1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அமுதா கிருஷ்ணா..
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மையான பெயர் அமுதா.ஏற்கனவே பதிவுலகில் ஒரு அமுதா இருந்ததால் அமுதா கிருஷ்ணாவானேன். கிருஷ்ணமூர்த்தி என்ற என் கணவரின் பெயரில் கிருஷ்ணாவை மட்டும் எடுத்துக் கொண்டேன். அப்பாவி அமுதா,அடாவடி அமுதா,அழுமூஞ்சி அமுதா,அக்கடா அமுதா,அடிதடி அமுதா இப்படி ஒரு பெயர் வைக்கலாம் என்று தான் யோசித்தேன்.
.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....மார்ச் மாதம் 2008-ல் காலடி எடுத்து வைத்து ஒரு மாதம் மட்டுமே எழுதினேன்.நெட் கனெக்ஷன் வீட்டில் இல்லாததால் அப்புறம் ஒரு வருடம் கழித்து 2009- ஏப்ரலில் இருந்து திரும்ப எழுத ஆரம்பித்தேன். எழுத சொன்னது எனக்கு பதிவுலக்த்தை தெரியபடுத்தியது நண்பர் திரு.முத்துராமன் .கிழக்கு பதிப்பகத்தில் அப்போது சப் எடிட்டராக வேலை செய்து வந்தார். தற்சமயம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்துக் கொண்டு உள்ளார்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முடிந்த போது மற்ற் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு செல்கிறேன்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
வலைப்பதிவு நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. சொந்த கதை,சோக கதை, சந்தோஷ கதை என்று எழுதி வந்தேன். ஏப்ரல் 2010 தேவதை இதழில் என் ப்ளாக் பற்றியும் , என்னுடைய சில பதிவுகளும் வெளிவந்தன. அந்த இதழில் வெளிவந்த பதிவுகள் அமுதா இது உனக்கு தேவையா?, முன் மாதிரி அம்மா, ஆட்டோகிராஃப் இதை வீட்டில் அனைவரும் படித்து விட்டனர். டோட்டல் டேமேஜ் ஆனேன் வீட்டில்.ஙே என்று முழித்தேன்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுதுபோக்கு மட்டுமே.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மூன்று. இங்கிலிஃபிஷ் ப்ளாக், அம்மாக்களின் வலைப்பூக்கள் ஆனால் இதில் எல்லாம் எழுதி ஒரு வருடமாகிறது.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை நன்கு எழுதும் பல பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது வந்து தொலைக்கிறது. கோபம் பெண்கள் என்றால் இப்படி இருக்க கூடாது, இப்படி தான் இருக்க வேண்டும் என்று அலட்டும் சிலரின் பதிவுகளை படிக்கும் போது வருகிறது. அவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் வாழ முடிகிறது. ஒரு பொதுவான அளவுகோல் வைத்து அதன்படி நடப்பது தான் புத்திசாலிதனம் போல் எழுதும் சிலரின் பதிவுகள் கோபத்தினை ஏற்படுத்தும். ஆனால் அது அவர்களின் அறியாமை என்றும் தோணும்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
சந்தோஷ்...என் முதல் பதிவிற்கு வந்த ஒரே பின்னூட்ட்ம் இவருடையது.அடுத்த பதிவிற்கும் பின்னூட்டம் எழுதினார். ஒரு வருடம் நான் எழுதாததால் அப்புறம் இவரின் பின்னூட்டம் வரவில்லை.சில மாற்றங்கள் என் ப்ளாக்கில் செய்ய சொன்னார்.நன்றி சந்தோஷ்..
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
இதுவே போதுமே. இன்னும் என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.
இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்
1.ஜோக்கிரி- R.Gopi
2.கொல்லான்
3.ஸ்வர்ணரேகா
4.சந்தோஷ்பக்கங்கள்- சந்தோஷ்
<