உங்க வீட்டு வரவேற்பும் விருந்தும் சூப்பர்.. ரொம்ப நன்றி.. போட்டோ பார்த்தே நிறைவா இருக்கு... அடுத்த வருசம் வரேன்.. இப்ப கிளம்பினாவே அப்பதான் வருவேன் போல இருக்கு...
ஹையையோ வசமா மாட்டிகிட்டேனே
வாங்க மோகன் ஜி..
நன்றி ரமேஷ்..
நன்றி தினேஷ்குமார்.
நல்ல எழுத்து அமுதா..
ஆனா கஷ்டமா இருக்குமே பா இப்படி ஒரு நிலைமை..:(
ஹா ஹா ஹா.. நைஸ்.. எப்படிக் கிண்டல் பண்ணியிருக்கீங்க..
மேல இருக்கற குழந்தை ரொம்ப அழகா இருக்கு..
வீட்டுக்கு வரதுல பிரசினை இல்ல.
போட் எங்கேங்க?
சென்னையில எல்லா தெருக்களும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கு ரெண்டு மூனு நாளா... எப்ப மாறுமோ? :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுலகில் பாபு..அது என் தம்பி மகன் விஷால்..
ஆமாம் தஞ்சாவூரான். மேக்ஸிமம் இப்படி தான் இருக்கு..
அச்சச்சோ, இது என்னங்க, இத்தனை குளங்கள், தெருவில். “இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்” எத்தனை பேர்? சென்னை முழுவதுமே இப்படித்தான் இருக்கிறதா, சோகம். ஆனால் அந்த சோகத்தையும் அழகாய் வர்ணித்து இருக்கீங்க..
சமீபத்தில் பார்த்த மிகவும் வித்தியாசமான கண்டெண்ட் கொண்ட பதிவென இதைச் சொல்வேன். :-)
ஆமா, இப்படி கஷ்டப்பட்டு வந்தா தண்ணீர் கூட தரமாட்டீங்களா? என்ன கொடுமை இது?
நன்றி வெங்கட் நாகராஜ்..
நன்றி ஆதி மூல கிருஷ்ணன்..இது நெல்லை உபசரிப்பு சார்..
சென்னையின் கோர நிலைமையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்:(
எனக்கு டீ வேண்டாம்... காப்பி கிடைக்குமா:)
ரவிச்சந்திரன் ஏர்போர்ட்டிலிருந்து 20 நிமிடம் தான் எங்கள் வீடு.குடும்பத்துடன் வந்து சாப்பாடே சாப்பிடலாம் சார்.
Post a Comment