Tuesday, October 30, 2012

வெரைட்டி- அக்டோபர்(2012)

போத்தீஸ் புதிய கடை ஜி.என்.செட்டி ரோடில் திறந்து இருக்கிறார்கள். விலை அதிகம் என்று தோன்றுகிறது. 10 மாடிகளுக்கும் எக்ஸ்கலேட்டர் வைத்திருப்பது அருமை. அதான் விலை ஜாஸ்தியோ. கடையின் அகலம் சிறியது. கார் பார்க்கிங்கிற்கு சைடில் நிறைய இடம் விட்டிருக்கிறார்கள். முதன் முதலில் திருநெல்வேலியில் இவர்கள் கடையினை திறந்த போது நானும் என் தங்கையும் அங்கு போனதை பற்றி பேசி கொண்டே இந்த புதுக் கடையில் ஒன்றுமே எடுக்காமல் சும்மா சுத்தி பார்த்துட்டு திரும்பிவிட்டோம். அங்கிருந்து நிறைய பேர் பழைய போத்திஸுக்கு வழி கேட்டு கொண்டும், ஆட்டோ வைத்து கொண்டும் இருந்தார்கள்.

 எலக்ட்ரிக் ட்ரையினில் ஃப்ர்ஸ்ட்க்ளாஸில் தி.நகர் போய் கொண்டிருந்த போது கிண்டியில் ஒரு கிராமத்து பையனும் பெண்ணும் ஏறினார்கள்.அவர்களிடம் இது ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் என்று சொன்னதும் அடுத்த பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் அந்த பெண் மட்டும் ஓடி போய் ஏறி விட்டது. அந்த பையனிடம் அடுத்த ஸ்டேஷனில் பெட்டி மாறிவிடு என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வந்து கொண்டிருந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் சைதா பேட்டை ஸ்டேஷன் வரும் போது கரெக்டா அந்த பையனை பிடித்து விட்டார். தெரியாமல் ஏறிட்டேன் என்று அந்த பையன் கெஞ்சியதை சிறிதும் மதிக்கவில்லை.கீழே இறக்கி வசூலிக்க ட்ரை செய்து கொண்டிருந்தார். பாவம் அந்த பையன் கையில் ஒரு 500 அல்லது 1000 ரூபாய் மட்டுமே இருந்திருக்கும். அந்த பெண்ணும் இறங்கி கெஞ்சி கொண்டிருந்தது. நிறைய பேர் தெரியாமல் ஏறி இப்படி மாட்டி கொள்கிறார்கள்.தீவாளி ட்ரெஸ் வாங்க போய் கொண்டிருந்தவர்களுக்கு தண்டம்.அடிக்கடி இப்படி தெரியாமல் சிலர் ஏறி தண்டம் அழுகிறார்கள்.ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பெட்டியின் வெளியில் ஏதாவது டார்க் கலர் பெயிண்டாவது அடித்து வைக்கலாம்.ஃபர்ஸ்ட் க்ளாஸ் என எழுதி இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

 கார் ஆக்ஸிடெண்ட்டால் ஏற்பட்ட முதுகு பிரச்சனைக்கு டச் தெரபி போகலாம் என்று ஃப்ரெண்டிடம் விசாரித்ததில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் ஸ்கூலில் திங்கள், வியாழகிழமைகளில் மாலையில் ட்ரீட்மெண்ட் எடுத்து கொள்ளலாம் என்று தெரிந்து நேற்று போய் வந்தேன். சித்தா டாக்டர் ஒருவரிடம் கன்சல்ட் செய்து கொண்டு அவர் சொன்ன ஒரு தொடுவர்மத்தை அங்கிருந்த வாலண்டியர்ஸ் செய்து விடுகிறார்கள். செய்யும் போது உடனே பாரம் குறைந்த மாதிரி இருந்துச்சு. ஆயில் ஒன்றும் கொடுத்து இருக்கிறார்கள். வலி இல்லை.ஏதோ முதுகில் வெயிட்டாக இருப்பது போல ஒரு உணர்வு. அங்கே நான் போன போது 50க்கும் மேற்பட்டவர்கள் ரெகுலராக வருவது தெரிந்தது. சுகர்,பி.பி. கை,கால், இடுப்பு, முதுகு, கழுத்து வலிக்கு நிறைய பேர் வருவது தெரிந்தது. 8 சிட்டிங்கிற்கு 200 ரூபாய் தான் வாங்குகிறார்கள். எண்ணெய்க்கு 100 ரூபாய். திருமூலர் வர்ம ஆராய்ச்சி நிலையம் இந்த மையத்தை நடத்துகிறது.

