Tuesday, September 29, 2009

நான் சந்தித்த பதிவர்கள்!!!

லக்கிலுக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் போன் செய்து பதிவர் சந்திப்பிற்கு யாராவது பெண் பதிவர்கள் வருகிறார்களா என்று கேட்டேன். வரலாம்,நீங்க வாங்க மேடம் என்று கூறினார்.சரி நடக்கிறது நடக்கட்டும் என்று 3.30க்கு எல்லாம் தாம்பரத்திலிருந்து டி.வியே கதியென்று என்று இருந்த என்னருமை கணவர்+மகன்களுக்கு டாட்டா சொல்லிட்டு குடை ஒன்றினை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். காந்தி சிலை அருகே சிக்னலில் பஸ் நிற்கும் போது பஸ்ஸிலிருந்து குதித்து 5 மணிக்கெல்லாம் காந்தி சிலை பின்னாடி நின்று கொண்டு இருந்த சில பதிவர்களுக்கு பக்கமாய் போய் நின்று கொண்டேன். லக்கிலுக் வாங்க வாங்க என்று வரவேற்பு கொடுத்தார்.கேபிள் சங்கர், முரளிகண்ணன்,நர்சிம்,அதிஷாவும் ஒரு பெரும் புன்னகையுடன் வரவேற்றனர். யாராவது பெண்கள் அந்த பக்கமாய் வந்தால் பதிவராக இருக்குமோ என்று பார்த்து கொண்டு இருந்தேன். யாரும் பெண் பதிவர்கள் வரவேயில்லை. சரி என்று லக்கிலுக் கொடுத்த புதிய தலைமுறை காம்ப்ளிமெண்டரி புக்கை படித்துக் கொண்டு இருந்தேன்.

நான் எதிர்பார்த்த ஆதி,கார்க்கி இன்னும் வரவில்லை. அதியமான் சார் என்னிடம் பழைய பதிவர் சந்திப்பினை பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம் சகஜ நிலைமைக்கு வந்தேன். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்று நான் நினைத்த நர்சிம் தான் அப்படி இல்லை என்ற எண்ணத்தினை எனக்கு ஏற்படுதினார். ஏனோ அவரினை சந்திக்கும் வரை அப்படிதான் நினைத்து இருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யும் படலம் நடந்தது. மழையும் தன்னை அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் 200 பேராவது தஞ்சம் செய்தோம். நான் குடை வைத்து இருந்ததால் குடைக்குள் மழை இல்லை. குடை எடுத்து வந்து டீச்சர் என்று நிரூபித்து விட்டீர்கள் என்று நர்சிம் கலாய்த்தார்.

வளர்மதி என்னுடன் குடைக்குள் நின்று கொண்டார். வீட்டில் தூங்கி கொண்டு இருந்தேன். என்னை எழுப்பி குளிக்க வைத்து, வேறு உடை அணியவைத்து இங்கு கொண்டு வந்து என்னை திரும்ப குளிக்க வைக்கிறீங்களே என்று புலம்பி கொண்டு இருந்தார். பொன் வாசுதேவன் போங்கடா போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா, ஏண்டா இப்படி பதிவு, கூட்டம் என்று அலைறீங்கனு சொல்லிட்டு இருந்தார். மரத்தடியிலேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் நான் மிகவும் எதிர்பார்த்த ஆதி. மழையும் கொஞ்சம் விட்டது. நான் அவர் அருகில் சென்று பேசினேன். நிறைய பதிவர்களின் பதிவுகளை படிக்க நேரமில்லை என்றும் ஆனால், புதியதாய் ஒன்று படிக்க ஆரம்பித்து பிடித்தால் தொடர்ந்து படிப்பதாயும் சொன்னார். கார்க்கி வரவில்லையா என்று கேட்டேன். வந்து உள்ளார், ஆனால் வரவில்லை என்று என்று ஒரு சின்ன டிபன்பாக்ஸ்+சார்ஜர் கையில் வைத்துக் கொண்டு சொன்னார். மழை என்பதால் பக்கத்தில் ஒரு டீக்கடையில்(புட்டிக்கடையா) இருப்பதாய் கூறினார். அந்த டிபன்பாக்ஸில் ரமா கொடுத்து அனுப்பிய சுண்டலா ஆதி????. சரி நான் புறப்படுவதாய் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். நர்சிம், ஆதி எப்படி போவீர்கள் என்று என்னை கேட்டதிற்கு நானாக பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அது தவறு என்று அப்புறம் உணர்ந்தேன்.

