Saturday, March 31, 2018

Tawang - திக் திக் பயணம் 2


La’ means a pass.  This pass is main route to Tawang and then on to Tibet.
We started  to Sela pass 13,700 ft height  Distance from DIrang. The distance is 65 km.  We reached Se La is the gateway to Tawang and is a very beautiful place. Sela Pass is the second highest Pass in India Se La  வரும் முன்னாடி ஒரு மணி நேரத்திற்கு ரோடில் 10 அடிக்கு முன்னால் ஒன்றுமே தெரியலை. பனியா, புகையா என தெரியாத அளவிற்கு ரோடில் மிக நிதானமாக நகுல் வண்டி ஓட்டி வந்தான்.
செலா பாஸ் வரும் வரை வித விதமான மோசமான ரோட். அரை மணிநேர பயணத்தில் ஒரே பனி, 10 அடிதான் காருக்கு முன்னால் தெரிந்தது. ஒரு இடத்தில் மேலே ஏறும் போது அப்படி ஒரு வெளிச்சம் நீல வானம் இரண்டு பக்கமும் பளபளக்கும் மலைகள். வழியெங்கும் கொடிகள் என அருமையாக ஒரு வளைவில் போனால செலா பாஸ். அங்கே ஒரு பெரிய ஆர்ச். தவாங் வரவேற்கிறது என்று எழுத பட்டிருந்தது. செம குளிர் Se la வந்தவுடன் அப்படி ஒரு வெளிச்சம். அருமையான மலைகளுக்கு நடுவில் இருந்த ரோடில் கொஞ்ச நேரம் இறங்கி குளிரில் படங்கள் எடுத்து கொண்டோம். மிக அழகான ஒரு ஏரியும் இருந்தது. குளிர் காலத்தில் உறைந்து விடுமாம்.
 It is like life achievements after crossing Sela Pass. Headache,nausea,shortness of breath எதுவும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு Tawang 78 km.  மதியம் 3 மணிக்குள் தவாங் போயிடலாம் என்று பயணம் ஆரம்பித்தது. இங்கேயும் பாதை மிக மிக மோசம். அங்காங்கே ரோட் ரிப்பேர் செய்யவும், மிலிட்டரி ஆட்களும் மட்டுமே கண்ணில் பட்டனர். மிலிட்டரி வண்டிகள் தான் போய் கொண்டிருந்தன. பெரிய லாரிகளும், அவ்வப்போது டாடா சுமோவும் போயிட்டு இருந்துச்சு.
அழகை ரசித்து விட்டு இன்னும் கீழே போய் கொண்டிருக்கும் போது மிக மோசமான பள்ளமான ஒரு ரோடில் எங்க கார் நின்று விட்டது. நானெல்லாம் கப்சிப். கியர் போடவே முடியலை. 30 கி,மீ தாண்டினால் தான் கார் மெக்கானிக் என்று அங்கேயிருந்த மிலிட்டரிக்காரங்க சொல்லி விட பின்னால் வரும் வண்டிக்கு வழிவிட்டு 10 நிமிடங்கள் நின்றே விட்டோம். அப்புறம் கஷ்டப்பட்டு இரண்டாவது கியரில் ஸ்டார்ட் செய்து ஏறத்தொடங்கினோம். 30 கிமீ அப்படியே ஏறினோம். Jong என்னும் இடம் வரும் வரை நடுவில் ஒருவர் நடமாட்டம் கூட இல்லை. அங்கே வந்ததும் மெக்கானிக் ஷாப் போனால் தெய்வம்  மாதிரி ஒருத்தர்  2 நிமிட வேலை. க்ளட்ச்சில் காறறு அடைத்து இருந்ததாம். அதன் பிறகு கார் மிக அற்புதமாக ஓடியது. மதியம் 2.30க்கு தவாங் போய் சேர்ந்தோம்.
மார்க்கெட் பகுதியில் மிக பெரிய ரூம் எங்களுக்கு ஒரு நாளைக்கு 1200ரூபாய்க்கு கிடைத்தது. சாப்ட்டு ரூம் போடவே இருட்டி விட்டது. மாலையில்  செம குளிர். கடைகள் அனைத்தும் 6 மணிக்கே மூட ஆரம்பித்தார்கள். ஊரே அடங்கி விட்டது.
மறு நாள் காலை அங்கேயிருந்த மிக பெரிய புத்த ஆலயத்துக்கு போனோம். அங்கே அன்று ஞாயிறு என்பதால் திருவிழா போல் நடந்து கொண்டிருந்தது. அடை பார்த்து விட்டு ஆர்மி கேம்பஸ் போய் வார் மெமோரியல் பார்த்து விட்டு பழைய புத்த ஆலயத்தை தேடி போய் பார்த்துட்டு ரூமிற்கு வந்தோம். 6 மணிக்கு ஆர்மி கேம்பஸ் போய் திரையரங்கில் ஆவணப்படம் பார்த்து வந்தோம். மறு நாள் என் இரு மக்ன்களும் பும்லா பாஸ் எனப்படும் 30 கிமீ மேலே சைனா பார்டர் பார்க்க டூவீலர் வாடகைக்கு எடுத்து போக நான் ரூமிலேயே இருந்து
கொண்டேன். போனவங்க மதியம் வர சாப்டு விட்டு மார்க்கெட்டில் சுத்தி கொண்டிருந்தோம். மறுநாள் தவாங் விட்டு கிளம்பியாச்சு. திரும்ப திக் திக் பயணம். ஒரே நாளில் இரவு 7 மணிக்கு ப்லுக்பங் வந்தடைந்து ரூம் பிடித்து சாப்ட்டு படுத்தாச்சு.

