போன வாரம் என் ஃப்ரெண்ட் ஜெயா வீட்டிற்கு போன போது வழக்கம் போல் இரண்டு பேரும் பேசிக் கொண்டே சேர்ந்து சமைத்தோம்.அதாவது நான் பேசிக்கொண்டும், ஜெயா சமைத்துக் கொண்டும். சமைத்ததை சாப்பிட்டோமா என்றெல்லாம் கேட்க கூடாது. அவளுடைய இரண்டு பெண்களும், என்னுடைய இரண்டு பசங்களும் எதற்கு இருக்கிறார்கள்.எங்கள் சமையல் ஆராய்ச்சியின் எலிகளே அவர்கள் தானே.
ஆஹா!!! சமையலுக்கு தூள் உப்பு எடுத்த போது அந்த உப்பு டப்பாவை பார்த்து நான் அசந்தே விட்டேன்.மூடியில் லேசாக உடைந்த பகுதிக்கு செலோ டேப்பால் ஒரு ஒட்டு போடப்பட்டிருந்தது.நான் அசந்தது அந்த ஒட்டை பார்த்து அல்ல.அசந்த நான் இப்பொழுது சிரிக்க ஆரம்பித்தேன்.ஜெயா என்ன இது என கேட்டுக் கொண்டே நான் சிரிக்க கூடவே சேர்ந்து ஜெயா சிரிக்க எங்கள் அட்டகாச சிரிப்பை கேட்டு பசங்க எல்லாம் கிச்சனில் ஆஜர்.
என்ன மம்மி சொல்லிட்டு சிரிங்க என்று ஒரே நொச்சு.சிரிப்பால் எனக்கு விஷயத்தினை சொல்லவே முடியவில்லை.ஜெயாவிற்கும் சொல்ல முடியவில்லை. அந்த டப்பாவை என் கைக்கு அருகில் பார்த்ததும் என் ஃப்ரெண்ட் மகள் வைஷ்ணவிக்கு புரிந்து போச்சு. ஓ, இதுவா ஆண்ட்டி என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு எங்கள் சிரிப்பின் காரணத்தினை சொல்லி கொண்டு இருந்தாள்.
அதாவது இந்த உப்பு டப்பாவிற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
டப்பா தன் பயணத்தினை நெல்லையில் ஆரம்பித்து ஹைதை,மீரட்,
ரூர்க்கி,பெங்களூர்,வெலிங்க்டன், ஷில்லாங், நாசிக் என 20 வருடங்களாக ஒவ்வொரு ஊரிலும் ஒரு மூன்று வருடம் இருந்துட்டு இப்ப சென்னை வந்துள்ளதே அது தான் என் சிரிப்பிற்கு காரணம்.
அப்படி என்ன சிற(ரி)ப்பு அந்த டப்பாவில்.அது நாங்கள் ஆறாப்பு படித்த போது க்ளாசில் மிகவும் அமைதியாக இருக்கிறாள் என்று(என் கூட சேர்ந்து இருந்தும்) எங்கள் க்ளாஸ் டீச்சர் ஜெயாவிற்கு பரிசாக கொடுத்தது.அவள் வாழ்க்கையில் வாங்கிய ஒரே பரிசு அதான் என்பதால் அந்த டப்பாவிற்கு அவ்வளவு மகிமை.உப்பு தினம் சமையலுக்கு எடுத்தே ஆக வேண்டும் எனவே அந்த டப்பாவை தினம் பார்க்கலாம் என்பதால் அந்த டப்பா 20 வருடங்களாக உப்பை சுமக்கிறது.ஜெயாவின் கணவர் ஆர்மியில் ஆஃபிசர்.அதான் இத்தனை ஊர் சுற்றல்.
நகுல் ம்மா இப்படி சிரிக்கிறீர்களே, ஆண்ட்டியாவது ஒரு பரிசாவது வாங்கி இருக்காங்க நீங்க என்னம்மா வாங்கினீங்க என்ற போது எங்கள் ஃப்ரெண்ட்ஷிப் தான் நான் வாழ்க்கையில் பெற்ற பரிசு என்று சொல்லணும் போல் இருந்தாலும், அந்த கேள்வியே காதில் விழாது போல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தேன்.
27 comments:
nice
நல்ல பகிர்வு. ஒவ்வொரு டப்பாவின் பின்னும் ஒரு கதை இருக்கும்போல இருக்கு! பகிர்வுக்கு நன்றி சகோ...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
கடைசியா பையன்கிட்ட பல்பா?
உப்பு டப்பா மனதை தொட்டது.அமுதா.
சுவாரஸ்யமான மலரும் நினைவுகள்.
//ஃப்ரெண்ட்ஷிப் தான் நான் வாழ்க்கையில் பெற்ற பரிசு என்று சொல்லணும் போல் இருந்தாலும்,//
எப்படி எல்லாம் சமாளிக்கிறாங்கப்பா..!!!
இந்த உப்பு டப்பாவின் வரலாறு நாளை சரித்திரம் பேசட்டும்...
அருமை அமுதா
உப்புக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதையா...
சூப்பர்ப்....
நன்றி ராம்ஜி.
ஆமாம், வெங்கட் நிச்சயம் சில பொருட்களூக்கு இப்படி ஒரு கதை இருக்கும்.
பல்பு வாங்குறதே பொழைப்பா போச்சு எல் கே.
உப்பு ஸ்வீட்டா சித்ரா..ஓகே ஓகே..
சூப்பருஉப்பு :-))))
தாங்க்ஸ் ஆசியா ஓமர்.
வருகைக்கு நன்றி லக்ஷ்மி மேடம்.
தம்பி கூர்மதியான் சும்ம ஒரு பில்டப்பு தான்..
வருகைக்கு நன்றி ஆமினா, கீதா ஆச்சல்.
உப்பு டப்பா ரூபத்தில் ஒரு வோர்ல்டு கப்பு!!
அழகு!! :)
சிரிப்பு வந்தாலும் இனிய நினைவுகள்..
ஆஹா வோர்ல்ட் கப்பா தாங்ஸ் பிரபு..
நன்றி சுசி..
தூள் உப்பு சூப்பர் உப்பு ஆச்சு அமைதி சாரல்.
என்னத்த சொல்ல !???
ஏன் சங்கர் ரொம்ப நொந்து போய் விட்டீர்கள்?
:)
ஆனாலும் ஒண்ணுமே வாங்காமல் உங்க ஃபிரண்டை நினைத்து இப்படி விழுந்து விழுந்து சிரித்தது கொஞ்சம் ஓவர்தானுங்க..
ஸ்வீட் ஸ்மைலி முத்துலெட்சுமி.
ஃப்ரெண்டுடன் சேர்ந்தால் காரணமேயில்லாமல் இப்படி விழுந்து விழுந்து சிரிப்பது இப்பவும் தொடருது ஆதி.
ரொம்ப அருமை.
எவ்வளவு அருமையாக பாதுகாத்து கொண்டு வந்து இருக்காங்க
அருமை.
காந்திஜியின் குட்டிப் பென்சில் ஞாபகத்திற்கு வருகிறது :-)
நன்றி ஜலீலா, ஆயிஷா, உழவன்.
Post a Comment