2021 வரை கரெண்ட் பிரச்சனை இருக்க தான் செய்யுமாம்.கரெண்ட் உற்பத்தி அதிகரித்தாலும் உபயோகமும் அதிகரிக்கும் அதனால் பிரச்சனை தான். எல்லா மாநிலங்களுக்கும் குஜராத் தவிர இதே பிரச்சனை அடுத்த இரண்டு வருடங்களில் வருமாம். . இப்பவே மேட்டூர், வடசென்னையில் போடப்பட்ட புது ப்ராஜ்க்டுகள் முடிவடைந்த நிலையில் இருந்தாலும் உற்பத்தி ஆன கரெண்டை எடுத்து செல்ல துணை மின்நிலையங்கள் அமைக்க நில கையகப்படுத்தும் நடவடிக்கை பேப்பர் வடிவிலேயே இருக்கிறதாம். அதை விரைந்து முடிப்பதை விட்டுட்டு முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதை அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். கிடைக்கும் மின்சாரத்தை சிக்கனமாய் பயன்படுத்துவோம்.


Tuesday, October 23, 2012

S ஆக பார்த்தேன்

சின்ன s :  சாப்பிடுறோமோ இல்லையோ தினப்படி சமையல் செய்து செய்து அலுத்து போய் இதிலிருந்து ஒரு இரண்டு நாளாவது எஸ் ஆவது எப்படின்னு தீவிரமாய் யோசித்து திருப்பதிக்கு எஸ் ஆகலாம் என்று உடனே திட்டம் போட்டு என் மகன்களும்,கணவரும் அந்த கூட்டதிற்கு நாங்கள் வரலை என்று எஸ் ஆக என் சித்தி, அவரது பெண்,என் தம்பி அவரின் மனைவி,என் தங்கை என்று ஒரு படையுடன் திருமலைக்கு போன புதன் கிழமை(17) எஸ் ஆனேன்.புதனன்று திருமலையில் கூட்டமே இல்லை. பத்தோடு பதினோரு ஆளாக நின்று 600 ரூபாய்க்கு ரூம் போட்டு, நந்தகம் என்ற புத்தம் புது ரூமில் நாங்கள் தான் பால் காய்ச்சி குடியேறினோம்.ரூம் இருந்தது புதிய அன்ன பிரசாத பில்டிங் பக்கத்தில். இரவு தர்ம தரிசனம் 10 மணிக்கு போனால் 12 மணிக்கெல்லாம் சாமி கும்பிட்டு வெளியில் வந்து லட்டு வாங்கி ரூமிற்கு வர 1 மணி ஆனது.

என் சித்தி பெண் கட்டாயம் அங்க பிரதட்சணம் செய்யணும் இது வரை செய்ததே இல்லைக்கா என்று கூறவும் சரியென்று அப்படியே தூங்காமல் புஷ்கரணி சென்று இரண்டு முங்கு போட்டுட்டு(இரவு 1.30க்கு) அங்கபிரதட்சண கியூவில் நின்று கொண்டோம்.செம குளிர். அங்கபிரதட்சணம் செய்து இன்னொரு முறை சாமி தரிசனம் செய்து ரூமிற்கு காலை 4.30 க்கு வந்து பிறகு தூங்கினோம்.எதற்கும் இருக்கட்டும் என்று அங்கபிரதட்சண் டோக்கன் முதல் நாள் இரவு 7 மணிக்கே வாங்கி வைத்திருந்தோம். அடுத்த நாள் பிரம்மோத்ஸ்வம் காலை மாலை பார்த்து விட்டு மறுநாள் வெள்ளி காலை சென்னை வந்தோம். இப்படி இரண்டு நாள் குடும்ப பொறுப்பிலிருந்து மிக ஆனந்தமாய் எஸ் ஆனேன். வந்து பார்த்தால் இங்கே பெய்து கொண்டிருந்த பயங்கர மழையிலிருந்தும் எஸ் ஆகி இருக்கிறேன்.