NORTH EAST Statesவட கிழக்கு மாநிலங்கள்
NOVEMBER - 2016

வீட்டை விட்டு ஒரு நாளே எங்கேயும் போக முடியாமல் இருக்கும் எத்தனையோ பெண்களுக்கு நடுவில் நான் லக்கி!!!

வழக்கம் போல தனியாக டூர் போக ப்ளான் போட்ட எனது மூத்த மகன் Nagul Ram - NORTH EAST STATES two wheeler- ல் போகப்போறேன்னு கொஞ்ச நாள் சொல்லிட்டு இருந்தான். வழக்கம் போல நாங்க இரண்டு பேரும் ஓக்கே சொல்லிட்டோம்.

அவன் அப்பா ஏண்டா அவ்ளோ நாளும் Bike ல் சுத்தினா ரொம்ப கஷ்டம் எனவே கார் வாடகைக்கு  பார்க்க  சொன்னாங்க.

Nagul ஹெவ்ஹாத்தியில் கார் வாடகைக்கு தேடினான்.  நண்பர்களுடன் போக நினைத்தான். 11 நாட்கள் விடுமுறை எடுக்க யாரும் ரெடியில்லை. வார இறுதி சேர்த்து மொத்தம் 17 நாட்கள்.

திடீரென்று ஒரு நாள் அம்மா நீங்களும் Rishi  + அப்பாவும் வாங்களேன் என்றான். அப்பாவுக்கும் விடுமுறை கிடைக்கலை.

Chance கிடைக்கும் போது போயிட்டு வா என என் அம்மாவும் சொல்ல, flight ticket Rs. 3700 Chennai to Guwahati - நான் 5 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி ரெடியாகியாகியாச்சு. என் தங்கை Kumutha 11 நாட்களுக்கு மட்டும் சேர்ந்து கொண்டாங்க.

Xcent Car rent is 2500/ per day. Room rent maximum 1400 rs for 4 persons. Good and neat Rooms In all places.

போகும் இடத்தில் அவ்வப்போது பார்த்து பேரம் பேசி ரூம் போட்டாச்சு. No advance booking.

14 days in car covered 3000 km except Assam all hill area.

12 Hours day train travel from Guwahati to Agartala in last 3 days. Train crossed 4 hills and good scenery all the way. But train is not clean.

From Agartala took flight ( 3400rs) to Chennai.

நமக்கு ரொம்ப அதிகமாய் தெரியாத பகுதி இந்த வட கிழக்கு மாநிலங்கள்.

எனக்கு 14 Days car ல் போக போறோம் என்பதே திருப்தி.

ஆனா Adventure Tour என்று போக போக தான் தெரிஞ்சது.

Arunachal Pradesh roads are worst From Bhalukpong to Tawang!!

ஷில்லாங் 4 வழி பாதை மலை மேல போட்டு வச்சுருக்காங்க.

கவுகாத்தி - திரிபுரா 4 மலைகள் தாண்டி போக 2 line broadgauge line!! 4 KM tunnel in some places and so many bridges.

Assam road side கொஞ்ச நேரம் தேயிலை தோட்டம், அப்புறம் அடர்ந்த காடு, அப்புறம் நெல் வயல்கள் என அசத்திடுச்சு.

Kohima to Imphal road அகலமாய் இருக்கு ஆனா ஒரே பள்ளம், மேடு. வழியெல்லாம் மொத்த மலையும் மஞ்சள் கலரில் ஒரே பூக்கள்.

எல்லா ஊரிலும் ரசகுல்லா 10 ரூபாய்க்கு மிக டேஸ்ட். 10 Rs 2 puri or 2 chappathi with sabji.

Plain Rice, Dhal, Fried Rice, Roti, Puri, Noodles,
Fruits கிடைச்சது. தயிரும், பாலும் கிடைக்கல.

அங்கங்கே அருவி, ஆறு, வாழை மரங்கள், மூங்கில் காடு. 4.30 pm இருட்டு. 5 am sun rise. Assam, Tiripura கிராமங்களில் வீட்டுக்கு ஒரு குளம். அந்த குளிரிலும் சுறு சுறுப்பான பெண்கள். Bangladesh, China, Tibet and Burma borders. Army camp, Army Vehicle, Army man, Army..Army..Army!!!

Except Tiripura and Assam other states are cool. Arunachal Pradesh Tawang sema kulir.

Kasiranga unicornis Rhinoceros. Imphal Floating park Sangai - one type of Deer.

14 நாட்களும் மிக மோசமான Tawang ரோடிலும் மிக அருமையாக கார் ஓட்டிய my sons Nagul and Rishi.

Very Good geography knowlege to Nagul and good road knowledge to Both.Both Used GPS.

4.30 pm இருட்டி விடும் என்பதால் காலை 6 மணிக்கெல்லாம் room விட்டு கிளம்பி விடுவோம். காலையில் பெரும்பாலான டூரிஸ்ட் இடங்களில் நாங்க மட்டுமே இருப்போம்.