ஏனென்றால், நான் மட்டும் தான் (யூத்!) நன்கு அனுபவித்தேன்.மழை,குளிர்,பனி என்று எங்கும் அமைதி. கேதார்நாத் ரிசிகேஷிலிருந்து 15 மணி நேரம் மினி பஸ்ஸில் பயணம்.ஏப்ரல் முதல் நவம்பர் முதல் வாரம் மட்டுமே இங்கு போக முடியும். அதன் பின்னால் முழு ஊரையும் பனி மூடிவிடும்.
போகும் வழியெல்லாம் இப்படி ஒரு பக்கம் அதாள பாதாளத்தில் மந்தாகினி (நதி) மிக கோவமாக ஓடிக் கொண்டு இருந்தாள். ஒரு பக்கம் மலை, ஆங்காங்கே அருவி என இயற்கை விருந்து.
கெளரிகுண்ட் என்ற இடத்தில் இருக்கும் வெண்ணீர் ஊற்றில் குளிருக்கு இதமாக ஒரு குளியல். எங்காவது குழாய் வழியே தண்ணீர் வருகிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். அதிசயமாய் இருந்தது. எப்படி இப்படி ஒரு வெந்நீர் இங்கு என்று.அங்கிருந்து காலை 6 மணிக்கு கேதார்நாத் பயணம்.(14 km)
டோலி,குதிரை அல்லது
நேபாளி பசங்க நாலு பேர் நம்மை தூக்கி சுமக்கிறார்கள். 19,20 வயது பசங்க. செம குளிர். மழை வேறு பெய்து கொண்டு இருந்தது.குடையை வைத்துக் கொண்டு டோலியில் உட்கார்ந்து கொண்டேன் அவர்கள் ஸ்கின் ஸ்ட்ராங் போல தங்களை பாதுகாத்து கொள்ள எதுவும் வைத்து கொள்ளவில்லை நல்ல ஷீக்களை தவிர .நம்மை அருமையாக கவனித்து கொள்கிறார்கள்.

நடைபயணம். நான் டோலியில் போனேன். நம்மை எடை போட்டு அதற்கு ஏற்றார் போல பணம் வாங்குகிறார்கள்.எனக்கு 2500 ரூபாய் வாங்கினார்கள். என்னை தூக்க நான் நீ என்று ஒரே போட்டி( 50 kg tajmahal!! நிஜமா)
நேபாளி பசங்க நாலு பேர் நம்மை தூக்கி சுமக்கிறார்கள். 19,20 வயது பசங்க. செம குளிர். மழை வேறு பெய்து கொண்டு இருந்தது.குடையை வைத்துக் கொண்டு டோலியில் உட்கார்ந்து கொண்டேன் அவர்கள் ஸ்கின் ஸ்ட்ராங் போல தங்களை பாதுகாத்து கொள்ள எதுவும் வைத்து கொள்ளவில்லை நல்ல ஷீக்களை தவிர .நம்மை அருமையாக கவனித்து கொள்கிறார்கள்.
6 மாதம் இந்த வேலைக்கு வந்து விடுவார்களாம். நேபாளில் ஒரு தொழிலும் கிடையாதாமே. ஷாருக்கான் தான் பிடித்த ஹீரோ என்றார்காள் ஹிந்தி பாட்டுக்களை பாடி கொண்டே வந்தார்கள்.. ரெஸ்ட் ரூம் பக்கத்தில் இறக்கி விடுவதிலிருந்து, டீக்கடையில் குளிருக்கு இதமாய் நாம் ரெஸ்ட் எடுக்க வைப்பது வரை நம்மை நன்கு கவனிக்கிறார்கள்.அவர்கள் அந்த கேப்பில் கடலை வித் நேபாளி பெண்கள்(டீக்கடை ஓனர்ஸ் இந்த பெண்கள் தான் அவ்வளவு அழகு).அடுப்பில் கைவைத்து சூடாக்கி கொள்ள வேண்டும்.டீதான் ஃபுல் டே உணவு. நூடுல்ஸ்,பிஸ்கெட்ஸ் கிடைத்தது. கோயிலை அடைந்து பின் கீழே மாலை 6 மணிக்குதான் வரமுடியும். நான் நடுவில கொஞ்ச நேரம் நடந்து வந்தேன். முடியவில்லை. மூச்சு விட (யூத்திற்கே) மிக சிரமமாக இருந்தது.(3584m above sea level) இறங்கிய பின் 500 ரூபாய் ஒவ்வொரு பையனுக்கும் கொடுத்து வந்தேன்.எவ்வளவு கொடுத்தாலும் தகும்
கோயிலுக்கு போகும் வழியெல்லாம் இருக்கும் மலை எல்லாம் பச்சை,,பச்சைனு இருக்க..
கோயிலுக்கு பின்னால் இருக்கும் மூன்று மலை மட்டும் பனி போர்த்தி இருந்தது.சொர்க்கம் அதுதானா.12 ஜோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்று. எருதின் முதுகு பகுதி போல லிங்கம் வடிவம் இருந்தது.
குதிரை சவாரி செய்தவர்கள் முதுகில் வழி ஏற்பட்டதாக சொன்னார்கள்.1000 ரூபாய் அதற்கு சார்ஜ்.குதிரை திடீரென்று புல் (க்ராஸ்) தண்ணீர் சாப்பிட ஓரமாக போகுது.பார்க்கும் நமக்கு உயிரே போகுது. போகும் வழியெல்லாம் அழகான நாய்கள் அமைதியாக இருந்தன. மகாபாரத்தில் தருமருக்கு சொர்க்கம் வரை துணனக்கு போனதாம் இந்த நாய்கள். கட்டாயம் அவசியம் முடிந்தவர்கள் இங்கு போய் வரலாம். ரிசிகேசிலிருந்து போக வர கார் வாடகைக்கு கிடைக்கும். தங்கும் விடுதிகள் குறைந்த வாடகை தான். அப்புறம் அப்படியே பத்ரிநாத் போனோம். அது இன்னொரு சொர்க்கம்.

6 comments:
சிறப்பான பயணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
இதையெல்லாம் படிக்கும்போது எனக்கும் இங்கயெல்லாம் போகணுனு ஆசையா இருக்கு...
நன்றி வால் and வசந்த் சார்...
கேதார்நாத் போகவேண்டும் என்கிற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும், உங்க கட்டுரைய படிச்ச பின்னாடி கட்டாயம் போகனுங்கிற உணர்வு ஏற்பட்டிருக்கு. இந்த புரட்டாசி மாசக் கடைசியில காஸிக்கு போறதா இருக்கோம். விரைவில் கேதார்நாத் யாத்திரையும் இருக்கும்.
கரிகாலன் சார், கேதார், பத்ரி, கங்கோத்ரி, யமுனோத்ரி நான்கும் ஒரே ட்ரிப்பில் கட்டாயம் போய் வாருங்கள். மழைக்கு குடை, கோட், குளிரிக்கான உடைகள் அவசியம்.
தகவலுக்கு நன்றி. முயற்சி பண்றேன். என்னை கரிகாலன் என அழைத்தாலே போதும். (ஸார் வேண்டாமே !!). மொழி என்பது கருத்துக்களை வெளிப்ப்டுத்தத்தான் என்றாலும், சின்ன சின்ன விஷயங்களை தமிழிலேயே பேசலாம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. தவறுகளுக்கும் தான்தோன்றித் தனத்திற்கும் மன்னிக்கவும்.
Post a Comment