Friday, July 23, 2010

இதுக்கு முதல்ல மார்க் போடுங்க!!!

ஒரு புத்திசாலி மாணவனின் பரீட்சை பேப்பர்கள்...இதை திருத்தி விட்டு வேறு வேலை பாருங்க...


என்ன ஒரு வில்லத்தனம்?? இப்ப எந்த கம்யூட்டர் கம்பெனியில் தலைவர் வேலை செய்கிறாரோ????


Thursday, July 22, 2010

குத்துக் குடும்பம்

காலையில் எழுந்த உடன், ஆபிஸிலிருந்து வந்தவுடன் ஆக மொத்தம் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஸ்டார் மூவிஸ்,HBO என டீவியே கதி என்று இருக்கும் மாமாக்கு அடிக்கடி குத்து.

எப்ப வெளியில் போக வேண்டுமோ அதற்கு 10 நிமிடங்கள் முன்னால் படுக்கையினை விட்டு எழுந்து அதன் பின் அரக்க பரக்க கிளம்பும் என் பெரிய மகனுக்கு அப்படி கிளம்பும் நேரத்தில் ஒரு குத்து.

ஒரு மணிநேரமாக இந்த ட்ரஸ் அந்த ட்ரஸ் என் அயர்ன் செய்து வைத்து இருக்கும் எல்லா ட்ரஸ்களையும் தினம் போட்டு போட்டு கலைத்து, களைத்து கடைசியில் முதலாவது போட்ட டிரஸையே போட்டு காலேஜ் போகும் என் இரண்டாவது மகனுக்கு ஒரு குத்து.

இவர்கள் மூவரும் கிளம்பும் காலை நேரத்தில் என்னமோ ஆபிஸிற்கு லேட்டான மாதிரி சாமி அறையில் பூஜை செய்ய போவதற்கு அவசரமாய் தயாராகும் என் தாயாருக்கு ஒரு குத்து.

வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் நேரம் ஆக ஆக மதியம் 12 மணிக்கு அனைத்து பாத்திரங்களையும் நான் சுத்தம் செய்து வைத்த பின் வரும் பணிப்பெண்ணிற்கு ஒரு குத்து.

சொன்ன பேச்சை சுத்தமாய் கேட்காமல் திமிராய் திரியும் எங்கள் நாய் ரீனா தெரியாதவர்களிடம் குலைந்து கொண்டும் தெரிந்தவர்கள் வீட்டிற்கு வரும் போது குலைத்து கொண்டும் இருக்கும் போது ஒரு குத்து.

இந்த வீக் எண்டில் எங்காவது குடும்பத்துடன் போகலாம் என்று இருக்கும் போது என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி செல்லும் என் தம்பிக்கு கும்மாங் குத்து.ரெஸ்ட் எடுக்கிறானாம்.

என் டிரஸ்களையெல்லாம் நானே மறந்து போய் விடும் அளவிற்கு அவரின் உபயோகத்திற்கு எடுத்து போனால் திரும்ப கொடுக்க மறக்கும் என் தங்கைக்கு குத்து. வேலைக்கு போறாராம்.

நான் பேசும் போது காது கொடுத்து கேட்காமல் குத்து மதிப்பாய் தலையினை ஆட்டிக் கொண்டே செல் ஃபோனில் sms அனுப்பிக் கொண்டே இருக்கும அனைவருக்கும் அவ்வப்போது குத்து நிச்சயம்.

பிட்ஸா,மேரிப்ரவுன் என்று பிளான் போடும் நேரத்தில் அது எல்லாம் அடிக்கடி சாப்பிட்டால் நல்லது இல்லை என்று இட்லி, தோசை செய்து வைக்கும் எனக்கு மகன்கள் கொடுக்கும் குத்து.

ஏ ஜோக் எழுதி உடன் எழுதும் மற்ற நல்ல செய்திகளை நாம் பாராட்ட முடியாமல் செய்யும் நம்மில் சில பதிவர்களுக்கு எப்படியும் உண்டு ஒரு மைனஸ் குத்து.

இப்போது இந்த காரணங்களுக்காக தான் குத்துக்கள் கொடுக்கப்படுகிறது. காரணங்கள் அவ்வப்போது மாறலாம் ஆனால் குத்துக்கள் தொடர்கின்றன்.

