Tuesday, April 10, 2018

North East States 8

வடகிழக்கு மாநிலங்கள் பயணம் 8

அகர்தலா  நாங்க ட்ரையின் விட்டு இறங்கி ஸ்டேஷன் வெளியே வந்து நின்ற போது ஒரு நிமிடத்தில் மொத்த ஸ்டேஷனும் காலியாகி விட நாங்க வெளியூர் என்ற முத்திரையுடன் டாக்சியா, ஆட்டோவா என்று யோசித்து கொண்டிருந்த நொடியில் எங்களை சுத்தி 15 ட்ரைவர்கள் நொய் நொய் என எங்களை படுத்தி எடுத்தி விட்டார்கள்.

நாங்க என்ன என்று பேசும் முன்னாடியே எங்க பேக்கை எடுத்து ஓட ரெடியாக இருந்தனர். 500 ரூபாய் சிட்டிக்கு போக என்ற ஆரம்பித்த கார் பேரம். இன்னொருத்தர் 300 என இன்னொருத்தர் 200 என இன்னொருத்தர் 100 என கூறவும் 100 என்றவர் டக்கென ஒரு  மாருதி ஆம்னி காரை கொண்டு வந்து நிறுத்தி எங்களை தூக்கி உட்கார வைக்காத குறையாய் கடத்திட்டு போனார். இறங்கிய போது இந்த தூரத்துக்கு சென்னையில் 400 ரூபாய் ஆகும் என உணர்ந்து நாங்களாகவே 150 ரூபாய் கொடுத்தோம்.

திரிபுரா முழுவதும் மிக குறைந்த வாடகை, கூலி என ஊரினை சுத்திட்டு வந்தோம். ஒரு ரசகுல்லா 7 ரூபாய். ஏழைகள், பழங்குடியினர் நிறைந்த ஓர் மாநிலம் திரிபுரா. இனியாவது முன்னேற்றத்தை பார்ப்பார்களா.

மறுநாள் காலைக்கும் நைட் வந்த மாருதி ஆம்னி பேசி கொண்டோம்.. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எங்களோடு இருக்குமாறு பேசி கொண்டோம். 1500 ரூபாய் கேட்டார். Room vacate செய்துட்டு எங்க லக்கேஜ் எல்லாம் காரில் ஏத்திட்டு கிளம்பியாச்சு, 

1. திரிபுர சுந்தரி கோயில்:
சக்தி பீடத்தில் அம்மனின் வலது கால் பாதம் விழுந்த இடம். திரிபுராவில் இருந்து 55 கி.மீ தூரத்தில் இருந்த உதய்பூர் என்னும் இடத்தில் இருக்கிறது. Matabari ன்னு சொல்றாங்க. கூட்டமே இல்லாத இந்த கோயிலின் எதிர்பக்கத்தில் பெரிய தெப்பக்குளமும் இருந்தது. தீபாவளி சமயம் இரண்டு லட்சட்த்துக்கும் அதிக மக்கள் வருவார்களாம்.  செம்பருத்தி மாலை வாங்கி போட்டு தரிசித்து வந்தோம்.

இளநீர் நிறைய கிடைத்தது. அடுத்து நாங்க போனது

2. Neer Mahal!!!

1930 -38 ல் ஏரியின் நடுவே கட்டப்பட்ட மஹால்.. Bir Bikram Bhahadur ( Manikya Dynasity) என்ற மன்னன் பணம் கொடுத்து  Martin and Burns என்னும் British company கட்டியது.  ருத்ர சாகர் என்ற ஏரியின் நடுவில் உள்ள மேட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ளது.  53 கிமீ அகர்தலாவில் இருந்து.  ராஜஸ்தானின் ஜல்மஹால் மாதிரி.  கோடை காலத்தில் ராஜாவின் வீடு. இந்த மஹாலில் ஒரு ஓப்பன் ஏர் தியேட்டர் டான்ஸ், ட்ராமா பார்க்க.  24 ரூம்கள் குட்டி குட்டியா. இரண்டு மாடி.  December month இங்கு நடக்கும் விழா மிக சிறப்பு.
10 நிமிட போட் பயணம்.  ஏரி முன்பு மிக பெரியதாக இருந்து இப்போ சின்னதாகி இருக்கும் போல. நைட்டில் பார்த்தா லைட் போட்டு இன்னும் அழகாய் இருக்குமாம்.
Melaghar என்னும் இடத்தில் இருக்கிறது. இங்கே அரசு நடத்தும்  Sagar Mahal Tourist Lodge மிகவும் நன்றாக இருக்கும் என கேள்வி பட்டோம். ருத்ர சாகர் ஏரிக்கரையிலேயே உள்ளது. 

2. Ujayantha Palace
 அடுத்து நாங்கள் போனது முன்பு பேலசாக இருந்து இப்போது மியூசியமாக இருக்கும்  ஒரு அருமையான இடத்துக்கு. இந்தியாவிலேயே நான் பார்த்த பெஸ்ட் மியூசியம் இது.  ரவீந்திரநாத் தாகூர் தான் இதற்கு உஜயானந்தா என்ற பெயர் வைத்தாராம். 1899 01901 King Radha Kishore Manakiya built this Neer mahal கட்டிய அதே கம்பெனி தான் இந்த பேலசையும் கட்டியுள்ளது. 1949 இந்தியாவுடன் இணையும் வரை அரசர் வழி வந்தவர்கள் இங்கு  தான் தங்கி இருந்தனராம்.  அரசு குடும்பத்தினரிடமிருந்து 1972 –ல் திரிபுரா அரசு 2.5 மில்லியன் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாம். 2011 வரை சட்டசபையாக இயங்கி உள்ளது.
முழு வடகிழக்கு மாநிலங்களை பற்றிய முழு செய்தியும் இப்போது இந்த மியூசியத்தில் இருக்கிறது.

ஏகப்பட்ட பழங்குடியினர் வடகிழக்கு மாநிலங்களில். அவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உபயோகித்த பொருட்கள், மிக வித்யாசமான பொருட்கள், அழகிய இயற்கை காட்சிகளின் ஃபோட்டாக்கள், விலங்குகள், பறவைகள் பாடம் செய்து வைக்கப்பட்டவை, மக்களின் வடிவான நகைகள் என அட்டகாசமான மியூசியம்.

அங்கேயிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம்.  போகும் வழியில் என் பசங்களின் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்க 80 ரசகுல்லாக்கள் வாங்கி கொண்டு வடகிழக்கு மாநில டூரை முடித்து கொண்டு Agartala flight ஏறி  கல்கத்தாவில் இன்னொரு ஃப்ளைட் மாத்தி 17 நாட்களுக்கு பின் சென்னைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

Previous Post : https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=821324211388728

#northeast_states

No comments: