ரொம்ப stress, ஒவர் வேலைப் பளு என்று இப்பொழுது முக்கியமாய் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் அதிகம் யோகா கத்துக்கப் போகிறார்கள்.
அவர்களை யோகா சொல்லி தருபவர்கள் ஏனோ ப்ரைன்வாஷ் செய்து விடுகிறார்கள். அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்றும், திருமணம் செய்யவேண்டாம் என்றும் கற்பிக்கப் படுகிறது. குடும்பத்தை விட்டு வேலைக்காக அடுத்த ஊரில் இருப்பவர்கள் தான் அதிகம் இதில் மாட்டிக் கொள்கிறார்கள்.
முதலில் பெற்றவர்களும் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் இருந்தால் போதும் என்று நினைத்து இவர்கள ஒன்றும் சொல்வதில்லை. சொத்தில் ஒரு பகுதி அல்லது மாதம் மாதம் ஒரு பெரியத் தொகை வசூல் நடக்கிறது. சிலர் வேலையை விட்டு விட்டு அந்த கூட்டத்தில் முழு நேரமாய் சேர்ந்து விடுவதும் உண்டு.
பிள்ளைகள் இப்படி செல்வதைத் தடுக்க முடியாமல் ஜோசியம் என்று அலையும் பெற்றவர்கள் இப்போது அதிகம். திடீரென்று வருமானமும் நின்று சொந்தப் பந்தங்களிடம் சொல்லவும் முடியாமல் வருந்துகிறார்கள்.
அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும். திருமணம் செய்ய காலம் கடத்துவது, மிக இள வயதில் நிறைய பணத்தைப் பார்த்து விடுவது போன்றவற்றால் தற்போது இப்படி யார் கையில் ஆவது மாட்டிக் கொள்கிறார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
No comments:
Post a Comment