Wednesday, July 21, 2010

என்ன ஆச்சுன்னு தெரியலை!!!உதவி!!!உதவி!!!

இந்த மாதம் கூட பதிவுகள் என்னுடைய ப்ளாக்கில் நான் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால்,என்னை ஃபாலோ செய்பவர்களுக்கு அவர்களுடைய லிஸ்டில் நான் 9 மாதங்களுக்கு முன்னாடி போட்ட பதிவு தான் தெரிகிறது.

http://thamirafavorites.blogspot.com இந்த லிஸ்ட்டில் கடைசியில் உள்ள அக்கம் பக்கம் என்னும் ப்ளாக் என்னுடையது.செக் செய்ய இந்த லிஸ்ட்டினை கொடுத்து உள்ளேன். நான் என்னுடைய டெம்ப்ளேட்டினை சில மாதங்கள் முன்னாடி மாற்றினேன்.அதனால் இந்த பிரச்சனையா? புதியதாய் நான் எழுதும் பதிவுகளும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் தெரிய என்ன செய்ய வேண்டும்? தெரிந்த நண்பர்கள் உதவுங்கள்.நன்றி.

Wednesday, July 14, 2010

மாங்கனி...

காரைக்கால் மாங்கனி திருவிழா, என் அம்மா ஒவ்வொரு வருடமும் போக வேண்டும் என கேட்டு கேட்டு இந்த வருடம் காரைக்காலுக்கு மாங்கனி திருவிழாவிற்கு போனோம்.

காரைக்கால் அம்மையார் எனப்படும் புனிதவதி அவரின் கணவருக்கு வாங்கி வைத்திருந்த மாங்கனிகளை சிவனடியாருக்கு கொடுத்து விடுகிறார். மதியம் உணவிற்கு வரும் அவரின் கணவருக்கு மாங்கனிகள் இல்லையே என கவலையில் புலம்ப சிவன் அவருக்கு இரண்டு மாங்கனிகள் தருவதாக சொல்லப்படுகிறது.
அந்த அம்மையாரின் கணவன் இதை அறிந்து இவ்வளவு பக்தியா தன் மனைவி மனித பிறவி இல்லை என பயந்து வேறு ஊருக்கு சென்று இன்னொரு திருமணம் செய்து பிறக்கும் தன் மகளுக்கு புனிதவதி என்று பெயர் சூட்ட.தன் கணவரை காண காரைக்கால் அம்மையார் செல்கிறார். தன் இரண்டாவது மனைவி மற்றும் தன் மகளுடன் அவரின் கணவர் காலில் விழுந்து வணங்குகிறார். காரைக்கால் அம்மையார் சிவனிடம் தன் இளமை மறைந்து பேய் உருவம் வேண்டும் என்று வரம் பெற்று அப்படியே மாறி விடுகிறார். பின் கைலாய்ம் செல்கிறார். தலைகீழாக கைகளால் மலை முழுவதும் ஏறினார் என்று கதை உள்ளது. அவர் சிவனிடம் மாங்கனி பெற்ற ஆனி மாதம் பெளர்ணமி தினம் அன்று காரைக்காலில் கொண்டாடுகிறார்கள்.


மாங்கனிகளை கூட்டத்தில் எறிவதும் அதை மற்றவர்கள் பிடிப்பதும் என்று ஒரே கூட்டம். சின்ன பையன்கள் பைகளில் அப்படியே தூக்கி எறியும் மாங்கனிகளை பிடித்து பையினை நிரப்பிக் கொண்டு இருந்தனர்.அந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும் என்று நம்புகிறார்கள்.


அன்று மாலை வேளாங்கண்ணி சென்றோம். மாலை வேளையில் வேளாங்கண்ணி கோயில் இப்படி மிக அழகாக இருந்தது.

Tuesday, July 13, 2010

தூக்கம் தூக்கமா வருது...

என் ஃப்ரெண்ட் ஜெயாவின் அண்ணன் திருநெல்வேலியில் மெசானிக் லாட்ஜ் என்னும் ஒரு பழமையான கிள்ப் மீட்டிங்கை வீட்டில் நடத்துவதால் அதில் கலந்து கொள்ள தனியா ட்ராவல் செய்ய தயக்கமாய் இருப்பதால் என்னை துணைக்கு கூப்பிட்டார். சரி வீக் எண்டில் ஒரு மாறுதலாய் இருக்குமே என்று போனேன்.

