Saturday, March 31, 2018

Tawang - திக் திக் பயணம் 2


La’ means a pass.  This pass is main route to Tawang and then on to Tibet.
We started  to Sela pass 13,700 ft height  Distance from DIrang. The distance is 65 km.  We reached Se La is the gateway to Tawang and is a very beautiful place. Sela Pass is the second highest Pass in India Se La  வரும் முன்னாடி ஒரு மணி நேரத்திற்கு ரோடில் 10 அடிக்கு முன்னால் ஒன்றுமே தெரியலை. பனியா, புகையா என தெரியாத அளவிற்கு ரோடில் மிக நிதானமாக நகுல் வண்டி ஓட்டி வந்தான்.
செலா பாஸ் வரும் வரை வித விதமான மோசமான ரோட். அரை மணிநேர பயணத்தில் ஒரே பனி, 10 அடிதான் காருக்கு முன்னால் தெரிந்தது. ஒரு இடத்தில் மேலே ஏறும் போது அப்படி ஒரு வெளிச்சம் நீல வானம் இரண்டு பக்கமும் பளபளக்கும் மலைகள். வழியெங்கும் கொடிகள் என அருமையாக ஒரு வளைவில் போனால செலா பாஸ். அங்கே ஒரு பெரிய ஆர்ச். தவாங் வரவேற்கிறது என்று எழுத பட்டிருந்தது. செம குளிர் Se la வந்தவுடன் அப்படி ஒரு வெளிச்சம். அருமையான மலைகளுக்கு நடுவில் இருந்த ரோடில் கொஞ்ச நேரம் இறங்கி குளிரில் படங்கள் எடுத்து கொண்டோம். மிக அழகான ஒரு ஏரியும் இருந்தது. குளிர் காலத்தில் உறைந்து விடுமாம்.
 It is like life achievements after crossing Sela Pass. Headache,nausea,shortness of breath எதுவும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு Tawang 78 km.  மதியம் 3 மணிக்குள் தவாங் போயிடலாம் என்று பயணம் ஆரம்பித்தது. இங்கேயும் பாதை மிக மிக மோசம். அங்காங்கே ரோட் ரிப்பேர் செய்யவும், மிலிட்டரி ஆட்களும் மட்டுமே கண்ணில் பட்டனர். மிலிட்டரி வண்டிகள் தான் போய் கொண்டிருந்தன. பெரிய லாரிகளும், அவ்வப்போது டாடா சுமோவும் போயிட்டு இருந்துச்சு.
அழகை ரசித்து விட்டு இன்னும் கீழே போய் கொண்டிருக்கும் போது மிக மோசமான பள்ளமான ஒரு ரோடில் எங்க கார் நின்று விட்டது. நானெல்லாம் கப்சிப். கியர் போடவே முடியலை. 30 கி,மீ தாண்டினால் தான் கார் மெக்கானிக் என்று அங்கேயிருந்த மிலிட்டரிக்காரங்க சொல்லி விட பின்னால் வரும் வண்டிக்கு வழிவிட்டு 10 நிமிடங்கள் நின்றே விட்டோம். அப்புறம் கஷ்டப்பட்டு இரண்டாவது கியரில் ஸ்டார்ட் செய்து ஏறத்தொடங்கினோம். 30 கிமீ அப்படியே ஏறினோம். Jong என்னும் இடம் வரும் வரை நடுவில் ஒருவர் நடமாட்டம் கூட இல்லை. அங்கே வந்ததும் மெக்கானிக் ஷாப் போனால் தெய்வம்  மாதிரி ஒருத்தர்  2 நிமிட வேலை. க்ளட்ச்சில் காறறு அடைத்து இருந்ததாம். அதன் பிறகு கார் மிக அற்புதமாக ஓடியது. மதியம் 2.30க்கு தவாங் போய் சேர்ந்தோம்.
மார்க்கெட் பகுதியில் மிக பெரிய ரூம் எங்களுக்கு ஒரு நாளைக்கு 1200ரூபாய்க்கு கிடைத்தது. சாப்ட்டு ரூம் போடவே இருட்டி விட்டது. மாலையில்  செம குளிர். கடைகள் அனைத்தும் 6 மணிக்கே மூட ஆரம்பித்தார்கள். ஊரே அடங்கி விட்டது.
மறு நாள் காலை அங்கேயிருந்த மிக பெரிய புத்த ஆலயத்துக்கு போனோம். அங்கே அன்று ஞாயிறு என்பதால் திருவிழா போல் நடந்து கொண்டிருந்தது. அடை பார்த்து விட்டு ஆர்மி கேம்பஸ் போய் வார் மெமோரியல் பார்த்து விட்டு பழைய புத்த ஆலயத்தை தேடி போய் பார்த்துட்டு ரூமிற்கு வந்தோம். 6 மணிக்கு ஆர்மி கேம்பஸ் போய் திரையரங்கில் ஆவணப்படம் பார்த்து வந்தோம். மறு நாள் என் இரு மக்ன்களும் பும்லா பாஸ் எனப்படும் 30 கிமீ மேலே சைனா பார்டர் பார்க்க டூவீலர் வாடகைக்கு எடுத்து போக நான் ரூமிலேயே இருந்து
கொண்டேன். போனவங்க மதியம் வர சாப்டு விட்டு மார்க்கெட்டில் சுத்தி கொண்டிருந்தோம். மறுநாள் தவாங் விட்டு கிளம்பியாச்சு. திரும்ப திக் திக் பயணம். ஒரே நாளில் இரவு 7 மணிக்கு ப்லுக்பங் வந்தடைந்து ரூம் பிடித்து சாப்ட்டு படுத்தாச்சு.









No comments: