Guwahati யிலிந்து 11/11/2016 காலை 11 ½ மணிக்கு வாடகை காரெடுத்து Tejpur நோக்கி மிக அருமையான ரோடில் போனோம். 3 ½ மணி நேரத்தில் தேஜ்பூர் போயாச்சு.
Tejpur to Bhalukpong one hour travel time. Bhalukpong is border of two states) have to show Inner Line Permit (ILP) easily obtained from Guwahati Airport per head rs. 450. From Bhalukpong (700 Ft Height) மலை ஏற ஆரம்பிக்கணூம். Bhalukpong checking எல்லாம் முடித்து மலை ஏற ஆரம்பிச்ச போது மாலை 4 மணி இருட்ட ஆரம்பிச்சது. மாலை 7 மணிக்குள் எங்கள் ப்ளான் Bomdila (8000 ft) 110 km. மலை ஏற ஆரம்பிச்ச போது மேட்டுப்பாளையம் கோத்தகிரி போற மாதிரி தான் சாதாரணமாக நினைச்சேன். ஆனால் இருட்டில் மிக மெதுவாக தான் போக முடிந்தது. மிக உயரமான வாழை மரங்கள் அதிகமா இருந்துச்சு. ஏதாவது ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்து கொண்டிருந்தன. கீழே இறங்கும் வண்டிகள் மேலே ஏறும் வண்டிகளுக்கு வழி விட்டன. இருட்ட இருட்ட ரோடும் குண்டும் குழியுமாக, சில இடங்களில் சகதியாக, சில இடங்களில் லாரி போன டயர் தடங்களே ரோடாக, சில இடங்களில் வெறும் மணல் குவியலாக ரொம்ப மோசமான பாதையில் ஏறுகிறோம் என்ற எண்ணமே நாங்கள் நால்வரும் கப்சிப் என்ற நிலைக்கு எங்களை தள்ளியது. என் மகன்களை நம்பி இந்த பாதையில் வந்தது மிக பெரிய தவறு என்று நினைத்தேன். அந்த பாதையில் பழக்கமான ட்ரைவர்கள் தான் சரி. ஆனால், இருவரும் மிக அருமையாக மெதுவாக காரை ஓட்டி வந்தார்கள்.
நைட் 8 மணிக்கு Bomdila போய் சேர்ந்தோம். நாங்க போன போது அந்த ஊரில் கரெண்ட் இல்லை. மொத்த ஊரும் கப்சிப்ன்னு இருந்துச்சு. ரூம் தேடி 10 நிமிசத்தில் ஓரிடத்தில் ரூம் கிடைச்சு பேரம் பேசி ரூமுக்குள் போலாம் என்று காரை விட்டு இறங்கினால் அப்படி ஒரு குளிர். செக் செய்தால் 7 degree!!! காரிலிருந்து சூட்கேஸ் எதுவும் எடுக்காமல் ரூமுக்குள் ஓடோடி போய் பெட்டில் படுத்து கொண்டோம். சிறிது நேரம் கழித்து என் மகன் காரை திறந்து குளிராடைகளை எடுத்து வந்தான். கரெண்ட் இல்லை என்பதால் சாப்பாடும் கிடைக்கலை. பிஸ்கெட்ஸ், பழம் என்று சமாளித்தோம். மறு நாள் காலை 5 மணிக்கெல்லாம் விடிந்து விட எழுந்து கிளம்பி ஒரு மணிநேரத்தில் எல்லாம் காரை எடுத்தாச்சு.
எங்க அடுத்த இடம் திராங் – Dirang 45 km from Bomdila and 5300 fts height. Dirang is a Smalla Valley town. We ate Morning break fast with Rasagulla in Dirang.
திராங்கிலிருந்து Se - La (13,700 fts height) போவதற்கு காரை எடுத்தாச்சு. இனிமேலாச்சும் ரோடு நல்லாயிருக்கணும் என பேசி கொண்டு கிளம்பினோம். அப்போது இனியும் மிக மோசமான ரோடுகளில் போணும் அதில் எங்க கார் ரிப்பேரும் ஆகும் என்பதும் தெரியாது!!
To Tezpur |
To Bhalukpong |
Roads Lead to Sela pass |
Sela Pass Road |