பெரிய S: என் கணவருடன் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் திருமணத்திற்கு பெரம்பலூர் செல்லலாம் என்று நண்பரின் Vento காரில் சனியன்று (20th) மதியம் 3 மணிக்கு நானும் என் கணவரும் அவரின் இரண்டு நண்பர்களும் கிளம்பினோம். குரோம்பேட்டை ப்ரிட்ஜ் பக்கம் போகும் போது எருமை மாடு கூட்டம் ரோடை க்ராஸ் செய்யவே மிக பொறுமையாக வண்டியினை ஓட்டி அப்படியும் ஒரு எருமை மாட்டின் பின்புறம் கொஞ்சமாய் காரின் முன்பகுதியில் இடித்து கார் ஜெர்க் ஆகி மேலும் நிதானமாக காரை ஓட்டினார் நண்பர் சேகர். திண்டிவனம் பக்கமாய் போய் கொண்டிருந்த போது ரோடில் எங்களுக்கு முன்னாடி சென்ற லாரியும், அதற்கு முன்னாடி சென்ற கார்களும் மிக மெதுவாக செல்லவே நாங்களும் வலது பக்கமாய் மெதுவாக சென்று கொண்டே என்னவோ ஆக்ஸிடெண்ட் போல இருக்கே என்னது என்று இடது பக்கமாய் பார்த்து கொண்டே பேசி கொண்டே போன போது டமால் என்று எங்கள் காரின் வலது பக்க பின்பகுதியில் ஒரு மாருதி முரட்டு தனமாய் மோதி எங்கள் கார் கன்னாபினாவென்று இடது பக்க ரோட்டோரமாய் போய் நிறுத்தப்பட்டது.நான் ட்ரைவர் சீட்டிற்கு பின்னால் இருந்தேன்.

தலை முன்னாடி சீட்டில் மோதி முதுகு நான் இருக்கும் சீட்டிலே மோதி அப்படி இப்படி குழுங்கி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போச்சு போச்சு என்று காரை விட்டு மூவரும் இறங்கி காரின் பின்னாடி ஓடி சென்று பார்க்கும் போது நான் காரை விட்டு இறங்காமல் வலது பக்கமாக திரும்பி பார்க்கிறேன் எங்களை வந்து மோதிய மாருதி அப்பளமாய் முன் பகுதி நொறுங்கி நின்று கொண்டு இருக்கிறது. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. காரில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.ஒரு அரை மணிநேரம் கழித்து 6 மணிக்கு கொஞ்சம் மனம் அமைதியானவுடன் நான் எதிரில் சென்னை போகும் பஸ்சில் ஏறி வீட்டிற்கு வந்து விட்டேன். என் கணவர் அவர் நண்பர்கள் போலீஸ் அது இதுவென்று அல்லாடி காலையில் வீடு வந்தனர். காரை க்ரேன் வச்சு தான் தூக்கி போனார்களாம்.அந்த சமயம் எங்காச்சும் வலிக்குதா என்று தலையினை கை கால்களை தடவி தடவி பார்த்து கொண்டோம். எனக்கு முதுகில் வலது பக்கம் மட்டும் கொஞ்சமாய் வலி இருக்கிறது.நண்பர் ஒருவருக்கு கழுத்தில் வலிக்கிறதாம்.எப்படி இப்படி எஸ் ஆனோம் என்பதே ஆச்சரியமாய் இருக்கிறது.

 எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு ப்ரைவேட் பஸ்ஸை எதிரில் வந்த ஒரு லாரி மீடியன் தாண்டி நேராக இடித்து தள்ளி பஸ் ட்ரைவர் இறந்து விட மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருந்த போது தான் 15 வண்டிகளுக்கு பின்னாடியே சென்ற எங்கள் கார் இப்படி ஆனது. மாருதி ஸ்பீட் கண்ட்ரோல் செய்யமுடியாமல் எங்கள்  மீது மோதி விட்டது.

எருமை மாட்டினை இடிக்கும் போதே பயணத்தை ரத்து செய்திருக்கணுமோ.ஒரு பிராத்தனையும் இல்லாமல் திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்தது தான் காப்பாற்றியதோ,வீட்டு வேலைகளிலிருந்து எஸ் ஆக நினைத்து உலகத்தை விட்டே எஸ் ஆக பார்த்தேனே என்று ஏகமாய் குழப்பங்கள்.

