Thursday, January 27, 2011

வெரைட்டி-தை-2011

பொங்கல் அன்று எதிர் வீட்டில் 3 மாதம் முன்பு புதியதாய் குடி வந்து இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொங்கல் கொடுத்து வாடா என்று நகுலிடம் கேட்ட போது, போங்கம்மா அந்த வீட்டில் யாரும் முகம் கூட பார்க்க மாட்டாங்க, பேசவே மாட்டாங்க நான் போக மாட்டேன் என்றான், நீங்களும் பேசி நான் பார்த்தது இல்லை என்ன திடீரென்று பொங்கல்,பாயாசம் என்று பார்சல் என்றான். அதற்கு ரிஷி நகுலிடம் சொன்ன பதில் கடைசி பத்தியில்.


போன வாரம் தம்பி மகன் விஷால் ஸ்கூல் டே ஃப்ங்ஷன். சார் டான்ஸ் ஆடுகிறேன் என்று 10 நாளா தினம் ஃபோனில் சொல்லிட்டே இருந்தான்.சரி என்று ஸ்கூலுக்கு போனேன். உன் கூட ஆடப்போகும் பெண் பெயர் என்னடா கேட்டால் ஒரே வெட்கம் சாருக்கு. அப்புறம் ரொம்ப அலட்டிக் கொண்டு ஒரு குட்டிப் பெண்ணை காண்பித்தான். பெயர் எல்லாம் தெரியாது என்று சொல்லிட்டான்.சரியென்று அந்த பெண்ணிடம் பெயர் கேட்டேன். அது அதிபயங்கர வெட்கத்தில் ப்ரியா என்று சொல்லிச்சு. உடனே இவன் மம்மி நீங்க யார் கிட்டேயும் இதை சொல்ல கூடாது என்று சொல்லிட்டான்.இது ஏன்னுதெரியலை. வெட்கமாம்.மூன்றாவதாக அவனின் ப்ரோக்ராம் வந்தது. நல்லாதான் ஆடினார்கள். ஆனால் குழந்தைகள் போட்டிருந்த ட்ரெஸ் கலர் தான் சகிக்கலை. மண் கலர், மரக்கலர்,இட்லி பொடிக்கலர்,மூக்குப்பொடி கலர் என்ன ரசனையோ அந்த டீச்சருக்கு. வேறு டான்ஸ் ஆடினவர்கள் எல்லாம்   
கலர்ஃபுல்லாய் இருக்க இவர்கள் ட்ரெஸ் கொடுமையாய் இருந்தது. ஆனால், குழந்தைகள் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த சிரிப்பு பார்க்க பார்க்க சூப்பர்.போன வீக் எண்டில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம். திண்டுக்கல், சோழவந்தான், சுல்தான்பேட்டை, கோயமுத்தூர் என பஸ்ஸிலேயே சுற்றி விட்டு வந்தோம்.சோழவந்தான் ஒரு குட்டி கேரளா.திண்டுக்கல் டூ வாடிப்பட்டி தனியார் பஸ்ஸில் இளையராஜா ராஜ்ஜியம் தான்.பாட்டு கேட்டுக் கொண்டே பசுமையில் பயணம் அருமையாக இருந்தது.

அப்புறமா சுல்தான்பேட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மாமா பெண் வீட்டிற்கு ஒரு விசிட்.மேடம் அலுவலகமும், வீடும் ஒரே காம்ப்பவுண்டினில்.காலை டீ,மதிய சாப்பாடு, மாலை டிபன் என வீட்டிற்கு அடிக்கடி விசிட் செய்கிறார். ஆனால், லீவு போட்டால் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும் சில சமயங்களில் என சலித்துக் கொண்டார்.

கோயம்புத்தூரில் என் கணவரின் ஃப்ரெண்ட் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்க சென்றோம். நானெல்லாம் தண்ணீ அடிச்சேன், ஸ்மோக் செய்தேன்.இப்ப அனுபவிக்கிறேன் , ஆனால் எந்த தப்பும் செய்யாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். கீமோவிற்கு செல்லும் போது அங்கு ட்ரீட்மெண்ட் செய்ய வரும் 5 வயது குழந்தைகளை நினைத்து தான் அவர் புலம்பினார். இந்த கேள்விக்கு பதில் தெரியலை.

