Friday, January 28, 2011

கரண்டி முட்டை

முட்டையினை கரண்டியில் சமைப்பதால் இது கரண்டி முட்டை.
கரண்டி இப்படி நல்லா குழியாய் (கட்டாயம் கருப்பாய்!!!) இருக்க வேண்டும்.உடைத்த முட்டை, பொடித்த உப்பு,தட்டிய சோம்பு,பொடித்த மிளகு போட்டு கலந்து,இப்படி ஊற்றி கொஞ்சமாய் எண்ணெய் ஊற்றி ஸ்பூனால் ஒரு திருப்பு திருப்பினால்


இப்படி கரண்டி முட்டை ரெடி.
                  



இதனுள் முட்டை வேகும் போது கொஞ்சமா வேக வைத்த கறித்துண்டுகள், கோழித்துண்டுகள் பிச்சுப் போட்டால் ஒரு கரண்டி முட்டை ஹோட்டல்களில் 60 ரூபாயாம். பிரியாணி போல இல்லாமல் ஆத்துக்காரர் உதவியின்றி நானே சாப்பிட்டது.சாரி செய்தது.

17 comments:

அன்புடன் நான் said...

நீங்களே செய்தது நம்புறோம்....

இது போல சின்னவயசுல... எங்க அம்மா செய்து கொடுத்தாங்க.... அவ்வளவு சுவையா இருக்கும்.

பகிர்வுக்கு நன்றிங்க.

Ram said...

கொடுமை படுத்துறாங்க பாஸ்...

GEETHA ACHAL said...

ஆஹா...கரண்டை முட்டை பெயர் வித்தியசமாக இருக்கின்றது...நல்லா இருக்கு...

ஆயிஷா said...

பெயர் வித்தியசமாக இருக்கு.நல்லா இருக்கு.

ஸ்வர்ணரேக்கா said...

எப்படிங்க உங்களுக்கு மட்டும் இந்த ரெசிபிலாம் சிக்குது...

அமுதா கிருஷ்ணா said...

’’இது போல சின்னவயசுல... எங்க அம்மா செய்து கொடுத்தாங்க.... அவ்வளவு சுவையா இருக்கும்’’

இப்ப மனைவியினை செய்துகொடுக்க சொல்லுங்க கருணாகரசு சார்.

அமுதா கிருஷ்ணா said...

இதையே கொடுமைன்னா இன்னும் வரப்போகும் சமையலோ சமையலை என்ன சொல்வீங்க தம்பி கூர்மதியான்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கீதா ஆச்சல்.இரண்டு முட்டையில் செய்தால் பெரிசா வரும்பா..

அமுதா கிருஷ்ணா said...

ஆயிஷா இது நான் வைத்த பெயர் இல்லை. இது என் பாட்டி செய்வார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

ஸ்வர்ணரேக்கா இது என் பாட்டியின் அம்மா, அதன் பின் என் பாட்டி, பின் என் அம்மா, இப்ப நான் ஒரு 90 வருடம் முன்னால் செய்ய ஆரம்பித்தது..

சுசி said...

அட.. இது ரொம்ப நல்லா இருக்கே.

Chitra said...

கறித்துண்டு ...கோழித்துண்டு எல்லாம் சேர்த்து இந்த முட்டையை எப்போடா சாப்பிடுவோம் என்று இருக்கிறது.... இப்படி ஒரு கரண்டி என்னிடம் இப்போ இல்லையே..... இந்தியா வரும் போது வாங்க இருக்கும் ஷாப்பிங் லிஸ்ட்ல சேர்த்துட வேண்டியதுதான்.

அமுதா கிருஷ்ணா said...

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் சுசி..

ஆமாம் சித்ரா கரண்டி கண்டிப்பா வாங்குங்க..

விஜய் said...

புதுசா இருக்குங்க

வீட்ல செய்ய சொல்றேன்

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

ரெசிப்பி புதுசா இருக்குது..

ஹுஸைனம்மா said...

இப்படி கரண்டில ஆஃப்பாயில் போட்டா நல்லாருக்கும். இதுபோல குழிப்பணியாரச் சட்டியில் செய்வதுண்டு.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி விஜய்.

நன்றி அமைதிச்சாரல்.

நன்றி ஹீஸைனம்மா..