Tuesday, April 03, 2018

North East States - 5


 பயணம் 5: 

வடகிழக்கு மாநிலங்கள்:

இம்பால் மணிப்பூரில் இருந்து நாகாலாந்து கோஹிமாவுக்கு மதியம் வந்து பெரிய சர்ச் பார்த்தோம்.

Mary Help of Christians Cathedral 1986 to 91 கட்டி இருக்காங்க. ஜப்பான் மக்கள் கோஹிமா போர் இரண்டாம் உலக போரின் போது இறந்த ஜப்பான் வீரர்களின் நினைவாக இந்த சர்ச் கட்ட நிறைய பண உதவி செய்திருக்காங்க.  ஒரு சின்ன மேட்டின் மீது சுத்திலும் கார்டனுடன் இருந்த அமைதியான அழகான சர்ச்.

On the Way to Kaziranga - Assam:

 மதிய சாப்பாடு முடித்து காசிரங்கா நோக்கி 236 கி.மீட்டர் 5 மணி நேரத்துக்கு பின் இருட்டில் போய் சேர்ந்தோம். மெயின் ரோடில் ஒரு பக்கம காசிரங்காவின் காடு இருக்க மறு பக்கம் ஏகப்பட்ட லாட்ஜுகள், வீடுகள். வீட்டின் மாடி  வாடகைக்கு விடுறாங்க.
ஒரு போலீஸ்காரரின் மனைவி ஒரு சின்ன பையனை வேலைக்கு வைத்திருக்கும் வீட்டின் மாடியை பிடித்தோம்.  மனோரமா என்ற பெயர் அந்த இல்லத்துக்கு.  என் மகன் பேரம் பேசி முடிக்க காலை 5 மணிக்கெல்லாம் காட்டுக்கு போக ஜீப்பும் அந்த வீட்டில் இருக்கு ட்ரைவர் ஏற்பாடு செய்து தருவதாய் அந்த பெண் கூறினார். அஸ்ஸாமி பாஷை மட்டும் தான் பேசுகிறார். ஆனால் என் மகனின் ஹிந்தி புரிகிறது. ரூமுக்கு போய் ஃப்ரெஷாகி விட்டு மெயின் ரோட்டில் ஏகப்பட்ட தபா கடைகளில் ஒன்றில் போய் சாப்பிட்டோம்.

காசிரங்கா தேசிய பூங்கா:

2200 ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் இருப்பிடம். யானை, புலி, மான்கள், காட்டெருமைகள், மிக அதிக அளவில் இருக்கின்றனவாம். உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்கே தான்.  UNESCO announced World”s heritage site.  November to April best season.  May to October 31st closed.

Tall elephant grass land and marshland area.
காலையில் 6 மணிக்கு ஏகக்குளிரில் ஓப்பன் ஜீப்பில் ஒரு காலேஜ் படிக்கும் பையன் எங்களை ( பார்ட் டைம் ட்ரைவர்) கூட்டி போனான். மெயின் நுழைவாயிலில் டிக்கெட் எடுத்து கொள்ள எங்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு போலீஸ் சேர்ந்து கொண்டார். காட்டுக்குள் போனோம். செம த்ரில் பயணம். யானை சவாரி ரோடில் போகாமல் உள்ளே காட்டுக்குள் போகிறார்கள். நாங்கள் ஜீப் என்பதால் ரொம்ப தூரம் கூட்டி போனான் அந்த பையன். யானை, மான், நான்கைந்து காண்டாமிருகம் பார்த்தோம். 

பார்த்துட்டு வந்து காலை உணவு  முடித்து ஒரு பெரிய பார்க் மாதிரியான பகுதியில் ஏகப்பட்ட மூலிகை செடி, மரம் இருக்கும் இடத்திற்கு போனோம். மதிய உணவு சாப்பிட்டு 2 மணிக்கெல்லாம் திரும்ப ஜீப்பில் காட்டுக்குள் West side நுழைவு வாயில் வழியே போனோம். இந்த வாயிலில் மாலையில் போனதால் மிக அருமையான் காட்சிகள் காண கிடைத்தது.

