Tuesday, November 03, 2009

Aunty அவ்வா!!!!

நான் சென்னைக்கு கல்யாணத்திற்கு பிறகு வந்த போது ரயில்வே காலனியில் பக்கத்து வீட்டில் இருந்த ஜான்சன்(ட்ரைன் கார்ட்) என்பவரும், அவரின் மனைவி எமிலி(தனியார் பள்ளி தலைமை ஆசிரியை) அவர் மகன் ப்ரேமும் வசித்து வந்தார்கள். எமிலி aunty உதவும் குணம் கொண்ட ஓரு நல்ல மனிஷி. என் பையன்கள் இரண்டு பேரும் பிறந்த போதும் அதற்கு பிறகும் அவர்கள் செய்த உதவிகளுக்கு எதுவும் ஈடாகாது. என் பையன்களை அந்த ஜான்சன் அங்கிள் அடிக்கடி தாம்பரம் மீனம்பாக்கம் வரை மாலை வேளைகளில் ட்ரையினில் அழைத்து சென்று வருவார். ஏரோப்ளேன் பார்த்த மாதிரியும் ஆச்சு, ட்ரைனில் போய் வந்த மாதிரியும் ஆச்சு. ராத்திரியில் நிம்மதியாக பசங்கள் தூங்குவார்கள்.


என் பையன்கள் இருவரும் அவர்களை aunty அவ்வா என்றே இன்றும் அழைப்பார்கள். யோசித்து பார்த்தால் யார் அப்படி சொல்ல சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், நான் சொல்லும் Aunty -யை ஒரு பெயர் போல பாவித்து அவ்வா(பாட்டி) என்று சேர்த்து அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வரும் அவர்கள் சொந்தக்காரர்கள் வித்தியாசமாய் பார்ப்பார்கள் முதலில் பிறகு அவர்களுக்கு பழகிவிட்டது. அவர்கள் அனைவரும் என் பையன்கள் இருவரையும் அடிக்கடி விசார்ப்பார்கள்.

என் அம்மாவை விஜி அவ்வா என்றும் அவர்களை aunty அவ்வா என்றும் எங்களுக்கு இரண்டு அவ்வா என்று தான் என் பையன்கள் சொல்வார்கள். இப்படி சிலர் சொந்தமாக இல்லாவிட்டாலும் நமக்கு சொந்தமாகி விடுவார்கள். நிறைய பேருக்கு இப்படி வித்தியாச பெயரில் உறவுகள் இருக்கலாம். பகிர்ந்துக் கொள்ளலாமே.

6 comments:

லதானந்த் said...

நல்ல பதிவு! கதை கிதை எழுதலாமே?

அமுதா கிருஷ்ணா said...

கதை சரி அது என்ன கிதை...

Admin said...

நன்றாக எழுதியிருக்கிங்க

ஸ்வர்ணரேக்கா said...

அமுதா...

உங்க template header நல்லா இருக்கு...

இதே போன்று வித்தியாச பெயர்கள் எங்கள் வீட்டிலும் உண்டு..

http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/04/blog-post.html

இங்கே வாருங்களேன்...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சந்ரு, நன்றி ஸ்வர்ணரேக்கா...

அன்புடன் மலிக்கா said...

நல்ல இடுகை தொடருங்கள்..வாழ்த்துக்கள்


http://niroodai.blogspot.com/