பணம் என்னடா பணம், பணம்: கிங்ஃபிஷரின் பைலட்டான 28 வயதான மனிதர் அவரின் திருவான்மியூர் ஃப்ளாட்டில் இறந்து கிடந்தாராம். காரணம் சொந்த பந்தங்கள் யாரும் இல்லாமல் தனிமைதானாம். அம்மா கிடையாதாம். அப்பாவும் பெரிய பிசினஸ் மேன். போன மாதம் 22ஆம் தேதி இறந்து கிடந்த்வரை 4ஆம் தேதி இந்த மாதம் வாடை வந்ததால் வீட்டை உடைத்து பார்த்து உள்ளார்கள். என்ன கொடுமை இது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சம்மட்டியால் அடித்த மாதிரி இருந்தது.
பாவம் இந்த குழந்தைகள்: பெங்களூருவில் ஐ.டியில் பணி செய்யும் ஒரு தம்பதி தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்மணியை நியமித்து உள்ளார்கள். ஒரு நாள் குழந்தையின் தாய் காலை 11மணியளவில் உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்கு திரும்பி உள்ளார். வேலை செய்யும் பெண்மணி டிவி பார்த்துக் கொண்டு இருக்க குழந்தையை காணோம். எங்கே என்று விசாரித்ததில் குழந்தையை அந்த வேலைபார்க்கும் பெண் தினமும் 100ரூபாய்க்கு பிச்சைக்காரருக்கு வாடகை விட்டு சம்பாதித்து இருக்கிறாள் ஆறு மாதங்களாக.......போலீசில் சொல்லாமல் குழந்தையினை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்கள்.
செகந்தராபாத் ஆர்மி காலனியில் வீட்டு வேலை பார்க்கும் பெண் தான் பார்த்து கொண்ட குழந்தையிடம் இருந்து மாதம் இரண்டு முறை ரத்தம் எடுத்து விற்று இருக்கிறாள்.
கோவில்பட்டியில் சண்முகா என்ற தியேட்டரில் எந்த படமானாலும் பெண்களுக்கு 10 ரூபாய் டிக்கெட். ஆண்களுக்கு 50 ரூபாய். பையனுக்கு 30 ரூபாய். கார்க்கி உங்களுக்கு ஸ்பெஷல் நியூஸ் விஜய் படம் என்றால் அந்த தியேட்டரில் பெண்களுக்கு நோ பைசா..ஃப்ரீயாம்பா......
6 comments:
ரொம்ப கொடுமைங்க.. பைலட் மரணத்துக்கு வேலை இழப்பு செய்திதான் காரணம்னு சொல்றாங்க.
மேடம்... இதுக்கு என்ன அர்த்தமாம்? விஜய் படம்ன்னா பெண்கள் வருவதே இல்லை என்பதாலா? அல்லது அவர்களை மகிழ்விக்க வேண்டுமென்பதாலா?
தகவலுக்கு நன்றி
உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.
குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பில் தனியாக விட்டுச் செல்வது பயம்தான் போலிருக்கிறது.
நன்றி.
வாவ் அருமையான தகவல்கள்
Post a Comment