Monday, April 04, 2011

அசத்தும் அஞ்சறைப் பெட்டி-9

அஞ்சறைப் பெட்டி பொதுவா நம் வீட்டு சமையலறையில் ஒன்றே ஒன்று இருக்கும்.

படம் பதிவர் சங்கவியிடம் சுட்டது!!

மஸ்கட்டில் இருக்கும் சுஜாதா சங்கர் (யாரோ) என்பவர் வீட்டில் இருப்பதோ ஒன்பது அஞ்சறைப்பெட்டிகளாம்.

1. ரூம் ஷெல்ஃபில்: மாத்திரைகள் போட்டு வைக்க.

2. ட்ரஸ்ஸிங் டேபிளில்: சேஃப்டி பின்,பொட்டு,சின்ன சின்ன தோடு, ரப்பர் பேண்ட்,ஹேர் பின் வைக்க.

3. ஷெல்ஃபில்: கலர் கோலப்பொடி வைக்க.

4. டைனிங் டேபிளில்: பாதாம்,முந்திரி, திராட்சை,அக்ரூட் வைக்க

5. சாமி ரூமில்: விபூதி, குங்குமம்,சந்தணம்,மஞ்சள் பொடி,சாம்பிராணி, சூடம் வைக்க.

6. ஃப்ரிட்ஜில்: சுத்தப்படுத்தி பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி,புதினா இஞ்சி,பூடு,ப.மிளகாய்.

7. ஸ்டடி டேபிளில்: ஷார்ப்னர்,ரப்பர்,குண்டூசி,சிறிய கம் பாட்டில்,க்ரேயான் பென்சில்.

8. ஹால் ஷெல்ஃபில்: சில்லறை காசுகளுக்கு.

9. சமையலறையில்: இது வழக்கமாய் வைக்கும் பொருட்கள்.

என் வீட்டில் மூன்று உள்ளது. கலர் கோலப்பொடிக்கு பிளாஸ்டிக்கில் ஒன்று,சமையலறை,சாமி ரூமில் எவர்சில்வரில் இரண்டு.

மங்கையர் மலரில் படித்தது. நல்லாயிருக்குல்ல இந்த ஐடியா. ஃபாரினில் இருக்கும் சகோதரிகள் தேவைன்னா சொல்லுங்கோ அஞ்சறைப்பெட்டி எக்ஸ்போர்ட் செய்திடலாம்.(பிசினஸ் மைண்ட்!)