நடக்கிறேன் நடக்கிறேன் நடந்து கொண்டே இருந்தேன். கண்ணகி சிலை வரை என்னுடைய பஸ்ஸிற்கு நடக்க வேண்டி இருந்தது. மழை சுத்தமாய் நின்று விட்டிருந்தது. ஒரு பையன் 20 to 25 வயது இருக்கும் என்னுடன் ஏதோ பேச முயன்று கூடவே நடந்தான்.அவன் போனான் ஒரு 45 வயதுள்ள ஒருவர் என்னுடன் நடக்க ஆரம்பித்தான். வாங்களேன் உள் ரோடில் நடக்கலாம் என்று கேட்டான். கொஞ்சம் நின்று நீ முன்னாடி போறீயா, நான் மட்டும் நடந்துக் கொள்கிறேன் என்று கொஞ்சம் சத்தமாய் சொல்லவும் என் முன்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான். ட்ராபிக் இருந்தது. ஆனால், பிளாட்பார்மில் நிறைய ஆட்கள் இல்லை. நான் நடையை வேகப் படுத்தினேன். என் பையன்களுடன் வந்திருந்தால் ஏகாந்தமாய் நடந்து இருக்கலாம். அருமையான மாலை மழையுடன், சாரலுடன். ஆனால்,ஒரு திகிலுடன் பஸ் நிறுத்தம் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன். மழை என்பதால் பீச்சில் கூட்டம் இல்லை. எனவே, அடுத்த சந்திப்பினை ஒரு நல்ல இடமாய் வைக்கலாமே. பதிவர்களுக்கு இந்த வேண்டுகோள். பதிவர்கள் சிலர் புகைப்பிடிப்பதினை பார்த்தேன். வேண்டாமே. இத்தனை நாள் புகைத்தது போதுமே. நீங்க எல்லோரும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஒரு சகோதரியாய், நண்பியாய் எனக்கு ஒரு ஆசை. 50 வயதிலேயே வைகுண்டத்திற்கு டிக்கெட் வாங்க ஏன் ஆசை படுகிறீர்கள்?? கட்டாயம் விட்டு விடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாய் விட முடியாது. மனசு வைத்தால் உடனே விட முடியும். 50 வயதிலேயே இந்த நாசமா போன சிகெரெட்டால் குடும்பத்தினை தவிக்க விட்டுட்டு போன நிறைய பேரை எனக்கு தெரியும். பதிவர்கள் வாழ்க வளமுடன்....

31 comments:

உண்மைத்தமிழன் said...

[[[பதிவர்களுக்கு இந்த வேண்டுகோள். பதிவர்கள் சிலர் புகைப்பிடிப்பதினை பார்த்தேன். வேண்டாமே. இத்தனை நாள் புகைத்தது போதுமே. நீங்க எல்லோரும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஒரு சகோதரியாய், நண்பியாய் எனக்கு ஒரு ஆசை. 50 வயதிலேயே வைகுண்டத்திற்கு டிக்கெட் வாங்க ஏன் ஆசை படுகிறீர்கள்?? கட்டாயம் விட்டு விடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாய்விட முடியாது. மனசு வைத்தால் உடனே விட முடியும். 50 வயதிலேயே இந்த நாசமா போன சிகெரெட்டால் குடும்பத்தினை தவிக்க விட்டுட்டு போன நிறைய பேரை எனக்கு தெரியும். பதிவர்கள் வாழ்க வளமுடன்....]]]

நானெல்லாம் இதைச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டேன்..

சகோதரியே.. நீங்கள் மனமுவந்து சொல்லியிருக்கும் இந்த வார்த்தைகளையாவது அந்த 'ஸ்டைல் மன்னர்கள்' படித்து முடித்து புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

திருந்துங்கப்பா..!

மணிஜி said...

விட முயற்சிக்கிறேன்..நன்றி

துளசி கோபால் said...

அமுதா,

நான் அஞ்சரைக்குக் காந்தி சிலை எதிர்ப்பக்கமா பீச் ரோடில் இருந்தேன். மழை அடிச்சு ஆடுனதில் மீட்டிங் கேன்ஸலாகி இருக்குமுன்னு நினைச்சு....உங்களையெல்லாம் மிஸ் பண்ணிட்டேம்ப்பா(-:

அமுதா கிருஷ்ணா said...

நன்றி உண்மை தமிழன்..அவ்வப்போது குடிக்கலாம்..(தண்ணீர்) ஆனால், சிகரெட் தான் மிக ஆபத்து...முயற்சிக்கு நன்றி தண்டோரா..துளசி கோபால் யாருடைய போன் நம்பருக்காவது போன் செய்து இருக்கலாம்பா...

இரும்புத்திரை said...

அக்கா நீங்க திருநெல்வேலியா எந்த ஊர் ?

Beski said...

