Tuesday, April 10, 2018

North East States 8

வடகிழக்கு மாநிலங்கள் பயணம் 8

அகர்தலா  நாங்க ட்ரையின் விட்டு இறங்கி ஸ்டேஷன் வெளியே வந்து நின்ற போது ஒரு நிமிடத்தில் மொத்த ஸ்டேஷனும் காலியாகி விட நாங்க வெளியூர் என்ற முத்திரையுடன் டாக்சியா, ஆட்டோவா என்று யோசித்து கொண்டிருந்த நொடியில் எங்களை சுத்தி 15 ட்ரைவர்கள் நொய் நொய் என எங்களை படுத்தி எடுத்தி விட்டார்கள்.

நாங்க என்ன என்று பேசும் முன்னாடியே எங்க பேக்கை எடுத்து ஓட ரெடியாக இருந்தனர். 500 ரூபாய் சிட்டிக்கு போக என்ற ஆரம்பித்த கார் பேரம். இன்னொருத்தர் 300 என இன்னொருத்தர் 200 என இன்னொருத்தர் 100 என கூறவும் 100 என்றவர் டக்கென ஒரு  மாருதி ஆம்னி காரை கொண்டு வந்து நிறுத்தி எங்களை தூக்கி உட்கார வைக்காத குறையாய் கடத்திட்டு போனார். இறங்கிய போது இந்த தூரத்துக்கு சென்னையில் 400 ரூபாய் ஆகும் என உணர்ந்து நாங்களாகவே 150 ரூபாய் கொடுத்தோம்.

திரிபுரா முழுவதும் மிக குறைந்த வாடகை, கூலி என ஊரினை சுத்திட்டு வந்தோம். ஒரு ரசகுல்லா 7 ரூபாய். ஏழைகள், பழங்குடியினர் நிறைந்த ஓர் மாநிலம் திரிபுரா. இனியாவது முன்னேற்றத்தை பார்ப்பார்களா.

மறுநாள் காலைக்கும் நைட் வந்த மாருதி ஆம்னி பேசி கொண்டோம்.. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எங்களோடு இருக்குமாறு பேசி கொண்டோம். 1500 ரூபாய் கேட்டார். Room vacate செய்துட்டு எங்க லக்கேஜ் எல்லாம் காரில் ஏத்திட்டு கிளம்பியாச்சு, 

1. திரிபுர சுந்தரி கோயில்:
சக்தி பீடத்தில் அம்மனின் வலது கால் பாதம் விழுந்த இடம். திரிபுராவில் இருந்து 55 கி.மீ தூரத்தில் இருந்த உதய்பூர் என்னும் இடத்தில் இருக்கிறது. Matabari ன்னு சொல்றாங்க. கூட்டமே இல்லாத இந்த கோயிலின் எதிர்பக்கத்தில் பெரிய தெப்பக்குளமும் இருந்தது. தீபாவளி சமயம் இரண்டு லட்சட்த்துக்கும் அதிக மக்கள் வருவார்களாம்.  செம்பருத்தி மாலை வாங்கி போட்டு தரிசித்து வந்தோம்.

இளநீர் நிறைய கிடைத்தது. அடுத்து நாங்க போனது

2. Neer Mahal!!!

1930 -38 ல் ஏரியின் நடுவே கட்டப்பட்ட மஹால்.. Bir Bikram Bhahadur ( Manikya Dynasity) என்ற மன்னன் பணம் கொடுத்து  Martin and Burns என்னும் British company கட்டியது.  ருத்ர சாகர் என்ற ஏரியின் நடுவில் உள்ள மேட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ளது.  53 கிமீ அகர்தலாவில் இருந்து.  ராஜஸ்தானின் ஜல்மஹால் மாதிரி.  கோடை காலத்தில் ராஜாவின் வீடு. இந்த மஹாலில் ஒரு ஓப்பன் ஏர் தியேட்டர் டான்ஸ், ட்ராமா பார்க்க.  24 ரூம்கள் குட்டி குட்டியா. இரண்டு மாடி.  December month இங்கு நடக்கும் விழா மிக சிறப்பு.
10 நிமிட போட் பயணம்.  ஏரி முன்பு மிக பெரியதாக இருந்து இப்போ சின்னதாகி இருக்கும் போல. நைட்டில் பார்த்தா லைட் போட்டு இன்னும் அழகாய் இருக்குமாம்.
Melaghar என்னும் இடத்தில் இருக்கிறது. இங்கே அரசு நடத்தும்  Sagar Mahal Tourist Lodge மிகவும் நன்றாக இருக்கும் என கேள்வி பட்டோம். ருத்ர சாகர் ஏரிக்கரையிலேயே உள்ளது. 

2. Ujayantha Palace
 அடுத்து நாங்கள் போனது முன்பு பேலசாக இருந்து இப்போது மியூசியமாக இருக்கும்  ஒரு அருமையான இடத்துக்கு. இந்தியாவிலேயே நான் பார்த்த பெஸ்ட் மியூசியம் இது.  ரவீந்திரநாத் தாகூர் தான் இதற்கு உஜயானந்தா என்ற பெயர் வைத்தாராம். 1899 01901 King Radha Kishore Manakiya built this Neer mahal கட்டிய அதே கம்பெனி தான் இந்த பேலசையும் கட்டியுள்ளது. 1949 இந்தியாவுடன் இணையும் வரை அரசர் வழி வந்தவர்கள் இங்கு  தான் தங்கி இருந்தனராம்.  அரசு குடும்பத்தினரிடமிருந்து 1972 –ல் திரிபுரா அரசு 2.5 மில்லியன் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாம். 2011 வரை சட்டசபையாக இயங்கி உள்ளது.
முழு வடகிழக்கு மாநிலங்களை பற்றிய முழு செய்தியும் இப்போது இந்த மியூசியத்தில் இருக்கிறது.

ஏகப்பட்ட பழங்குடியினர் வடகிழக்கு மாநிலங்களில். அவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்கள் உபயோகித்த பொருட்கள், மிக வித்யாசமான பொருட்கள், அழகிய இயற்கை காட்சிகளின் ஃபோட்டாக்கள், விலங்குகள், பறவைகள் பாடம் செய்து வைக்கப்பட்டவை, மக்களின் வடிவான நகைகள் என அட்டகாசமான மியூசியம்.