போன மாதம் ஒரு நாள் மதியம் வீட்டில் நான் இல்லாத போத பூட்டி இருந்த வீட்டு வாசலில் எனக்கு ஃபோன் செய்துட்டு ரிஷி காத்து இருந்த போது அந்த எதிர் வீட்டு பெண் உன் அக்கா காலையில் 11 மணிக்கு போனாங்க, நீ வேணா என் வீட்டில் வெயிட் செய் என்று சொல்லி இருக்கிறார்.  ஆண்ட்டி அவுங்க என் அக்கா இல்லை, என் அம்மா, ஃபோன் செய்துட்டேன் இப்ப வந்துடுவாங்க என்று சொல்லி இருக்கிறான்.அன்று நான் வந்ததும் உங்களை அக்கா என்று நினைச்சுட்டாங்கம்மா என்று சிரித்தான்.அன்றுஅக்கான்னு அவுங்க சொன்னதுக்கு தான் நான் பொங்கல் கொடுக்கிறேனாம்.இல்லையே! ஒரு நட்பு உணர்வுடன் கொடுத்தால் இந்த காலத்து பசங்க இருக்காங்களே !!!


19 comments:

வெங்கட் நாகராஜ் said...

பசங்க எல்லாம் சரியா புரிஞ்சிக்கறாங்க இப்பல்லாம்! :) நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் போல! நல்ல பகிர்வு.

எல் கே said...

//உங்களை அக்கா என்று நினைச்சுட்டாங்கம்மா என்று சிரித்தான்.அன்றுஅக்கான்னு அவுங்க சொன்னதுக்கு தான் நான் பொங்கல் கொடுக்கிறேனாம்/

செம பல்ப்

Ram said...

அந்த உங்க தம்பி பையன் பெரிய ஆளா வருவார்ங்க..!!!

அப்பரம் நம்ப ரிஷி சொன்னது சரிதான்.. ஏங்க நடிக்கிறீங்க.??? சபாஷ் ரிஷி கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே.!!!

அமுதா கிருஷ்ணா said...

தொடர் வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி வெங்கட் நாகராஜ்..

அமுதா கிருஷ்ணா said...

எல் கே என்ன ஒரு சந்தோஷம்.வாழ்க.

அமுதா கிருஷ்ணா said...

தம்பி கூர்மதியான் நல்லாயிருப்பா..

Vidhya Chandrasekaran said...

ரிஷி சரியாத்தான் சொல்லிருக்காப்ல:)

தீபிகா said...

இப்படி உங்க பையன்கிட்ட மாட்டிகிட்டீங்களே

என்னையும் பாருங்க,
http://avanidamnaan.blogspot.com/

சாந்தி மாரியப்பன் said...

பசங்ககிட்ட பல்பு வாங்கற சுகமே தனிதான் :-))

அமுதா கிருஷ்ணா said...

நன்றி வித்யா.

நன்றி தீபிகா..

நன்றி அமைதிச்சாரல்.

எல்லோரும் ரிஷி கட்சி தானா??

ஹுஸைனம்மா said...

அவங்க அக்கான்னு சொன்னதும், “எந்த காலேஜ் நீங்க”ங்கிற விளம்பரம் நினைவுக்கு வந்திருக்குமே? :-)))

ஐந்து வயது குழந்தைக்கும் கீமோ.. :-((((

ஆயிஷா said...

நல்ல பகிர்வு.

அமுதா கிருஷ்ணா said...

கரெக்ட் ஹீஸைனம்மா.

நன்றி ஆயிஷா..

நன்றி கனாக்காதலன்..

Chitra said...

அன்று நான் வந்ததும் உங்களை அக்கா என்று நினைச்சுட்டாங்கம்மா என்று சிரித்தான்.


.....great compliment!!!

ஸ்வர்ணரேக்கா said...

//எந்த தப்பும் செய்யாத குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் //

உண்மைதான்.. பாவம் அந்த குழந்தைகள்..

Dubukku said...

//அன்றுஅக்கான்னு அவுங்க சொன்னதுக்கு தான் நான் பொங்கல் கொடுக்கிறேனாம்.//

Correcta thane solli irukkanga pasanga :P

சுசி said...

நல்ல பகிர்வுங்க..

என் அம்மாவையும் வந்து பாக்கிறவங்க எல்லாம் எனக்கு அக்கா மாதிரி இருக்காங்கன்னு சொல்றாங்க :)

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சித்ரா..

நன்றி ஸ்வர்ணரேக்கா..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி டுபுக்கு.ஒத்துக்க மாட்டீங்களே?

நன்றி சுசி..நான் உங்க அம்மா கட்சியா?