Thursday, October 01, 2009

3-அயன்

ENGLISH TITLE:3-IRON
KOREAN FILM
KOREAN NAME BIN-JIP அப்படின்னா EMPTY HOUSES-ன்னு அர்த்தமாப்பா.
DIRECTOR: KI-DUK-KIM

பார்த்த சேனல்; UTV WORLD MOVIES


டா-சுக் + சன்-வா

சிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும்.

டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது.
ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட வீடுகளில் இன்னும் கிழிக்கபடாமல் இருக்கும் நோட்டீசை வைத்து அந்த வீட்டில் யாரும் இல்லை என்று புரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்து அவன் வீட்டினை போல் உபயோகிக்கித்து கொள்கிறான். வீட்டு ஓனர் திரும்பி வரும் வரை அங்கேயே வசித்து வருகிறான். வீட்டில் ரிப்பேராகி இருக்கும் கடிகாரம்,டேப் ரிக்கார்டர் முதலியவற்றை சரி செய்து வைக்கிறான்.துணிகளை துவைப்பது,செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றும் செய்கிறான் எதையும் திருடுவதில்லை.

ஒரு முறை ஒர் பெரிய பங்களாவினுள் நுழைகிறான் அங்கு வீட்டு சிறையில் இருக்கும் ஒரு பெண் இருப்பது தெரியாமல். சன் வா என்ற அந்த பெண் அவனுக்கு தெரியாமல் அவனை கவனிக்கிறாள். போனில் அவள் கணவனுடன் உரையாடுவதினை வைத்து அந்த பெண் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என்று உணருகிறான். ஒரு நாள் கணவனும் திரும்பி வருகிறான்.அந்த பெண்ணை பலவந்த படுத்துகிறான். மறுக்கும் பெண்ணை அடிக்கிறான். இதனை பார்த்த டா-சுக் 3-IRON எனப்படும் போலோ விளையாடும் பேட்டால் போலோ பந்துக்களை வைத்து அடித்து அவன் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறான்.பூட்டிய வீட்டினுள் நுழைந்து இருவரும் வாழ்கிறார்கள். ஒரு டிஜிட்டல் கேமிராவால் ஒவ்வொரு வீட்டிலும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்க்ள்.
ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அங்கு ஒரு பெரியவர் இறந்து கிடக்கிறார். இருவரும் அவரை நல்ல முறையில் வீட்டிற்கு பக்கத்தில் அடக்கம் செய்கிறார்க்ள். ஒரு நாள் அந்த பெரியவரின் மகனும், மருமகளூம் வீட்டிற்குள் வந்து பெரியவை இல்லாததை அறிந்து டா-சுக்,சன் - வா இருவர் மீதும் போலிஸில் புகார் கொடுக்கிறார்க்ள். போலிஸ் விசாரைணையில் பெரியவர் புதைக்கப்பட்டஇடத்தில் தோண்டி பார்க்கையில் அவர்கள் முறைபடி நல் அடக்கம் செய்ய பட்டிருப்பது அவர் மகனுக்கு வியப்பினை தருகிறது. அட்டாப்ஸி ரிப்போர்டில் பெரியவர் நுரையீரல் புற்று நோயில் இறந்தது தெரிகிறது. வீட்டிலும் ஒரு பொருளும் களவாடபடவில்லை என தெரிந்து பெரியவரின் மகன் டா- சுக்கினை விடுவிக்க சொல்லிட்டு போய் விடுகிறார்.

இதற்கிடையில் சன் - வாவின் கணவன் இன்ஸ்பெக்டரிடம் மனைவி காணவில்லை என்று முன்பு கொடுத்து இருந்த விண்ணப்ப்த்தினை வைத்து டா-சுன், சன் - வாவினை கடத்திக் கொண்டு போனதாக சொல்லி நம் ஹீரோவினை சிறையினில் தள்ளுகிறார். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் கணவனிடம் லஞசம் வாங்கி கொண்டு இதனை செய்கிறார்.

கணவனுடன் வீடு திரும்பிய சன் - வா கணவனை கண்டாலே பிடிக்காமல் டா- சுக்கினை நினைத்து கொண்டே வாழ்கிறாள் எப்ப்டியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு.

