வடகிழக்கு மாநிலங்கள் (9)
Arunachal and Nagaland we must take Inner Line permit to enter their States.
We can take in Airport and Deputy commissioner office there itself. Must produce proper Id Proof and 2 photos.
Less population in AP, More population in Assam and Nagaland.
வட கிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மிக பெரியது. அருணாச்சல ப்ரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மலை ஏறி சென்றே அடைய முடியும். நாகாலாண்ட்டின் கேப்பிடல் சிட்டி கோஹிமா மலை மேல் இருப்பதாலும் தற்சமயம் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் அந்த ஊருக்குள் போவதே பெரும்பாடாக இருக்கு, நாகாலாந்திலிருந்து மணிப்பூர் ரோட் அகலமாய் இருந்தாலும் ரோட்டில் பல இடங்கள் மிக மோசமாக சேதமடைந்து இருந்தது.
வட கிழக்கின் பல பகுதிகளும் ரோடில் போகும் போது புழுதி, தூசி என வாகனங்கள் போவதால் ரோட்டின் இரு புறம் இருக்கும் கடைகள், வீடுகள் பழையவைகளாக காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் நீட்ட குழாய்களை வைத்து ரோட்டில் தண்ணீர் அடிச்சுட்டு இருந்தாங்க. தூசி பறப்பதை அடக்குவதற்காக அந்த மக்கள் பெரும் பாடு படுவதை பார்க்க முடிந்தது. மேலும் நீண்டநேரம் பயணம் செய்தபின்புதான் ஒரு இடத்தைப்பார்க்க முடிந்தது.
நாங்கள் போகும் போது தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுவதை எங்கும் பார்க்கலை. கோடை எப்படின்னு தெரியலை. நிறைய இடங்களில் சின்ன சின்ன குளம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. சரியான தெருக்கள் இன்றி ஏறியும் இறங்கியும் தான் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போகணும்.
எனவே பெண்கள் ஸ்லிம்மாக இருப்பதாக நினைக்கிறேன். முதுகில் கை குழந்தைகளை சுமந்தப்படி பெண்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.
தொழில் என பார்த்தால் மர சம்பந்தப்பட்ட வேலைகள்., சில இடங்களில் பவர்ப்ளாண்டுகளும் நிறைய பார்த்தோம்.
மணிப்பூரில் பெண்கள் தான் அதிக இடங்களில் தென்ப்பட்டார்கள். காலை 5 மணிக்கெல்லாம் மார்க்கெட் பிசியாகிடுது. அந்த குளிரில் எப்ப எழுந்து எப்ப
மார்க்கெட் வர்ராங்கன்னு தெரியலை. பெண்கள் சீரியசாக இருந்த்தாக தோணுச்சு. ஃப்ரெண்ட்லியாக சிரிக்கலை. அவர் அவர் வேலையில் செம பிசியாக இருந்தாங்க.
நாகாலாந்து பெரும்பாலான இடங்கள் கிறிஸ்த்துவர்களாக தெரிந்தார்கள். எங்கே பார்த்தாலும் சர்ச். நெருக்கடியான இடங்களுக்கு தான் நாங்க் சென்றோம். ரோடெல்லாம் கியூ மாதிரி தான் கார்கள் நகர்ந்தன.
நாகலாந்து, அருணாச்சலத்தில் Jeans தான் தேசிய உடை மாதிரி தோணுச்சு. நீண்ட முடியை ஸ்ட்ரைட் செய்து இருந்தாங்க. எங்கே பார்த்தாலும் அட்லீஸ்ட் ஒரு ப்யூட்டி பார்லர் குக்கிராமத்தில் கூட பார்க்க முடிந்தது.
அசாம் மிக செழிப்பான பூமியாக தோன்றியது. மக்கள் இங்கே ஃப்ரெண்டிலியாக இருந்தாங்க. அசாம் சில்க் மிக காஸ்ட்லி. பார்க்கவே துணி அவ்ளோ Good feel aha இருந்துச்சு.
அசாமில் மேகலா சடார் என்னும் ட்ரஸ் பெரும்பாலான பெண்களின் உடையாக இருக்கு. பெண்கள் பாரம்பரிய உடைகளில் பெருபாலும் பார்த்தது இம்பாலில் தான். மேலே அவர்கள் போட்டிருக்கும் ஷாலில் அழகிய எம்ப்ராய்டரி போட பட்டிருந்தன. காஷ்மீர் எம்ப்ராய்டரி.
சாப்பாடு
நானும் என் மகன்களும் அசைவம் சாப்பிடுவோம். ஆனால், நானும், பெரியவனும் மீன் சாப்பிட மாட்டோம். சின்னவன் மீனும் சாப்பிடுவான். என் தங்கை முட்டை கூட சாப்பிடாத சைவம். தயிரும் சாப்பிடாது.
ஒரு சின்ன இண்டக்ஷன் ஸ்டவ், ஒரு சின்ன குக்கர், குக்கரில் வைக்கும் பாத்திரமும் எடுத்து போயிருந்தோம். தவாங்கில் தங்கி இருந்த இரண்டு நாள் சாதம் பருப்பு, ரசம் வைத்தோம். அங்கே காலிஃப்ளவர் வாங்கி செய்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் நைட் லாட்ஜுக்கு போய் தங்கி விடிகாலையில் எழுந்து குளித்து கிளம்பி விட்டதால் சமைக்க முடியவில்லை. காபி, டீ பழக்கமே எங்களுக்கு இல்லை.
