Thursday, January 06, 2011

எங்க வீட்டு பிரியாணி

ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு சமையல் குறிப்பு எழுதலைனா, 100 பதிவு எழுதி என்ன பயன், நம்ம ப்ளாக்காண்டவர் மன்னிக்க மாட்டாரே என்று 101 ஆவது பதிவாக எங்க வீட்டில் நாங்க செய்யும் பிரியாணி இதோ.

தேவையான பொருட்கள்:

மட்டன் 1 கிலோ
சீரக சம்பா அரிசி 4 டம்ளர்
வெள்ளை பூண்டு 15 பல்
பெரிய வெங்காயம் 2
புதினா அரைக்கட்டு
தயிர் ஒரு கப்
இஞ்சி பெரிய துண்டு
உப்பு நுனிக்கையில் இரண்டு முறை
பட்டை 3
கிராம்பு 4
ஏலக்காய் 4
பச்சை மிளகாய் 6
நெய் அரை டம்ளர்
பொடி செய்த பட்டை 3 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்

செய்முறை:

1.அரிசியினை நன்கு கழுவி 15 நிமிடம் ஒரு பாத்திரத்தில் ஊற போடுவேன்.
2.நறுக்கிய வெங்காயம்,தட்டிய பூண்டு, இரண்டாய் பிழந்த மிளகாய்,உருவிய புதினா,அரைத்த இஞ்சி இவை அனைத்தையும் ஒரு தட்டில் அழகாய் எடுத்து வைப்பேன்.
3.ஏலக்காய்,கிராம்பு,பட்டை,பட்டைப்பொடி,மிளகாய் பொடி இன்னொரு தட்டில் எடுத்து வைப்பேன்.
4. நெய்,தயிரை ஒவ்வொரு சின்ன கிண்ணத்தில் வைப்பேன்.
5. உப்பையும் அடுப்பின் பக்கத்தில் எடுத்து வைப்பேன்.
6. மட்டனை நன்கு கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு அதனையும் அடுப்பின் பக்கத்தில் வைப்பேன்.

வெறும் குக்கரை அடுப்பில் வைத்து விட்டு என் கணவருக்கு,குக்கர் வைச்சுட்டேப்பா என்று ஒரு குரல் கொடுத்து விட்டு டி.வி பார்க்க உட்கார்ந்து விடுவேன்.

அடுத்த 10 நிமிடத்திற்கு சொய்ங்,சொய்ங் என்று கரண்டியால் வதக்கும் சத்தமும்,அசத்தலான வாசமும் வரும்.கொஞ்ச நேரத்தில் குக்கர் வெயிட் போட்டுட்டேன் என்று குரல் வரும்.அடுத்த 10 நிமிஷத்தில் குக்கர் இரண்டு விசில் சத்தம் கேட்டு போய் குக்கரை ஆஃப் செய்து விடுவேன்.குக்கர் திறக்க வெயிட் செய்யும் நேரத்தில் கிச்சன் கிளீன் செய்துடுவேன்.

அடுத்த 10 நிமிடத்தில் பசங்களா சாப்பிட வாங்க என்று ஒரு குரல் கொடுத்தால் பிரியாணி டேபிளுக்கு வந்து விடும். இப்படி தான் எங்க வீட்டில் பிரியாணி செய்வோம்.

என் கணவரின் க்ளோஸ் ஃப்ரெண்டு ஊட்டி பக்கத்தில் கோத்தகிரியில் டாக்டராக இருக்கிறார்.வருடம் இரண்டு முறையாவது என் கணவர் செய்யும் பிரியாணி சாப்பிடணும் அவருக்கு.இந்த பிரியாணிக்காக அடிக்கடி ஃபோன் செய்து கோத்தகிரிக்கு கூப்பிட்டு கொண்டே இருப்பார்.

நானும் ஓரிரு முறை சொய்ங், சொய்ங் என்று கரண்டியால் குக்கரில் சத்தம் செய்து பார்த்தாலும் அவர் செய்யும் பிரியாணி டேஸ்ட் வருவதேயில்லை. அதனால்,ரிஸ்க் எடுப்பதும் இல்லை.


20 comments:

வால்பையன் said...

செய்முறை கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்!

வால்பையன் said...

இன்னும் நிறைய ரெசிப்பி கொடுங்க மேடம்!

Chitra said...

I liked your style of writing the recipe. It was funny! You should write more often like this. Please......

மதுரை சரவணன் said...

பிரியாணிக்கு நீங்கள் கொடுத்துள்ள சவுண்டே சாப்பிட அழைக்கிறது... வாழ்த்துக்கள். இருநூறு பதிவு என முன்னேறுங்கள்....தொடரட்டும்.

Vidhya Chandrasekaran said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

ஆசைஆசையாய் ஓடோடி வந்த என்னை ஏமாத்திட்டீங்களேக்கா. சரி அவர் சமைக்கும்போது கொஞ்சம் பார்சலாவது அனுப்புங்க.

அமுதா கிருஷ்ணா said...

வாங்க வால்பையன் ரெசிப்பி போட்டாதான் விசிட் செய்றீங்க..

அமுதா கிருஷ்ணா said...

சிரிப்பு சித்ரா உங்க பதிவுகளை அதிகம் படிப்பதால் இந்த பாதிப்பு.உங்க கமெண்ட்ஸ்க்கு தாங்க்ஸ்

அமுதா கிருஷ்ணா said...

நன்றி மதுரை சரவணன்..

அமுதா கிருஷ்ணா said...

பார்சல் நிச்சயம் உண்டு வித்யா..

சாந்தி மாரியப்பன் said...

நீங்க பிரியாணி செய்யும் முறை ரொம்ப ஈஸியா இருந்திச்சுப்பா.. டேஸ்ட்டாவும் :-)))).

ச்சும்மா உக்காந்துக்கிட்டே ஜெயிக்கிறீங்கல்ல :-))

ஸ்வர்ணரேக்கா said...

நீங்க சமைக்கலயா..? அப்போ தைரியமா பார்சல் கேட்கலாம்...

அமுதா கிருஷ்ணா said...

நானே தான் எல்லாத்தையும் செய்வேன் என்ற பெண்ணியவாதி இல்லை நான்.
நன்றி அமைதிச்சாரல்.

அமுதா கிருஷ்ணா said...

என்ன ஒரு வில்லத்தனம் ஸ்வர்ணரேக்கா

ஹுஸைனம்மா said...

//பிரியாணி டேஸ்ட் வருவதேயில்லை. //

அதுக்காக, இதான் சாக்குன்னு கரண்டிய அந்தப் பக்கம் கொடுத்துட்டீங்கபோல, புத்திசாலி!! நானெல்லாம் “விடுவேனா பார்”னு மீண்டும் மீண்டும்னு... இனி உங்க ஸ்டைல்தான்!! :-))))

ஆமினா said...

சரி....சரி...

எனக்கும் அனுப்பிவிடுங்க...ஓவரா பசிக்குது!!!!

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ஹீஸைனம்மா..

அனுப்புறேன் ஆமினா..

R.Gopi said...

அமுதா...

100வது பதிவு கடந்து 101 பதிவிட்டமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்...

பிரியாணி வாசம் இங்கிட்டு வருதுங்கோ.

பிரமாதமான ரெசிப்பி...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கோபி..

Jaleela Kamal said...

rompa nallaa irukku amutha

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html