Wednesday, August 21, 2013

வெரைட்டி ஆகஸ்ட்- 2013

இந்தியன் பேங்க் டெபிட் கார்ட்+ 100 ரூபாய் எடுத்து கொண்டு தி.நகர் ஷாப்பிங் போனேன். முதல் மூன்று ஏ.டி.எம்மில் க்யூவில் இருந்த யாருக்குமே பணம் எடுக்க முடியவில்லை. சரி என்று அடுத்த ஏ.டி.எம் போனால் அங்கேயும் அதே கதை.இந்தியன் பேங்க் ஏ.டி.எம் போனதும் தான் தெரிந்தது பேங்கில் தான் ஏதோ ப்ராப்ளம் என்று. தி.நகர் போயிட்டு 10 ரூபாய்க்கு மூன்று கட்டு கொத்தமல்லியும்,20 ரூபாய்க்கு 2 கவர் பூவும் வாங்கிட்டு வீட்டிற்கு அசுர பசியோடு வந்தேன். எப்பவும் இந்த ஏ.டி.எம் கார்டை நம்பி நான் பணம் இல்லாமல் எங்கேயும் போகவே மாட்டேன். அன்னைக்கு என்ன ராசியோ.


மாம்பலம் ரயிலடியில் அடுத்து எடுத்து வைக்கும் அடியே சரவணாதான் என்று சமந்தா விளம்பரம் பார்க்கும்/கேட்டும் போதெல்லாம் எரிச்சலாய் வரும். எரிச்சல் சமந்தா மேல் அல்ல. அந்த கடைக்காரர் மேல். மார்க்கெட் பகுதியில் அந்த புதுக்கடைக்கு சைடாய் இருந்த 30 காய்,பழக்கடைகளை எடுக்க சொல்லி கட்டாய படுத்தி எடுத்தும் விட்டார்கள். கடைக்கு சைடாய் இருக்கும் கேட் வழியாக கடைக்கு சரக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த அநியாயம் நடந்து உள்ளது. 40 வருடங்களாய் கடை வைத்து இருந்தவர்கள் யாரிடம் முறையிட்டும் பயனின்றி புலம்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த மார்க்கெட் ரோடு யார் வீட்டு சொத்து என்று தெரியவில்லை.நான் மாம்பலம் போகும் போதெல்லாம் பட்டர் பீன்ஸ் வாங்கும் கடைக்காரம்மா எதிரில் இருக்கும் அவரின் மச்சினர் கடையின் வாசலிலேயே தன் கடையினை தொடங்கி விட்டார். நாசமாதான் போவாங்க என்று வாழ்த்தி கொண்டே வியாபாரம் பார்த்து கொண்டு இருந்தார்.


பஸ்ஸில் வரும் போது பல்லாவரம் பஸ்-ஸ்டாண்டில் எங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியவர்களிடம் வெடு வெடு என இருவர் டிக்கெட் செக் செய்தனர். அப்போது பஸ்ஸில் ஒருவர் ஏறிவிட்டார். இறங்கியவர்களிடம் செக்கிங் முடிந்ததும் ஏற போனவர்களை யாரும் ஏறவேண்டாம் என்று கொஞ்சம் லேட்டாக சொல்லி விட்டு அவர் ஏறி படி அருகில் இருப்பர்களை செக்கிங் செய்ய பல்லாவரத்தில் ஏறியவர் இப்ப தான் ஏறினேன் என்று சொல்ல சொல்ல கேட்காமல் செமையாக திட்ட ஆரம்பித்தார்.அவர் ஏறியதை  நிறைய பேர் பார்த்தும் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை. நான் அவர் இங்கே ஏறியதை நான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்தவர்களுக்கு டோஸும் விட்டேன்.அதன் பின் செக்கிங் ஆள் கீழே இறங்கினார். நம் மக்கள் ஏனோ நியாயம் பேச கூட ரொம்ப தான் யோசிக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக எனக்கு ஒரு பழக்கம். மெயில் பாஸ்வேர்ட்களை நான் என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறேனோ (நியாயமான ஆசை) அதையே வைத்து விடுவேன். நல்லதை நினைத்தால் அது நடக்கும் என்பார் என் அம்மா.

எனவே நல்லதை  நினைத்து கொண்டே டைப்பினாலும் நல்லதே நடக்கும் இல்லையா. ஒரு அக்கவுண்டிற்கு பாஸ்வேர்ட் காசி என்று வைத்தேன். கடந்த 5 வருடங்களில் 4 முறை காசி போயிட்டு வந்தாச்சு. இன்னொரு அக்கவுண்டிற்கு Own House என்பதே பாஸ்வேர்ட். கடந்த 3 வருடங்களாக வைத்து இருந்தேன். போன வருடம் புது வீடு கட்டி விட்டேன். அப்புறம் எப்பூடி?

