ஆச்சு..2011 அக்டோபரில் கடைசியாக ஒரு பதிவு போட்டது.2012 வருடம் தொடங்கியவுடன் ஒரு பதிவு போடணுமே இல்லைனா உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று பரணில்(ட்ராஃப்டில்) இருந்த ஒரு பதிவினை தூசி தட்டி ஜனவரியில் ஒரு பதிவினை போட்டுட்டு அப்படியே காணா போயாச்சு.
2011 மார்ச்சில் கட்ட ஆரம்பித்த வீட்டினை 2012 மார்ச்சிற்குள் கட்டி முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பதிவுலகமே மறக்க ஆரம்பித்தது. பிப்ரவரியில் புது வீட்டிற்கும் குடி வந்தாச்சு. பழைய வீட்டில் ஏற்கனவே இருந்த ஏர்டெல் நெட் புது வீட்டு ஏரியாவில் நெட்வொர்க் இல்லையென்று கை விரித்ததும் தான் ஆஹா பதிவுலகத்தினை மிகவும் மிஸ் செய்தேன். எல்லோரையும் விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் ஜமீன் பல்லாவரம் ஆனேன். புது வீடு இருப்பது ஜமீன் பல்லாவரத்தில்.
எந்த நேரத்தில் அக்கம் பக்கம் என்று என் ஃப்ளாக்கிற்கு பெயர் வைத்தேனோ என் புது வீட்டின் அக்கம் பக்கத்தில் யாருமே இல்லை. தனி வீடு..செம வெளிச்சம் + செம காற்று.அனுபவித்து கொள்ளணும், ஏன் ஆராயணும்? 10 நாட்கள் முன்பு தான் வீட்டிற்கு நெட் வந்தது. பர பரவென்று இரண்டு மாதங்களாக போகாதவர்கள் வீட்டிற்கு(ப்ளாக்கிற்கு) எல்லாம் கடந்த 10 நாட்களாய் போய் வந்தேன். என் வீட்டிற்கு அனைவரும் வருக.