அங்கேயிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம்.  போகும் வழியில் என் பசங்களின் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கொடுக்க 80 ரசகுல்லாக்கள் வாங்கி கொண்டு வடகிழக்கு மாநில டூரை முடித்து கொண்டு Agartala flight ஏறி  கல்கத்தாவில் இன்னொரு ஃப்ளைட் மாத்தி 17 நாட்களுக்கு பின் சென்னைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

Previous Post : https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=821324211388728

#northeast_states

Northeast States - 7

பயணம் 7

Guwahati ( Assam) to Dharmanagar ( Tripura) Train Route. 430 kms. Beautiful Train route.
Journey Time: 4.30 am to 5.30 pm by Kanchanjunga express

2016  March ல் தான் அகர்தலாவிற்கு ட்ரையின் Broad Guage லைனே வந்துள்ளது. அதற்கு முன் லும்டங் என்ற அசாமின் ஊரிலிருந்து தர்மாநகர் – திரிபுராவிற்கு மீட்டர் Guage லைன் மட்டும் தான். நாங்க 2016 நவம்பரில் போய் வந்தோம்.  புது லைனில் புது ட்ரையின் விட்டிருக்கலாம். எந்த ஊரிலோ கழிச்சு கட்டின கேரேஜேஸ்

இந்த ட்ரையின் ரூட்டுக்கு ஐரோப்பா நாடுகளில் இருக்கும் முழு கண்ணாடியிலான ட்ரையின் மாதிரி போட்டா இன்னும் அழகா இருக்கும். அதெல்லாம் எப்ப வருமோ.

ஆனா நம்ம மக்கள் இருக்கும் ட்ரையினை நல்லா வைச்சா தான் என்ன?? இதுக்கு மேல் அசிங்கமாக்க முடியாது.
புக் செய்த சைட் லோயரை பேப்பர் வைத்து சுத்தமாக்கிட்டு ஜன்னல் அருகில் உட்கார்ந்து திகட்ட திகட்ட வெளியே பார்த்தோம்.

காலையில் 4.30 க்கு ட்ரையின் ஏறியது.
ரெஸ்ட் ரூம் பக்கமே போகாதீங்கன்னு பசங்க சொல்லிடுச்சுங்க. ட்ரையின் வழியில் 4 ஸ்டேஷன்களில் நின்னது. அதில் மதியம் 12 மணிக்கு வந்த New Haflong என்னும் அதிக கூட்டமில்லாத ஸ்டேஷனில் வண்டி உள்ளே நுழையும் போதே நாங்க இருந்த கோச் ப்ளாட்ஃபார்மில் இருந்த வெயிட்டிங் ரூம் பக்கமா நிக்கவும் ட்ரையின் விட்டு ஓடோடி ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். 5 நிமிடங்கள் தான் அந்த ஸ்டேஷனில் நிற்குமாம்!.
இயற்கையை ரசிப்பதற்கு என்ன பாடெல்லாம் படவேண்டியிருக்கு. 

1. UNAKOTI - TRIPURA
 DHARMANAGAR 21 KM தூரத்தில் உன்னகோடி என்ற அற்புதம் இருக்கிறது.

Unakoti hill, literally meaning, one less a crore - koti in Bengali.
A wonderful place to visit. Amazing rock carvings.

Guwahati  யிலிருந்து அகர்தலா போகும் ட்ரையினில்  Dharmanagar என்ற ஊரில் இறங்கணும். நாங்க இறங்கும் போது மாலை 5.30 மணி. இந்த ஊர் குளிர் இல்லை.
மெயின் ஏரியா போய் Raat Din என்ற லாட்ஜில் தங்கினோம். மிக அருமையான ஒரு ரூம் ரூபாய் 700 க்கு கிடைத்தது.
அங்கேயிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் இந்த Unakoti இருக்கு. போக வர ஒரு ஆட்டோ 600 ரூபாய்க்கு பேசி  மறு நாள் காலை போனோம்.

உயரத்தில் இருந்து பார்க்கும் போது அப்படி ஒரு அழகு. பாறைகளில் அதன் போக்கிலேயே செதுக்கப்பட்ட சிவனின் தலை அதில் இரண்டு பக்கமும் விரிந்து கிடக்கும் முடி,வாயை மூடி இல்லாமல் வரிசையாக பற்கள்,கங்கை,நிலவு முடியில் இருப்பதை போல இருக்கு,
கொஞ்சம் இறங்கி பாத்தா பிள்ளையார் மூன்று சிலைகளாக!!

அங்கேயிருந்து மேலே பார்த்தா மூன்று இடங்களில் பாறைகளில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான சிலைகள்.
கொஞ்ச தூரம் ஒத்தையடி பாதையில் சென்றால் அங்கேயும் மூன்று முகங்களுடன் ஒரு சிலை.
முகம் சிதைந்து.
போகும் பாதை செடிகள் அடர்ந்து காட்டில் இருக்கோம் என்ற உணர்வை தந்தன.
சில சமயம் அருவியாக தண்ணீர் கொட்டியதால் சில பாறைகள் அடித்து செல்லப்பட்டு அங்கே இங்கே என சிற்பங்களாக கிடக்கின்றன. முகம் பாதியாக,இன்னும் வேலைப்பாடுடைய பாறைகள்.
ஒரு நந்தியும், ஒரு பெரிய பாறையில் சிவனின் கையில் ஏதோ ஏந்தி இருப்பதும் எலும்பு மாலையும் தெரிந்தது.
அந்த இடமே ரம்யமாக இருந்தது .

This holy place dates back between 7th to 9th centuries. சிவனையும் சேர்த்து கோடி கடவுள்களும், தேவர்களும் காசிக்கு போகும் முன் இந்த இடத்தில்  நைட் தங்கி இருக்கிறார்கள். காலையில் சூரிய உதயத்துக்கு முன் யாரும் எழுந்திருக்காத போது சிவன் மட்டும் எழுந்து மத்தவங்களை கல்லாகும் படி சாபம் கொடுத்து விட்டாராம். எனவே கோடிக்கு ஒன்று குறைவான சிலைகள் இங்கே இருக்காம்.
சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த இடத்தை மேலும் செப்பனிட அரசு 12 கோடி ஒதுக்கி ஆர்க்கியலாஜி டிபார்ட்மெண்டிடம் கொடுத்து UNESCO விடமும் ஹெரிடேஜ் செண்டராக்க பேசி வருகிறதாம்.

இங்கேயும் வழக்கம் போல நாங்க நான்கு பேர் தான் இருந்தோம். ஆட்டோக்காரர் வெளியே வெயிட் செய்தார். அங்கு சாமியார்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாங்க. நாங்கள் கிளம்பும் போது சில டூரிஸ்டுகள் வந்தனர்.

மிக அழகான மலைப்பகுதியில் இது வரை பார்த்தேயிராத ஒரு அழகு இந்த இடம்.  என் மகன் நகுலுக்கு நான் நன்றி சொன்னேன். எப்படிடா இப்படி ஒரு இடத்தை தெரிந்து கூட்டி வந்தன்னு.

திரிபுராவில் உன்னகோட்டி பார்த்து ரசித்து return to Dharmanagar by Auto. 14 நாட்களுக்கு பிறகு இங்கு கிடைத்த கெட்டி கெட்டி தயிர், தாளித்த பருப்பு, நெய் , சின்ன அரிசி சாதம், உருளை கிழங்கு வறுத்தது வாங்கி திருப்தியாக மதியம் சாப்பிட்டு
மதியம் 2 மணிக்கு ட்ரையின் ஏறி திரிபுராவின் தலைநகர் அகர்தலா கிளம்பினோம், 170 km போகணும்.