ஆதி டிபன் பாக்ஸ்க்குள்ள என்ன இருந்ததுன்னு உங்களுக்கும் தெரியாதா? உள்ளே பொங்கல் இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
---
நல்லா எழுதியிருக்கீங்க, நானும் சந்திப்பு பற்றி எழுதியிருக்கிறேன்.
---
//கொஞ்சம் கொஞ்சமாய் விட முடியாது. மனசு வைத்தால் உடனே விட முடியும். //
இது புதுசா இருக்கு, ட்ரை பண்றேன். நன்றி, உ.த. அண்ணனுக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

அரவிந்த் நான் பக்கா திருநெல்வேலி டவுண் ...லாலாசத்திரமுக்கு...
அப்பொழுதெல்லாம் வீட்டை சுற்றிலும் அல்வா கடைகள்...

Unknown said...

நான் முதன் முதலாக கலந்துகொண்ட சந்திப்பு.அன்றுதான் நீங்களும் உங்கள் பதிவுகளும் அறிமுகம்.
என் நினைப்பில் நீங்கள் யாரோ பதிவரின் மனைவி என்ற நினைப்பே.

மழையினால் அன்று யாருடனும் சரியாகப்பேசவில்லை.கோவர்த்தனகிரி
மரத்தின் கிழ் நின்று நனைந்து 7.20க்கு வீடு திரும்பினேன்.மழைக்குப்
பிறகு வந்த பதிவர்களையும் சந்திக்கவில்லை.

//அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன்.//

கொடுமை. காந்தி சொன்ன வாக்கியம் ஞாபகம் வருகிறது.

யுவகிருஷ்ணா said...

சிகரெட் பிடிக்காததால் பி.பி. வந்து 50 வயதுக்குள் செத்தவர்களும் இருக்கிறார்கள் மேடம் :-)

எனிவே, சிகரெட் ஒரு சமூகக்கேடு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன்.//

கொஞ்ச திகில் அனுபவம்தான்

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ரவிசங்கர்..அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம்...
யுவகிருஷ்ணா.. சிகரெட் பிடிக்காததால் பி.பி வந்து??..தவறு...சிகரெட் பிடிக்காமல் கூட 50 வயதிற்குள் இறந்து இருக்கிறார்கள்..என்று சொல்லி இருக்கணும்...பி.பி மட்டும் வராது..கேன்சர் என்னும் அரக்கன்..குடிப்பவர்களுக்கு மட்டுமா கேடு..சுற்றி இருப்பவர்களுக்கும் தானே.....

கிளியனூர் இஸ்மத் said...

பதிவர்களின் சந்திப்பை இப்படி பொது இடங்களில் வைத்து அவதிப்படுவதைவிட வீடுகளில் வைக்கலாமே....உங்க பதிவு நல்ல அனுபவம்...வாழ்த்துக்கள்.!

"உழவன்" "Uzhavan" said...

பதிவர் சந்திப்புக்கெல்லாம் சென்று கலக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வர்ஷிணி அம்மா, இஸ்மத்,உழவன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒரு திகிலுடன் பஸ் நிறுத்தம் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அப்பாடா என்று இருந்தது. பீச் ரோட்டில் அந்த நேரத்தில் தனியே நடப்பது எந்த வயதுள்ள ஒரு பெண்ணிற்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன்.//

:(
மழைக்கு கூரையிருக்கிற இடமாக அடுத்தமுறை பார்க்க சொல்லுங்க..

இரும்புத்திரை said...

நான் பாளையங்கோட்டை அக்கா முன்னாடியே கேக்கணும் நினைச்சேன்..இன்னைக்குதான் முடிஞ்சது

இரும்புத்திரை said...

இதுல பிடிச்சதே டிஸ்கி தான்..

இப்படி போட்டதுக்கு உங்களுக்கு உளியின் ஓசை டி.வி.டி பார்சல்

இரும்புத்திரை said...
This comment has been removed by a blog administrator.
Cable சங்கர் said...

பதிவு நன்றாகவே இருக்கிறது. மேடம்.. மனதில் உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறீர்கள்..:)

ப்ரியமுடன் வசந்த் said...

ரெளத்திரம் மட்டும் பழகியவரோ தாங்கள்...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

மேவி... said...

நல்ல சொல்லி இருக்கீங்க மேடம்.......


மார்க்கெட்டிங் வேலை ல இருக்கிறவங்களுக்கு கூட நீங்க சொன்ன வியாதி வரும் மேடம்...... வாகங்களின் புகை தான் காரணம்......

மேவி... said...

என்னை பற்றி நீங்க எழுதவில்லையே ......

அப்ப நான் பிரபலம் இல்லையா ?????

மேவி... said...

