Friday, March 28, 2008

ஆண்களும் பாத்துக்கணும் கண்களை...(பெண்களைப் போல)

ப்ளாக் படித்துப் படித்து அல்லது டைப் அடித்து அடித்து சோர்ந்துப் போன கண்களுக்கு.....

வெள்ளரிக்காயைச் சின்ன சின்ன வட்டத் துண்டுகளாய் வெட்டி எல்லா துண்டுகளையும் உள்ளே தள்ளி விட்டு ரெண்டை மட்டும் கண்களின் மேலே வச்சுகிட்டு படுத்துகோங்க(பழைய காதலை நினைத்துக் கொண்டு)

காலையில் குளிக்க போகும் போது( போவீங்களா) இரண்டு சொட்டு தேங்காய் எண்ணை எடுத்து கண்களின் மேலே தேய்த்துக் கொண்டே போகலாம்.( பாடிக் கொண்டும் போகலாம்).

இல்லைனா.. சில்லுனு இருக்கும் பாலை எடுத்து கண்களின் மேலே பூசிக்கொண்டும் போகலாம்( பால் வடியும் முகம்)

இரவு படுக்கும் போது விளக்கெண்ணை இரண்டு சொட்டு கண்கள் மேலே தடவலாம்.(கூடப் படுபவர்கள் திட்டினால் நான் பொறுப்பு இல்லை.)

சாப்பாட்டில் உப்பை குறைத்தால்(தண்ணிப்போட்ட மாதிரி வீக்கம் கண்களை சுற்றி வராது)

தினம் ஒரு நெல்லிக்காய்(கனி) சாப்பிடலாம். கேரட் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலே நன்கு தூங்கவும்.. நிறைய தண்ணீர் குடிக்கவும். நல்ல இணையங்களைப் பார்க்கவும்...

கேரளாவில் தழிழ் படங்கள்…

அஞ்சாதே படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேரற்பு. கஜினி, போக்கிரி, சிவாஜிக்கு பின் இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நல்ல கதையம்சம் மலையாளத்தில் இருந்தாலும் ஒரே ஊருக்குள்.. இல்லையெனில் ஒரே தெருவுக்குள் கதை நடந்து விடும். கேரளாவை விட்டு வெளியில் ஷுட்டிங் ரொம்ப அதிசயம்.

எனவே,அதிகச் செலவுச் செய்து எடுக்கும் தழிழ் படங்ளை கேரளா ரசிகர்கள் விரும்புவது அதிசயமில்லை.

தழிழ் படங்களுக்கு கேரளா இரண்டாவது பெரிய மார்க்கெட் ஆக இருக்கிறது.

இந்திய சினிமாவும் கிரிக்கெட்டும்

75 வருட இந்திய சினிமாவும், கிரிக்கெட்டும் மக்களுக்கு நன்குத் தீனிப் போடுகின்றன.

சினிமாவில் இருப்பவர்களுக்கு கிரிக்கெட் பற்றியும்., கிரிக்கெட்டில் இருப்பவர்களுக்கு சினிமா பற்றியும் என்னத் தெரியும் என்று நமக்குத் தெரியாது.
ஆனால், இரண்டு துறையில் இருபவர்களுக்கும் ஒருவிதமான ஈர்ப்பு இருப்பது மட்டும் உண்மை.

எராளமான கிசுக்கிசுகள், உடைந்துப் போன உறவுகள், ஜெயித்தக் காதல்கள்... என அனைத்தும் உண்டு.

1960-ல் அஞ்சு மகேந்த்ரா மேற்கு இந்திய வீரர் காரி சோபர் உடன் காதல்..

1980களில் நீனா குப்தா விவிலியன் ரிச்சர்ட் காதல், கல்யாணம் செய்யாமல் குழந்தை என புரட்சி செய்தனர்.

பாகிஸ்தான் வீரர் மோஸிஸ் கான், ரீனா ராய் மணம் முடிந்து பின் சிறிது நாட்களில் ரீனா மட்டும் பாகிஸ்தானில் இருந்து திரும்பினார்.

கபில்தேவ் சரிகா காதல் மட்டும் செய்தனர். திருமணம் கபிலுக்கு ரீமாவுடன்...
சரிகாவுக்கு கமலுடன்..

ரவிசாஸ்த்ரி அம்ரிதாசிங் நிச்சயம் நடந்து மணம் மட்டும் நடக்கவில்லை.

பட்டோடி ஷர்மிளா காதல் திருமணத்தில் முடிந்தது.

அசாருதின், சங்கீதா பிஜ்லானி காதல் நாமறிந்தது.
அசாருதின் முதல் மனைவியை விட்டு பிரிந்தார்.

கங்குலி நக்மா கோயில், குளம் என சுற்றினர். கங்குலி மனைவி டோனா தன் நாட்டியத் திறைமையால், தன் குட்டி பெண்ணாலும் கங்குலியை மீட்டார்.

இன்று கிரிக்கெட் வீரர்கள் நன்கு ஓடுகிறார்கள்.. யார் பின்னால் என்பது தான் முக்கியம். தோனி தீபிகா படூகோனேவை துரத்துகிரறா அல்லது யுவராஜ் சிங் தீபிகாவா ???
ஷாருக்கான்,, ப்ரீத்தீ ஜிந்தா ஒரு குழுவையே வாங்கும் அளவிற்கு கிரிக்கெட்டோடு நெருக்கம்.. வாழ்க வளமுடன்.....

Thursday, March 27, 2008

அமெரிக்கர்கள் இந்தியாவில் வேலைத் தேடல்.......

ராபர்ட் டர்பினுக்கு ரொம்ப டென்சன்..மன்ஹட்டன் பகுதியில் இருக்கும் இந்திய தூதரகத்தில் போன வாரம் முழுவதும் இந்தியா செல்ல விசா
கிடைக்குமா? என காத்து இருந்தார்.

அமெரிக்காவில் ரொம்ப நாள் வேலை தேடி அலுத்துப் போன நிலையில் ராபர்ட்க்கு பெங்களூரூவிலிருந்து offer கடிதம் கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் வேலையில் சேர வேண்டும்....அதற்குள் விசா கிடைக்குமா??? அதான் டென்சன்...

இது NDTV samachar -- செய்தி.. படிக்க நல்லாயிருக்கு!!!!
நம்ம ஆளூங்க எவ்வளவு சம்பளம் அவருக்கு தரப்போராங்க என்பதே கேள்வி??????