Previous post : https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=820423728145443
#northeast_states

வடகிழக்கு மாநிலங்கள் ஒரு பார்வை

வடகிழக்கு மாநிலங்கள் (9)

Arunachal and Nagaland we must  take Inner Line permit to enter their States.
We can take in Airport and Deputy commissioner office there itself. Must produce proper Id Proof and 2 photos.
 Less population in AP, More population in Assam and Nagaland.

வட கிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மிக பெரியது. அருணாச்சல ப்ரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மலை ஏறி சென்றே அடைய முடியும். நாகாலாண்ட்டின் கேப்பிடல் சிட்டி கோஹிமா மலை மேல் இருப்பதாலும் தற்சமயம் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் அந்த ஊருக்குள் போவதே பெரும்பாடாக இருக்கு, நாகாலாந்திலிருந்து மணிப்பூர் ரோட் அகலமாய் இருந்தாலும் ரோட்டில் பல இடங்கள் மிக மோசமாக சேதமடைந்து இருந்தது.

வட கிழக்கின் பல பகுதிகளும் ரோடில் போகும் போது புழுதி, தூசி என வாகனங்கள் போவதால் ரோட்டின் இரு புறம் இருக்கும் கடைகள், வீடுகள் பழையவைகளாக காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் நீட்ட குழாய்களை வைத்து ரோட்டில் தண்ணீர் அடிச்சுட்டு இருந்தாங்க. தூசி பறப்பதை அடக்குவதற்காக அந்த மக்கள் பெரும் பாடு படுவதை பார்க்க முடிந்தது. மேலும் நீண்டநேரம் பயணம் செய்தபின்புதான் ஒரு இடத்தைப்பார்க்க முடிந்தது.

நாங்கள் போகும் போது தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுவதை எங்கும் பார்க்கலை. கோடை எப்படின்னு தெரியலை. நிறைய இடங்களில் சின்ன சின்ன குளம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. சரியான தெருக்கள் இன்றி ஏறியும் இறங்கியும் தான் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போகணும்.

எனவே  பெண்கள் ஸ்லிம்மாக இருப்பதாக நினைக்கிறேன். முதுகில் கை குழந்தைகளை சுமந்தப்படி பெண்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

தொழில் என பார்த்தால் மர சம்பந்தப்பட்ட வேலைகள்., சில இடங்களில் பவர்ப்ளாண்டுகளும் நிறைய பார்த்தோம்.

மணிப்பூரில் பெண்கள் தான் அதிக இடங்களில் தென்ப்பட்டார்கள். காலை 5 மணிக்கெல்லாம் மார்க்கெட் பிசியாகிடுது. அந்த குளிரில் எப்ப எழுந்து எப்ப
மார்க்கெட் வர்ராங்கன்னு தெரியலை. பெண்கள் சீரியசாக இருந்த்தாக தோணுச்சு. ஃப்ரெண்ட்லியாக சிரிக்கலை. அவர் அவர் வேலையில் செம பிசியாக இருந்தாங்க.
நாகாலாந்து பெரும்பாலான இடங்கள் கிறிஸ்த்துவர்களாக தெரிந்தார்கள். எங்கே பார்த்தாலும் சர்ச். நெருக்கடியான இடங்களுக்கு தான் நாங்க் சென்றோம். ரோடெல்லாம் கியூ மாதிரி தான் கார்கள் நகர்ந்தன.

நாகலாந்து, அருணாச்சலத்தில் Jeans தான் தேசிய உடை மாதிரி தோணுச்சு. நீண்ட முடியை ஸ்ட்ரைட் செய்து இருந்தாங்க. எங்கே பார்த்தாலும் அட்லீஸ்ட் ஒரு ப்யூட்டி பார்லர் குக்கிராமத்தில் கூட பார்க்க முடிந்தது.

அசாம் மிக செழிப்பான பூமியாக தோன்றியது. மக்கள் இங்கே ஃப்ரெண்டிலியாக இருந்தாங்க. அசாம் சில்க் மிக காஸ்ட்லி. பார்க்கவே துணி அவ்ளோ Good feel aha இருந்துச்சு.

 அசாமில் மேகலா சடார் என்னும் ட்ரஸ் பெரும்பாலான பெண்களின் உடையாக இருக்கு. பெண்கள் பாரம்பரிய உடைகளில் பெருபாலும் பார்த்தது இம்பாலில் தான். மேலே அவர்கள் போட்டிருக்கும் ஷாலில் அழகிய எம்ப்ராய்டரி போட பட்டிருந்தன. காஷ்மீர் எம்ப்ராய்டரி.

சாப்பாடு
நானும் என்  மகன்களும் அசைவம் சாப்பிடுவோம். ஆனால், நானும், பெரியவனும் மீன் சாப்பிட மாட்டோம். சின்னவன் மீனும் சாப்பிடுவான். என் தங்கை முட்டை கூட சாப்பிடாத சைவம். தயிரும் சாப்பிடாது.
ஒரு சின்ன இண்டக்ஷன் ஸ்டவ், ஒரு சின்ன குக்கர், குக்கரில் வைக்கும் பாத்திரமும் எடுத்து போயிருந்தோம். தவாங்கில் தங்கி இருந்த இரண்டு நாள் சாதம் பருப்பு, ரசம் வைத்தோம். அங்கே காலிஃப்ளவர் வாங்கி செய்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் நைட் லாட்ஜுக்கு போய் தங்கி விடிகாலையில் எழுந்து குளித்து கிளம்பி விட்டதால் சமைக்க முடியவில்லை.  காபி, டீ பழக்கமே எங்களுக்கு இல்லை.

காலை வேளையில் லாட்ஜ் விட்டு கிளம்பும் போது எந்த ஹோட்டலும் திறந்தே இருக்காது. போகும் போது ரோட்டோர கடைகளில் பூரி, எதாவது சப்ஜி 10 அல்லது 20 ரூபாய்க்கு ஒருவருக்கு கிடைச்சுடும். சூடா கிடைக்கும். கட்டாயம் எல்லா மாநிலங்களிலும் ரசகுல்லா இருந்தது. அதை இரண்டு, இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு போனோம் என்றால் மதியம் வரை தாங்கும். அருணாச்சல பிரதேசத்தில் கிவி பழம் நிறைய கிடைத்தது கிலோ 100 ரூபாய். அங்கே கிவி ஃபார்ம் இருக்கிறது.
மதிய வேளைகளில் white rice, பருப்பு, உ.கிழங்கு கிடைத்தது.
இல்லைன்னா veg fried rice, Noodles கிடைத்தது. மாலை வேளைகளில் Momo, சமோசா கிடைத்தது, இரவு பெரும்பாலும் நூடுல்ஸும், ரொட்டியும் தான். பழங்கள் நிறைய வாங்கி வைத்து கொண்டோம். ஜூஸ், பிரட், ஜாம், பட்டர் வைத்திருந்தோம். ஷில்லாங்கில் மிலிட்டரி ரூமில் தங்கியதால் 2 நாள் மிக அருமையான சாப்பாடு காலை, நைட் சாப்பிட்டோம்.

