Tuesday, January 11, 2011

சுத்தமான மெரினா..

சென்ற ஞாயிற்று கிழமை, ஜனவரி 9, காலை 5 மணிக்கெல்லாம் அதிசயமாய் நானும் என் மகன்களும் எழுந்துட்டோம். 6 மணிக்கு கரெக்டா ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் பீச்சிற்கு போய்விட்டோம். நாங்கள் போன போதே பத்து பேர் கையில் க்ளவுஸ் மாட்டிக் கொண்டு பெரிய பச்சை கலர் கவரில் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து போட்டுக் கொண்டிருந்தனர்.நாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானோம். நல்ல குவாலிட்டியான மஞ்சள் நிற கிளவுஸ் கொடுத்தனர்.ஆளுக்கு ஒரு கவர் எடுத்துக் கொண்டு கடற்கரை ஒட்டி தண்ணீரில் அடித்து வரப்பட்ட ப்ளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தோம்.



 தொடர்ந்து குனிந்து கொண்டே எடுப்பதால் இடுப்பு, கால் வலித்தது. முதல் அரை மணிநேரம் அமுதா இது உனக்கு தேவையா என்ற எண்ணம் வந்தது. அடுத்தவர்கள் கவரினை பார்த்ததும் நாமும் அதை போல நிரப்பணும்.
செய்வதை திருந்த செய் என்று சொல்லிக் கொண்டே மும்முரமாய் பொறுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வலி தெரியவில்லை.

என் சின்ன மகன் ரிஷி சொகுசு பேர்வழி. அவ்வப்போது என் பக்கத்தில் வந்து நைஸாக என் கவரை தான் எடுத்துக்க முயன்றான். நான் விடவில்லை என்ன சார் ஓபி அடிக்கலாம் என்று வந்தீயா, ஓடிப்போ சீக்கிரம் உன் கவரை நிரப்பு என்றதும் சிரித்துக் கொண்டே வேறு பக்கம் போனான்.

பெரியவன் நகுல் என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை, மகனே உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று அவன் பக்கத்தில் போய் விசாரிக்க வேண்டி இருந்தது.

சின்ன ப்ளாஸ்டிக் கப்புகள், மிக சிறிய கவர்கள் என்று நிறைய இருந்தது. எடுத்து மண் உதறி எங்களின் பெரிய கவரில் போட்டு நிறைத்தோம் அப்புறம் இருவர் இருவராக அதை இழுத்து ஒரு இடத்தில் வைத்தோம். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பிஸ்கெட், தண்ணீர், 10 நிமிடம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப காரியத்தில் இறங்கினோம். மிக சீக்கிரம் எங்கள் டார்கெட்டை முடித்தோம். கரெக்டாக 8.30 மணிக்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை சுத்தமாக்கினோம்.



மொத்தமாய் 40 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகளை ஒரு இடத்தில் வைத்து அதன் பக்கத்தில் எங்கள் 30 பேரையும் நிறுத்தி விதவிதமாய் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர் இதை ஏற்பாடு செய்த ட்ரெக்கிங் கிளப் அங்கத்தினர்கள்.

மொத்தம் 15 கி.மீ தூரத்திற்கு 800 பேக் குப்பை கலெக்ட் ஆனதாம்.அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்.



இப்படி சுத்தம் செய்து முடித்ததும் எலியட்ஸ் பீச்சிற்கு அனைவரும் கிளம்பினோம். போகும் வழியில் நீலாங்கரை ஹாட்ஸ் சிப்ஸில் காலை உணவு முடித்துக் கொண்டோம். எலியட்ஸ் பீச்சில் எங்கள் குழுவினர் போல அங்கங்கே சுத்தம் செய்த மக்கள் வந்து சேர ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக் கொண்டனர். அங்கேயும் குரூப் ஃபோட்டாக்கள் நிறைய எடுக்கப்பட்டது.


கடற்கரை சுத்தம் செய்வதற்க்காக இந்த குழுவினை ஆரம்பித்தவர் பீட்டர் வான் கெயிட். ஏழு மாதத்திற்கு பிறகு இப்பொழுது இரண்டாவது முறையாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிறிய பிளாஸ்டிக் கப்புகள், உடைந்த தெர்மாகோல்கள்,குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி கப்புகள் தான் அதிகம் காணப்பட்டன.

21 comments:

ILA (a) இளா said...

தலைவணங்குகிறேன்

Chitra said...

"Keep it clean"......

I SALUTE YOU AND YOUR GROUP FOR DOING THIS!!!!!

I hope everyone will be motivated to keep it clean.

சுசி said...

பாராட்டுகள் அமுதாக்கா.

நானானி said...

நல்ல சேவை. மக்களிடமும் குப்பைகளை ட்ராஷ்ல்தான் போடணும் என்கிற விழிப்புணர்ச்சியையும் விதைக்க முடிந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!

ஆமினா said...

சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அமுதா

அந்த கடற்கரையை பாக்கவே அவ்வளவு அழகா இருந்துச்சு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சியில் உங்களை மட்டுமல்லாது உங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்தியதற்கு உங்களை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை. HATS OFF TO YOU!

இது குறித்த செய்தி தமிழ் நாளிதழ் ஒன்றில் படித்தபோது உங்கள் வலைப்பக்கம்தான் நினைவுக்கு வந்தது.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி இளா.

தாங்ஸ் சித்ரா

நன்றி சுசி தங்கச்சி..

ஆமாம் நானானி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஆமினா..

நன்றி வெங்கட் நாகராஜ்.

சாந்தி மாரியப்பன் said...

மனமார்ந்த பாராட்டுக்கள்..

அப்படியே குப்பைகளை, குப்பைத்தொட்டிலதான் போடணும்கற விழிப்புணர்வையும் மக்கள் ஏற்படுத்திக்கணும்.. அவங்களுக்கும் கடமைன்னு ஒண்ணு இருக்கில்ல :-)

மாதேவி said...

நல்ல சேவை.வாழ்த்துக்கள்.

ஆயிஷா said...

நல்ல பகிர்வு.நல்ல சேவை.

வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதிச்சாரல்..

நன்றி மாதேவி, ஆயிஷா..

நசரேயன் said...

பாராட்டுகள்

முகவை மைந்தன் said...

மனசுக்கு நிறைவா ஒரு வேலை பண்ணிருக்கீங்க. வாழ்த்துகள்.

// மகனே உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா//

என் பையனை நினைச்சுக்கிட்டு சிரிச்சேன் ;-)

//மும்முரமாய் பொறுக்க ஆரம்பித்தேன்//

மாற்றத்தைப் பொறுத்துக்கிட்டீங்களே!

Asiya Omar said...

உங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள் அமுதா.சுத்தம் செய்த கடற்கரை எவ்வளவு அழகாக இருக்கும்.

Ram said...

சிறப்பான செயல்பாடு அமுதா...
நகுலுக்கு எனது பெரிய வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள்.. ரிஷியை பத்தி நான் பேசுவதற்கில்லை.. வேணுமென்றால் உன்னைபோல் ஒருவன் இருக்கிறான் என்று என்னை கைகாமியுங்கள்.. உங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.. எல்லா இடங்களிலும் பேப்பர் பேக் கொடுத்து ப்ளாஷ்டிக்கை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறேன்.. நெருப்பில்லாது போகி இருந்திருக்குமென நம்புகிறேன்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. வணக்கம்..

ஹுஸைனம்மா said...

நீங்க செஞ்சது நானே செஞ்ச மாதிரி ஒரு மன நிறைவு வருது, இதை வாசிக்கும்போது.

எல் கே said...

மிக அருமையான செயல் இது

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி நசரேயன்.

இந்த காலத்து பசங்க முகவை மைந்தன்.

ஆமாம் படு அழகாய் இருந்தது ஆசியா ஓமர்..

அமுதா கிருஷ்ணா said...

ஆகா ரிஷிக்கு ஒரு தோஸ்த்தா தம்பி கூர்மைந்தன்..

நன்றி ஹீஸைனம்மா..

நன்றி எல்.கே.

Ram said...

//ஆகா ரிஷிக்கு ஒரு தோஸ்த்தா தம்பி கூர்மைந்தன்..//

இது நல்லாயிருக்கே.!!!செயல்களில் ஒற்றுமை கொண்ட தோழர்கள்....