ம்மா டெர்ரர் ஃபேமிலி ஒரு கடை ஆரம்பிச்சு இருக்காங்கம்மா. மாலையில் வீட்டிற்குள் வரும் போதே நகுல் சொல்லிக் கொண்டே வந்தான். டெர்ரர் ஃபேமிலி?
எங்கள் தெருவின் கார்னர் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குண்டாக(குண்டாக இருப்பவர்கள் எல்லாம் திட்டாதீங்கப்பு) இருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு 15 அல்லது 20 பவுன் நகை போட்டிருப்பார்கள். தண்டி தண்டியாக செயின், ப்ரேஸ்லெட், மோதிரம் என்று ஆண்களும் நகை போட்டு இருப்பார்கள்.அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் மிக பெரிய மீசை வைத்து இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நகுல் வைத்த பெயர் தான் டெர்ரர் ஃபேமிலி.அடுத்த நாள் இந்த முட்டைகள் டெர்ரர் கடையில் வாங்கி வந்தான்.
இப்படி இரண்டு டெர்ரர்களிடம் மாட்டிக் கொண்ட நான் கீழே நடுவில்.

எங்கள் தெருவின் கார்னர் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குண்டாக(குண்டாக இருப்பவர்கள் எல்லாம் திட்டாதீங்கப்பு) இருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு 15 அல்லது 20 பவுன் நகை போட்டிருப்பார்கள். தண்டி தண்டியாக செயின், ப்ரேஸ்லெட், மோதிரம் என்று ஆண்களும் நகை போட்டு இருப்பார்கள்.அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் மிக பெரிய மீசை வைத்து இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நகுல் வைத்த பெயர் தான் டெர்ரர் ஃபேமிலி.அடுத்த நாள் இந்த முட்டைகள் டெர்ரர் கடையில் வாங்கி வந்தான்.
ஐயோ, இன்னைக்கு டெர்ரர் குழம்பா நான் வெளியில் சாப்பிட்டுக்றேம்மா. இது ரிஷி.டெர்ரர் குழம்பு-புளிக்குழம்பு. கலர் பார்க்க டெர்ரரா இருக்காம்.
10 வருடங்களுக்கு முன்னால் இந்த இரண்டு டெர்ரரும் சேர்ந்து ஒரு கருப்பு குட்டி நாயினை தெருவில் இருந்து தூக்கி வந்துச்சுங்க. டாக்டரிம் கூட்டி போய் ஊசி போடும் போது தான் அந்த நாய் பெண் என்றே தெரிந்தது. கார்டில் பெயர் எழுத நாய் பெயர் டாக்டர் கேட்டால், ஓ பெயரே இன்னும் முடிவு செய்யலையே.ஆனால், உடனே ஒரு பெயர் வைச்சுதுங்க.
RINA..RI for Rishi..Na for Nagul.
ஆனால் இப்போ இப்ப மருவி ரீனாவாகி போச்சு. அதிலும் ரிஷி அதற்கு R.ரினா என்று வைக்கணும் என்று ஒரே வம்பு. அவன் பெயர் தான் இன்ஷியலாம். தல அப்ப ப்ரைமரி ஸ்கூலில் இருந்தார்.