சிறையில் ஹீரோ அடிக்கடி மறைந்து கொண்டு உள்ளே நுழையும் போலீசை கடுப்படிக்கிறான். போலீஸ் அடித்தால் கூட கூலாக ஒரு சிரிப்பு. மெடிடேஷன் மாதிரி எப்பவும் மெதுவாக காலடி ஓசை இல்லாமல் நடக்க பயிற்சி எடுக்கிறான்.ரூமில் நுழையும் போலீசின் பின்னால் ”180 கோணத்தில்” நிற்கிறான். போலீசிற்கு தெரிவதில்லை அவன் பின்னால் நிற்பது அவர் திரும்பும் நேரத்தில் இவனும் அவனை தொடர்வதால் போலீசிற்கு எரிச்சல் வருகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் டா-சுக் நேரே சன் - வா வீட்டிற்கு சென்று அவள்
கணவனின் கண்களுக்கு தெரியாமலே சன் - வாவுடன் இஷ்டம் போல் இருக்கிறான்.

இந்த படத்தின் ஹீரோ படம் முழுவதும் பேசுவதேயில்லை. ஒரு மர்ம புன்னகை மட்டுமே. ஹீரோயினும் அவனுடன் பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பேசுவதில்லை என்று நாம் உணர்வதே இல்லை. அப்படி ஒரு நடிப்பு இருவரும். UTV WORLD MOVIES சேனலில் இந்த மாதம் அடிக்கடி இந்த படம் ஒலிப்பரப்பாகும். முடிந்தால் பாருங்கள். மெல்லிய இசை,ஹீரோவின் அழகு, ஹீரோயினின் பாவமான முகம், ஹீரோவின் சிரிப்பு என எல்லாமே அழகு இந்த கொரிய படத்தில்.

12 comments:

யாசவி said...

where to see?

வால்பையன் said...

ஹீரோ பேசுவது போல் காட்டுவதில்லை!
அவ்வளவே!

இயக்குனர் கிம்-கி-டுக் திரைப்படங்கள் பெரும்பான்மையாக முக்கிய கதாபாத்திரங்கள் பேசமாட்டார்கள்!


அவரை பற்றிய எனது பார்வை தகவலுக்காக

Beski said...

நேற்றுதான் பார்த்தேன், UTVயில். நன்றாகத்தான் இருக்கிறது.

அமுதா கிருஷ்ணா said...

டைரக்டர் கிம்-கி-டுக்கின் மற்ற படங்களை பற்றி உங்கள் ப்ளாக்கில் தெரிந்துக் கொண்டேன் வால்பையன்...மற்ற படங்களையும் பார்க்கணும்..

நன்றி எவனோ ஒருவன்...

பிரபாகர் said...

விமர்சனம் மிக அருமை. அழகாய் விவரித்திருக்கிறீர்கள். விகடன் குட் பிளாக்கில் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

மேவி... said...

இந்த படத்தின் கதை பல தமிழ் படங்களில் காப்பி அடிச்சு இருக்காங்க ...... இன்னொரு விஷயம் ஒரு படத்தை பற்றி எழுதும் பொழுது அந்த படத்தில் கையாள பட்டு இருக்கும் உணர்வுகளை பதிவு செய்தால் ... இன்னும் அருமையாய் இருக்கும்

Thamira said...

உலக சினிமாவெல்லாம் பார்ப்பீங்களா?

(வாசித்துமுடிப்பதற்குள் கொட்டாவி வருமாறு எழுதியிருக்கிறீர்கள். ஆவ்வ்.! ஹிஹி)

selva kumar said...

very good writing....
i like to read....
very interesting ...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி பிராபகர்,டம்பீமேவி,செல்வகுமர்..

ஆமாம், ஆதி குருவி மாதிரி பர பரவென்று இல்லை.. கொஞ்சம் தூக்கம் தான் வருது...

Cable சங்கர் said...

விமர்சனமாய் இல்லாமல் பார்த்த உணர்வில் எழுதியிருக்கிறீர்கள்..

Cable சங்கர் said...

உங்களுக்கு ஒரு கேள்வி..:)

கதாநாயகன் இறந்துவிட்டானா.. இல்லையா..? அந்த பெண் ஊமையா..? ஏன்னா அந்த பொண்ணு ஊமைன்னு சொல்லி சாருநிவேதிதா அவஸ்தபட்டாரு..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கேபிள் சார், அந்த பெண் ஊமை மாதிரி டைரக்டர் காண்பிக்கவில்லை.. கணவனை பிடிக்காமல் பேசாமல் இருக்கிறாள்..கதாநாயகன் இறந்தது மாதிரி இல்லையே...