Wednesday, January 05, 2011

பல்புகள் நல்லது

கொஞ்ச மாதங்கள் முன்பு ஃபேஸ்புக்கில் என்னுடைய கஸினின் ஃப்ரெண்ட் ஃபோட்டாவை பார்த்து மெசேஜ் அனுப்பினேன்.பதிலே இல்லை. இரண்டும் மாதம் கழித்து திரும்ப ஒரு மெசேஜ் அனுப்பினேன். இம்முறை பதில் வந்தது. ஆமாம் உங்களை எனக்கு தெரிகிறது. இப்ப என்ன? உங்களுக்கு என்ன வேண்டும் ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேட்டு இருந்தார் அந்த பெண்.அட ராமா இந்த பெண்ணிடம் நாம் என்ன பிச்சையா கேட்டோம்.தெரிந்தவராய் இருக்கிறாரே என்று தொடர்பு கொண்டால் அம்மணி இப்போ அமெரிக்காவில் இருப்பதால் இந்த அலட்டல் போலும்.
ஐந்து வருடம் முன்னால் என் கஸின் படித்த கல்லூரி ஹாஸ்ட்டலுக்கு கஸினை பார்க்க போன போது அக்கா அக்கா என்று என்னை ஒட்டிக் கொண்டு சுமார் 1000 ருபாய்க்கு எனக்கு தண்ட செலவு வைத்தவர் அந்த பெண். அப்பத்தான் முதல் நாள் என்னை பார்க்கிற மாதிரியே இல்லாமல் அக்கா நானும் சினிமா வரேன், எனக்கு இரண்டு மில்க் ஷேக் தான் வேண்டும், நானும் ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் எடுத்துக் கொள்கிறேன், என்று அப்போதே ஒரு மாதிரி வித்தியாசமாய் நடந்துக் கொண்டது அந்த பெண்.சரி சின்ன பெண் தானே என்று ஆசையாய் வாங்கிக் கொடுத்தேன். ஒரு வேளை அந்த பணத்தினை கேட்கதான் நான் மெசேஜ் அனுப்புவதாய் நினைத்து விட்டாரோ.செம பல்பு எனக்கு.
ஆனால்,இந்த பல்பு கொஞ்சமும் பிடிக்கலை.

மேலே ஃபோட்டாவில் இருக்கும் என் தம்பி மகன் வாண்டு விஷாலுக்கு இப்போது வயது 4. சார் UKG B section படிக்கிறார் அரை பரீட்சை லீவில் எங்கள் வீட்டில் தான் 10 நாள் டேரா.ஒரு ராத்திரி நாங்க இருவரும் தூங்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் போது லாலி, லாலி என்று தாலாட்டு பாட முயன்றேன்.மம்மி தூங்கும் போது ஏன் இப்படி டிஸ்டர்ப் செய்றீங்க என்று சிரிச்சுட்டே எனக்கு ஒரு பல்பு கொடுத்தான்.

கலர்ஸ் நேம்ஸ் எழுதலாமா,வெஜிடபிள் நேம்ஸ் படிக்கலாமா என்று குட்டி கேட்டது. லீவில் என்னடா படிப்பு சும்மா ஜாலியா இருடா என்றேன்.அச்சச்சோ ஜனவரியில் எண்ட்ரன்ஸ் எக்சாம் இருக்குதுல்ல அதுக்குதான் படிக்கணும் என்று ஒரு பல்பு கொடுத்தான். குரோம்பேட்டை சுந்தரவள்ளி மெமோரியல் ஸ்கூல் 1 ஆம் வகுப்பு அப்ளிகேஷன் வாங்கி இருக்கோம் குட்டிக்கு. அதை பற்றி, ஜனவரி 31-ல் நுழைவு தேர்வு பற்றி அவன் அப்பாவிடம் ஃபோனில் சொன்னதை நினைவு வைத்து சார் லீவிலும் ஒரே படிப்ஸ்.

நானும் அவனும் இரண்டு நாட்கள் வேலூர் போனோம்.தங்கக்கோயில் கார் பார்க்கிங் ஏரியா வரை போய்விட்டு கூட்டத்தினை பார்த்துட்டு ஒரே ஓட்டம்.அமிர்தி என்றொரு அருவிக்கு போனோம்.போனால் செவ்வாய் விடுமுறை என்று அங்கேயும் ஒரு பெரிய பல்பு கிடைத்தது.அருவி நீர் சில்லென்று ஆறாக வரும் இடத்தில் குட்டீசை குளிக்க செய்து ரிடர்ன் ஆனோம்.

இரண்டு பேரும் கமலின் மன்மத அம்பு படம் தியேட்டரில் பார்த்து ஒரு மிகப் பெரிய பல்பு வாங்கினோம்.செம்மொழி பூங்கா பார்க்கலாம்னு போனால் அய்யோடா என்னவொரு கூட்டம்.வாசலோடு ரிடர்ன்.இங்கேயும் மிகபெரிய பல்பு.