"தண்டோரா ...... said...
விட முயற்சிக்கிறேன்..நன்றி"


உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

கார்க்கிபவா said...

உங்கள பார்க்காம மிஸ் பண்ணிட்டேன். மழையில் மாட்டிக் கொண்டதால் சாந்தோமிலே ஒதுங்கிவிட்டேன். நீங்கள் வந்தது ஆதி வந்து சொன்னபின் தான் தெரியும். இல்லையேல், எப்படியாவ்து வந்திருப்பேன்.

அடுத்த முறை நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

நர்சிம் மீது இன்னமும் எனக்கு சந்தேகம். திமிர் பிடித்தவ்ரா என்று... :))

அப்புரம் மேடம், நான் சிகரெட் புகைப்பதில்லை. :)))

Vidhoosh said...

உண்மையில் நானும் வரவேண்டும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், பீச் - அதுவும் மரினா - என்றதும் ஒதுங்கி விட்டேன்.

உங்களைப் போன்ற திகில் அனுபவம் தான் காரணம். :(

அடுத்த முறை சிட்டிக்குள் ஏதும் அடையார் children's park போன்ற இடத்தில் மதிய நேரங்களில் வைக்கலாமே. நிழல் நிறைந்த இடம் அது. ஓரளவு பாதுகாப்பான இடமும் கூட. பேருந்து நிலையமும் அருகிலேயே இருக்கிறது.

மதியம் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் முடித்துக் கொண்டால், நம் போன்ற பெண் பதிவர்களுக்கு சுலபமாக இருக்கும்.

--வித்யா

அமுதா கிருஷ்ணா said...

நன்றி முத்துலெட்சுமி..ஆமாம் கூரை உள்ள இடம் வேண்டும்..

நன்றி அரவிந்த் : பாளையில் தான் படிப்பு எல்லாம்..எங்க வீட்டில் DVD PLAYER வொர்க் செய்யலை..தாராளமாக
உளியின் ஓசை அனுப்பவும் ஓசை கேட்காது.

ஹை..கேபிள் சார் எனக்கு பின்னோட்டமா...உங்க பதிவில் என் போட்டோ நல்லாவேயில்லை..வேறு போட்டோ அனுப்பட்டுமா.
so,பதிவர்கள் சந்திப்பில் பயன் இருக்கு..

பிரியமுடன் வசந்த பிரியமுடன் இருப்பவர்களுக்கு பதில் பிரியம் மட்டுமே.no ரெளத்திரம்..

sorry..பெருங்களத்தூர் டம்பி மேவீ....மிஸ் ஆகிடுச்சு..

கார்க்கி...என்னை பார்க்க பயந்துட்டு தான் நீங்க வரலைன்னு ஆதி சொன்னாரே.....

//அப்புரம் மேடம், நான் சிகரெட் புகைப்பதில்லை//good boy....புட்டி மட்டும் தான் போல...

நர்சிம் மீது இன்னமும் எனக்கு சந்தேகம். திமிர் பிடித்தவ்ரா என்று... :))

ஓ..நர்சிம்மிடமே அடுத்த முறை கேட்டு விடவேண்டியது தான்...

வால்பையன் said...

கடைசி பாரா உறுத்தலா இருக்கு!
நீங்க நம்ம பதிவர்கள் யாரையாவது அழைச்சிட்டு போயிருக்கலாம்!

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த முறை எங்கு கூட்டம் என்று நாம் கூட ஐடியா தரலாம் வித்யா...

பதிவர்களுக்கு தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்தேன் வால்...அதுவும் இல்லாமல் அன்று மழை என்பதால் ப்ளாட்பார்மில் கூட்டம் இல்லை...

Admin said...

அப்போ சந்திப்பிலே கலக்கி இருக்கிறிங்க என்று சொல்லுங்க..

Thamira said...

கார்க்கி : அப்புறம் மேடம், நான் சிகரெட் புகைப்பதில்லை.//

இதில் மட்டும்ங்கிற வார்த்தை மிஸ்ஸாகிவிட்டது.

அப்புறம் டிபன் பாக்ஸில் அப்துல்லாவுக்காக இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரைப்பொங்கல் இருந்தது. அவ்வளவுதான், வெடிகுண்டெல்லாம் இல்லை.!

Beski said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அப்புறம் டிபன் பாக்ஸில் அப்துல்லாவுக்காக இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரைப்பொங்கல் இருந்தது. அவ்வளவுதான், வெடிகுண்டெல்லாம் இல்லை.!//
என்னடா இதுக்கு இன்னும் பதில் சொல்லலையே? நம்ம எழுதினத பாக்கலையோன்னு நினைச்சேன்.
ரைட்டு.