Monday, May 11, 2009

காந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா?



காந்திஜியின் காரியதரிசியாக இருந்த திரு.வி.கல்யாணம்(87 வயது) என்பவரைப் பேட்டி கண்ட   நடந்தது என்ன என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்தேகம்.

காந்தி சுடப்பட்டப் போது அவருக்கு பின்னால் 6 அங்குலம் தூரத்தில் இருந்ததாக தெரிவித்த திரு. கல்யாணம் காந்திஜி ஹேராம் என்று கூறியதாக் தன் காதில் விழவில்லை என்று கூறினார். கேட்ஸே மிக அருகில் இருந்து சுட்டதால் உடனே அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.  

மேலும், காந்திஜியின் பிடிவாதத்தால் தான் படேல் இந்தியாவின் சார்பாக ரூபாய் 50 கோடி பாகிஸ்தானுக்கு சுதந்திரத்திற்கு பின் கொடுக்க ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த பணம் ஆயுதம் வாங்க தான் அவர்களுக்கு பயன்படும் என்று படேல் முதலில் மறுத்து உள்ளார்.
   
தமிழ், பெங்காலி, ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ் மொழிகளில் சரளமாக உரையாட தெரிந்த திரு. கல்யாணம் தற்போது தேசியப் பாதுகாப்பு கழகம் என்ற கட்சியின் பிரசிடெண்ட் ஆக உள்ளார். தெற்கு மற்றும் மத்திய சென்னையில் இரு வேட்பாளர்களை இந்த முறை தேர்தலில் இந்த கட்சி  நிறுத்தி உள்ளது.  

Wednesday, May 06, 2009

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சென்னையில்


 திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல் மே மாதம் 8 ஆம் தேதியிலிருந்து கிழக்கு அண்ணாநகரில் ஆரம்பம். 

திண்டுக்கல்லில்  இந்த ஹோட்டலை ஆரம்பித்த திரு.நாகசாமி என்பவர் தலையில் இருக்கும் வழுக்கையை மறைக்க முழு நேரமும் தலப்பாகைக்  கட்டிக் கொண்டு இருப்பாராம். அதனால் இப்பெயர் வழக்கத்தில் வந்ததாம். திண்டுக்கல், வத்தலகுண்டு, கோயம்பத்தூரில் இவர்களுக்கு கிளைகள் உண்டு. முதல் முறையாக சென்னையில் ஆரம்பம். 
  

Tuesday, May 05, 2009

படிக்க உதவலாமே

ஜூன் மாதம் வரப் போகுது, ஸ்கூல், காலேஜ் என கட்டணம் கட்ட மிக நெருக்கடியில் தவிக்கும் யாருக்கேனும் இந்த வருடமும் உதவலாமே. நம் சொந்தங்களில் நிச்சயம் நன்கு படிக்கும் ஆனால், வசதி குறைவாக யாராவது இருப்பர். அதனால் அவர்களுக்கு உதவி செய்யலாம்.  தந்தையில்லாத குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்தால் நிச்சயம் நம் பிள்ளைகள் நன்றாக் இருப்பார்கள். இப்பொழுது அனைவருக்கும் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்.  பாடபுத்தகம், பேனா, பென்சில், சீருடை என்று எதாவது ஒரு பொருளாக யாரேனும் ஏழை மாணவனுக்கு வாங்கித் தரலாம். நாம் ஒரு நாள் சினிமா பார்க்கும், ஒரு நாள் தீம் பார்க் போகும் செலவுதான் ஆகும்.