Thursday, August 08, 2013

ஜார்ஜ் போட்ட சொக்கா (?)

பிரிட்டனில் போன மாதம் 22-ல் பிரின்ஸ் வில்லியம் - கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துச்சுல்ல.அதான் டயானாவோட பேரன். அந்த குழந்தை ஜார்ஜ் பிறந்த மறுநாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியில் கொண்டு வந்த போது கேட் போட்டு இருந்த புளூ கலர் ட்ரஸ்ஸும்,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது. அந்த வெள்ளி மஸ்லின் துணி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த குழந்தையின் ஃபோட்டோ வெளியான 4 மணிநேரத்தில் அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம்.அடுத்த நாளும் தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஆர்டர் கொடுத்த வண்ணம் இருந்தனராம். மொத்தம் 7000 பேர் அதே வகை துணியினை ஆர்டர் கொடுத்தார்களாம்.ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஆர்டர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.(பிழைக்க தெரியாத புள்ளையோ).


இந்த இங்கிலாந்து ராஜவம்சத்தினர் எப்பவும் ட்ரெண்ட்-செட்டர்களாக தான் இருக்காங்க.ஜார்ஜ் இந்த இண்டர்நெட் யுகத்தில் பிறந்து இருப்பதால் 4 மணிநேரத்தில் அந்த துணிக்கு இவ்ளோ டிமேண்ட் ஆகி போச்சு.இந்த குட்டி வளர வளர எத்தனை கம்பெனி சம்பாதிக்க போகுதோ. ஜார்ஜ் போட்ட சொக்கா,டவுசர்,விளையாடிய குட்டி கார்,யூஸ் செய்ய போகும் பை அது இதுன்னு என்னென்ன மக்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுதோ.


Thursday, August 01, 2013

சென்னையில் பூரி ஜெகனாதர்

 நான்  நகுலிடம் நாளைக்கு காலை சீக்கிரமாய் எழுந்து ஈ.சி.ஆரில் இருக்கும் கோயில்களில் இரண்டு கோயில்கள் போய் வந்திடலாம் என்று சொல்லிட்டு படுத்தேன். காலையில் 6 மணியிலிருந்து 8 மணி வரை இங்கே செம மழை. ஆஹா வேண்டாம் மாட்டேன் என்று எல்லாம் சொல்லாமல் நகுல் கோயிலுக்கு உடனே சரி என்று சொன்னதால் தான் இந்த மழை என்று எங்க ப்ளானை மாலைக்கு ஒத்தி போட்டோம். எங்க வீட்டிலிருந்து 40 ஆவது நிமிஷத்தில ஜெகன்னாதர் கோயிலில் இருந்தோம். ஈ.சி.ஆர் டோல் கேட் தாண்டி மாயாஜாலிற்கு முன்னாடியே கானாத்தூர் என்ற ஊரில் லெஃப்டில் திரும்பி (மீன் மார்கெட்)நேராக போய் கடைசி ரைட்டில் திரும்பினால் அந்த ரோடின் கடைசியில் இந்த கோயில். மிக அமைதி.நோ கூட்டம். மாலை வெயில் இல்லாமல் அருமையான க்ளைமேட். 
புல்வெளி அருமையாக இருக்கிறது. சுற்று புறம் சின்ன இடமாக உள்ளது. பூரி கோயில் மிக பெரியது. அப்படியே பூரியில் உள்ளதை போல சிலை நடுவில் சுபத்ரா,பலராமன்,கிருஷ்ணர் என அம்சமாய் இருந்தனர்.அப்புறம் அப்படியே வரும் போது அக்கரை இஸ்கான் கோயிலிற்கு போய் வந்தோம். இந்த கோயில் சோழிங்க நல்லூரிலிருந்து ஈ.சி.ஆர் ஜாயின் ஆனதும் லெஃப்டில் திரும்பி நேரா போய் கொண்டே இருந்தால் ஒரிரு கிலோமீட்டரில் லெஃப்டில் அக்கோயில் ஆர்ச் இருக்கும் இடத்தில் திரும்பி அவர்கள் வழி முழுக்க வைத்திருக்கும் தகவல் பலகையினை பார்த்து கொண்டே போக வேண்டியது தான். இங்கே கூட்டம் இருந்தது. முதல் கோயிலில் கிடைக்காத பூரி இங்கே கிடைத்தது. வெளியில் பூரி,சமோசா,கேசரி, சுண்டல் என்று விற்று கொண்டு இருந்தார்கள். சனி,ஞாயிறில் கூட்டம் அதிகம் வருமாம்.