Tuesday, October 16, 2012

ட்ரையின் குடும்பம்

ரொம்ப தூரம் ட்ரையினில் போனது சென்னையில் இருந்து அஸ்ஸாமில் இருக்கும் கெளஹாத்திக்கு.சென்னையில் வியாழக்கிழமை காலை 6.20 ற்கு ஏறி கல்கத்தா மறுநாள் வெள்ளி காலை 11 மணிக்கு போனது.அப்படியே நியூஜல்பைகுரி,காமாக்யா வழியாக சனிக்கிழமை காலை 6 மணிக்கு அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்திக்கு போய் சேர்ந்தோம்.48 மணிநேரப் பயணம். அங்கிருந்து காரில் மேகாலயா தலைநகர் ஷில்லாங் போய் சேர்ந்தோம்.என் இரு மகன்களையும் ட்ரையினில் சீட்டில் பிடித்து உட்கார வைக்கவே பெரும்பாடு படணும்.ஏசியில் இருக்க பிடிக்காமல் இரண்டும் கேட் அருகிலேயே போய் அமர்ந்து கொள்ளும்.நைட் தான் ஒழுங்கா சீட்டிற்கு வரும்.நேரத்திற்கு சாப்பாடு,படிக்க புத்தகம்,பாட்டு கேட்க ஐ-பாட் வெளியில் வேடிக்கை என்று நாட்கள் போனதே தெரியவில்லை. போகும் போது கிருஷ்ணா,கோதாவரி,பிரம்மபுத்திரா என்று நிறைய தண்ணீருடன் கூடிய பெரிய ஆறுகள். அருணாசல்பிரதேஷில் திபுருகார் வரை ட்ரையின் போகிறது. (60 மணி நேரம்).
சென்னை - ஜம்முதாவி போனோம். (நேராக போனால் 55 மணிநேரம்) ஆனால் டில்லியில் ஒரு நாள் தங்கி அன்று இரவு ஜம்மு கிளம்பினோம். எனவே கெளஹாத்தி போனது தான் அதிக நேரம் ட்ரையினில் இருந்ததாக கணக்காகிறது.


ஒரு முறை ட்ரையினில் திண்டுக்கல்லிற்கு போகும் போது திருச்சிக்கு முன்பு டால்மியாபுரம் அருகில் காலை 4 மணிக்கு ட்ரையின் நின்றது.ஒரு மணிநேரம் ஆகியும் ட்ரையின் நகரவேயில்லை.எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு கூட்ஸ்  டிரெயில் ஆகி விட்டதாம்.விசாரித்ததில் எப்ப ட்ரையின் கிளம்பும் என்றே தெரியாது என்றார் ட்ரைவர். நான் என் குழந்தைகளுடன் ட்ரையினை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்று அங்கிருந்த ஒரு கிராமத்தில் தோட்டம்,கிணற்று மேட்டுடன் இருந்த ஒரு வீட்டில் பெர்மிஷன் கேட்டு எங்கள் குடும்பம் குளித்தே விட்டோம். என் கணவர் என்னை திரும்ப ட்ரையினில் விட்டு விட்டு அந்த கிராமத்தில் இருந்த ரிக்‌ஷாவில் ஏறி பக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு போய் காலை சாப்பாடு,பசங்களுக்கு பால் எல்லாம் வாங்கி வந்தார்.மாலையில் திண்டுக்கல் போய் சேர்ந்தோம்.

 திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல்லிற்கு பஸ்ஸில் வந்து கொண்டு இருந்த போது ராஜீவ் காந்தி இறந்த செய்தி.நைட் ஒரு மணிக்கு விருதுநகருக்கு 3 கி.மீ முன்னாடியே பஸ்கள் நிறுத்த பட்டன.நடந்தே விருது நகர் வந்து அங்கு கிடைத்த ஒரு பாடாதி ரூமில் தங்கி அடுத்த நாள் பஸ்கள் எதுவும் ஓடாததால் அங்கேயே இருந்தோம்.என் கணவர் ஸ்டேஷன் போய் அன்று மாலை முத்து நகர் எக்ஸ்பிரஸ் வருகிறது அதில் திண்டுக்கல் போய் விடலாம் என்று சொல்லவே அன்று ட்ரைனால் தான் தப்பித்தோம். இரவு திண்டுக்கல் வந்து நிம்மதியானோம்.

மங்களூரிலிருந்து கோவா வரை ட்ரையினில் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்ய வேண்டும். அவ்வளவு அருமையான கொங்கன் ரயில்வே பாதையாகும்.மிகப்பெரிய சுரங்கப்பாதைகளும்,ஆறுகளும்,பச்சை பசேலென்று எதை பார்ப்பது என திண்டாட வேண்டும்.

ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் வரும் போது ஓர் இடத்தில் மெல்லிய சலித்தமாதிரியான மண் துகள்கள் ட்ரையின் எங்கும் பரவியது. வாயெல்லாம் மண்.அந்த இடம் போக்ரான். வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது அணுவெடிப்பு நிகழ்த்திய பாலைவன பகுதியாகும். ட்ரைன் போற வேகத்தில் அப்படி ட்ரையினே மண்.

 இப்பவும் சென்னையில் எங்கேனும் போக வேண்டும் என்றால் என் சாய்ஸ் எலக்ட்ரிக் ட்ரையின் தான். என் மகன் நகுல் அவனின் 10 வயது வரை பெரியவனாகி ஏசிகார் வாங்கி அதில் அமர்ந்து ரயில்வே கேட் அருகில் நிறுத்தி போற வர ட்ரைன்,குட்ஸ் வண்டிகளை பார்த்து கொண்டே இருப்பேன்மா என்பான்.அப்போது அவனுடைய மிக பெரிய ஆசை அது ஒன்று தான்.எங்கள் குடும்பமே ட்ரையினில் பயணிப்பதை மிக விரும்பும்.ட்ரையினில் ஏறியதும் side lower berth-க்கு இப்பவும் சண்டை போட்டு கொள்வோம்.என் கணவர் ரயில்வேயில் இருந்த போது ரிசர்வ் செய்ற போதே இரண்டு சைட் லோயர் கேட்டு வாங்கி வருவார்.என் சின்ன மகன் Rishi ட்ரையின் போகாத ஊருக்கு வரவே மாட்டான்.பஸ் என்றால் வரவில்லை என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லி விடுவான்.ரயில் போகும் ஊரில் தான் அவனுக்கு பெண் பார்க்கணும்.

ஒரு முறை தெரிந்த ட்ரைவர் ஒருவருடன் சேர்ந்து இரண்டும் அவர் கூடவே இஞ்சினில் 3 மணிநேரம் பயணம் செய்தார்கள்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அடிக்கடி இப்படி ட்ரையின் பயணம் செய்வதற்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் ஃப்ரீ.
 

Friday, October 12, 2012

மாற்றான் (1811)



இப்போதைய தாய்லாந்தில் (சயாம் என்பது முந்தைய பெயர்) Chang and Eng Bunkers 1811--ல் ஒரு மீனவருக்கு   ஒட்டியே பிறந்தனர். 1843-ல் இரட்டை சகோதரிகளை மணம் செய்து கொண்டனர். சங்கிற்கு 10 குழந்தைகளும், எங்கிற்கு 11 குழந்தைகளும் பிறந்தனர். 1874 ஜனவரியில் நிமோனியா தாக்கிய சங் தூக்கத்திலேயே இறந்து விட மருத்துவர்கள் அவர் உடலை சங்கிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து பிரித்து விட முடிவு செய்தும் எங் அதற்கு ஒத்து கொள்ளாமல் 3 மணிநேரம் கழித்து இறந்து விட்டார்.

இன்றைய காலாமானால் மிக எளிதாக மருத்துவர்கள் இவர்களை உயிருடனே பிரித்து இருப்பார்கள். இறந்த இவர்களின் ஒரே லிவரை இன்றும் பென்சில்வேனியா மியூசியத்தில் வைத்து இருக்கிறார்கள். இவர்களுடைய 200 ஆவது பிறந்த நாளை போன வருடம் இவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.




ஒட்டி பிறந்த இந்த இரட்டை சகோதரிகள் டோரி,லோரி போன செப்டம்பர் 14-ல் தங்கள் 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்கள்.
இப்படி பிறக்கும் இரட்டையர்களுக்கு சயாமிஸ் இரட்டையர்கள் என்று பெயர். லோரி Ten-pin பவுலர்.டோரி பாடகராம். தலை ஒட்டி பிறந்த இவர்களை பிரிக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.ஆனால் எல்லோருடைய  கணிப்பையும் மீறி 50 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்கள். டோரி தன் பெயரை ஜார்ஜ் என்று மாற்றி கொண்டார். சிறிய வயதிலிருந்து இவருக்கு ஆண் போல் இருக்க தான் பிடித்துள்ளதாம். இவரால் நடக்க முடியாது. வீல் சேரில் அமர்ந்துக் கொள்ள அதை மற்றவர் தள்ளிக் கொண்டே நடக்கிறார். இவர்கள் வசிப்பது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்.லோரியின் உயரம் 5’1.ஜார்ஜின் உயரம் 4’4.
என்ன வாழ்க்கை.

ரிலீஸான முதல் மூன்று நாட்கள் இனிமேல் எந்த தமிழ் படமும் பார்க்க கூடாது என்று சகுனி முதல் நாள் பார்த்து விட்டு சபதம் போட்டு இருக்கிறேன். என் மகன் நகுல் காலை 8 மணிஷோவிற்கு போய்விட்டு அப்படியே ஆஃபிஸ் போய் இருக்கிறான்.அவன் நல்லாயிருக்குன்னு சொன்னா, இன்னும் ப்ளாக்கர்ஸ் சொன்னா மட்டுமே மாற்றான் படம் பார்க்கும் எண்ணம். அது வரை உண்மையான மாற்றான்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.