காலை வேளையில் லாட்ஜ் விட்டு கிளம்பும் போது எந்த ஹோட்டலும் திறந்தே இருக்காது. போகும் போது ரோட்டோர கடைகளில் பூரி, எதாவது சப்ஜி 10 அல்லது 20 ரூபாய்க்கு ஒருவருக்கு கிடைச்சுடும். சூடா கிடைக்கும். கட்டாயம் எல்லா மாநிலங்களிலும் ரசகுல்லா இருந்தது. அதை இரண்டு, இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு போனோம் என்றால் மதியம் வரை தாங்கும். அருணாச்சல பிரதேசத்தில் கிவி பழம் நிறைய கிடைத்தது கிலோ 100 ரூபாய். அங்கே கிவி ஃபார்ம் இருக்கிறது.
மதிய வேளைகளில் white rice, பருப்பு, உ.கிழங்கு கிடைத்தது.
இல்லைன்னா veg fried rice, Noodles கிடைத்தது. மாலை வேளைகளில் Momo, சமோசா கிடைத்தது, இரவு பெரும்பாலும் நூடுல்ஸும், ரொட்டியும் தான். பழங்கள் நிறைய வாங்கி வைத்து கொண்டோம். ஜூஸ், பிரட், ஜாம், பட்டர் வைத்திருந்தோம். ஷில்லாங்கில் மிலிட்டரி ரூமில் தங்கியதால் 2 நாள் மிக அருமையான சாப்பாடு காலை, நைட் சாப்பிட்டோம்.
மணிப்பூரில் முழுச்சாப்பாடு கிடைத்தது. ஆனால் சாதம் கொஞ்சம் பிசுபிசுவென sticky குழைந்து இருந்தது. சைட் டிஷ் நிறைய காய்கறிகள் நிறைய ஸ்பைஸ் போட்டிருந்தாங்க.
வடகிழக்கு மாநில மக்கள் கீரை, பச்சை காய்கறிகளை நான்வெஜ்ஜுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீயா சூப் பதத்தில் வைத்து சாப்பிடுகிறார்கள். ஏகப்பட்ட ஸ்பைசஸ் சேர்க்கிறார்கள். மலைப்பகுதியில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
நாகாலாந்தில் தான் புழு, பூச்சிகள், தவளை கூறு கட்டி விற்பதை பார்த்தோம். மாலை வேளையில் ஆண்கள் 2 கூறு புழு, அல்லது எதாச்சும் பூச்சி வாங்கிட்டு போறாங்க.
கிராமங்களில் இருந்து பெண்கள் எடுத்து வந்து விற்கிறார்கள்.
மீன், கருவாடு எங்கேயும் விற்பதை பார்த்தோம். ஆற்று மீன், இல்லையெனில் பெங்காலில் இருந்து வரும், பங்களாதேசில் இருந்து வரும் கடல் மீன்கள் பெரிசு பெரிசாக பார்த்தோம்.
மேகாலயவில் மாட்டுக்கறி, பன்றி கறி அதிகம் விற்பதை பார்த்தோம்.
.நாங்கள் ஃப்ளைட்டில் கவ்ஹாத்தி போக ஒரு டிக்கெட் 3700 ரூபாயும், திரிபுரா அகர்தலாவில் இருந்து Return to Chennai 3400 ரூபாயும் ஆச்சு.
14 நாட்கள் கார் வாடகை ஒரு நாளைக்கு 2,500 ரூபாய். டீசல். கிட்டதட்ட 3000 கி,மீ டீசல் செலவு,
16 நாட்கள் நைட் தங்க ரூம் நால்வருக்கும் சேர்ந்து ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் 1,500 ரூபாய்,
மூன்று நேர சாப்பாடு, சில இடங்களில் அனுமதிக்கான டிக்கெட், போட்டிங் செலவு, திரிபுரா போக ட்ரையின் டிக்கெட் என எங்களுக்கு மொத்தமாக 99,999!!! ரூபாய் ஆச்சு.
மிசோரம் மட்டும் நாங்கள் போகவில்லை. மீதி ஆறு மாநிலங்களும் போனோம்.
நாங்கள் இந்த பயணத்தில் ஒரு டூரிஸ்ட் வேனில் வந்த ரிடையர்டான ஒரு ஃபரெண்ட்ஸ் க்ரூப்பை பார்த்தோம். அவர்கள் பூனாவில் இருந்து கவ்ஹாத்தி வந்திருந்தாங்க. மிசோரமும் சேர்த்து நாங்கள் பார்த்த இடங்களையும், சில இடங்கள் நாங்கள் எக்ஸ்ட்ராவாக பார்த்திருந்தோம். அவர்கள் கவ்ஹாத்தியில் ஒரு ட்ராவல்சில் புக் செய்து வந்து இருந்தாங்க. ஃப்ளைட் நீங்கலாக அவர்கள் ஒவ்வொருத்தரும் Travels க்கு கொடுத்த பணம் ரூபாய் 75,000!

No comments:
Post a Comment