வடகிழக்கு மாநிலங்கள் – பயணம் 3 :
தாவாங்கில் காலை கிளம்பி நைட் பலுக்பாங்க் வந்து வரும் வழியில் Dirang KIWI fruits one kg 100 rs வாங்கினோம். திண்டுக்கல் மலை வாழைப்பழம் மாதிரி டேஸ்ட்டுடன் சைஸ் பெரிய பழமும் கிடைத்தது. Bhalukpong மெயின் ரோடிலேயே நம்ம Ooty மேட்டுப்பாளையம் ரோடு மாதிரி இருந்த இடத்தில் ரூம் போட்டு சாப்ட்டு ஹப்பாடான்னு தூக்கம்.
டபுள் பெட்டில் மூவர் படுத்துட்டு ஒரு எக்ஸ்ட்ரா பெட் வாங்கி போட்டு கொண்டோம். பக்கத்து ரூமில் யாருமே இல்லை. காலையில் 200 ரூபாய் அதிகம் தருகிறோம் என சொல்லி அந்த ரூம் பாத்ரூம் யூஸ் செய்து நால்வரும் ஜல்தி கிளம்பிட்டோம். November உ16 ஆம் தேதி காலை அஸ்ஸாமின் தேஜ்பூர் (60 கி.மீ) நோக்கி கிளம்பியாச்சு.
Started from Arunachal Pradesh Bhalukpong in the morning. Breakfast was in Assam Tezpur and finished lunch in Nagaland Dimaapur – Night stay in Kohima – Nagaland.
. 1, Tezpur
தேஜ்பூரில் அநிருத்துக்கு!! பார்க் ஒன்று இருக்கு.
சிவ பக்தனான பானாசுரா தன் மகள் உஷா தன் சக்தியால் வரவழைத்த கிருஷ்ணனின் பேரன் அநிருத்தை கைது செய்து விட கிருஷ்ணன் விடுதலை கோர பானாசுரா மறுக்க இங்கே மிக பெரிய போர் நடந்து ரத்த ஆறு ஓடியதால் city of blood – Tezpur என்ற பெயராம்.
2. Nagaland - Dimapur and Kohima
Tezpur மஹாபைரவ் கோயிலும் பார்த்துட்டு Dimapur – நாகாலாந்த்துக்கு கிளம்பியாச்சு. போகும் வழியில் தான் காசிரங்கா நேஷனல் பார்க் அந்த ரோடில் தூரமாய் தெரியும் ரினோசரஸை காரை நிறுத்தி கொஞ்ச நேரம் பார்த்து விட்டு திரும்ப வரும் போது காசிரங்காவில் தான் தங்க போறோம் என கிளம்பி afternoon திம்மாப்பூரில் Lunch சாப்பிட்டு
அங்கே நாகாலாந்த் Inner Line permit வாங்க அந்த ஊரின் Deputy commissioner office போய் பெர்மிட் வழங்கிடும் ரூமில் எங்க ஃபோட்டோக்களை கொடுத்து அரைமணி நேரம் காத்திருந்து ஒருவருக்கு 200 ரூயாய் பெர்மிட் வாங்கி கொண்டு உடனே கோஹிமா நாகாலாந்த் தலைநகர் நோக்கி பயணம்.
நாகாலாந்து கிறித்துவர்கள் அதிகம். போகும் இடமெல்லாம் நிறைய சர்ச்சுகள். ஜன நெருக்கடி மிகுந்த இடம் நாகாலாந்து. Night stay in Kohima - Nagaland.
3. On the way to Manipur - Imphal
மறு நாள் காலையில் Kohima War Cementery மட்டும் பார்த்துட்டு Manipur இம்பால் நோக்கி பயணம்.
மணிப்பூரில் இருந்து திரும்பும் போது மீதி இடங்களை நாகாலாந்தில் பார்த்து கொள்ள ப்ளான்.
மணிப்பூர் போலாமா வேணாமா என ஒரு குழப்பம். எப்போதும் பிரச்சனையில் இருக்கும் மாநிலம். போகும் போதே Road side நிறைய பேரிடம் விசாரித்து கொண்டோம்..
போகும் வழி மலை தான் ஒரு மலை ஏறி அந்த மலையின் அடுத்த அடிவாரம் மலை முழுவதும் ஏசி போட்ட மாதிரி இதமான குளிர். மஞ்சள் பூக்கள் முழு மலையும். காரை விடு இறங்கினால் பூ வாசம் மலை முழுவதும்.'
மணிப்பூர். ரோடு அகலமாக ஆனால் குண்டும் குழியுமாக இருந்தது.. மணிப்பூர் நெருங்க நெருங்க ரோடின் சைடில் கிட்டத்தட்ட 300 லாரிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கேட்டா ஒரு வாரமாக நிற்பதாகவும்!!! டூரிஸ்ட் போங்க உங்களுக்கு அனுமதி என போலீஸ் சொல்லவும் பயணத்தை தொடர்ந் தோம். Nagul
மிசோராம் போகாட்டாலும் பரவாயில்ல கட்டாயம் மணிப்பூர் பார்த்தே ஆகணும் என்ற மனநிலையில் இருந்தான்.
அடிக்கடி Economic Blockade நடக்கும் மாநிலம். நைட் ஆகும் முன் அதாவது 5 மணி ஆகும் முன் போயிடலாம் என அந்த ரோடில் சர்வ ஜாக்ரதையாக போனோம்.
நெட்டில் அறிந்து கொண்ட நியூஸ் எப்ப வேணா கலவரம் வருமாம் இம்பாலில். இது தெரிந்து கொண்ட பின சமீபத்தில் அப்படி பெரிய நிகழ்ச்சி எதுவும் இல்லை என்று சொல்லி கொண்டு ஆனால் திக் திக் என இம்பால் நோக்கி போனோம்.
https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=819040498283766 - முந்தைய பதிவுகள்!!
#northeast_states
No comments:
Post a Comment