நியூ இயருக்கு முந்தின நாள் மாலை என் மகன் நகுல் வர லேட்டானதால் அவனிடம் ஃபோனில் ஏன் லேட்டு என விசாரித்துக் கொண்டு இருந்தேன். ஃபோனை வைத்ததும் குட்டி கேட்டான் மம்மி கிறிஸ்துமஸிற்கு எனக்கு கிஃப்ட் கொடுக்காததால், நியூ இயருக்கு கிஃப்ட் வாங்க போய் இப்ப நகுலுக்கு லேட்டாச்சான்னு.ஆகா எவ்வளவு பெரிய பல்பு. அப்புறம் நகுலுக்கு ஃபோன் செய்து குட்டிக்கு கிஃப்ட் வாங்கி வரச்சொன்னேன்.

இப்படி போன வருட கடைசியில் குட்டியிடம் நான் வாங்கிய சில பல பல்புகளால் எங்கள் வீடே புது வருடத்தில் பளிச்சென்று இருக்குது.அதனால் பல்புகள் நல்லது.


என் பசங்க இரண்டும் என்னை மம்மி என்று அழைப்பதால் போட்டிக்கு என் தம்பி மகனும் என்னை மம்மி என்று தான் அழைப்பான். எவ்வளவு சொல்லியும் என்னை அத்தை என்று கூப்பிடவே மாட்டான். அவன் அம்மாவை அம்மா என்று கூப்பிடுவான்.


17 comments:

Chitra said...

எல்லாமே பளிச்...... பளிச்.... ஹா,ஹா,ஹா,....

வெங்கட் நாகராஜ் said...

பல்புகளின் வெளிச்சத்தில் வலைப்பூ பிரகாசமாய்!

பகிர்வுக்கு நன்றி.

Subramanian Vallinayagam said...

ஹாய்
நான் தமிழ்மணத்தில் இந்த டைட்டிலைப் பார்தவுடன் கிளிக்கினேன் good createtivity :)
பதிவும் அருமை. அந்த facebook மேட்டர் சூப்பர்.

அன்புடன் அருணா said...

முதல் பல்ப் தவிர அனைத்தும் பளிச்!

அமுதா கிருஷ்ணா said...

சித்ரா நான் வாங்கிய பல்புக்கு ஹா, ஹாவா நீங்களும் பல்புகள் வாங்க கடவாயாக..

அமுதா கிருஷ்ணா said...

அருகைக்கு நன்றி வெங்கட்.

அமுதா கிருஷ்ணா said...

நான் வாங்கிய பல்பு சூப்பரா சுப்ரமணியம்.நல்லாயிருப்பா..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் அந்த முதல் பல்பு ச்ச..தாங்ஸ் அருணா..

வார்த்தை said...

title is really good

Sukumar said...

Nice... Post..!!

ஸ்வர்ணரேக்கா said...

//அக்கா அக்கா என்று என்னை ஒட்டிக் கொண்டு சுமார் 1000 ருபாய்க்கு எனக்கு தண்ட செலவு வைத்தவர் அந்த பெண்//

--- அப்போதே அந்த பெண்ணிற்கு நீங்கள் பல்பு தந்திருந்தா, இந்த ரிடர்ன் பல்ப தவிர்த்திருக்கலாம்ல...

மன்மதன் பல்பு உங்களுக்குமா...?

நசரேயன் said...

நீங்க பெரிய பல்ப் கடையே வைக்கலாம்

ஆமினா said...

எவ்வளவு பிரகாசமா தெரியுறீங்க!!!!!!

ஆயிஷா said...

பதிவும் அருமை.பகிர்வுக்கு நன்றி.


//அக்கா அக்கா என்று என்னை ஒட்டிக் கொண்டு சுமார் 1000 ருபாய்க்கு எனக்கு தண்ட செலவு வைத்தவர் அந்த பெண்//

--- அப்போதே அந்த பெண்ணிற்கு நீங்கள் பல்பு தந்திருந்தா, இந்த ரிடர்ன் பல்ப தவிர்த்திருக்கலாம்ல...//

Vidhya Chandrasekaran said...

சும்மா பளிச் பளிச்சுன்னு எரியுதேக்கா:)

Jaleela Kamal said...

தலைப்பு ஹி ஹி

பல்புகள் நல்லது\

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வார்த்தை..

தாங்ஸ் சுகுமார்..

பல்பு தர யோசிக்கிறேன் ஸ்வர்ணரேக்கா..

இந்த வருடம் அந்த கடை தான் ஓபன் செய்யணும் நசரேயன்..

நன்றி ஆமினா..

நன்றி ஆயிஷா.

நன்றி வித்யா..

நன்றி ஜலீலா..