மணிப்பூரில் முழுச்சாப்பாடு கிடைத்தது. ஆனால் சாதம் கொஞ்சம் பிசுபிசுவென sticky குழைந்து இருந்தது. சைட் டிஷ் நிறைய காய்கறிகள் நிறைய ஸ்பைஸ் போட்டிருந்தாங்க.

வடகிழக்கு மாநில மக்கள் கீரை, பச்சை காய்கறிகளை நான்வெஜ்ஜுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீயா சூப் பதத்தில் வைத்து சாப்பிடுகிறார்கள். ஏகப்பட்ட ஸ்பைசஸ் சேர்க்கிறார்கள். மலைப்பகுதியில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.

நாகாலாந்தில் தான் புழு, பூச்சிகள், தவளை கூறு கட்டி விற்பதை பார்த்தோம். மாலை வேளையில் ஆண்கள் 2 கூறு புழு, அல்லது எதாச்சும் பூச்சி வாங்கிட்டு போறாங்க.

கிராமங்களில் இருந்து பெண்கள் எடுத்து வந்து விற்கிறார்கள்.
மீன், கருவாடு எங்கேயும் விற்பதை பார்த்தோம். ஆற்று மீன், இல்லையெனில் பெங்காலில் இருந்து வரும், பங்களாதேசில் இருந்து வரும் கடல் மீன்கள் பெரிசு பெரிசாக பார்த்தோம்.
மேகாலயவில் மாட்டுக்கறி, பன்றி கறி அதிகம் விற்பதை பார்த்தோம்.

.நாங்கள் ஃப்ளைட்டில் கவ்ஹாத்தி போக ஒரு டிக்கெட் 3700 ரூபாயும், திரிபுரா அகர்தலாவில் இருந்து Return to Chennai 3400 ரூபாயும் ஆச்சு.
 14 நாட்கள் கார் வாடகை ஒரு நாளைக்கு 2,500 ரூபாய். டீசல். கிட்டதட்ட 3000 கி,மீ டீசல் செலவு,
16 நாட்கள் நைட் தங்க ரூம் நால்வருக்கும் சேர்ந்து ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் 1,500 ரூபாய்,
மூன்று நேர சாப்பாடு, சில இடங்களில் அனுமதிக்கான டிக்கெட், போட்டிங் செலவு, திரிபுரா போக ட்ரையின் டிக்கெட் என எங்களுக்கு மொத்தமாக 99,999!!! ரூபாய் ஆச்சு.

மிசோரம் மட்டும் நாங்கள் போகவில்லை. மீதி ஆறு மாநிலங்களும் போனோம்.
 
நாங்கள் இந்த பயணத்தில் ஒரு டூரிஸ்ட் வேனில் வந்த ரிடையர்டான ஒரு ஃபரெண்ட்ஸ் க்ரூப்பை பார்த்தோம். அவர்கள் பூனாவில் இருந்து கவ்ஹாத்தி வந்திருந்தாங்க. மிசோரமும் சேர்த்து நாங்கள் பார்த்த இடங்களையும், சில இடங்கள் நாங்கள் எக்ஸ்ட்ராவாக பார்த்திருந்தோம். அவர்கள் கவ்ஹாத்தியில் ஒரு ட்ராவல்சில் புக் செய்து வந்து இருந்தாங்க. ஃப்ளைட் நீங்கலாக அவர்கள் ஒவ்வொருத்தரும் Travels க்கு கொடுத்த பணம் ரூபாய் 75,000!

Tuesday, April 03, 2018

North East States - 6

வடகிழக்கு மாநிலங்கள்  பயணம் 6:

காசிரங்காவிலிருந்து  மறுநாள் விடி காலை கவுஹாத்தி நோக்கி எங்கள் பயணம். என் தங்கையை காலை ஃப்ளைட் சென்னைக்கு ஏத்தி விட்டுவிட்டு சென்னையில் இருந்து வந்த என் மகனின் ஃப்ரெண்டை பிக் அப் செய்துட்டு கவுகாத்தியிலிருந்து மேகாலயா ஷில்லாங் கிளம்பிட்டோம். 100 கி,மீ தூரம் 3 மணிநேர பயணம். மேகாலயா அருமையான ரோடு. நாலு வழி சாலை மலை மேலே.

இங்கே என் ஃபெரெண்டின் கணவர் ஏற்ப்பாட்டில் ஆர்மி மெஸ்ஸில் தங்க ரூம் ஏற்பாடு செய்து இருந்தோம். Rs. 700 for four persons. Very big room. ஆர்மி மெஸ்ஸிலேயே அருமையான சாப்பாடு.

1. மறுநாள் காலை  Krung Suri water fall நோக்கி பயணம்.- Jowai Hill. 84 km from Shillong. Entry rs.40 per head.

இங்கேயும் வழக்கம் போல நாங்க மட்டுமே இருந்தோம். கார் நிறுத்துமிடத்திலிருந்து ஒரு பள்ளத்தில் அரை மணி நேரம் நடந்த பின் அழகிய  அருவி. இங்கே என் இரு மகன்களும் குளித்தார்கள். வெயில் இருந்தாலும் தண்ணீர் மிக Chill.

பங்களாதேஷ் பார்டர் போனோம் இங்கேயிருந்து பிறகு மதியம் மிக அழகிய
Dawki  Umngot River போனோம்.

2.  Umngot River possibly India’s cleanest river.

A boat ride on the glass-like, emerald green waters of the Umngot river. The water is so clear that one can see the river bed 12 feet below.
The Umngot is a prime fishing spot for both Indian and Bangladeshi fishermen.
Paid 540 rs for traditional boat. One hour ride.

Many Lorries crossing here and there. Very risk to ride to reach the Bangladesh border. .I think mysons are clearly born to drive in the hilly terrain.
On the one side rose the hills of Meghalaya and on the other side lay the plains of Bangladesh.
Fruits and vegetables went from India — oranges, pineapple, tomato — apart from betel nut, betel leaf and also bay leaf.
From Bangladesh came potato chips and biscuits, plastic crockery and cotton goods. There was also a weekly bus service, connecting Dhaka to Guwahati via Shillong.

3. அடுத்து உலகிலேயே அருமையான சுத்தமான கிராமம்.
 Mawlynnong Village : Meghalaya

In next Jenma I want to born in this beautuful village in Meghalaya!! Mawlynnong is referred as God's Own Garden!!

அப்டி ஒரு சுத்தம்!! அப்டியே ரோடில் படுத்துக்கலாம்!! இந்த 17 நாட்கள் டூரில் என்னை மிகவும் அசத்தியது இந்த Village.

கிராமத்தில் மரங்கள் இருந்தாலும் கீழே விழும் ஒவ்வொரு இலையும் மூங்கில் குப்பை கூடையில் அள்ளிடுறாங்க. நாங்க போன Evening time
சின்ன குழந்தைகள் கூட விளக்குமாறும் கையுமாக அலைஞ்சுட்டு இருந்தாங்க. எனக்கும் கை பரப்பரன்னுடுச்சு!!

100 KM away from Shillong. So many guest houses are available for stay.
Mawlynnong is a village in the East Khasi Hills district of the Meghalaya state, India. It is famous for its cleanliness and natural attraction. Mawlynnong was awarded the prestigious tag of 'Cleanest Village in Asia' in 2003 by Discover India Magazine.
The waste is collected in the dustbins made of bamboo, directed to a pit and then used as manure. A community initiative mandates that all residents should participate in cleaning up the village. Smoking and use of polythene is banned while rainwater harvesting is encouraged.Bamboo dustbins stand at every corner.
This small, 600-odd person town in the Meghalaya region is renowned as the cleanest village in India.
Home to the Khasi tribal people, Mawlynnong is famous for being a rare matrilineal society, where property and wealth are passed on from the mother to her youngest daughter and children take their mother's surname.
12 வருடங்கள் முன்பு தான் இந்த ஊருக்கு ரோடே வந்துச்சாம்.
130 வருடங்கள் முன்பு காலரா வந்த போது அது பரவாமல் இருக்க இடத்தை சுத்தமாக வைக்க ஆரம்பித்து அது தினமும் பழக்கமாகிடுச்சாம்.
இது பழக்கம் இல்லை இந்த மக்களின் Tradition.

4.  Root Bridge. 60–100 years old Mawlynnong Root Bridge. CHERRAPUNJEE - 56 kms from SHILLONG.
They are handmade from the aerial roots of banyan tree.
The pliable tree roots are made to grow through betel tree trunks which have been placed across rivers and streams until the figs' roots attach themselves to the other side. Sticks, stones, and other objects are used to stabilize the growing bridge. This process can take up to 15 years to complete
Over the years, stones and earth have been lodged between the gaps of the banyan tree roots to form the beautiful pathway, and the ancient, organic meshwork weaves its beauty underneath. At later stages in the evolution of the bridge, stones are inserted into the gaps and eventually become engulfed by the plant forming the beautiful walkways. Later still, the bridges are improved upon with the addition of hand rails and steps.

 5. மறு நாள் காலையிலேயே ரூம் காலி செய்துட்டு நேராக சிரப்புஞ்சி போய் Nohkalikar Falls, 56 km from shilling - Maawsmai Cave – lime stone cave, பார்த்துட்டு

போகும் வழியில் இரண்டு மலைகளுக்கு இடையே க்ராஸ் செய்யும் Zip Lining ( total lenght of 2600 feet and 1200 feet in height ) Rs. 700 per head - இரண்டு பசங்களும் செய்ய  அப்படியே மேகாலயா பயணத்தை முடித்து கொண்டு நவம்பர் 24 அன்று ஷில்லாங்கிலிருந்து இறங்கி கவுஹாத்தி வந்து மாலை 7 மணிக்கு ரயில்வே ஸ்டேசனுக்கு மிக அருகில் ரூம் போட்டு விட்டு நான் ரெஸ்ட் எடுக்க பசங்க இரண்டும் காரை கொண்டு போய் ஒப்படைத்து வந்தார்கள். அன்று கவுகாத்தியில் ஏதோ ஒரு கோயில் விழா. மிக அதிக ட்ராஃபிக். மறு நாள் காலை நவம்பர் 25 எங்களுக்கு திரிபுராக்கு ட்ரையின்.
.#northeast_states


















North East States - 5


 பயணம் 5: 

வடகிழக்கு மாநிலங்கள்:

இம்பால் மணிப்பூரில் இருந்து நாகாலாந்து கோஹிமாவுக்கு மதியம் வந்து பெரிய சர்ச் பார்த்தோம்.

Mary Help of Christians Cathedral 1986 to 91 கட்டி இருக்காங்க. ஜப்பான் மக்கள் கோஹிமா போர் இரண்டாம் உலக போரின் போது இறந்த ஜப்பான் வீரர்களின் நினைவாக இந்த சர்ச் கட்ட நிறைய பண உதவி செய்திருக்காங்க.  ஒரு சின்ன மேட்டின் மீது சுத்திலும் கார்டனுடன் இருந்த அமைதியான அழகான சர்ச்.

On the Way to Kaziranga - Assam:

 மதிய சாப்பாடு முடித்து காசிரங்கா நோக்கி 236 கி.மீட்டர் 5 மணி நேரத்துக்கு பின் இருட்டில் போய் சேர்ந்தோம். மெயின் ரோடில் ஒரு பக்கம காசிரங்காவின் காடு இருக்க மறு பக்கம் ஏகப்பட்ட லாட்ஜுகள், வீடுகள். வீட்டின் மாடி  வாடகைக்கு விடுறாங்க.
ஒரு போலீஸ்காரரின் மனைவி ஒரு சின்ன பையனை வேலைக்கு வைத்திருக்கும் வீட்டின் மாடியை பிடித்தோம்.  மனோரமா என்ற பெயர் அந்த இல்லத்துக்கு.  என் மகன் பேரம் பேசி முடிக்க காலை 5 மணிக்கெல்லாம் காட்டுக்கு போக ஜீப்பும் அந்த வீட்டில் இருக்கு ட்ரைவர் ஏற்பாடு செய்து தருவதாய் அந்த பெண் கூறினார். அஸ்ஸாமி பாஷை மட்டும் தான் பேசுகிறார். ஆனால் என் மகனின் ஹிந்தி புரிகிறது. ரூமுக்கு போய் ஃப்ரெஷாகி விட்டு மெயின் ரோட்டில் ஏகப்பட்ட தபா கடைகளில் ஒன்றில் போய் சாப்பிட்டோம்.

காசிரங்கா தேசிய பூங்கா:

2200 ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் இருப்பிடம். யானை, புலி, மான்கள், காட்டெருமைகள், மிக அதிக அளவில் இருக்கின்றனவாம். உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்கே தான்.  UNESCO announced World”s heritage site.  November to April best season.  May to October 31st closed.

Tall elephant grass land and marshland area.
காலையில் 6 மணிக்கு ஏகக்குளிரில் ஓப்பன் ஜீப்பில் ஒரு காலேஜ் படிக்கும் பையன் எங்களை ( பார்ட் டைம் ட்ரைவர்) கூட்டி போனான். மெயின் நுழைவாயிலில் டிக்கெட் எடுத்து கொள்ள எங்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் சேர்ந்து கொண்டார். காட்டுக்குள் போனோம். செம த்ரில் பயணம். யானை சவாரி ரோடில் போகாமல் உள்ளே காட்டுக்குள் போகிறார்கள். நாங்கள் ஜீப் என்பதால் ரொம்ப தூரம் கூட்டி போனான் அந்த பையன். யானை, மான், நான்கைந்து காண்டாமிருகம் பார்த்தோம். 

பார்த்துட்டு வந்து காலை உணவு  முடித்து ஒரு பெரிய பார்க் மாதிரியான பகுதியில் ஏகப்பட்ட மூலிகை செடி, மரம் இருக்கும் இடத்திற்கு போனோம். மதிய உணவு சாப்பிட்டு 2 மணிக்கெல்லாம் திரும்ப ஜீப்பில் காட்டுக்குள் West side நுழைவு வாயில் வழியே போனோம். இந்த வாயிலில் மாலையில் போனதால் மிக அருமையான் காட்சிகள் காண கிடைத்தது.

இந்தியாவின் பிற காடுகளைப்போல மலைச்சரிவில் இல்லை. நிலத்தில் இருக்கு. பிரம்மபுத்திரா இதை சுற்றி செல்கிறது. மோரா திப்லு , மோரா தன்ஸ்ரி ஆகிய ஆறுகள் இந்த காட்டில் ஓடி பிரம்மபுத்திராவில் கலக்கிறது.
இந்த இடத்துக்கு போகும் ரோடு இரண்டு பக்கமும் கொஞ்ச நேரம் தேயிலை தோட்டம், வயல்கள்,அடர்ந்த மரங்கள் என மிக அழகு.
Entrance மூன்று இருக்கு.

Jeep வாடகை ஒரு முறை 2 மணி நேரம் சென்று வர rs 1500 + entrance fee per head 200 rs.

காலை 6 மணிக்கும் , Evening 2.30 க்கும் உள்ளே விடுறாங்க. அது மட்டுமில்லாமல் யானை சவாரியும் இருக்கு
.
Tezpur to Dimmapur நாகாலாந்த் போகும் வழியில் இந்த காடு இருக்கு.

கொஞ்ச நேரம் கனவு போல் இருந்துச்சு. மிருகங்கள் ஒன்றாக தண்ணீ குடிப்பதும், பறவைகள் சத்தமும், அமைதியும், காட்டின் உயர்ந்த புல் வெளியும், சூரியனின் மறைவும், குளிரும், மிக ரம்மியமான சூழல். 

மாலை 6 மணிக்கு அஸ்ஸாம் மாநில அரசு நடத்தும் டான்ஸ் ப்ரோக்ராம் 100 ரூபாய் டிக்கெட் எடுத்து போனோம். நடுவே சின்ன ஸ்டேஜ். சுத்திலும் சேர்கள். மிக அருமையான கிராமிய நாட்டுப்புற டான்ஸ். எல்லா மாநில உடை உடுத்தி மிக அருமையாக ஆடினாங்க. ஆட்டத்தின் முடிவில் நம்மையும் ஸ்டேஜ் ஏற வைத்து ஆட வைக்கிறாங்க. மிக நல்ல ப்ரோக்ராம். நைட் மனோரமா வீட்டிலேயே தங்கினோம். அந்த அம்மா நிறைய ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டு வாங்க என அஸ்ஸாமில் சொல்ல நாங்க சரி சரி என்று தமிழில் சொல்லி விடை பெற்றோம்.  Plan to Go to Guwahati.

 Last Photo :
Evening ஜீப்பில் காசிரங்கா காட்டுக்குள் போன போது ஜீப்பை ஓட்டி சென்ற பையன் ஓரிடத்தில் ரோட்டோரமா ஜீப்பை நிறுத்தி விட்டான். எங்களை சத்தமே போடாம அமைதியாக இருக்க சொல்லி சைகையில் சொன்னான்.
அவன் எதிர்பார்த்த மாதிரி சைட் புதரில் இருந்து ஒரு Rhino எங்களுக்கு எதிரில் டொயிங்ன்னு தலையை மட்டும் வெளியே நீட்டி அப்புறம் ரோட்டுக்கு வந்து எங்க ஜீப்பை ஒரு லுக் விட்டுட்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பிக்க
நாங்க எதிர்பார்க்காம ஒரு குட்டி அதன் பின்னாடியே துறு துறுன்னு வந்து நடு ரோடில் டூ பாத்ரூம் போயிட்டு தன் அம்மா பின்னாடி போகாம கொஞ்ச நேரம் ரோட்டில் ஓடி போயிட்டு அப்புறம் சமத்தாய் தன் அம்மா பின்னாடி எதிர் புதருக்குள் ஓடிடுச்சு.
Photography : Rishi Krishna

அஸ்ஸாம் கவ்ஹாத்திக்கு சென்னையில் இருந்து தினம் விமான சர்வீஸ் இருக்கு. ட்ரையின் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை சென்னையில் இருந்து 48 மணி நேரம் பயணம். 2nd ac 3290rs, 2225 rs 3rd ac. நாங்க போன flight 3400rs. கவ்ஹாத்தியிலிருந்து காசிரங்கா 4 மணிநேர பஸ். அதை முடித்து மேகாலயா சேர்த்து ஒரு ட்ரிப் போகலாம். அது 3 மணிநேர பயணம். ஷேர் செய்யும் கார்களும் கிடைக்கும். மேகாலயா அருமையான இடம்.

Previous Posts: https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=819646454889837
#northeast_states
















North East States - 4

.வடகிழக்கு மாநிலங்கள் பயணம் 4:

ரோட்டோரமாய் இருந்த மஞ்சள் மலர்களை சலிக்க சலிக்க பார்த்துட்டு, School விட்டு போகும் குழந்தைகள், முதுகில் குழந்தை சுமக்கும் பெண்கள் என பார்த்து கொண்டே,  மணிப்பூர் நெருங்க நெருங்க ரோட்டோரமாய் வரிசையாக லாரிகள். இரண்டு லாரிகளுக்கிடையில் ட்ரைவர்கள் படுத்து இருந்ததும், ரோட்டோரமாக ஸ்டவ் வைத்து சமைப்பதும் ஹாயாக அவர்கள் இருந்ததை பார்த்தால் அடிக்கடி இப்படி நிற்பார்களாம். இப்ப ஒரு வாரமாக இப்படி வெயிட் செய்றாங்க. மணிப்பூர் அரசு ஓக்கே சொன்னதும் மணிப்பூர் போவாங்களாம்.

Kohima to Imphal
5 h (136.9 km) via NH2

மாலை 5 மணியளவில் இம்பால்  போய் சேர்ந்தோம்.  மார்க்கெட் பகுதியில் நடந்து சுத்திட்டு இரவு உணவு சாப்பிட்டு  ரூமிற்கு போனோம். மறு நாள் இம்பாலின் முக்கிய மூன்று இடங்களை நாங்கள் கவர் செய்யும் ப்ளான்.

 மிக அருமையான உலகத்திலேயே இங்கே மட்டும் தான் இருக்கு என்ற அதிசயம் 3 இம்பால் பக்கம் தான் இருக்கு

1. Loktak Lake - Floating Paradise.

Imphal, the capital city of Manipur is 39 km away from the lake.
 It is the largest freshwater lake in Northeast India, and is famous for the phumdis (heterogeneous mass of vegetation, soil, and organic matter at various stages of decomposition) floating over it.
 It serves as a source of water for hydropower generation, irrigation and drinking water supply. The lake is also a source of livelihood for the rural fishermen who live in the surrounding areas and on phumdis, also known as “phumshongs”.
 Largest freshwater lake in India.
Covering an area of 300 square metres
The lake is referred to as the "lifeline of Manipur”
 Etymology of Loktak: Lok = "stream" and tak = "the end". The place where streams end.

 Lake ல் மிதக்கும் சின்ன சின்ன பச்சை புல்வெளிக்கு phumdis என பெயர்.

The best view of Loktak Lake can be had from a small hill top In the middle of the Lake.
இந்த குட்டி மேட்டு பகுதியை பார்க் மாதிரி வைத்து ஒரு சின்ன நீட்டான ஹோட்டலும் வைத்திருக்கு அரசு. அங்கே காலை சாப்பாடு ஆர்டர் தந்து பார்க்கில் இருந்து எங்கே திரும்பினாலும் தெரியும் ஏரியை ஆன்னு பார்த்துட்டே இருந்தோம். வாட்சிங் டவரும் இருந்தது. தூரமாய் தெரியும் பச்சை பச்சை தெப்பம் போன்ற மிதக்கும் அழகையும், ஏகப்பட்ட பறவை சத்தமும் அந்த விடிகாலையை நாங்க நால்வர் மட்டுமே அனுபவிச்சுட்டு இருந்தோம்.

நாட்டு படகு எனப்படும் நீட்டமான படகில் தலையில் கூம்பான தொப்பியுடன் மீனவர்கள் அமைதியாக மீன் பிடித்திருக்க, கொஞ்ச தூரத்தில் கரையில் குடிசைகளும் தென்பட்டன. .,

காலை பூரி. இந்த டூரிலேயே அதிகம் பணம் கொடுத்து சாப்பிட்டோம். இரண்டு பூரி 100 ரூபாய்.
 10 ரூபாய், 15 ரூபாய் தான் மத்த இடத்தில் எல்லாம்.
சாப்பிட்டு அந்த மேட்டு பகுதியை விட்டு இறங்கி வந்து போட் நிற்கும் பகுதிக்கு வந்தோம். டூரிஸ்ட்டுகளே அங்கே இல்லை நாங்க போன தினம்.

Boat 800 ரூபாய் கேட்டாங்க. கூட்டம் இருந்தா 50 ருபாய் ஒருவருக்கு. நாங்க 4 persons தான் எங்கேயும் முதலில் போய் தூங்குறவுங்களை எழுப்பி விட்டுட்டு இருந்தோமே!!

கார் நம் கையில் இருந்தால் இது ஒரு வசதி. கார் ஓட்ட இரு மகன்கள் இருந்தது இன்னும் வசதியாச்சு

ஒரு மணி நேரம் Boat ல்  சுத்தி வந்தோம். ஒர் வெள்ளை கொடி நடப்பட்டிருந்த Phumdis பகுதியில் போட் பையன் போட்டை கரை ஓரமாக நிறுத்தி எங்களை இறங்க சொன்னான். ஆஹா இதில் இறங்கலாமா. சூப்பர்ன்னு சொல்லி கொண்டே இறங்கி நடந்தோம், கொஞ்சமாக ஆடி கொண்டே. ஆனால் கால் அடியில் திக்காக இருந்துச்சு. கொஞ்சம் நம்மை குலுக்கினால் கால் நனைந்தது. செம த்ரில்.  இன்று இங்கேயிருக்கும் அந்த இடம் நாளை வேறு இடம் போயிடும்ன்னு தான் கொடிஅடையாளம். ஏரி 15 அடி ஆழமாம்.

என்ன ஒரு இயற்கை என ஆன்னு பார்த்து கொண்டே அந்த இடத்தை விட்டு பிரியவே மனசின்றி பக்கத்துலேயே இன்னொரு அதிசயத்தை பார்க்க போனோம்.

2. Keibul Lamjao Floating National park . 

இங்கே sangai என்னும் அரிய வகை மான்கள் நிறைய இருக்கும் அதை பார்க்க போவதாய் நினைத்து போனோம். அது ஒரு வறண்ட புல்வெளி போன்ற அமைப்புடன் ஓரத்தில் ஒரு வாட்சிங் டவரும் இருந்தது. அதில் ஏறி அந்த மிக பறந்த புல்வெளியை பார்த்த போது தூரத்தில் ஒன்றிரண்டு மான்களும் அந்த வாட்சிங் டவர் பக்கத்தில் சிலர் மராமத்து வேலை பார்த்து கொண்டும் இருந்தனர்.

 அந்த புல்வெளியின் நடுவில் ஒரு சிறிய நீரோடை இருக்க கரையில் ஒரு பழைய நீட்ட போட்டும் இருந்தது. அதை ஓட்ட ஆள் தேடினால் புல் வெட்ட போய் விட்டதாக் சொன்னாங்க. என் மகன் சத்தமாக கூப்பிட்டு கொண்டே அந்த புல்வெளியில் நடக்கவே உள்ளே இருந்து ஒருவர் வந்தார்.

 தான் வருவதாக ஒப்பு கொண்டார். ஒருவருக்கு 50 ரூபாய் என்றும் கூற நாங்கள் சந்தோசமாக அந்த நீரோடையில் உட்கார்ந்து போகும் போது தான் அந்த புல் எல்லாம் ஆள் உயரத்துக்கு வளர்ந்து இருந்தது தெரிந்தது. ஓரிடத்தில் போட்டை நிறுத்தியவர் எங்களை புல் வெளியில் இறங்க சொல்லி ஃபோட்டா எடுத்தும் கொடுத்தார்.

காலில் நீர் பட்டது அப்பதான் எங்களுக்கு தெரிந்தது அந்த மொத்த புல்வெளியும் தண்ணீரில் மிதப்பது. மிக ஆச்சரியமாக இருந்தது. என்ன ஒரு அற்புதம் . உலகிலேயே இது தான் இங்கே மட்டும் தான் இப்படி ஒரு மிதக்கும் மானின் புகலிடம் இருக்கிறது. 

ரொம்ப சந்தோசமாக இருந்தது. போட்க்காரருக்கு அதிக பணம் கொடுத்து நன்றி சொல்லி கிளம்பினோம்.

இந்த மான் தான் மணிப்பூர் மாநில விலங்காம். கோடை காலத்தில் வந்தால் அதிகமாக பார்க்கலாம் புல் வெளி குறைவாக இருக்கும். ஃப்ரெண்ஸ் எல்லாம் கூட்டி வாங்க என சொல்லி அனுப்பினார்.

 திரும்பவும் வாட்சிங் டவர் போய் அந்த மொத்த பகுதியையும் கண்னுக்கு எட்டிய வரை பார்த்து விட்டு மான் இருக்கு தெரியும் ஆனா இப்படி மிதக்கும் பார்க்குன்னு எனக்கே இப்ப தான் தெரியும் என்றான் நகுல்.

லக்ஷ்மி என்னும் ஹோட்டலில் மணிப்பூர் தாலி மிக ஃபேமஸ். இந்த ட்ரிப்பில் முழு சாப்பாடு சாப்பிட்டது இம்பாலில் மட்டும் தான். குட்டி குட்டி கிண்ணத்தில் ஏகப்பட்ட ஐயிட்டம். சில இனிப்பாக இருந்தது. கீரை,,பருப்பு,பாயாசம் அருமை.என் சின்ன மகன் மட்டும் மீன் குழம்பு வாங்கி கொண்டான்.

3. Ima Market:

இம்பாலின் ஊருக்கு நடுவே நம்ம கோயம்பேடு மார்க்கெட் மாதிரி மிக பெரிய மார்க்கெட். இந்த மார்க்கெட்டின் ஓனர்கள் பெண்கள் மட்டுமே. First world war சமயத்தில் போருக்கு நிறைய ஆண்கள் போனதாலும்.பெண்கள் ஒரு சக்தியாக இங்கே இருக்கிறார்கள் இன்னமும். கடையில் மொத்தமும் பெண்களே விற்கிறார்கள். கிடைக்காத பொருட்கள் இல்லை. காய்கறி, பூக்கள், மளிகை,,துணி,,மீன், இறைச்சி அப்பா சுத்தி சுத்தி வந்தோம் ஒரு ஆண் கூட கடை ஓனராக இல்லை. வேலையாட்கள், கஸ்டமர்கள் ஆண்கள்.
உலகிலேயே இது மட்டும் தான் இங்கே மட்டும் தான் இப்படி.

 IMA MARKET - IMA KEITHAL - அம்மா மார்க்கெட் - 100 years old - IMPHAL - MANIPUR
4000 Shops owned by Women. We can get anything and everything in this market.
4000 women shopkeepers selling a wide range of merchandise including vegetables, meat, dry fish, herbs, handmade jewelry, handcrafted artworks, and traditional clothes. Mostly local items.
The market will remain a unique historic symbol of women empowerment and women’s leadership in economic development
Women dressed in traditional Phaneks (sarong) and Innaphis(Shawls) with sandalwood marks on their forehead were down to business.

Irom Sharmila and Mary Kom மாதிரி ஜாடையில் நிறைய பெண்கள் போகும் வழிகளில் தெரிஞ்சாங்க.
Mostly older ladies and grandmothers come down to the market to trade; young mothers are left at home to tend to their children. Early morning around 5 to 6 this is place is very busy.

ட்ரெஸ்ஸும் வித்யாசம்.. பெண்கள் பயங்கர சுறு சுறுப்பு.
நெற்றியில் சந்தன கோடு மூக்கில் இருந்து ஆரம்பித்து போட்டிருந்தாங்க.. இங்கேயும் மாலையிலேயே ஊர் அடங்கி விடுகிறது.

நைட் இம்பாலிலேயே தூங்கி விட்டு மறு நாள் காலை 5 மணிக்கேல்லாம் ஊரை விட்டு கிளம்பி இமா மார்க்கெட் பக்கமாய் போனா அந்த விடியல் காலையில் பெண்கள் கூட்டம் கூட்டமாய். மாலையில் சீக்கிரம் வீட்டிற்கு போய் விடுவதால் விடிகாலையில் பொருட்கள் விற்க பக்கத்து கிராமங்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து விற்க ஆரம்பிச்சாச்சு. ஆன்னு பார்த்து கொண்டே இம்பால் விட்டு புறப்பட்டோம்.

எதுக்கும் அட்லீஸ்ட் ஆயிரம் ரூபாய்க்காவது டீசல் போட்டா போகும் போது ரிஸ்க் இல்லைன்னு பெட்ரோல் பங்க் பார்த்தா ஒவ்வொரு பங்கிலும் 50 to.100 vehicle நிக்கிது.
ATM ஐ விட அதிகம் கூட்டம். Block - ல் ஒரு
rs. 300 வரை 1 Lr விப்பதாக கேள்வி பட்டோம்.

ஒரு பங்கில் 25 Vehicle தான் இருக்கும் போல தோன்றவும். சரின்னு நாங்களும் கியூவில் காரை நிறுத்தினோம்.
பெரிசு Nagul காரை விட்டு இறங்கி முன்னாடி Bunk உள்ளே போய் வேடிக்கை பார்க்க போனான். 5 நிமிஷத்தில் திரும்பி வந்து தன் தம்பியிடம் காரை பங்கை விட்டு வெளியே வரும் வழியாக உள்ளே போடான்னு சொல்லிட்டு ஓடி அந்த வழியில் எங்க காரை விட வழியும் ஏற்படுத்தி கொடுத்தான்.

25 வண்டிக்குள் இருந்து 75 தலையாச்சும் வெளியே எட்டி எங்க காரை பார்த்தது. டீஸல் போடும் இடத்தில் இருந்த போலீஸ் கூட்டம் எங்க காரை பாத்து ஒதுங்கி வழி விட கொஞ்சம் வெயிட் செய்து 1000 Rs.க்கு டீஸல் போட அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு கை குலுக்கி Thanks சொல்லிட்டு வந்தான்.

வாய் இருந்தா அதுவும் ஹிந்தி வாயிருக்கும் பிள்ளை பிழைச்சுக்கும்!!

நாங்க டீசல் போட காத்திருந்த போது எங்க காருக்கு முன்னாடி ஒரு மாருதி உள்ளே பெரிய ட்ரம் 2 வைத்து 120 லிட்டர் டீசல் போலீஸ் பாதுகாப்புடன் பிடிச்சுட்டு இருந்தாங்க. டூரிஸ்ட் என்பதால் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த இன்ஸ்பெக்டர் புண்ணியமும் சேர்த்துட்டார் போல.

நாகாலாந்து நோக்கி எங்கள் பயணம் ஆரம்பித்தது.

ரூம் வாடகை 1200 rs. We saw many local buses and autos and rented cars in the city. Chennai to Imphal flights cost up and down rs. 12K. We can spend 3 days here. Worth to spend.

Previous Posts:
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/819436414910841/
#northeast_states