வெள்ளி மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் எனக்கு மிக பிடித்த சைட் லோயர்,அப்பர் பெர்த் எங்களுடையது.காலை எதிர் எதிரில் நீட்டி அமர்ந்து பேச ஆரம்பித்தோம். உள்ளே இருக்கும் 6 சீட்டிலும் ஒரு குடும்பம் இரண்டு 8,10 வயது பெண் குழந்தைகளுடன் வந்து இருந்தனர். அவர்கள் நான்கு பேரும் பேசி கொண்டு இருந்தனர். அந்த குழந்தைகள் எங்கள் சீட்டில் ஏறி மேலே ஏறுவதும் இறங்குவாதாகவும் மாலை 6லிருந்து 10 வரை செம சேட்டை. எங்களுக்கு நிம்மதியாய் பேசவே முடியவில்லை. ஏதோ எங்கள் பிள்ளைகள் போல அவர்கள் கீழே விழாமல் இருக்க அடிக்கடி பிடித்துக் கொண்டு இருந்தோம்.
சாப்பாட்டுக் கடை முடித்து திரும்ப 10.30 வரை பேசிக் கொண்டு இருந்தோம்.அனைவரும் லைட் அணைத்து படுக்க ஆயத்தமானோம்.

ஜெயா கீழ் பெர்த்திலும், நான் மேல் பெர்த்திலும் படுத்து விட்டோம்.
அப்போது அவர்களுடைய 2 வயதுடைய ஒரு பெண் குழந்தை தூங்கி எழுந்தது.இப்போது அவர்களின் பெரிய குழந்தைகளை தூங்க வைத்தார்கள்.அம்மாவும் உடனே தூங்கி விட்டார். அப்பா குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தார். லைட் அணைக்காமால் அக்குழந்தையுடன் இரவு 1 மணிவரை ஒரே சத்தம். அடுத்தவர்களுக்கு தொந்தரவே என்ற எண்ணம் அவருக்கு துளி கூட இல்லை. ஆனால் அவருடன் வந்தவர்கள் அனைவரும் நன்றாக தூங்கினர்.பழக்க தோஷம் போல் இருக்கிறது. மதுரையில் இரவு 1.50க்கு அவர்கள் இறங்கின பின் தான் நாங்கள் இருவரும் தூங்க முடிந்தது. இரண்டரை மணி நேரத்தில் திருநெல்வேலி வந்தது.சின்ன குழந்தையையும் ராத்திரியில் தூங்க செய்து இருக்கலாம் மாலையில் அந்த குழந்தையினை விளையாட வைத்து இருக்கலாம்.என்னதான் குழந்தை ஆசை இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் அய்யோ என்று இருந்தது.

இரண்டு நாட்கள் வீட்டினை விட்டு போவதால் வெள்ளி முழுவதும் எங்கள் இருவருக்கும் வீட்டில் செமத்தியாய் வேலை இருந்தது. ஊருக்கு திடீரென்று செல்வதால் ஷாப்பிங் வேறு சென்று வந்து இருந்தோம்.சனி முழுவதும் அங்கு போனதில் இருந்து மீட்டிங்கிற்காக ஒரே வேலை. சனி இரவு அந்த மீட்டிங் முடிந்து திருநெல்வேலியில் படுக்க இரவு 1 மணி ஆனது. ஞாயிறு முழுவதும் இன்னும் சில ஃப்ரெண்ட் வீட்டிற்கு விசிட். ஞாயிறு இரவு பஸ்ஸில் சென்னை திரும்பினோம்.எனவே மூன்று நாட்களும் சரியான தூக்கம் இல்லை. திங்கள் முழுவதும் கனவில் மிதப்பது மாதிரி ஒரு நிலையில் இருந்தேன். தூங்கி தூங்கி எழுந்தேன்.

அவர் அவர் குழந்தைகளை அவர் அவர் கொஞ்ச வேண்டியது தான் அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல்.எப்ப தான் மாறுவார்களோ இந்த பேரண்ட்ஸ்.எதோ குடும்பத்தினை விட்டு ஜாலியாக இரண்டு நாட்கள் ஃப்ரெண்டுடன் இருக்கலாம் என்று போனதற்கு யார் கண்ணு பட்டது என்று தெரியவில்லை இன்னும் தூக்க கலக்கத்தில் இருக்கிறேன்.