இந்தியாவின் பிற காடுகளைப்போல மலைச்சரிவில் இல்லை. நிலத்தில் இருக்கு. பிரம்மபுத்திரா இதை சுற்றி செல்கிறது. மோரா திப்லு , மோரா தன்ஸ்ரி ஆகிய ஆறுகள் இந்த காட்டில் ஓடி பிரம்மபுத்திராவில் கலக்கிறது.
இந்த இடத்துக்கு போகும் ரோடு இரண்டு பக்கமும் கொஞ்ச நேரம் தேயிலை தோட்டம், வயல்கள்,அடர்ந்த மரங்கள் என மிக அழகு.
Entrance மூன்று இருக்கு.

Jeep வாடகை ஒரு முறை 2 மணி நேரம் சென்று வர rs 1500 + entrance fee per head 200 rs.

காலை 6 மணிக்கும் , Evening 2.30 க்கும் உள்ளே விடுறாங்க. அது மட்டுமில்லாமல் யானை சவாரியும் இருக்கு
.
Tezpur to Dimmapur நாகாலாந்த் போகும் வழியில் இந்த காடு இருக்கு.

கொஞ்ச நேரம் கனவு போல் இருந்துச்சு. மிருகங்கள் ஒன்றாக தண்ணீ குடிப்பதும், பறவைகள் சத்தமும், அமைதியும், காட்டின் உயர்ந்த புல் வெளியும், சூரியனின் மறைவும், குளிரும், மிக ரம்மியமான சூழல். 

மாலை 6 மணிக்கு அஸ்ஸாம் மாநில அரசு நடத்தும் டான்ஸ் ப்ரோக்ராம் 100 ரூபாய் டிக்கெட் எடுத்து போனோம். நடுவே சின்ன ஸ்டேஜ். சுத்திலும் சேர்கள். மிக அருமையான கிராமிய நாட்டுப்புற டான்ஸ். எல்லா மாநில உடை உடுத்தி மிக அருமையாக ஆடினாங்க. ஆட்டத்தின் முடிவில் நம்மையும் ஸ்டேஜ் ஏற வைத்து ஆட வைக்கிறாங்க. மிக நல்ல ப்ரோக்ராம். நைட் மனோரமா வீட்டிலேயே தங்கினோம். அந்த அம்மா நிறைய ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டு வாங்க என அஸ்ஸாமில் சொல்ல நாங்க சரி சரி என்று தமிழில் சொல்லி விடை பெற்றோம்.  Plan to Go to Guwahati.

 Last Photo :
Evening ஜீப்பில் காசிரங்கா காட்டுக்குள் போன போது ஜீப்பை ஓட்டி சென்ற பையன் ஓரிடத்தில் ரோட்டோரமா ஜீப்பை நிறுத்தி விட்டான். எங்களை சத்தமே போடாம அமைதியாக இருக்க சொல்லி சைகையில் சொன்னான்.
அவன் எதிர்பார்த்த மாதிரி சைட் புதரில் இருந்து ஒரு Rhino எங்களுக்கு எதிரில் டொயிங்ன்னு தலையை மட்டும் வெளியே நீட்டி அப்புறம் ரோட்டுக்கு வந்து எங்க ஜீப்பை ஒரு லுக் விட்டுட்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பிக்க
நாங்க எதிர்பார்க்காம ஒரு குட்டி அதன் பின்னாடியே துறு துறுன்னு வந்து நடு ரோடில் டூ பாத்ரூம் போயிட்டு தன் அம்மா பின்னாடி போகாம கொஞ்ச நேரம் ரோட்டில் ஓடி போயிட்டு அப்புறம் சமத்தாய் தன் அம்மா பின்னாடி எதிர் புதருக்குள் ஓடிடுச்சு.
Photography : Rishi Krishna

அஸ்ஸாம் கவ்ஹாத்திக்கு சென்னையில் இருந்து தினம் விமான சர்வீஸ் இருக்கு. ட்ரையின் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை சென்னையில் இருந்து 48 மணி நேரம் பயணம். 2nd ac 3290rs, 2225 rs 3rd ac. நாங்க போன flight 3400rs. கவ்ஹாத்தியிலிருந்து காசிரங்கா 4 மணிநேர பஸ். அதை முடித்து மேகாலயா சேர்த்து ஒரு ட்ரிப் போகலாம். அது 3 மணிநேர பயணம். ஷேர் செய்யும் கார்களும் கிடைக்கும். மேகாலயா அருமையான இடம்.

Previous Posts: https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=819646454889837
#northeast_states
















No comments: