Thursday, October 08, 2009

வெரைட்டி

நோபல் பரிசு : எழுத்தாளர் சுஜாதா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவர் மட்டும் இருந்தால் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எதற்கு நோபல் பரிசு வாங்கினார் என்று மிக எளிமையாக விளக்கி இருப்பார். நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை.கொஞ்சம் மெனக்கெட்டதில் எனக்கு புரிஞ்சது இன்னானா...

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரிபோசோம்கள் இருக்கிறது.அவை புரோட்டினை உற்பத்தி செய்யும் ஃபாக்டரி ஆகும்.இந்த ரிபோசோமில் இருக்கும் ஆயிரக்கணக்கான அணுக்களின் ஸ்டரக்சரையும்,அதன் அமைப்பையும் ஆராய்ச்சி செய்ததில் திரு.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் நோய் தாக்கினால் எடுத்துக் கொள்ளும் ஆண்டிபயாடிக், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருக்கும் ரிபோசோமை கொல்லும். எனவே பாக்டீரியா அழிகிறது. பென்சிலின், அமாக்சலின் போன்றவை ஆண்டிபயாடிக் ஆகும்.
இன்னும் நிறைய ஆண்டிபயாடிக்கினை கண்டுபிடிக்க உதவுமாம் திரு.ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி. அப்பாடா.....


தீபாவளி: தி.நகர் கடைகளில் தீபாவளிக்கு கூட்டம் அள்ளுகிறது. போத்தீஸில் நல்ல கூட்டம்.
புடவை எடுக்க ஏன் ஆண்களும் வருகிறார்கள் என்று புரியவில்லை. அந்த கூட்டத்தில்
மனைவிகளுடன் சேர்ந்து நின்று கொண்டு ஏங்க இந்த கலர் எடுக்கவா, அதை எடுக்கவா என்று பெரிய டிஸ்கஸன் வேறு...மற்ற பெண்களுக்கும் கஷ்டம் கொடுத்துக் கொண்டு.
சில பெண்கள் கட்டாயம் ஆண்கள் தங்களுடன் கடைகளுக்கு வர வேண்டும் என்று இருக்கிறார்கள். எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

பெரிய காலேஜ்: போன வாரம் என் மகனுடன் அவன் பெரியப்பா வீட்டிற்கு (வளசரவாக்கம்) போய் இருந்தேன். கிளம்பும் போது அவனுடைய பெரியப்பா மகன் நாளைக்கு லீவு போடுடா,
இப்ப வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொன்னான். இவனோ போங்கண்ணா காலேஜுக்கு
போகணும் என்றான்.என்னடா ரொம்ப அலட்டிகிறே,,பெரிய இந்த காலேஜ் என்று கூறினான்.
உடனே என் பையன் ஆமாண்ணா எங்கள் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உண்மையிலேயே பெரிய காலேஜ் தான் 365 ஏக்கர், ஏசியாவிலேயே இரண்டாவது பெரிய scrub forest என்று சொல்லவும் சரிடா தம்பி ஒத்துக்கிறேன் பெரிய காலேஜ் தான் என்று கூறிவிட்டான்.

11 comments:

குப்பன்.யாஹூ said...

nice post, yes we miss sujathaa

கார்க்கிபவா said...

ஆமாம்.. பெரிய காலேஜ்.. நானும் பார்த்திருக்கேன் :))

அ. நம்பி said...

//எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.//

உங்களுக்கு மிக நல்ல உள்ளம்; உங்கள் கணவர் கொடுத்துவைத்தவர்...!

ஆயில்யன் said...

//எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.//

ஆண்கள்- அவுங்களுக்கும் கூடத்தான் :)))

தமிழ் அமுதன் said...

///எனக்கு மனைவிகளுடன் துணிக்கடைகளுக்கு துணைக்கு வரும் ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.///


ஆமா ஒரு மனைவியுடன் போனாலே தாவு தீருது ..;;)

''மனைவிகளுடன்'' போனா என்ன ஆகும் .;;)))

அமுதா கிருஷ்ணா said...

நன்றி குப்பன்...
ஹே நிஜமா பெரிய்ய்ய்ய்ய காலெஜ் தான் கார்க்கி....
நன்றி நம்பி...
நன்றி ஆயில்யன்...
ஜீவன் மனைவிகள்--ஆண்கள் என்றுதானே எழுதி உள்ளேன்..ஆண் என்று எழுதவில்லையே....

துபாய் ராஜா said...

அமுதாக்கா, வெரைட்டி நல்ல டேஸ்ட்.

நோபல் பரிசு வாங்கியுள்ள தமிழர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆராய்ச்சி பற்றிய தகவல் அருமை.

----------------------

நான் மட்டும் தனியா போனா எங்க வீட்டம்மாட்ட இல்லாத கலரா,டிசைனா புடவை எடுத்திடுவேன். அவங்க வந்தா அவ்வளவுதான்.. கடைக்காரனை நுங்கு எடுத்து நோகடிச்சிடுவாங்க....

--------------------

தம்பி சொன்னது மாதிரி MCC பெரிய காலேஜ்தான்... :))

Romeoboy said...

புடவை எடுக்க போற புருஷன்மாறு எல்லாம் மனைவி பின்னாடி நின்னுக்கிட்டு பக்கத்துல இருக்குற பிகர் பார்த்துட்டு இருப்பாங்க.

தேவன் மாயம் said...

நோபல் பரிசு விளக்கம் நல்லா இருக்கு!!!

நசரேயன் said...

//புடவை எடுக்க ஏன் ஆண்களும் வருகிறார்கள் என்று புரியவில்லை.//

௬ட வந்தாலாவது வருகிற செலவுகளை கட்டுப் படுத்தலாம், இல்லன மஞ்ச கடுதாசி கொடுக்கவரும்

Anonymous said...

sdsss